தங்கர்பச்சான், கமல், வைரமுத்து: 7ஆம் அறிவு தமிழரின் பெருமை
தங்கர்பச்சான், கமலஹாசன், வைரமுத்து போன்ற திரைப்படத் துறையினர் அனைவரும் ‘7ஆம் அறிவு தமிழரின் பெருமையை சொல்லும் படம்’ என பாராட்டி தள்ளுகிறார்களே?
–நா. இரவிச்சந்திரன், வெண்ணிப்பறந்தலை.
பொதுவாக சினிமாக்காரர்கள் இன்னொரு சினிமாவை பாராட்டி பேசுவது புதிதல்ல. அவர்களின் பாராட்டுக்கு பின்னணியில் நட்பு. சொந்தம், வியாபாரம், வாய்ப்பு, அரசியல் தொடர்பு இதுபோன்ற சுயலாபங்கள் மறைந்திருக்கும். அவர்கள் ஒரு படத்தை விமர்சித்து பேசினால்தான் செய்தி.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்
7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல
7 ஆம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும்
தமிழ் மக்களின் இந்த ஒற்றுமை பொதுப் பிரச்சினைகளிலும் தொடரட்டும்!!
ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் மிக அதிகமாகி உள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை. தமிழகத்தில்,அதே நிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட,
தமிழகத்தில் வாழும் மக்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக
உள்ளது. இந்நிலை இந்திய ஒருமைப்பாட்டுக்கு/நமக்கு நல்லதல்ல. ஆகவே திறமையான தமிழ் வழிகாட்டிகள் தமிழகத்திற்கு உடனடியாகத் தேவை.
இல்லையெனில் நீங்கள் உறவினரை காண மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை.
தமிழா ! நடந்ததை மற. நடப்பதை நினை.
இனஉணர்வு கொள்!