எம்.ஜி.ஆரின் கண்ணியம் ரஜினியின் அற்பம்; லிங்கா ரிசல்ட்

mgr_rajini

இன்னைக்குப் பொறந்த நாளாமே..?

‘நாராயணா.. டி.வி ய தொறந்தா இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலடா..’

11 December at 21:33

‘லிங்கா’ –
சங்கா?
‘வடக்குப்பட்டி ராமசாமிக்கு.. குடுத்தப் பணம்.. ஊ.. ஊ. ஊ..’

12 December

‘லிங்கா’ ரிசல்ட் …

‘அய்யையோ.. ரஜினி அரசியலுக்கு வந்துடுவார் போல..’

14 December

எம்.ஜி.ஆரின் கண்ணியம் ரஜினியின் அற்பம்

மகள் வயதை விடக் குறைந்த வயது பெண்களுடன் ஜோடி சேர்ந்து கூத்தடிப்பது, கதாநாயகத்தனங்களில் முக்கியமானது என்பதை, எம்.ஜி.ஆர். தான் துவக்கி வைத்தார். சிவாஜியோ, தன்னோடு குழந்தை நட்சத்திரமாக நடித்த, ஸ்ரீதேவியை ஜோடியாக்கி அந்த முறையை வளர்த்தெடுத்தார்.

பிறகு, அன்புள்ள ரஜினிகாந்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவுடன் சில ஆண்டுகளிலேயே, நம்ம ‘எஜமான்’ மனசாட்சியே இல்லாமல் ஜோடி சேர்ந்தார்.

தன் தலையில் உள்ள விக், மீதியிருக்கிற நறைத்த முடிக்கு அடிக்கிற டை, சிறுவர்களைப்போல் அணிகிற உடை இதெல்லாம் ‘இளமை’யாகக் காட்டுவதற்கான முயச்சிப்போலவே; கிழ நடிகர்களின் சிறுமிகள் மீதான மோகத்திற்கும் இதுவே முக்கியக் காரணமாக இருக்கிறது. ‘என் இளமை இன்னும் குறையவில்லை. சாட்சிக்கு, பாருங்க இந்தப் பொண்ண’

விக், டை, கருப்புக் கண்ணாடி போலத்தான் அவர்களுக்குப் பெண்களும். அதனால் தான் தன் மூத்த மகள் வயது உள்ளப் பெண்ணைத் தனக்கு அம்மாவாகவும், இளைய மகள் வயதுடைய பெண்ணைத் தனக்கு ஜோடியாகவும் கொண்டு கூச்சமில்லாமல், கிழவர்களால் இளைஞனாக நடிக்க முடிகிறது.

ஆனாலும், இந்த மோசமான முறையைத் துவக்கி வைத்த எம்.ஜி.ஆரிடம் இருந்த குறைந்தபட்ச கண்ணியத்தில் துளிகூட ரஜினியிடம் இல்லை.

நடிகை விஜயகுமாரியை எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக்க பலர், பலமுறை முயச்சித்துப்போதும் திட்டவட்டமாக ‘முடியாது’ என்று தீர்த்துச் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர். தங்கையாக நடிக்க மட்டுமே சம்மதித்திருக்கிறார். நடித்தும் இருக்கிறார். இதைச் சமீபத்தில் விஜயகுமாரியும் உறுதிச் செய்தார்.

விஜயகுமாரியோடு ஜோடி சேருவதற்கு எம்.ஜி.ஆர் மறுத்ததற்கு ஒரே காரணம், தன் நண்பன், தன் இயக்கத் தோழன் எஸ்.எஸ்.ஆருடைய மனைவி விஜயகுமாரி என்பதாலேயே.

ஆனால், ரஜினியோ நண்பனின் மனைவியுடன் அல்ல, நண்பனின் மகளுடனே ஜோடி சேர்ந்து நட்புக்கும் மூப்புக்கும் இழிவான அடையாளத்தைச் செய்திருக்கிறார்.

சத்ருகன் சின்ஹா. தமிழில், ரஜினி எப்படி விடலைத் தனமாகச் சேஷ்டைகள் செய்து ‘ஸ்டைல் மன்னன்’ என்று பெயர் எடுத்தாரோ, அதுபோன்ற சேஷ்டைகளையே ரஜினிக்கு முன்பே இந்தியில் செய்தவர் சின்ஹா. அதனால் தான் இந்திக்குப்போய் ரஜினி செய்த ‘சிக்ரெட் சேஷ்டைகள்’ எடுபடாமல் போனது.
ரஜினியும் சின்ஹாவும் நல்ல நண்பர்கள். ரஜினியே பலமுறை உறுதி செய்திருக்கிறார்.

