ஓநாயின் முட்டாள்தனமும் அதனால் பலியான ஆட்டுக்குட்டிகளும்

onayum-aatukuttiyum

Realistic film என்ற அபிப்ராயத்தை முதல் காட்சி உருவாக்குகிறது.

அறுவைச் சிகிச்சையை யதார்த்தமாகக் காட்டிய அடுத்தக் காட்சியிலேயே ஆரம்பமாகிறது சாகசம். பிறகு கடைசிவரை ஒரு காட்சி கூட யாதர்த்தமாக இல்லை. ‘யதார்த்தமாகக் காட்டுவது என் வேலையல்ல’ என்றால், அப்படிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாத அறுவைச் சிகிச்சையை ஏன் யதார்த்த்தமாகக் காட்ட வேண்டும்? எனக்கு இதெல்லாம் தெரியும் என்று காட்டவா?

என்ன அதியசம், ஆபேரேசன் செய்த ஆட்டுக்குட்டி டாக்டர் தூங்கிடாறன்.. செய்து கொண்ட ஓநாய் நோயாளி எழுந்து ஓடிடுறான். அதன் பிறகு தாவுகிறான், குதிக்கிறான், குப்புற விழுகிறான், ஓடுறான் ஓடுறான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடுறான்.

‘ஓநாய்’ புத்திசாலிதனத்தின் குறியீடாகக் காட்ட முயற்சிக்கப் படுகிறது. ஆனால், இதில் வருகிற ஓநாய், தன் புத்திசாலித்தனத்தைக் காட்டுவதற்காக முட்டாள் தனமான முடிவுகளையே எடுக்கிறது.

ஓநாயின் முட்டாள் தனமும் தன்னை வீர சாகசம் புரிகிற நாயகனாகச் சித்திரித்துக் கொள்ள வேண்டும் என்கிற ஓநாயின் பேராசையும் அந்தப் பார்வையற்றவர் குடும்பத்தையே சின்னப் பின்னமாக்கிவிடுகிறது. ஓநாய் அறியாமல் செய்த தவறுக்குப் பிராயசித்தமாக அறிந்த செய்கிற உதவிகள் தான் பார்வையற்றவர் குடும்பத்தையே நாசம் செய்துவிடுகிறது. உண்மையில் ஓநாயின் அறியாமை தான் அறிவுள்ளதாக இருக்கிறது.

ஆட்டுக்குட்டி டாக்டரை, போலிஸ் புலிகள் கண்காணிப்பையும் தாண்டி, ரயிலில் அதிரடியாகக் கடத்திக் கொண்டு போகிறது ஓநாய். சொந்தச் செலவில் சூனியத்தை வைத்துக் கொள்கிறது. அந்த ஆட்டுக்குட்டி டாக்டரை கடத்திக் கொண்டு போகாமல் இருந்திருந்தால் பார்வையற்ற அந்த அப்பாவி ஆட்டுக்குட்டிகளைக் காப்பற்றி இருக்கலாம். பிரச்சினை சுலபத்தில் முடிந்திருக்கும் ஓநாயின் பிராயசித்தமும் எளிதில் நிறைவேறி இருக்கும்.

இடைவேளையின் போது ஓநாய், ஆட்டுக்குட்டி டாக்டரை விடுவித்து விடுகிறது. அதோடு படமும் முடிந்து விடுகிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு மீண்டும் முதலில்லிருந்து. முடியில.

அது சரி, எதுக்காக ஓநாய், ஆட்டுக்குட்டி டாக்டரை கடத்திக் கொண்டு போய்க் கட்டி சுமக்குது?

அதனாலேயே நல்ல மனம் கொண்ட ஓநாய்க்குப் பிரச்சினைகள் மேலும் பிரச்சினைகள். அதை வைத்துக் கொண்டு சாகசங்கள் மேலும் சாகசங்கள். இந்த ஓநாய் சாகசம் செய்வதற்கு அப்பாவி பார்வையற்ற ஆட்டுக் குட்டிகள் பலியாகிவிட்டன. பாவம்.

இயக்குநரின் கவனமெல்லாம், குறைந்த ஒளியில் வித்தியாசமான காட்சிகளை உருவாக்குவதாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் திரைக்கதை என்று இல்லாமல் வெறும் காட்சிகளின் கோர்வையாக, அந்தக் காட்சிகளிலும் தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக் கொள்திலேயே கவனம் கொண்டு திரைக்கதையையும் கடந்து நிற்கிறது தன்முனைப்பு.

இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டி உரத்தக் குரலில், பஞ்ச் டயலாக்கோடு இதே காட்சிகளைக் காட்டியிருந்தால் அதுதான் விஜய், ரஜினி படங்கள்.

இதற்கு மேல் அதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஆனால், நன்றி சொல்லலாம்.

‘நாயகன் ஓநாய், வில்லன் கரடி, அப்பாவிகள் ஆட்டுக்குட்டி, போலிஸ்கள் புலி’ என்று சொன்னவர், பார்வையாளர்களை ‘குரங்கு’ என்று சொல்லாமல் விட்டதற்காக.

*

‘அந்தத் தியேட்டருக்குப் போனேன். டிக்கெட் கிடைக்கவில்லை. அங்கிருந்து இன்னொரு தியேட்டருக்கு போனேன் அங்கே கட்டுக் கடங்காத கூட்டம். என் சட்டை எல்லாம் கிழிஞ்சி ஒரு வழியாக டிக்கெட் எடுத்தேன். இது உலகின் சிறந்த திரைப்படம்’

இப்படி எல்லாம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஜாக்கி வைத்துத் தூக்கினால், மிஷ்கின் மனசுல வேணுன்ன இடம் பிடிக்கலாம். ஆனால், அந்தப் படம் ரசிகர்கள் மனசுல இடம் புடிக்காது.

ஆனந்த விகடனில் ஆயிரம் மார்க் வாங்கினாலும் மக்கள் மனசுல..

காரணம், அது ஓடாம இருக்கிறதுக்கான வேலையை அதன் இயக்குரே சிறப்பாகச் செய்திருக்கிறார் அதன் திரைக்கதையில்.

குறிப்பு:

தந்திரசாலி என்றால் அதற்கு ஓநாய் அல்லது நரி. அப்பாவி என்றால் அதற்கு ஆட்டுக்குட்டி அல்லது மான். இந்தக் குறியீடுகள் பொதுவாகப் பொதுப் புத்தியில் இருக்கிறது. இதுவே சிறுவர்களுக்கான கதைகளாகவும்…

ஓநாய்-நரியைப் பற்றிய அபிப்பாராயத்தை விடுங்கள். தாவர உண்ணிகள் என்றால் அப்பாவிகள் என்கிற கருத்து, பஞ்சதந்திர கதைகள் உட்படப் பல கதைகளில் இருக்கிறது.

சைவ உணவு பழக்கமுள்ளவர்களை வெகுளிகளாக அப்பாவிகளாகக் குறிக்கிற குறியீடு அது. இதுபோன்ற ஒரு பொதுப் புத்தியை அவர்களே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

கமல்ஹாசன் தயாரித்து எழுதி அவர் இயக்கிய முதல் படமான இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்றான ஹேராமில், அபயங்கரிடம் சாகேத்ராமனின் இரண்டாவது மனைவி ஜானகி, ‘ஓநாய்ப் பசிக்கிறது என்றால், உங்க குழந்தையைத் தூக்கி கொடுத்திடுவீங்களா?’ என்று அசைவ உணவுப் பழக்கத்தைக் கேள்வி கேட்பார்.

அதற்கு அபயங்கர், ‘ஓநாயா இருந்து பாத்தாதான் அதன் நியாயம் புரியும்’ என்பார்.

அதுபோல், தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்று நிருபிக்கப்பட்டதற்குப் பின், இன்னும் இந்தக் குறியீடுகள் முட்டாள்தனமானவை.

ரோஜா செடிகள், இன்னும் அழகிய மலர்கள், அழகில்லாத தாவரங்கள் இவைகளின் நிலையிலிருந்து பார்த்தால் தெரியும் ஆடுகளும் மாடுகளும் மான்களும் எவ்வளவு கொடூரமானவை நரிகளும் ஓநாய்களும் புலிகளும் எவ்வளவு சாந்தமானவை என்று.

விலங்குகளின் உணவு பழக்கத்தை வைத்துக் கொண்டு அதன் குணங்களைக் குறிப்பிடுகிற அறியாமையை விட்டொழிக்க வேண்டும். அந்தக் குறியீடுகளில் அறியாமை மட்டுமல்ல, மற்ற மனிதர்களை இழிவாகப் பார்க்கிற கண்ணோட்டமும் இருக்கிறது.

வேட்டையாடி உண்பவை வீரமும் இல்லை. தந்திரமும் இல்லை. புத்திசாலியும் இல்லை. கொடூரமும் இல்லை. அது அதன் உயிர் வாழ்தலின் இயல்பு.

‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?

கமல் படத்தை விட ரஜினி படத்தைதான் மக்கள் விரும்புகிறார்கள், காரணம்..

20 thoughts on “ஓநாயின் முட்டாள்தனமும் அதனால் பலியான ஆட்டுக்குட்டிகளும்

 1. //ஓநாய்-நரியைப் பற்றிய அபிப்பாராயத்தை விடுங்கள். தாவர உண்ணிகள் என்றால் அப்பாவிகள் என்கிற கருத்து,
  பஞ்சதந்திர கதைகள் உட்பட பல கதைகளில் இருக்கிறது…….//
  தாவர உண்ணிகளைவிட மிருகங்களை உண்ணும் மிருகங்கள் தந்திரமாகத்தானே இருந்தாக வேண்டும்? தாவர்ங்களுக்கு உயிர் இருப்பினும் வலி இருப்பினும் மாங்களையும் ஆடுகளையும் கொடூரமானவை என்று எண்ணி அவை கண்ணீரே விட்டாலும் அவை ஓடி ஒளியவோ தற்காப்பைத் தேடவோ முயற்சி செய்யப் போவதில்லை. அதனால் தாவர உண்ணிகள் இரையை மடக்கத் தந்திரம் எதுவும் செய்யத் தேவை இல்லை. ஆனால் நரி, ஓநாயால் துரத்தப்படும் மிருகங்கள் (அவை தாவர உண்ணிகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, வேறு மிருக உண்ணிகளாகவும் இருக்கலாம், அவை ஓடி ஒளிய அல்லது தப்பிக்க முயல அறிந்தவை. அதனாலேயே இயற்கை மிருக உண்ணிகளுக்கு சில சக்திகளை அளித்திருக்கிறது. சிங்கம் அல்லது புலி போல அசாத்திய பலம் அற்ற நரி, ஓநாய் போன்ற பிராணிகளுக்குத் தந்திரம்தானே ஒரே பலம்? அந்தத் தந்திரம் சில கதைகளில் நேர்மறையாகவும் அணுகப்பட்டிருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

  //சைவ உணவு பழக்கமுள்ளவர்களை வெகுளிகளாக அப்பாவிகளாக குறிக்கிற குறியீடு அது.//
  வளர்க்கிற ஆட்டை வாழ்வாதாரமாகக் கொண்ட ஒருவர் வீடு புகுந்து அதைக் கொண்டு செல்லும் நரி/ஓநாயை வாழ்த்த முடியுமா? அதற்குக் காவலாக மிருக உண்ணிகளான வேட்டை நாய்களை வளர்ப்பதில்லையா?
  ஆனால் ஆடு எவ்வளவுதான் அப்பாவியானாலும் தன் வயலில் இறங்கி மேய்ந்தால் யாரும் ஐயோ பாவம், அப்பாவி ஆடுதானே, தின்னட்டும் என்று விடுவதில்லை. ஏன், புனிதமான பசுவே வயலில் இறங்கிவிட்டால் அதையும் மாட்டுக்கறி உணவின் எதிர்ப்பாளர்களும் அதை அடித்துதான் விரட்டுவர். கடைத்தெருக்களில் (பார்ப்பனர்/சாதி இந்துக்களால் நடத்தப்பட்டாலும்) காய்கறி, பழக்கடைகளுக்குள் நுழைந்தாலும் அதே கதிதான் (இதில் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்று நினைக்கிறேன்)
  பூனை தாவர உண்ணியல்ல. எலியை உண்கிறது. எலி பெரும்பாலும் தாவர உண்ணியானாலும் பொதுபுத்தியோ தனிபுத்தியோ அதை ஐயோ பாவம், அப்பாவி, வெகுளி என்பதில்லை. காரணம் எலி மனிதர்கள் சேகரித்து வைத்துள்ள உணவுப்பொருள்களை உண்பதே. அதைக் கொல்ல மனிதர்களே கலப்பு உண்ணியான பூனையை வளர்க்கின்றனர். ஆனால் பக்கத்து வீட்டுப்பூனை நம் வீட்டு எலியை உண்டால் மகிழ்வோம். நம் வீட்டுப்பாலைக் குடித்தால் மகிழ்வோமா? சைவ உணவுதானே, பாவம், குடிக்கட்டும் என்போமா? இதில் பிரச்சினை சைவமா அசைவமா என்பதல்ல.
  எலி, பூனை (தாவர, கலப்பு உண்ணிகள்) இரண்டையுமே விட்டுவைக்காமல் உண்ணும்
  நாயை நன்றியுள்ள பிராணி என்று மனிதர்கள் (பசுவை வணங்கும் பார்ப்பனர்கள் உட்பட) வளர்க்கவும் செய்கின்றனர்.
  இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
  ஆக தாவர உண்ணிக்கும் ஆதரவு தனது வயலில்/ கடையில்/ வீட்டில் நுழையாதவரைதான். மிருக உண்ணி மனிதனின் வளர்ப்பு மிருகத்தை உண்ணும் போது மட்டும் வில்லனாகிறது. ஒநாயோ நரியோ காட்டில் ஏதோ முள்ளம்பன்றியையோ காட்டுப்பறவைகளையோ
  உண்டால் இத்தனை எதிர்ப்பு இருக்காது. மாட்டுக்கறி உட்பட எல்லாம் உண்ணும் நாடுகளிலும் நிலை இதுவேதான்.
  இதன் பின்னணி ஒட்டுமொத்த மனித குலத்தின் பொதுவான சுயநலம்தானே தவிர ஒரு அரசியலும் இல்லை.

 2. //அண்ணே விடுங்க எல்லாத்துலயுமே குறையா///
  Mohd Safi நான் எழுதியது தவறு என்றால் சொல்லுங்கள். ஒரு விளக்கமும் இல்லாமல் இதுபோன்ற பின்னூட்டத்தை எழுதாதீர்கள்.
  //எல்லாத்துலயுமே //என்பதற்கு உங்களுக்கு உள்ள வரையறைக்குள் என்னையும் இழுக்காதீர்கள்.

 3. நச்சென்ற பதிவு. நம் நாட்டில் தான் அசைவத்திற்கு எதிராக பிரச்சாரம் தொடர்கிறது. இது பெரும்பாலும் பார்பன மீடியாக்களினால் தான் செய்யப்படுகிறது. அசைவம் உண்பதினால் ஆரோக்கிய கேடு வரும். அசைவம் உண்பவர்கள் அசுத்தமாக இருப்பார்கள், அசைவம் உண்பவர்கள் கொடூர மனம் படைத்தவர்கள்,இரக்கமில்லாதவர்கள்,சைவம் உண்பவர்கள் (அதாவது பார்பனர்கள்) சாந்த சொர்ரூபிகள்,இளகிய மனம் படைத்தவர்கள், இப்படி விஷம தனமான நிறைய பிரச்சாரம் நடந்துக்கொண்டிருக்கிறது.ஆனால் உண்மை நிலை என்ன… உலகத்தில் 99% மக்கள் அசைவம் தான் உண்கிறார்கள். தன நலனுக்காக பார்பானியம் கழுதையை குதிரையும் ஆக்கும்.

 4. எங்கே திரும்பினாலும் இந்த படத்தை பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள் . உங்களைப்போலவே எனக்கும் இந்த படத்தில் பல நெருடல்கள் உள்ளது . இருப்பினும் மிஸ்கினின் முந்தைய காப்பி அடித்த படங்கள் மற்றும் அட்டர் பிளாப் முகமூடி படங்களை ஒப்பிடுகையில் கொஞ்சம் ஆறுதல்தான் இந்தப்படம் …..
  அது சரி சார் ….. இளையராஜாவை பற்றி ?

 5. சினிமாவைப்பற்றிய விமர்சனத்தைவிட இறுதியாய் நீங்கள் எழுதியிருக்கும் குறிப்பு மிக அருமையானதாக இருக்கிறது. அதிலும்…
  ///ரோஜா செடிகள், இன்னும் அழகிய மலர்கள், அழகில்லாத தாவரங்கள் இவைகளின் நிலையிலிருந்து பார்த்தால் தெரியும் ஆடுகளும் மாடுகளும் மான்களும் எவ்வளவு கொடூரமானவை நரிகளும் ஓநாய்களும் புலிகளும் எவ்வளவு சாந்தமானவை என்று///….
  என்பதை மிகமிக ரசித்தேன்…

 6. மரக்கறி உணவவா?, புலால் உணவா? என்பது கருத்தியல் தளத்தில் உலகெங்கும் நடக்கும் பிரச்சினை. தாவரத்தின் கோணத்திலிருந்து விலங்கைப் பார்க்கச் சொல்வதெல்லாம் அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் புறம்பானது. ஏதோ தாவரத்துக்கு அறிவு இருப்பது போலவும், அது விலங்குகளைக் கண்டு அஞ்சுவது போலவும் பேசுவது அபத்தம். ஆனால் உலகில் இந்த உணவுச் சிக்கல் முழுக்கக் கருத்தியல் தளத்தில் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் வருணாசிரம இந்தியாவில் மட்டுந்தான் இது இன்னொரு மனிதனைத் தாழ்வுப்படுத்துவதற்குப் பயன்டுகிறது. ஆனால் இதையும் தாண்டி திருவள்ளுவர்,வள்ளலார் போன்றோர் புலால் சாப்பிடுவோர் மனிதத் தன்மையற்றவர்கள் எனக் கூறுவதையும் மறந்து விடக் கூடாது. புலால் உணவுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைவரையும் சாதியக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதில்லை.

  நலங்கிள்ளி
  9840419421

 7. என் தொலைபேசி எண் திருத்தம் – 9840418421

 8. நண்பர் நலங்கிள்ளி… சைவம் உண்ணும் உயிரினங்கள், அசைவம் உண்ணும் உயிரினங்கள், சைவம் அசைவம் இரண்டையும் உண்ணும் உயிரினங்கள் என்று மூன்று வகையாகத்தான் இயற்கையால் படைக்கப்பட்டிருக்கு. சிங்கம் புலி போன்ற அசைவம் உண்ணும் உயிரினங்களுக்கு தாவரங்களை உணவாக கொடு(தினி)த்தால் 2 நாட்களில் செத்துவிடும். அதனுடைய ஜீரன அமைப்பு அவ்வாறுதான் அமைக்கப்பட்டிருக்கிறது. அது போல் ஆடு மாடுகளுக்கு மீன் , இறைச்சி உணவுகளை கொடுத்தாலும் இறந்துவிடும். அதன் ஜீரன அமைப்பு அப்படி உள்ளது. சில விலங்குகள், பறவைகள், மனிதன் போன்ற உயிரினங்கள் இரண்டையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜீரன அமைப்பில் தான் படைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இயற்கை விதியை ஒரு சின்னஞ்சிறு கூட்டம் ஏன் மாற்ற முற்படுகிறார்கள் ?
  /////புலால் சாப்பிடுவோர் மனிதத் தன்மையற்றவர்கள் எனக் கூறுவதையும் மறந்து விடக் கூடாது. //// இதற்கு மட்டும் வள்ளுவனையும், வள்ளலாரையும் துணைக்கு அழைக்கிறீர்கள். அப்போ பாக்கி 99% மக்கள் மனித தன்மையே அற்றவர்கள் என்று கூறுகிறீர்கள் அப்படித்தானே ? தாங்கள் தான் மனிதாபிமான மிக்கவர்கள் மற்றவர்கள் எல்லாம் மனிதத்தன்மையே அற்றவர்களாக காட்டும் பார்பானிய பித்தலாட்டம் தான் இங்கு கண்டிக்கப்படுகிறது. காலம் காலங்களாக பெரும்பான்மை மக்களை ஆடு மாடுகளைவிட கேவலமாக நடத்தியும், அந்த மக்களின் உழைப்பை, அறிவை, தன்மானத்தை சுரண்டி தின்ற இரக்கமற்ற கூட்டம் தான் உங்களுக்கு மனிதாபிமான இரக்கம் உள்ள கூட்டம் அப்படித்தானே ? இவர்களை விட கொடூர மான கூட்டம் வரலாற்றில் காண்பியுங்கள் பாப்போம் ?
  99% மக்களின் மீது 1% மக்களின் விருப்பத்தை திணிக்காதீர்கள். நன்றி.

 9. ஜோதி அவர்களே! என் கடிதத்தைத் தெளிவாகப் படித்து விட்டு எழுதுங்கள். ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுகிறீர்களோ, தெரியவில்லை. இந்த என் கடிதத்தில் என் கருத்து எதையும் முன்வைக்கவில்லை என்பது முதல் செய்தி. உலகிலேயே வருணரிசிரம இந்தியாவில்தான் இந்தப் புலால், மரக்கறி உணவுச் சிக்கல் மனிதனைத் தாழ்த்தும் சிக்கலாகி விட்டது எனத் தெளிவாகக் கூறியுள்ளேன். அதேபோது சமூகநீதி பேசிய வள்ளுவரும் வள்ளலாரும் கூட புலால் உண்போரை மனிதத்தன்மை அற்றவர்கள் எனப் பேசியுள்ளனர் என்று நான் அந்தப் பெருமகன்களின் கருத்தைத்தான் பதிவு செய்துள்ளேன். முடிந்தால் நீங்கள் அவர்களுடன் மோதுங்கள். நான் பதிவு செய்ய விரும்புவது என்னவென்றால், புலால் மறுப்புப் பேசினாலே, அவரை உடனே பார்ப்பன ஆதரவாளர் எனக் கூச்சலிடாதீர்கள் எனத்தான் நான் கூறியுள்ளேன். நான் என் பின்னூட்டத்தில் எங்கும் புலால் உண்போரை மனிதத் தன்மையற்றவர்கள் எனக் கூறவில்லை. உங்கள் கருத்துதான் பார்ப்பனியத்தைப் போல் சனநாயகத்தன்மையற்று இருக்கிறது. இந்த இருவேறு உணவு குறித்த விவாதம் நீண்ட நெடுங்காலமாக உலகெங்கும் நிகழ்ந்து வருகிறது. அந்தக் கருத்தைக் கருத்தால் சந்தியுங்கள். அதுவும் நான் அசைவம் என்பதைப் புலால் என்றும், சைவம் என்பதை மரக்கறி என்றும் இந்துத்துவச் சார்பற்றுக் குறிப்பிட்டுள்ளேன். உங்கள் மொழியில்தான் சைவம், அசைவம் என இந்துத்துவம் வழிகிறது நண்பரே!

  நலங்கிள்ளி
  9840418421

 10. இந்தியாவின் சிறந்தப் படங்களில் ஒன்றான ஹேராமில், அபயங்கரிடம் சாகேத்ராமனின் இரண்டாவது மனைவி ஜானகி, ‘ஓரு ஓநாய் பசிக்கிறது என்றால், உங்க குழந்தையை தூக்கி கொடுத்திடுவீங்களா?’ என்று அசைவ உணவுப் பழக்கத்தை கேள்வி கேட்பார்.

  அதற்கு அபயங்கர், ‘ஒரு ஓநாயா இருந்து பாத்தாதான் அதன் நியாயம் புரியும்’ என்பார்………..nalla bathil

 11. சரியான சூழலியல் பார்வையில் பேசியிருக்கின்றீர்கள். நன்றி. படத்தை இன்னமும் பார்க்கவில்லை. பார்த்து விட்டு பேசுகிறேன்.

 12. anna neenga padam edungalene,myskinnum rendu handsa use pannithan eat panndrer ,neengalum rendu handsa use pannithan eat panndriga[nee vera edavuthe sappuduriya],ongle yaru puduchi vaccirukka ,nee
  nalle padame edukkalame

Leave a Reply

%d bloggers like this: