Site icon வே. மதிமாறன்

லிங்கா; ஹாலிவுட் ரேன்ஞ்..

rajini-k.s.ravikumar

‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் பற்றிச் சிலர் விமர்சிக்கிறார்கள். ஸ்பைடர்மேன், பேட்மேன் மாதிரியான ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை ஏற்றுக்கொள்பவர்கள், அதுபோல் தமிழில் எடுத்தால் ஏற்க மறுக்கிறார்கள். – இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் .

ஸ்பைடர்மேன், பேட்மேன் படங்களில் ஆரம்பத்தில் நாயகர்கள், பிக்பாக்கெட்டாக இருந்துவிட்டு, படம் முடிவில் பறந்து பறந்து மாயஜாலம் செய்யவில்லை. ஆரம்பித்திலிருந்தே அவர்கள் அது போன்ற ‘சக்தி’யை பெற்றவர்கள். அதனால் அந்தப் பாத்திரங்கள் செய்கிற சாகசங்களுக்கு ஒரு காரணம் இருந்தது. கோமாளித்தனமாகத் தெரியவில்லை.

அவ்வளவு ஏன்?
ரஜினியின் ‘எந்திரன்’ படத்திலும் அப்படித்தான். தமிழ் ரசிகர்கள், ரஜினி ரசிகர்களோடு சேர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவில்லையா?

ஒருவனைச் சாதாரண மனிதனாகக் காட்டிவிட்டு, பிறகு திடிரென்று அமானுஷ்ய சக்தி உள்ளவனாகக் காட்டினால்.. அது ‘கடவுளாகவே’ இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் ரசிகர்கள்.

ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களின் மாபெரும் வசூல், அவர்களின் எளிய கூலி வேலை செய்யும் ரசிகர்கள், தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரின் அத்தியாவசியமான தேவைகளைப் புறம் தள்ளிவிட்டு; அந்தப் பணத்தில், ஒருமுறைக்கு நாலு முறை படம் பார்ப்பதால் தான் நடக்கிறது.

அவர்கள் திரும்பத் திரும்பப் பார்க்கிற படமே, மற்றவர்களையும் ஒரு முறையாவது பார்க்க வைத்துவிடுகிறது.

இப்படி இருக்க.. ரஜினி படத்தை, ரஜினி ரசிகர்களே ஒரு முறையோடு ஏறக்கட்டி விட்டார்கள் என்றால் அது தோல்விப் படம்.

சுவாரஸ்யமாக இருந்தால்.. எவ்வளவு மோசமாக, கோமாளித்தனமாக இருந்தாலும் பார்க்க விரும்புகிற ரசிகர்கள் மத்தியில், இப்படி ரஜினி ரசிகர்களே விரும்பாத படத்தை எடுத்து விட்டு..
தன்னை ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு, உயர்த்திப் பேசிக் கொள்வது, ‘லிங்கா’ படத்தை விடவும் மொக்கையான காமெடியா இருக்கு.

Rush: ஒளி ஒலியின் உன்னதம்

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

எம்.ஜி.ஆரின் கண்ணியம் ரஜினியின் அற்பம்; லிங்கா ரிசல்ட்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

Exit mobile version