‘லிங்கா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிற சோனாக்சி சின்ஹா, சத்ருகன் சின்ஹா – நடிகை பூனம் தம்பதியரின் மகள்.

ஆனாலும் நம் வருங்கால முதல்வர், எந்த மேடையில் ஏறினாலும், ‘நமது பண்பாடு. கண்ணியம்’ என்று பேசத் தவறியதே இல்லை.
அதேபோல் ரசிகர்களும் அவர் சிறுமியோடு ஜோடி சேர்ந்து ஆடும்போது விசிலடித்துக் கை தட்டி உற்சாகம் அடைவதைப்போலவே,
அவரின் பண்பாடு சார்ந்த இது போன்ற மேடை வசனங்களுக்கும் விசிலடித்துக் கை தட்ட ஒருபோதும் தவறியதில்லை.

அவருக்குத் தேவை பணம். நமக்குத் தேவை உற்சாகம். அது டாஸ்மாக்கில் கிடைத்தால் என்ன? திரையரங்கில் கிடைத்தால் என்ன?
‘நாம எல்லாம் ஆம்பளைஸ். அப்படித்தான் நடத்துப்போம்’

11 December at 21:33

‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

‘சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும் வெளிப்படையானவர்’!

ரஜினி; பாலபிஷேகம் பரம்பரைப் புத்தி

கோச்சடையான்: சீக்காளி சேர்க்கும் சில்லரை

கமல் படத்தை விட ரஜினி படத்தைதான் மக்கள் விரும்புகிறார்கள், காரணம்..

ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

4 thoughts on “எம்.ஜி.ஆரின் கண்ணியம் ரஜினியின் அற்பம்; லிங்கா ரிசல்ட்

 1. Gangeyan Sundaram அது சரி, அந்தக் கண்ணியம் இருந்தால் இந்தத் தவறைச் செய்யமாட்டாரே!
  12 December at 07:01 · Unlike · 1

  Shivas Sivakumar · 12 mutual friends
  // விஜயகுமாரியோடு ஜோடி சேருவதற்கு எம்.ஜி.ஆர் மறுத்ததற்கு ஒரே காரணம், தன் நண்பன், தன் இயக்கத் தோழன் எஸ்.எஸ்.ஆருடைய மனைவி விஜயகுமாரி என்பதாலேயே.//
  அப்ப மற்ற நடிகைகளோடு எம்சியாரு நடிக்கவில்லையா ? உண்மையாகவே கூத்து தான் அடித்தாரா ? அடக்கடவுளே !

  இந்த அளவுகோலை வைத்து பார்த்தால் . . .
  12 December at 07:41 · Like · 5

  Rajesh Gomugan · 17 mutual friends
  Cinemakarana nadika viduka… Nadikarta eathuku kanniyatha thedadum.,
  12 December at 08:04 · Like

  Saavanna Magendran It is much worse and critical issue when we abstract it to film industry on how age-inappropriateness is exploited for profits. An underaged girl playing lead role and involved in romance continued for years unknowingly sets a wrong image of adult-women in society. The opposite is also worse, that is as you said elderly actors continue to act in age-inappropriate roles and behaving so. இங்க வயசுக்கேத்த வாழ்க்கை, செய்கை , திறமை, முதிர்ச்சி….இல்லை.
  12 December at 08:17 · Like

  Selvaraj Ksraj · 7 mutual friends
  எ ல்லாம் கலை கலை கலைக்கண்ணோடு பாருங்கோ அதுசரி நண்பநோடமனைவிங்கநதுனாலே விஜயகுமாரி அவர்களோடு நடிக்காதது கண்ணியம் என்றால் பிறர்மனைவிகளோடு நடிக்கும்போது மட்டும்சரியா என்னங்க தோலரே லாஜிகிக்கு ?
  12 December at 08:47 · Edited · Like · 6

  Joseph Xavier Dasaian Tbb Not an impressive review
  12 December at 08:43 · Like · 2

  MRahman Syed · Friends with ஹாஜா மொஹைதீன் and 2 others
  Rajini oru poruki….ganja party..
  12 December at 08:45 · Like

  Farwaze Ahamed · Friends with பிரபா அழகர் and 9 others
  Shivas sivakumar செத்து போனவங்கள பற்றிய விவாதம் இது வல்ல இருக்கும் சிலர் பற்றி தான்
  12 December at 09:00 · Like

  வே மதிமாறன் Selvaraj Ksraj பிறர்மனைவிகளோடு நடிக்கும்போது மட்டும்சரியா என்னங்க தோலரே லாஜிகிக்கு ? //
  சுகாசினியோடு கமல் நடிக்காமல் இருந்ததற்கு என்ன காரணமோ அதே காரணம் தான். எம்.ஜி.ஆர் நடிக்காமல் இருந்த காரணமும்.
  12 December at 09:33 · Edited · Like · 7

  Siva Erambu Jaffna · 19 mutual friends
  இந்த கேவலம் தமிழ் நாட்டில்
  மட்டும் தான். சினிமா,மது, மூடநம்பிக்௱க,அறியா௱ம,அரசியல்கோமாளத்தனம்,தமிங்கிலிஸ், திருட்டு, இதெல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு தோழரே.
  12 December at 09:49 · Like · 2

  Ilangovan Chanemouganandam @Shivas sivakumar,// விஜயகுமாரியோடு ஜோடி சேருவதற்கு எம்.ஜி.ஆர் மறுத்ததற்கு ஒரே காரணம், தன் நண்பன், தன் இயக்கத் தோழன் எஸ்.எஸ்.ஆருடைய மனைவி விஜயகுமாரி என்பதாலேயே.//
  அப்ப மற்ற நடிகைகளோடு எம்சியாரு நடிக்கவில்லையா ? உண்மையாகவே கூத்து தான் அடித்தாரா ? அடக்கடவுளே !

  இந்த அளவுகோலை வைத்து பார்த்தால் . . .,

  Ungal kelvi enna? Puriyavillai.
  12 December at 12:47 · Like

  Sureshkumar Gunasekaran · 5 mutual friends
  You don’t know the meaning of acting
  12 December at 16:23 · Like

  Sureshkumar Gunasekaran · 5 mutual friends
  Acting is different and personal life is different it’s just acting with actors
  12 December at 16:23 · Like

  வே மதிமாறன் http://mathimaran.wordpress.com/2014/05/24/rajini-818/

  ரஜினி; பாலபிஷேகம் பரம்பரைப் புத்தி
  ‘ரஜினி படத்திற்கு பால் அபிசேகம்’இதை ரசிக மனோபாவமாக மட்டும் பார்க்க முடியாது. இது…
  MATHIMARAN.WORDPRESS.COM
  12 December at 19:08 · Like · Remove Preview

  ஆரோக்கிய ராசு கடைசி பஞ்ச் சூப்பர் தலீவா..
  12 December at 19:28 · Like

  வே மதிமாறன் http://mathimaran.wordpress.com/2014/03/11/kochadaiyaan-790/

  கோச்சடையான்: சீக்காளி சேர்க்கும் சில்லரை
  சூப்பர் ஸ்டார் தீவிர சீக்காளியாக நடக்கக் கூட…
  MATHIMARAN.WORDPRESS.COM
  13 December at 02:57 · Like · Remove Preview

  அன்புசெழியன் மயில்வாகனன் · 13 mutual friends
  மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் புரட்சி தலைவருக்கும் லதாவுக்கும் வயது வித்தியாசம் என்ன என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
  13 December at 05:27 · Like

  Kingsly Thomas Super
  13 December at 06:23 · Like

  Alsalam Abu · Friends with அன்புமதி திராவிடன் தாய்மொழி தமிழ்
  Alsalam Abu’s photo.
  13 December at 10:15 · Like · 2

  Gokula Krishnan · Friends with Parimalan Manickam
  this age he acting hero. this is god gift to rajini sir .
  13 December at 13:30 · Like · 1

  Sundar Narayanan R · Friends with எழிலரசி விடுதலை
  yenna vena status poduvingalaaa…. knjm yousichu podupaaa…. unakku na buthi sonna nalla irukadhu….

 2. ஏம்ப்பா.. பணத்துக்காக நடிக்கிறது ஆகிடுச்சு.. அப்பும் அம்மா என்ன… ஆத்தா என்ன.. பொண்டாட்டி என்ன….வயசு ஒரு குறையா சொல்லாதீங்க… எம்.ஜி.ஆர் இப்போ இருந்தாலும் கதாநாயகனாகத்தான் நடிச்சிட்டிருப்பார்.. போப்பா.. போய் வேலைய பாருப்பா…!

  ஹி… ஹி… இப்போ இது எதுக்கு? ஏற்கனவே லிங்கா நங்கு நங்கு அடிச்சிட்டு இருக்காங்க.. நீங்க வேறயா?

Leave a Reply

%d