Realistic film என்ற அபிப்ராயத்தை முதல் காட்சி உருவாக்குகிறது.
அறுவைச் சிகிச்சையை யதார்த்தமாகக் காட்டிய அடுத்தக் காட்சியிலேயே ஆரம்பமாகிறது சாகசம். பிறகு கடைசிவரை ஒரு காட்சி கூட யாதர்த்தமாக இல்லை. ‘யதார்த்தமாகக் காட்டுவது என் வேலையல்ல’ என்றால், அப்படிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாத அறுவைச் சிகிச்சையை ஏன் யதார்த்த்தமாகக் காட்ட வேண்டும்? எனக்கு இதெல்லாம் தெரியும் என்று காட்டவா?
என்ன அதியசம், ஆபேரேசன் செய்த ஆட்டுக்குட்டி டாக்டர் தூங்கிடாறன்.. செய்து கொண்ட ஓநாய் நோயாளி எழுந்து ஓடிடுறான். அதன் பிறகு தாவுகிறான், குதிக்கிறான், குப்புற விழுகிறான், ஓடுறான் ஓடுறான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடுறான்.
‘ஓநாய்’ புத்திசாலிதனத்தின் குறியீடாகக் காட்ட முயற்சிக்கப் படுகிறது. ஆனால், இதில் வருகிற ஓநாய், தன் புத்திசாலித்தனத்தைக் காட்டுவதற்காக முட்டாள் தனமான முடிவுகளையே எடுக்கிறது.
ஓநாயின் முட்டாள் தனமும் தன்னை வீர சாகசம் புரிகிற நாயகனாகச் சித்திரித்துக் கொள்ள வேண்டும் என்கிற ஓநாயின் பேராசையும் அந்தப் பார்வையற்றவர் குடும்பத்தையே சின்னப் பின்னமாக்கிவிடுகிறது. ஓநாய் அறியாமல் செய்த தவறுக்குப் பிராயசித்தமாக அறிந்த செய்கிற உதவிகள் தான் பார்வையற்றவர் குடும்பத்தையே நாசம் செய்துவிடுகிறது. உண்மையில் ஓநாயின் அறியாமை தான் அறிவுள்ளதாக இருக்கிறது.
ஆட்டுக்குட்டி டாக்டரை, போலிஸ் புலிகள் கண்காணிப்பையும் தாண்டி, ரயிலில் அதிரடியாகக் கடத்திக் கொண்டு போகிறது ஓநாய். சொந்தச் செலவில் சூனியத்தை வைத்துக் கொள்கிறது. அந்த ஆட்டுக்குட்டி டாக்டரை கடத்திக் கொண்டு போகாமல் இருந்திருந்தால் பார்வையற்ற அந்த அப்பாவி ஆட்டுக்குட்டிகளைக் காப்பற்றி இருக்கலாம். பிரச்சினை சுலபத்தில் முடிந்திருக்கும் ஓநாயின் பிராயசித்தமும் எளிதில் நிறைவேறி இருக்கும்.
இடைவேளையின் போது ஓநாய், ஆட்டுக்குட்டி டாக்டரை விடுவித்து விடுகிறது. அதோடு படமும் முடிந்து விடுகிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு மீண்டும் முதலில்லிருந்து. முடியில.
அது சரி, எதுக்காக ஓநாய், ஆட்டுக்குட்டி டாக்டரை கடத்திக் கொண்டு போய்க் கட்டி சுமக்குது?
அதனாலேயே நல்ல மனம் கொண்ட ஓநாய்க்குப் பிரச்சினைகள் மேலும் பிரச்சினைகள். அதை வைத்துக் கொண்டு சாகசங்கள் மேலும் சாகசங்கள். இந்த ஓநாய் சாகசம் செய்வதற்கு அப்பாவி பார்வையற்ற ஆட்டுக் குட்டிகள் பலியாகிவிட்டன. பாவம்.
இயக்குநரின் கவனமெல்லாம், குறைந்த ஒளியில் வித்தியாசமான காட்சிகளை உருவாக்குவதாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் திரைக்கதை என்று இல்லாமல் வெறும் காட்சிகளின் கோர்வையாக, அந்தக் காட்சிகளிலும் தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக் கொள்திலேயே கவனம் கொண்டு திரைக்கதையையும் கடந்து நிற்கிறது தன்முனைப்பு.
இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டி உரத்தக் குரலில், பஞ்ச் டயலாக்கோடு இதே காட்சிகளைக் காட்டியிருந்தால் அதுதான் விஜய், ரஜினி படங்கள்.
இதற்கு மேல் அதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ஆனால், நன்றி சொல்லலாம்.
‘நாயகன் ஓநாய், வில்லன் கரடி, அப்பாவிகள் ஆட்டுக்குட்டி, போலிஸ்கள் புலி’ என்று சொன்னவர், பார்வையாளர்களை ‘குரங்கு’ என்று சொல்லாமல் விட்டதற்காக.
*
‘அந்தத் தியேட்டருக்குப் போனேன். டிக்கெட் கிடைக்கவில்லை. அங்கிருந்து இன்னொரு தியேட்டருக்கு போனேன் அங்கே கட்டுக் கடங்காத கூட்டம். என் சட்டை எல்லாம் கிழிஞ்சி ஒரு வழியாக டிக்கெட் எடுத்தேன். இது உலகின் சிறந்த திரைப்படம்’
இப்படி எல்லாம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஜாக்கி வைத்துத் தூக்கினால், மிஷ்கின் மனசுல வேணுன்ன இடம் பிடிக்கலாம். ஆனால், அந்தப் படம் ரசிகர்கள் மனசுல இடம் புடிக்காது.
ஆனந்த விகடனில் ஆயிரம் மார்க் வாங்கினாலும் மக்கள் மனசுல..
காரணம், அது ஓடாம இருக்கிறதுக்கான வேலையை அதன் இயக்குரே சிறப்பாகச் செய்திருக்கிறார் அதன் திரைக்கதையில்.
குறிப்பு:
தந்திரசாலி என்றால் அதற்கு ஓநாய் அல்லது நரி. அப்பாவி என்றால் அதற்கு ஆட்டுக்குட்டி அல்லது மான். இந்தக் குறியீடுகள் பொதுவாகப் பொதுப் புத்தியில் இருக்கிறது. இதுவே சிறுவர்களுக்கான கதைகளாகவும்…
ஓநாய்-நரியைப் பற்றிய அபிப்பாராயத்தை விடுங்கள். தாவர உண்ணிகள் என்றால் அப்பாவிகள் என்கிற கருத்து, பஞ்சதந்திர கதைகள் உட்படப் பல கதைகளில் இருக்கிறது.
சைவ உணவு பழக்கமுள்ளவர்களை வெகுளிகளாக அப்பாவிகளாகக் குறிக்கிற குறியீடு அது. இதுபோன்ற ஒரு பொதுப் புத்தியை அவர்களே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
கமல்ஹாசன் தயாரித்து எழுதி அவர் இயக்கிய முதல் படமான இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்றான ஹேராமில், அபயங்கரிடம் சாகேத்ராமனின் இரண்டாவது மனைவி ஜானகி, ‘ஓநாய்ப் பசிக்கிறது என்றால், உங்க குழந்தையைத் தூக்கி கொடுத்திடுவீங்களா?’ என்று அசைவ உணவுப் பழக்கத்தைக் கேள்வி கேட்பார்.
அதற்கு அபயங்கர், ‘ஓநாயா இருந்து பாத்தாதான் அதன் நியாயம் புரியும்’ என்பார்.
அதுபோல், தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்று நிருபிக்கப்பட்டதற்குப் பின், இன்னும் இந்தக் குறியீடுகள் முட்டாள்தனமானவை.
ரோஜா செடிகள், இன்னும் அழகிய மலர்கள், அழகில்லாத தாவரங்கள் இவைகளின் நிலையிலிருந்து பார்த்தால் தெரியும் ஆடுகளும் மாடுகளும் மான்களும் எவ்வளவு கொடூரமானவை நரிகளும் ஓநாய்களும் புலிகளும் எவ்வளவு சாந்தமானவை என்று.
விலங்குகளின் உணவு பழக்கத்தை வைத்துக் கொண்டு அதன் குணங்களைக் குறிப்பிடுகிற அறியாமையை விட்டொழிக்க வேண்டும். அந்தக் குறியீடுகளில் அறியாமை மட்டுமல்ல, மற்ற மனிதர்களை இழிவாகப் பார்க்கிற கண்ணோட்டமும் இருக்கிறது.
வேட்டையாடி உண்பவை வீரமும் இல்லை. தந்திரமும் இல்லை. புத்திசாலியும் இல்லை. கொடூரமும் இல்லை. அது அதன் உயிர் வாழ்தலின் இயல்பு.
அக்டோபர் 2, 2013 அன்று எழுதியது.
‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?
கமல் படத்தை விட ரஜினி படத்தைதான் மக்கள் விரும்புகிறார்கள், காரணம்..

