வாழ்க புரட்சித் தலைவி! வாழ்க அச்சுதானந்தன்! – What a trick?
தமிழகரசு; கேரள அரசுக்கும், கேரள சி.பி.எம். அச்சுதானந்தனுக்கும் நன்றி சொல்லவேண்டும். அதுபோல், தமிழக சி.பி.எம். தமிழகரசுக்கு நன்றி சொல்லவேண்டும்.
ஆமாங்க, பால், மின்சாரம், போக்குவரத்து விலையை உயர்த்திய தமிழகரசு, கடுமையான எதிர்ப்பை தமிழர்களிடம் சந்தித்து வந்த வேளையில், முல்லைப் பெரியாறு விவகாரத்தை கிளப்பி, இனவாத அரசியலை தூண்டி விட்ட கேரள முதல்வர் உம்மன்சாண்டியும், சி.பி.எம். அச்சுதானந்தனும் அதிமுக அரசை தமிழர்களின் வசவுகளில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்கள்.
கேரள அரசியல்வாதிகளின் குறிப்பாக சி.பி.எம். அச்சுதானந்தனின் தமிழர்களுக்கு எதிரான இனவாத அரசியலுக்கு எதிராக, அரசியல் செய்யவேண்டிய நெருக்கடியான சூழலில் இருந்து, தமிழக சி.பி.எம் கட்சியை காப்பாற்றியது அதிமுக அரசுதான்.
நிஜமாதாங்க, தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் கேரளாவின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்துக் கொண்டிருந்தபோது, தமிழக சி.பி.எம். மட்டும், தமிழகமே நடுநடுங்கும் அளவிற்கு விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினார்களே,
என்ன ஒரு புத்திசாலித்தனம்? What a trick? வாழ்க புரட்சித் தலைவி, வாழ்க புரட்சித் தலைவன் அச்சுதானந்தன்.
தொர்புடையவை:
‘தமிழனா? மலையாளியா?’; சி.பி.எம் இனவாதம்
கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்
கம்யுனிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகளை விட அதிமுகவே மேல்!
காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்
Nice comments…. http://www.rishvan.com
nice article… this is third eye journalism…..www.rishvan.com
என்ன மதிமாறன்?.
இனவாத அரசியலைத்தூண்டி விடுகிறார்கள் என்று சொல்லும் நீங்களே விலைவாசி உயர்வுக்கெதிரான போராட்டத்தைக்கேலி செய்கிறீர்கள். பெரும்பான்மை மக்களின் போராட்டமும், கொந் தளிப்பும், அடாவடியும் மட்டும்தான் போராட்டமா,உயர்வானதா.
கஷ்டமாக இருக்கிறது.
அப்ப எப்படி ஒரு கட்டுரை ,இரண்டு புத்தம் எழுதனால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடுமா?
கடும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் கொதித்து எழாத நிலையில் அதற்கான அரசியல் உணர்வவு மட்டம் இல்லாத நிலையில் விலை உயர்வ அறிவிக்கப்ட்ட உடன் அறிவிக்கப்பட்ட போராட்டம்தான் அது.
இங்கு சாதிக்காக , சாரயத்திற்காக, இனவாத அரசியலுக்காக பெருதிரள் மக்கள் போராட்டத்தில் இறக்கப்டுபவார்கள் ஆனால் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளுக்கு யாரும் வரமாட்டார்கள் தாங்கள் உட்பட .
நிஜந்தாங்க! ஒழிக! தமிழக சீ .பி.எம். அ.தி.மு.க