டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்?

சிறந்த பாடகரான டி.எம்.சௌந்தரராஜனுக்கு பாவத்தோடு பாடத்தெரியாது என்று இளையராஜா சொன்னதால்தான் நீங்கள் அவரை சிறந்த பாடகராக குறிப்பிடவில்லையா?

என். இராமநாதன், திருநெல்வேலி.

இது தவறான தகவல். இளையராஜா அப்படி குறிப்பிடவில்லை. ’ஆண்குரல் என்றால் அது டி.எம்.எஸ் குரல்தான்’ என்று அவரை பாராட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணித்திடமே இளையராஜா குறிப்பிட்டு பேசியதை நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன்.

வெண்கல பாத்திரத்திம் இன்னொரு வெண்கல பாத்திரத்தோடு மோதிக்கொண்டால், ‘கணீர்’ என்ற ஓசையை தொடர்ந்து, அதன் பிறகு ஒரு வசீகர ஒலி எழுமே, அதுபோன்ற கம்பீரம் டி.எம்.எஸ்., குரல். இன்னும் சரியாக சொன்னால், நாம் எதிர்பாராத நேரத்தில் நம் காதருகே ஒரு வண்டு வேகமாக வந்து போகும் போது எழுப்புகிற உன்னத ஒலி டி.எம்.எஸ்., குரல். ‘நினைந்து நினைந்தென் நெஞ்சம் உருகுதே..’ போன்ற பாடல்களில் அதை உணரலாம்.

எவ்வளவு மேல போய் High Pitch ல பாடுனாலும் அந்தக் குரலின் கம்பீரம் குறையாது, ரிங்காரமிடும். Normal Pitch ல பாடும்போது அவர் குரலில் உள்ள Base, நாம் பாடல் கேட்கும் அறை முழுக்க நிரம்பி வழியும். அவ்வளவு இனிமையாக இருக்கும். ( மதன மாளிகையில்..’ மயக்கம் என்ன…’ ‘அழகிய தமிழ்மகள் இவள்..’ ‘உள்ளம் என்றொரு கோயிலிலே..’)

அவர் பாடிய பாடல்களை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. திருவிளையாடல் படத்தில், பாலமுரளிகிருஷ்ணா பாடிய ‘ஒரு நாள் போதுமா?’ பாடலைவிட, டி.எம்.எஸ். பாடிய ‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலில், படத்தில் வரும் காட்சியைப்போலவே, டி.எம்.எஸ்தான் ஜொலிக்கிறார்.

அவருடைய Voice Range அப்படியொரு சிறப்பு மிக்கது. அதுவே அவருக்கு Low Pitch ல் பாடுவதில் பிரச்சினையாகவும் இருந்திருக்கிறது. இதைத்தான் இளையாராஜா குறிபிட்டிருக்கிறார்.

அப்போது, சிவாஜிக்கு டி.எம்.எஸ்தான் பாடவேண்டும் என்பது விதி. ரிஷிமூலம் திரைப்படத்தில், நடுத்தர வயது தம்பதிகளுக்குள் romanse. இரவு படுக்கையறையில், தூங்கும் மகன் சத்தம் கேட்டு எழுந்து விடாமல், அவர்கள் இருவரும் பாடுவது போன்ற சூழல், ‘நேரமிது.. நேரமிது.. நெஞ்சில் ஒரு பாட்டெழுத..’

டி.எம்.எஸை மெல்ல சத்தம் குறைவாக பாட வைக்க இளையராஜா முயற்சித்திருக்கிறார். கடைசி வரை அவரால் முடியவில்லை. இனிமையாக பாடிய,  T.M.Sஆல், குறைந்த ஒலியில் பாட இயலவில்லை.

இப்போதுகூட, ‘நேரமிது.. நேரமிது.. நெஞ்சில் ஒரு பாட்டெழுத..’ பாடலை கேட்டுப் பாருங்கள்.

தூங்குற பையன் எழுந்து, ‘ஏப்பா.. இப்படி தூங்கும்போது பாட்டு பாடி அம்மாவ தொல்லை பண்ற..’ என்று கேட்கும் அளவிற்கு பாடியிருப்பார்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘சொன்னது நீதானா?..’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ எப்போதும் ‘நெஞ்சம் மறப்பதில்லை..’

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

12 thoughts on “டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்?

  1. Pingback: Indli.com
  2. தூங்குற பையன் எழுந்து, ‘ஏப்பா.. இப்படி தூங்கும்போது பாட்டு பாடி அம்மாவ தொல்லை பண்ற..’ என்று கேட்கும் அளவிற்கு பாடியிருப்பார்.——-அப்படியா!!!!!!

  3. ask ilayaraja to learn from MSV…how to use TMS for a lonely night situation…pl listen to aandavan ulagathin muthalali from film Thozhilali…

  4. அஞ்சல் பெட்டி 520௦ படத்தில் இடம் பெற்ற பத்துப் பதினாறு முத்தம் முத்தம் இன்னொரு உதாரணம்

  5. 1980 களின் ஆரம்பத்தில் இலங்கை வானொலிக்கு இளையராஜா அளித்த பேட்டியில் டி எம் எஸ் குரலில் நளினம் கிடையாது என்ற தொனியில் சொல்ல , பேட்டிஎடுத்தவர் ‘தண்ணீரிலே தாமரைப் பூ ‘ பாட்டைப் போட்டுக்காட்டி இதில் என்ன குறை என்று கேட்டதாக நினைவு . இதை எப்படி யாராவது நிருபிக்க முடியும் என்று தெரியவில்லை. பட் இது உண்மை .

  6. அநேக விசயங்களில் உங்களுடன் ஒத்து போனாலும் இளையராஜா விசயத்தில் மட்டும் உங்களுக்கு அவரின் மேல் உள்ள அபிமானத்தால் சற்று அதிகமாகவே மிகை படுத்துவதாக உள்ளதை தாங்கள் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: