லிங்கா; ஹாலிவுட் ரேன்ஞ்..

rajini-k.s.ravikumar

‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் பற்றிச் சிலர் விமர்சிக்கிறார்கள். ஸ்பைடர்மேன், பேட்மேன் மாதிரியான ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை ஏற்றுக்கொள்பவர்கள், அதுபோல் தமிழில் எடுத்தால் ஏற்க மறுக்கிறார்கள். – இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் .

ஸ்பைடர்மேன், பேட்மேன் படங்களில் ஆரம்பத்தில் நாயகர்கள், பிக்பாக்கெட்டாக இருந்துவிட்டு, படம் முடிவில் பறந்து பறந்து மாயஜாலம் செய்யவில்லை. ஆரம்பித்திலிருந்தே அவர்கள் அது போன்ற ‘சக்தி’யை பெற்றவர்கள். அதனால் அந்தப் பாத்திரங்கள் செய்கிற சாகசங்களுக்கு ஒரு காரணம் இருந்தது. கோமாளித்தனமாகத் தெரியவில்லை.

அவ்வளவு ஏன்?
ரஜினியின் ‘எந்திரன்’ படத்திலும் அப்படித்தான். தமிழ் ரசிகர்கள், ரஜினி ரசிகர்களோடு சேர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவில்லையா?

ஒருவனைச் சாதாரண மனிதனாகக் காட்டிவிட்டு, பிறகு திடிரென்று அமானுஷ்ய சக்தி உள்ளவனாகக் காட்டினால்.. அது ‘கடவுளாகவே’ இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் ரசிகர்கள்.

ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களின் மாபெரும் வசூல், அவர்களின் எளிய கூலி வேலை செய்யும் ரசிகர்கள், தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரின் அத்தியாவசியமான தேவைகளைப் புறம் தள்ளிவிட்டு; அந்தப் பணத்தில், ஒருமுறைக்கு நாலு முறை படம் பார்ப்பதால் தான் நடக்கிறது.

அவர்கள் திரும்பத் திரும்பப் பார்க்கிற படமே, மற்றவர்களையும் ஒரு முறையாவது பார்க்க வைத்துவிடுகிறது.

இப்படி இருக்க.. ரஜினி படத்தை, ரஜினி ரசிகர்களே ஒரு முறையோடு ஏறக்கட்டி விட்டார்கள் என்றால் அது தோல்விப் படம்.

சுவாரஸ்யமாக இருந்தால்.. எவ்வளவு மோசமாக, கோமாளித்தனமாக இருந்தாலும் பார்க்க விரும்புகிற ரசிகர்கள் மத்தியில், இப்படி ரஜினி ரசிகர்களே விரும்பாத படத்தை எடுத்து விட்டு..
தன்னை ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு, உயர்த்திப் பேசிக் கொள்வது, ‘லிங்கா’ படத்தை விடவும் மொக்கையான காமெடியா இருக்கு.

Rush: ஒளி ஒலியின் உன்னதம்

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

எம்.ஜி.ஆரின் கண்ணியம் ரஜினியின் அற்பம்; லிங்கா ரிசல்ட்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

2 thoughts on “லிங்கா; ஹாலிவுட் ரேன்ஞ்..

  1. லிங்கா படம் வெளியீட்டுக்கு முன் நான் என் முகநூலில் எழுதினேன்.படம் தோல்வியடைய வேண்டும் என்று.காரணம் அதன் கொள்ளை லாபம்??|

  2. Bhim Raj Gandhi · Friends with பிரபா அழகர் and 134 others
    ஹாலிவுட் படத்துல இருந்த சுட்டு கதை எழுதிட்டு.. இப்போ பெருசா ஸ்பீல்பெர்க் மாதிரி பேட்டி கொடுக்கறது!!
    7 hrs · Like · 9

    Rajesh Gomugan · 17 mutual friends
    Nan 3murai parthen.., eankaluku padam pidithu than erukerathu.
    7 hrs · Like

    Vcksiva Bharathi · 15 mutual friends
    நச் பதிவு…
    6 hrs · Unlike · 1

    மலேசியா சிவா ஹாலிவுட் (காந்தம் சாவி காட்சி ) தொடங்கி தமிழ் படம் ( தமிழ் புலவர் லிங்க காமடி காட்சி ) வரை காட்சிகளை திருடி படம் எடுத்தவர்கிட்ட ரொம்ப எதிர்பார்ப்பது தவறு ரவுஷ்குமார் ஒரு மொக்ககுமார்
    6 hrs · Edited · Unlike · 4

    செந்தில் வடிவேல் நீங்க ஒரு தடவை சொன்ன மாதிரி போலிகள் தான் ரஜினி போன்றவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுகிறது.
    மேலும் இது போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் தோல்வி என்பது மக்களுக்கு நன்மையே.
    6 hrs · Edited · Unlike · 5

    மலேசியா சிவா ரூபாய் ௫௦ செலவு செய்து கள்ள குறுந்தகடு வாங்கி பார்க்கும் அளவுக்குகூட தேராது பாஸ் செந்தில் வடிவேல்
    6 hrs · Unlike · 5

    Rafi Ahmed · Friends with Abdul Rahman
    Well said brother
    6 hrs · Unlike · 1

    செந்தில் வடிவேல் மலேசியா சிவா
    உண்மை தான். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வரை இந்த அவல நிலை தொடரும்.
    6 hrs · Unlike · 3

    Thana Vanam · Friends with அன்வர் அரசை and 3 others
    எப்படி படம் பயணிக்கும் என்று ரஜினிக்கு தெரியாதா?|
    6 hrs · Unlike · 1

    Subash Chandra Bose · 60 mutual friends
    மலேசியா சிவா//// மக்கள் குறுந்தகடு
    6 hrs · Unlike · 2

    Jeevendran ஜீவேந்திரன் · 597 mutual friends
    உண்மை
    5 hrs · Unlike · 1

    நாகேந்திரகுமார் திலகவதி ~
    இரண்டு பணத்திருட்டுக் கோமாளிகளையும் மேலும் மேலும் “கோமாளிகள்” என்று போட்டுப் பொளக்கும் வே மதிமாறன் அவர்களை கண்டிக்கிறேன்!
    4 hrs · Unlike · 5

    வே மதிமாறன் உங்கள் கண்டனத்தை ஏற்றுக் கொள்கிறேன.
    4 hrs · Like · 5

    வே மதிமாறன் http://mathimaran.wordpress.com/2013/10/18/rush-694/

    Rush: ஒளி ஒலியின் உன்னதம்
    செப்டம்பர் மாத நடுவில் அநேகமாக இந்தப் படம் வெளியான ஒரு வாரத்திற்குள் சென்னை…
    MATHIMARAN.WORDPRESS.COM
    4 hrs · Like · 2 · Remove Preview

    நாகேந்திரகுமார் திலகவதி ~
    //பிரம்மாண்டமான, எளிமையான ஷாட்டுகளோடு சொல்லப்பட்டதே Rush//…See More
    4 hrs · Unlike · 1

    Senguttuvan Senguttuvan தோழர் மதிமாறன் அவர்களே

    உடனடி தேவை …See More
    4 hrs · Unlike · 2

    சரவண வேல் · Friends with Anbu Veera and 25 others
    என்னாது ஹாலிவுட் படத்தோடு ஒப்பிட்டு பேசுறாப்ள யா? யேப்பா கேஎஸ்ஆர், இதெல்லாம் இட்லினு சொன்னா சட்னிகூட நம்பாதுய்யா. வேணும்னா ரஜினிய சூப்பர்மேன் மாதிரி பேண்ட்க்கு வெளிய ஜட்டிய போட்டு வர சொல்லுய்யா. அப்ப ஒத்துக்கிறோம்.
    3 hrs · Unlike · 3

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading