
‘எனக்கொரு பொண்ணு இருந்தா அவ இனிமே இல்லையின்னு தல முழுகிட்டேன்’ என்று ஆச்சாரமான அப்பாக்களும்,
‘என் பொண்ணு செத்துப் போயிட்டா’ என ஜாதி உணர்வு கொண்ட கோபக்கார அப்பாக்களும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.
‘இவை எல்லாவற்றிற்கும் காதல்தான் காரணம், காதல ஒழிச்சாதான் நாடு உருப்படும்’ என்று காதலை சபித்துக் கொண்டே, காதலுக்கு வழிவிட்டு ஒதுங்கி ஓரம்போகிறார்கள்.
இப்படி ஆச்சாரமும் – ஜாதி தீவிரமும் கொண்ட பிற்போக்கான அப்பாக்களையே, முற்போக்காளர்களாக மாற்றி விட்டார்கள்;
தமிழ்த் தேசிய உணர்வும், பிரபாகரனை தன் தலைவராக ஏற்று ஈழப் பிரச்சினைக்காக களம் இறங்கி போராடிய, ‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான படம்’ என்று கேள்வி பட்டாலே எதிர்ப்பு தெரிவிக்கிற, கலைக் கண்ணோடு வாழ்க்கையை பார்க்கிற மிக குறிப்பாக ‘காதலுக்கு நான் எதிரியல்ல’ என்று காதலைக் கொண்டுகிற அப்பாக்கள்.
தொடர்புடையவை:
தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?
