‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

varutha-padatha-valibar-sangam
எழுத்தாளர் ஆர்.கே. நாரயணனிடம் ‘நீங்கள் ஏன் உங்கள் கதைகளில் செக்ஸ் எழுதுவதில்லை?’ என்று கேட்டபோது அவர் சொன்னார், ‘என் நாயகியும் நாயகனும் அல்லது ஒரு ஆணும் பெண்ணும் தனியறையில் இருக்கும்போது நான் அந்த அறையை விட்டு வெளியே வந்துவிடுவேன்’ என்றார்.
இது எழுத்தளானுக்குரிய கண்ணியம் மட்டுமல்ல் ஒவ்வொரு கலைஞனுக்கும் உரியதுதான்.

‘ஓர் ஆணும் பெண்ணும் உடல் உறவில் ஈடுபடுவதை மறைந்திருந்து பார்ப்பது, அநாகரீகம். அதை படமாக எடுத்து வெளியிடுவது கேவலம்’ என்கிற சரியானப் பார்வை அது போன்ற பலான படங்களை விரும்பி பார்ப்பவர்களிடம் கூட இருக்கிறது.

ஆனால், உடல் உறவுக்கு முந்திய கட்டமான காதலில்; சீண்டல்கள், சின்ன சின்ன உரசல்கள், முத்தமிட்டுக் கொள்வதையும் தழுவிக் கொள்வதையும் மிக நெருக்கமாக பட மெடுத்துக் காட்டுவது என்ன நியாயம்?

பூங்காக்களில், கடற்கரையில், ஆத்தோரத்தில். பாழடைந்த மண்டபத்தில் காதலர்கள் தனிமையில் இருக்கும்போது அவர்களுக்கு முன் உட்கார்ந்துக் கொண்டு, ‘நீங்க நடத்துங்க நாங்க ஓரமா உட்கார்ந்து பாக்கிறோம்’ என்று சொல்வது எவ்வளவு அநாகரீகம்? அதுபோன்றது தானே காதலர்களின் அந்தரங்கத்தை படமாக்குகிற கேமராவும்.

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒதுங்கியிருக்கிற காதலர்களை நெருங்கி, காதலனை அடித்துப் போட்டு, காதலியை பாலியல் வன்முறை செய்பவன்களைப்போல்,

காதலர்களின் அந்தரங்கத்தை படமாக எடுத்து, பார்வையாளன்களை பாலியல் வன்முறைக்கு ஆசைப்பட வைக்கிறா்கள் சினிமாக்காரர்கள்.

இருவரும் காதலர்கள் என்று காட்டுவது சரிதான். ஆனால் அவர்கள் காதலிப்பதையும் நெருக்கமாக காட்டுவது என்ன நியாயம்?

கல்யாணத்தை எல்லோர் முன்னாலும் செய்து கொள்ள முடியும். அதுதான் முறையும். அதற்காக முதலிரவையும் எல்லோர் முன்பும் பெரியவர்கள் ஆசிர்வாதத்தோடு நடக்க வேண்டும்’ என்று சொல்ல முடியுமா? ‘அது முறையில்லை’ என்று அந்த நியாயத்தை புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?

அப்படித்தான் காதலர்களின் அந்தரங்கத்தை அநாகரீகமாக படமெடுத்துக் காட்டி, கல்லாக் கட்டி வருகிறன்றன சினிமாக்கள்.

ஆனாலும் இன்றைய ஜாதி வெறி சூழலில் குறிப்பாக ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிரான கண்ணோட்டம் கொண்ட, இன்றைய நிலையில் காதலிப்பதே புரட்சிகர போராட்டமாக மாறியிருக்கிறது.

அந்த வகையில், தற்செயலாக 3 நாட்களுக்கு முன் பார்க்க நேர்ந்த, ‘வருத்தப் படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் சமீபத்தில் நான் பார்த்த தமிழ்ப் படங்களில் சிறந்த படமாக இருக்கிறது.

காதலர்களின் அந்தரங்கத்திற்குள் மையமிடாமல், அதை சட்டென்று கடந்து செல்கிறது. அதை விட மிக குறிப்பாக, காதல் குறித்த புனிதத் தன்மை இல்லை. இயல்பாக இருக்கிறது.

ஒரு பெண்ணால் தன் காதல் புறக்கணிகப்பட்டால், அடுத்தக் காதலி கிடைக்கும் வரை, அந்தக் காதல் ‘சோகத்தில்’ மூழ்கி இருப்பான் ஆண். இதுதான் ஆண்களின் தெய்வீக காதல் உணர்வு. இந்த பாணியில்தான் படம் விரைகிறது. வேகமான திரைக்கதை. சுவராஸ்யமான திரைக்கதையே அதன் வேகத்தை தீர்மானிக்கும். இந்தப் படத்தில் திரைக்கதைக்கு உதவியாக வசனம் வேறு பட்டையை கிளப்புகிறது.

பெண்ணைப் பெற்ற ஆதிக்க ஜாதிக்காரன், பணக்காரன் செய்கிற அலட்டல்களை கேலி செய்கிறது படம். ‘காதலில் ஈடுபட்ட தன் மகளைக் கவுரக் கொலை செய்தார்’ என்று ஆரம்பித்து, அதற்கு நேர் எதிராக காதல் திருமணத்திற்கு ஆதரவாக அப்பாவே அந்த ரகசிய திருமணத்தை நடத்தி முடித்தார் என்று முடிகிறது.

காதல் எதிர்ப்பாளர்களாக இருக்கிற ஜாதி வெறியர்களை, சமூக அக்கறையாளர்கள் போல் சவடாலாக கண்டித்துவிட்டு, சொந்த வாழ்க்கையில் கும்பலாக காதலை எதிர்க்கிற சினிமா இயக்குநர்களை பார்த்து கை கொட்டி சிரிக்கிறது படம்.

‘குத்தாட்டப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற பஞ்சாயத்தைக் கண்டித்து, இதற்குத் தடை என்றால் நான் இந்த நாட்டை விட்டே போறேன்’ என்ற காட்சியில், பிரபல நடிகரை கேலி செய்கிற ‘தில்’லு அதுவும் அறிமுக இயக்குரிடம்.

திரு. டி. ராஜேந்திர் பிரபல சினிமாக்காரராக இருந்தாலும், தொடர்ந்து அவரை கேலி செய்கிற சினிமாக்காரர்கள்; கமல், ரஜினியின் கோமாளித்தனங்களை பாராட்டி மகிழ்கிற தைரியசாலிகளாக இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் இந்த அறிமுக இயக்குநரின் செயல் உண்மையில் ‘தில்’ லுதான்.

‘உலக சினிமா, தரமான சினிமா, சினிமாத்தனம் இல்லாத சினிமா’ என்று சொல்லிவிட்டு ‘மொக்கையாக’ சினிமா எடுக்கிறவர்கள் மத்தியில்,
ஒரு தீவிரமான பிரச்சினையை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி, விரும்பி பார்க்கும் படி காமெடி கலகம் செய்திருக்கிற இயக்குநர் பொன்ராம் மற்றும் வசனம் எழுதிய இயக்குர் ராஜேஸ் இருவருக்கும் என் பாராட்டுக்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் விரும்பி, ரசித்து, சிரித்து பார்த்தப் படம் ‘‘வருத்தப் படாத வாலிபர் சங்கம்’ – காதல் கலகம்.

எந்த எந்த இயக்குநர்கள் பொருத்தமாக இருப்பார்கள்?

Varutha Padatha Valibar Sangam

ந்தப் படத்தில் வரும் சிவனாண்டி கதாபாத்திரம் கிளைமாக்சுக்கு முன்பு வரை, காதலுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த பிரபல இயக்குரை நினைவுப் படுத்துகிறது. அவர்கூட சொன்னார், ‘அந்தப் பையன் ஒரு பொறுக்கி. என்னுடைய இன்னொரு மகளுக்கும் I love You  சொன்னான். ஒழுங்கான வேலை இல்லை’ என்றார்.

இந்தப் படத்தின் கதாநாயகனுக்கும் வேலையே வெட்டியா இருக்கிறதுதான். முதலில் ஒரு டீச்சரை லவ் பண்றான். தன் காதலை வெளிப்படுத்த ஒரு மாணவியிடமே லவ் லெட்டர் குடுத்து விடறான். டீச்சர் கல்யாணமாகி போக, பிறகு லவ் லட்டர் கொண்டுபோன பெண்ணையே லவ் பண்றான்.

‘விடக்கூடாது சிவனாண்டி. நம்ம குடும்பத்துப் பெண்ணை தொட்டவனை சும்மா விடக்கூடாது.’ என்று  பெண்ணைப் பெற்ற சிவனாண்டியை ஏத்திவிடும் நான்கு நபர்களைப் போலவே, அப்போது அந்த இயக்குநரை சுற்றி இருந்த இயக்குர்களும் பேசினார்கள்.

நிஜத்தில் சிவனாண்டி கதாபாத்திறம் அந்த இயக்குநரை நினைவுப் படுத்தியது. ஆனால், அந்த நான்கு பேர் கேரக்டர்களுக்கு எந்த எந்த இயக்குநர்கள் பொருத்தமாக, நெருக்கமாக இருந்தார்கள்? படம் பாத்தவங்க வரிசைப் படுத்துங்களேன்.

**

2013 அக்டோபர் 3 ஆம் தேதி காலை facebook ல் எழுதியது.

தொடர்புடையவை:

ஓநாயின் முட்டாள்தனமும் அதனால் பலியான ஆட்டுக்குட்டிகளும்

அழ வைத்த 6 மெழுகுவர்த்திகள்!

Rush: ஒளி ஒலியின் உன்னதம்

காதலுக்கு ‘ஆதரவானவர்’களையும் அம்பலப்படுத்துகிறது காதல்

காதல்: ஆச்சாரமான அப்பாக்களும் தமிழ்த் தேசிய தந்தைகளும்

காதல் – ‘ஜாதியை’ ஒழிக்காது!

இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

12 thoughts on “‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

  1. நன்று.படம் பார்த்துவிட்டு வரிசைப்படுத்துகிறேன்.

  2. படம் நல்லாதான் இருக்கிறது தோழர் . இந்த படத்தல் சிவனாணடடிய ஏத்திவிடுற போல இருப்பவர்கள் ஒருதர் அமீர் இன்னொருவர் சரத்குமாரை சொல்லாம்…

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading