‘தமிழனா? மலையாளியா?’; சி.பி.எம் இனவாதம்

ஆவசே அச்சுதானந்தன்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக பிராந்தியக் கட்சிகள், தேசியகட்சிகளைப் போலவும், கேரள தேசியகட்சிகள் பிராந்தியக் கட்சிகளைப் போலவும் நடந்து கொள்கின்றன.

பெரியாறு அணையை ஆய்வு செய்த நிபுணர் குழு அணை பலமாக இருக்கிறது என்று அறிவித்ததும், உச்சநீதிமன்றம் தலையிட்டு அதை உறுதி செய்த நிலையிலும், கேரள அரசியல்வாதிகள் தங்கள் அற்ப அரசியல் லாபங்கங்களுக்காக தமிழர்களுக்கு எதிராக மலையாளிகளை உசுப்பி விட்டு இனவாத அரசியல் நடத்துகிறார்கள்.

காங்கிரசின் களவானித்தனம் நாடறிந்ததே. குறிப்பாக தமிழர்கள் நன்கு உணர்ந்ததே. அதேப்போல், சிபிஎம் கட்சியின் சேட்டைகளையும் நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால், அந்த சேட்டை இம்முறை கூரை மீது எறி கொள்ளி வைக்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

இன்றைய கேரள முதல்வர் காங்கிரஸ் உம்மன்சாண்டி, பெரியார் அணை விவகாரத்தில் தடாலடி அறிக்கைகளை துவக்கி வைத்து, கடந்த சிபிஎம் அச்சுதானந்தன் அரசை குற்றவாளியாக்கும் முயற்சியிலும், கேரள மக்களின் செல்வாக்கையும் பெற முயற்சிக்கிறார் என்று அறிந்தவுடன்,

முன்னாள் கேரள முதல்வர் சி.பி.எம் வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன், ஆக்சன் கிங் அர்ஜுன் போல் பொங்கி, ‘ரெண்டுல ஒண்ணு பாக்காம விடமாட்டேன்’ என்று உம்மன்சாண்டியால், தன் வாலில் பற்ற வைக்கப்பட்ட தீயை ‘உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், புதிய அணை கட்டுவதற்காண நீதி திரட்டுவது’ என்று கேரளா முழுக்க பற்ற வைக்கிறார்.

‘பெரியாறு அணையை இடிப்பது சாத்தியப்படாது, புதிய அணை ஒருபோதும் கட்டமுடியாது’ என்பது உம்மண்சான்டிக்கும், அச்சுதானந்தனுக்கும் தெளிவாகவே தெரியும். தெரிந்தும் ஏன் இந்த தேர்தல் பிரச்சாரம்?

இந்த இனவாத பிரச்சாரம், கேரளா வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் வாழ்கிற மலையாளிகளுக்கும் ஆபத்தானது என்பதை உணர்ந்தே செய்கிற இவர்களை என்ன வார்த்தைகளால் திட்டுவது?

அதுவும் ஒரு கம்யுனிஸ்டுக்கு இதுவா அழகு? இவர்களா கம்யுனிஸ்டுகள்?

மதவாத அரசியல் நடத்துகிற மோடிக்கும், சிபிஎம் ன் இந்த இனவாத செயலுக்கும் என்ன வித்தியாசம்?

இறைநம்பிக்கையாளர்கள், ஒரு பிரச்சினையின் கடைசி வாக்கியமாக, தவறு செய்பவர்களை, ‘அந்தக் கடவுள் உன்ன சும்மா விடமாட்டான்’ என்று சபிப்பார்கள். இது இயலாமையின் வெளிபாடு.

இதையே அரசியல் கோபமாக, அறிவியல் பார்வையில் சொல்ல வேண்டுமென்றால், சிபிஎம் மை பார்த்து இப்படி சொல்லலாம்,

‘மக்கள் இவர்களை மன்னித்தாலும், மார்க்சியம் ஒருபோதும் மன்னிக்காது.’

தொர்புடையவை:

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

கம்யுனிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகளை விட அதிமுகவே மேல்!

காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்

12 thoughts on “‘தமிழனா? மலையாளியா?’; சி.பி.எம் இனவாதம்

 1. தமிழ் இனத்தை அழித்த நரகாசுரன்- இந்தியா
  ,இன்று தமிழனின் தாலி அறுத்து கருமாதிக்கு
  மொய் வைக்கிறது!

 2. CPM = Communist Party of Malayalist (or Munutharmam)

 3. தற்போது கேரளாவில் இடைதேர்தல் வருகின்ற காரணத்தால் அவர்களுக்கு இது தேவைபடுகிறது அது மற்றும் இல்லாமல் தமிழ்நாட்டில் அணு உலை பிரச்சனை மற்றும் அந்நிய முதலிட்டு பிரச்சனையை பற்றி தமிழக மற்றும் கேரள மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு இது தேவைபடுகிறது

 4. மத்தியஅரசு, முல்லை பெரியாறு பிரச்சினையில் உண்மையாக நடக்கவில்லையெனில். தமிழ்நாட்டில் மத்திய அரசின் அலுவலகத்தை இழுத்து மூடவேண்டியதுதான்.

 5. முல்லைப்பெரியாறு எவ்வளவு பாதுகாப்பானதோ அவ்வளவு பாதுகாப்பானது கூடங்குளம் அணுமின் நிலையம்.நீங்கள் தமிழ்நாட்டில் கூடங்குளம் பற்றி தேவை இல்லாத பீதியை கிளப்புவது போல் மலையாளிகள் முல்லைப்பெரியாறு அணை பற்றி பீதியை கிளப்புகிறார்கள்.நீங்கள் செய்வது சரி என்றால் அவர்கள் செய்வதும் சரியே.

 6. நா.இரவிச்சந்திரன் - வெண்ணிப்பறந்தலை. says:

  தோழர்.மதிமாறன் அவர்களுக்கு வணக்கம். முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டவேண்டும் என கேரள இளைஞர்காங்கிரசார் கடுமையாக போராடுகிறார்களே,

  நம்ம தமிழ்நாட்டில் உள்ளஇளைஞர்.முதியவர்,வாசன், இளங்கோவன். தங்கபாலு காங்கிராசருக் கெல்லாம் இது தெரியுமா?

  நா.இரவிச்சந்திரன்
  வெண்ணிப்பறந்தலை.

 7. சி.பி.எம் க்கு முல்லைப்பெரியார் விவகாரம் சுய பரிசோதனைக் களமே! அமெரிக்க எதிர்ப்பு மட்டுமே தங்களின் கொள்கை அல்ல என்பதை, நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காரத் இருக்கிறார்!

  அச்சு தன் வயதிற்கு ஏற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை! ஆலைவாசல்களில் போரிடுவது அவர் வழக்கம்! இப்போது அணை வாசலுக்கே சென்று, மூன்றாம் தர அரசியலை செய்து கொண்டுள்ளார்!

 8. வாழ்க- யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்து கெட்ட தமிழகம்”

  “1979 எம்.ஜி.ஆர் – அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, நம் காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. அணையில் படகு விடும் உரிமை பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?”
  இது தான் நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மலையாளிகளுக்கு பெற்றுத் தந்த மண்ணின் பாச உணர்வு; அதன் பரிசாக மலையாள சகோதரர்கள் நமக்கு காட்டும் விசுவாசம்./. நம்பிக்கைத் துரோகம்..????
  தமிழா மண்ணின் மீதும் உனது மக்கள் மீதும் ஞாய உணர்வு கொள்!

Leave a Reply

%d bloggers like this: