மாட்டுத்தீவின ஊழல் செய்தவருக்கு தண்டனை தந்தாகிவிட்டது. மனிதக் கொலைகள் செய்தவருக்கு பிரதமர் பதவி காத்திருக்கிறது.
1000 ஆண்டுகளாக இந்திய இந்து அரசியலில் எப்போதும் ஒடுக்கப்பட்ட மனிதர்களைவிட மாடுகளே மகத்தானவை.
மாடுகளைத் தொட்டால் புனிதம். மனிதர்களைத் தொட்டால் தீட்டு.
மாடுகளை கொன்றால் பாவம். குற்றம். தண்டனை. மனிதர்களைக் கொன்றால் வீரம். நல்லாட்சி. வெகுமதி.
மாடுகளுக்கு நீதியும் மனிதர்களுக்கு அநீதியும் வழங்கும் பண்பாடு.
மாட்டுத் தீவனத்திற்கு தருகிற மரியாதையைக்கூட மனிதர்களுக்குத் தராத நாடு.
வாழ்க கோமாதா. வாழ்க ஜனநாயகம். வாழ்க சிறுபான்மை மக்களின் கொலைகள். வாழ்க வருங்கால பிரதமரான புனிதப் பசு.
*
02-10-2013 அன்று காலை facebook ல் எழுதியது.
தொடர்புடையவை:
சைவம், அசைவம் தாண்டிய மூன்றாவது உணவு முறை

