தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

எவ்வளவு அதர்மங்கள்; எவன்டா பேரு வைச்சான் ‘தர்ம’புரின்னு

காதல் திருமணங்களில், ஆண் ஆதிக்க ஜாதியாக இருந்து, பெண் தாழ்த்தப்பட்டவராக இருந்தால், அந்த திருணங்களை தன் ஜாதிக்கு ஏற்பட்ட கலங்கமாக ஆதிக்க ஜாதிக்காரர்கள் பார்ப்பதில்லை.

காரணம், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்வதை, தனது ஜாதி திமிர்களில் ஒன்றாக கருதுவது இந்து ஜாதி சமூக அமைப்பின் மனநிலை.

ஒருவேளை, தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் முடிப்பது பிரச்சினையானலும், அது மகனுக்கும் அப்பனுக்குமான சண்டையாக முடிந்து, மகன் வீட்டை விட்டு வெளியேறுவதோடு முடிந்துவிடும்.

மாறாக, பெண் ஆதிக்க ஜாதியாகவும், ஆண் தாழ்த்தப்பட்டவராகவும் இருந்தால், அந்த திருமணச் சண்டை குடும்ப சண்டையோடு முடிவதில்லை. அந்தச் சேரியில் உள்ள ஒட்டுமொத்தமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொலைவெறி தாக்குதலாக வடிவம் பெறுகிறது.

இதுகாறும் ஜாதி மறுப்பு திருமணம் என்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எல்லாமே, பெண் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவராக இருப்பதாலேயே நடந்திருக்கிறது.

இந்த ஜாதி இந்து உளவியலின் அடிப்படையில்தான் சினிமாவில், இலக்கியத்தில் கூட ஜாதி மறுப்பு முற்போக்காளர்களாக தங்களை காட்டிக் கொள்ளும். ஆதிக்க ஜாதியை சேர்ந்த படைப்பாளர்கள், காதலில் ஆணை தன் ஜாதியாக அல்லது ஆதிக்க ஜாதியாகவும் பெண்ணை தாழ்த்தப்பட்டவராகவும் மட்டுமே காட்டுகிறார்கள்.

மதம், ஜாதி எதுவானாலும் அது சார்ந்த பண்பாடு, ஒழுக்கம், மானம், அவமானம் எல்லாம் பெண்களை மய்யமிட்டே இயங்குகிறது. அதனால்தான் ஒரு ஆணோடு சண்டை ஏற்படும்போது, முதல் வார்த்தையே. அவன் குடும்பத்து பெண்களை இழிவாக ஆரம்பிப்பதிலிருந்து தொடங்குகிறது.

ஒரு ஆணை அவமானப்படுத்த வேண்டும் என்றால், அவனை பற்றி எதுவும் திட்ட வேண்டியதில்லை, அவன் வீட்டு பெண்களை கேவலமாக ஆபாசமாக திட்டினால் போதும் எவனும் அருவாள் தூக்குவான்.

அதன் பொருட்டே எல்லா சண்டைகளிலும் ‘ஓத்தா…’ என்று ஆரம்பித்து தொடர்ந்து பெண்களை இழிவாக திட்டுகிற வார்த்தைகளாக வந்துவிழும்.

தனது ஜாதியின் பெருமை, ஜாதிக்கான கவுரவம் எல்லாவற்றையும் தன் ஜாதி பெண்களின் நடவடிக்கைகளிலேயே வைத்திருக்கிறார்கள் ஆதிக்க ஜாதிக்கார்கள்.

இந்த ஜாதிரீதியான கவுரவங்களில், தன் ஜாதியைவிட ‘உயர்ந்த’ ஜாதிக்காரரோடு காதல் திருணமத்தை தன் பெண் செய்து கொண்டால், அதை பெரிய அவமானமாக கருதுவதில்லை.

வன்னியர் ஜாதி பெண்ணையோ, கள்ளர் சமூகத்து பெண்ணையோ, நாடார் பெண்ணையோ; ஒரு பார்ப்பனரோ, பிள்ளையோ, முதலியோ திருமணம் செய்துகொண்டால்; பார்ப்பனர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள் குடியிருப்புகளில் புகுந்து அவர்களை தாக்குவது, வீடுகளை சூறையாடுவது கிடையாது.

இதுதான் ஜாதி இந்து சமூக அமைப்பின் அடிமை மனோபாவம்.

மாறாக தன் பெண் தாழ்த்தப்பட்டவரை திருமணம் செய்து கொண்டால்தான், இந்த கொலை வெறி தாக்குதல்கள்.

பார்ப்பனர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள் வீட்டுப் பெண்ணைகளை தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்து கொண்டால், மிகப் பெரும்பாலும் இவர்கள் வன்முறையில் இறங்குவதைவிடவும், காரியம் சாதிப்பதிலையே குறியாக இருக்கிறார்கள்.

நேரடியான வன்முறையில் இறங்குவது, இவர்களின் ஜாதி அந்தஸ்துக்கு கவுரவக் குறைச்சல். அல்லது எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டவர்களைவிட குறைவானவர்கள் என்பதால், ‘அடி நமக்கு விழுமோ என்கிற பயம்?’ இதானாலேயே இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நேரடியான வன்முறையில் இறங்குவதில்லை.

மிகப் பெரும்பாலும் தலித் மக்கள், ஜாதி இந்துக்களைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிற பகுதிகளில் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். சென்னை, அரக்கோணம். வேலூர், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி இவைகளை சுற்றி இருக்கிற கிராமங்கள் மற்றும் இதுபோன்று இந்தியா முழுக்க தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது,

காதலின் பெயரால்கூட ஜாதிய தாக்குதல்களை நடத்திவிட்டு, யாரும் தப்பி விட முடியாது. தலித் இயக்கங்கள் கூட இந்தப் பகுதிகளில் மட்டும்தான் அமைப்புக் கட்டுகிறார்கள்.

மாறாக, தலித் மக்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்கிற பகுதிகளில், அடிப்படையான மனித உரிமை கூட இல்லாமல்; மரண பயத்தில், தினம் தினம் பயந்து நடுங்கி கொண்டுதான் வாழ வேண்டியிருக்கிறது. அந்தப் பகுதிகளில்தான் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை ஜாதி இந்துக்கள் நடத்துகிறார்கள்.

தலித் இயக்கங்கள் அங்கு நுழையக்கூட முடியாது. அதற்கான முயற்சிகளைக் கூட தலித் இயக்கங்கள் செய்வதும் இல்லை.  ‘திண்டாமை ஒழிப்பு முன்னணி’ என்று செயல்படுகிற சிபிஎம் கட்சிக்காரர்கள்கூட முயற்சிப்பதில்லை.

இணையத்தில் தலித் வன்கொடுமைகளுக்கு எதிராக தீவிரமாக எழுதுகிற தலித் இளைஞன், தன் கிராமத்தில் தன் உறவினரிடம் துயரமாகக் கூட அதை பகிர்ந்து கொள்ள முடியாது. பகிர்ந்து கொண்டால் அவர் மீண்டும் நகரத்திற்கு திரும்ப முடியாது.

ஜாதி ஒழிப்பு பணியில் ஈடுபடுகிற முற்போக்காளர்கள் தீவிரமாக செயல்பட  வேண்டிய இடம் இதுதான். இங்கு பணியாற்றினால் செல்வாக்கும் கிடைக்காது, தேர்தலில் வாக்கும் கிடைக்காது. உயிரை குறிவைக்கும் எதிர்ப்பே அதிகம் கிடைக்கும். வழக்கிறிஞர் ரத்தினத்திற்கு கிடைப்தைப் போல்.

சரி, மீண்டும் பார்ப்பனர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள் வீட்டு பெண்ணை தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்து கொண்டால்… அந்த பிரச்சினைக்கே வருவோம்.

தலித் மாப்பிளை வசதியானவராக நிறைய சம்பாதிப்பவராக இருந்தால், அவர் சார்ந்த ஜாதியில் இருந்து மட்டுமல்ல, அவர் குடும்பத்திடமிருந்தே அவரை பிரிந்து உயர் நடுத்தர வர்க்க அடையாளத்தை முன்னிலைப்படுத்தி அவரின் குடும்ப அடையாளத்தை முற்றிலுமாக மாற்றிவிடுவார்கள். (மாப்பிள்ளையின் மனப்பூர்மான சம்மதத்துடன்)

மாறாக, தலித் மாப்பிள்ளை கூலியாகவோ, குறைந்த வருமானம் உள்ள தொழிலாளியாகவோ இருந்தால், திருமணத்திற்கு முன்: ‘அவன நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா நாங்க எல்லோரும் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம்’ என்று மிரட்டுவார்கள். ஆனால், செய்து கொள்ள மாட்டார்கள்.

அதையும் மீறி திருமணம் நடந்தால், ‘எனக்கு ஒரு பொண்ணு இருந்தா.. அவ செத்துப் போயிட்டா’ என்று ‘தலை முழுகி’ விடுவார்கள்.

ஆனால், இடைநிலை ஜாதிகளில்  எண்ணிக்கையில் அதிகம் உள்ள ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நேர் மேல் இருக்கிற கள்ளர், வன்னியர் போன்ற ஜாதிகளே தன் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் செய்து கொண்டால், தனக்கு ஏற்பட்ட மாபெரும் அவமானமாக கருதி தற்கொலை செய்து கொள்கின்றனர். கவுரக் கொலைகள் செய்கின்றனர். சேரியையே கொளுத்தி ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களையும் நடுத்தெருவில் நிறுத்துகின்றனர்.

இதுதான் ஜாதி இந்து சமூக அமைப்பின் மனநிலை.

வட, தென் தமிழகத்தின் நிலை இது. தருமபுரியின் நிலையும் இதுவேதான்.

மேற்கு மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, கோவை பகுதிகளில் தலித் மக்களான சக்கிலியர்கள் மீது இந்த கொடூர தாக்குதல்களை நடத்துபவர்கள், ஜாதியில் ‘உயர்’ அந்தஸ்து கொண்ட கொங்கு வேளாள கவுண்டர்கள். காரணம் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள்  என்பதால்; பிள்ளை, முதலி போன்றவர்கள் மனதால் நினைப்பதை இவர்களால் செயலால் செய்ய முடிகிறது.

அதனால்தான், அங்கு குறைவான எண்ணிக்கையில் இருக்கிற வன்னியர், கள்ளர் போன்றவர்கள் சாந்த சொரூபிகளாக அமைதியாக இருக்கிறார்கள்.

வடக்கு, தெற்கு, மேற்கு எந்தப் பகுதியாக இருந்தாலும். இதுபோன்ற கொடூர தாக்குதல்களில் மிகப் பெரும்பாலும், தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்துக்களை குறிவைத்து தாக்குவது, ஒரு நீண்ட நாள் திட்டமாகவே தெரிகிறது. ‘கீழ் ஜாதிக்காரன் தன்னைவிட வசதியாக இருக்கிறான்’ என்கிற காழ்ப்புணர்ச்சி இதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், நவீன செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் என்பதற்காக, வெள்ளாள கவுண்டர் ஜாதி வெறியர்கள் அவர் காதை அறுத்தெரிந்த ஊர்தான், தமிழை மிகவும் ‘மரியாதையாக’ பேசுகிற கோவை மாவட்டம்.

வர்க்க நிலையில் அநேகமாக பள்ளர், பறையர், கள்ளர், வன்னியர் இவர்களே அதிகமான பாட்டாளிகளாக இருக்கிறார்கள். ஆனாலும் ஜாதி நிலையில் இருக்கிற தீண்டாமை மனோபாவமே இந்த வன்முறையை தீர்மானிக்கிறது.

இதே காரணத்திற்காகத்தான், இன்று தர்மபுரியில் வன்னிய ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்துக்களை சூறையாடி நிற்கதியாக்கி இருக்கிறார்கள்.

இதுபோன்ற ஜாதிவெறி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்சமான தண்டணை தருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் சொத்துக்களை கைப்பற்றி பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு வழங்கவேண்டும்.

நிவாரணங்களோடு, வீட்டுக்கொருவருக்கு அரசு வேலை வாய்ப்பையும் உடனடியாக வழங்கவேண்டும்.

அதுதான் அவர்கள் வாயை கட்டி, வயித்தைக் கட்டி இத்தனை ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்த்த செல்வத்தின் இழப்பை சிறிதேனும் ஈடுகட்ட முடியும். தங்கள் குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்கும் பயன்படுத்த முடியும்.

*

ஜாதி வெறியின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால்,  சக்கிலியரின் மனநிலையில் இருந்து ஜாதியை பார்க்க வேண்டும். எல்லா ஜாதிக்காரர்களும் குற்றவாளிகளாக தெரிவார்கள்.

அப்போதுதான் ஜாதி எவ்வளவு கொடுமையானது, கேவலமானது, சுயஜாதி உணர்வோடு இருப்பது எவ்வளவு மோசடியானது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

தொடர்புடையவை:

காதல் – ‘ஜாதியை’ ஒழிக்குமா?

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

35 thoughts on “தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

 1. முதல்முறையாக ”மன்றல் 2012 “எனும் ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா இம்மாதம் 25 ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் நடைபெறுகிறது.ஜாதி மறுப்பாளர்கள் இச்செய்தியை பரப்பவும்,பங்கேற்கவும் வேண்டும்.மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை அணுகலாம்.http://www.periyarmatrimonial.com/

 2. எங்க ஊர் மேல என்ன சர் உங்களுக்கு காண்டு? தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியா கொஞ்சம் முன்னேறி இருப்பது கோவையில்தான், எங்க ஊர்லய குரு பூஜை எல்லாம் நடக்குது? கடைசியா எப்போ இங்க சாதி சண்ட வந்துதுன்னு யோசிச்சு பாருங்க. இங்க இருக்கும் கவுண்டர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை நம்பித்தான் தொழில் பண்றாங்க, அதான் பெருசா பிரச்சனையை பண்றதில்லை. இங்க கவுண்டனும் சக்கிலியனும் கட்டி அனச்சுக்க மாட்டாங்க அதே சமயம் வெட்டிக்கவும் மாட்டாங்க.

 3. மதிமாரன்,

  பள்ளன் – பறையன் – சக்கிலியன் – தோட்டி இவர்களுக்கு இடையே இருக்கும் தீண்டாமைகளை / பெண் கொடுக்கல் வாங்கல் ஆகியவை பற்றி எப்போது ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவே? ஒரு அருமையான கட்டுரையை உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். சுய பரிசோதனையும் முக்கியம் அல்லவா?

  மேலே சென்ற மேற்சொன்ன ஜாதிக்காரனுக செய்யும் அட்டாகாசங்கள் வரும் நாளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த கூடும்?

 4. பள்ளன் – பறையன் – சக்கிலியன் – தோட்டி இவர்களுக்கு இடையே இருக்கும் தீண்டாமைகளை / பெண் கொடுக்கல் வாங்கல் ஆகியவை பற்றி எப்போது ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவே?—
  கர்த்திக் மறுமொழி மிகச்சரியானது…..தாழ்த்தப்பட்ட ஜாதின்னு சொல்லுற பள்ளன்,பறையன்,தோட்டி,சக்கிலியன் இவ்ர்களுக்குள்ளேயே எவ்வளவு தீண்டாமை இருக்குன்னு உமக்குத்தெரியுமா…???…பள்ளனும்,பறையனும் தான் உயர்ந்த ஜாதியென்றும், சக்கிலியன் தீண்டத் தகாதவ்ன் என்றும் சொல்லக்கூடிய கிராமங்கள் தமிழகத்தில் எத்தனை இருக்கு தெரியுமா…??பள்ளர்களாலும்,பறையர்களாலும் சக்கிலியர்கள் படும் துயரம் உமக்குத்தெரியுமா…????என்னவோ ஆதிக்க ஜாதி அது இதுன்னு என்னமோ பொலம்பிகிட்டு இருக்கிறீர்களே…ஜாதி பாகுபாடு எல்லா ஜாதிகளிடத்தும்,மதங்களிடத்தும் இருக்கிறது.அது உமக்குத்தெரியுமா???அல்லது மத்த மதத்துக்காரர்களைச் சொன்னால் வெட்டுவான் அல்லது ஒதைப்பான் தெரியுமா..??

 5. “சினிமாவில், இலக்கியத்தில் கூட ஜாதி மறுப்பு முற்போக்காளர்களாக தங்களை காட்டிக் கொள்ளும். ஆதிக்க ஜாதியை சேர்ந்த படைப்பாளர்கள், காதலில் ஆணை தன் ஜாதியாக அல்லது ஆதிக்க ஜாதியாகவும் பெண்ணை தாழ்த்தப்பட்டவராகவும் மட்டுமே காட்டுகிறார்கள்.”
  ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  ஒருகால் சினிமாவில் கதாநாயகன் தாழ்த்தப்பட்டவனாக இருந்தால் ஒரு பிளாஷ்பேக் வைத்து அவன் பெற்றோரோ அல்லது தாய் தந்தையரில் ஒருவர் உயர்சாதிக்காரராக காட்டுவார்கள். எனக்குத் தெரிந்து கதாநாயகனையும், அவன் பெற்றோரையும் தாழ்த்தப்பட்டவர்களாக காண்பித்த படங்கள் “பாரதிகண்ணம்மா” மற்றும் “இது நம்ம ஆளு”.
  இன்னும் நூறு வருடங்களுக்கு இந்த பிரச்சினை தீராது…
  நாம் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியது தான்…

 6. ஜாதி வெறியின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சக்கிலியரின் மனநிலையில் இருந்து ஜாதியை பார்க்க வேண்டும். எல்லா ஜாதிக்காரர்களும் குற்றவாளிகளாக தெரிவார்கள்.

 7. வட, தென் மாவட்டங்களை விடுங்கள் அங்கு ஆண்டாண்டு காலமாக நடத்தப்படும் வெறியாட்டம்… இப்போது சென்னையிலும் விதைப்பது போல தெரிகிறதே… கடந்த அக்டோபர் 30 இல் சென்னையை பார்தீர்கள…

 8. எவ்வளவு பிரச்சனை நடந்தாலும் தமிழ் திரைப்படங்களில் தன ஜாதி அடையாளங்களை பதிவு செய்யும் மற்றும் விளம்பர படுத்தும் நோக்கத்துடன் திரை உலகினர் ஈடுபட்டால் ஜாதி ஒழியுமா அல்லது பரவலாகுமா???????

 9. நீங்கள் சொல்வதில் ஒரு முறண்பாடு. சும்மா ஒப்புக்குப் பார்ப்பனரையும் சேர்த்துக்கொள்கிறீர்கள்! எந்தப் பார்ப்பான் அரிவாளைத் தூக்கிக்கொண்டு வெட்ட ஓடுகிறான்!

 10. /// இறங்குவது, இவர்களின் ஜாதி அந்தஸ்துக்கு கவுரவக் குறைச்சல். அல்லது எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டவர்களைவிட குறைவானவர்கள் என்பதால், ‘அடி நமக்கு விழுமோ என்கிற பயம்?’ இதானாலேயே இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நேரடியான வன்முறையில் இறங்குவதில்லை.///அதனால்தான் நீரும் பார்ப்பன்ர்களை வசவு பாடிக் கொண்டிருக்கீறீர்…

 11. கொங்கு நாட்டைச் சார்ந்த ,கொங்கு வேளாளர் கவுண்டர்கள் வேறு இனத்தவர் தம் இன பெண்களை சீண்டாதவரை ஆயுதம் ஏந்துவதில்லை .ஆனால் ஏதாவது கலப்பு திருமணத்தை எவனாவது ஆதரித்ததால் செத்தான்.கம்யூனிஸ்ட் கட்சிக்கு இங்கு பெரும்பாலும் சவுக்கடியே விழுகிறது .்

 12. அட மூல வளர்ச்சி இல்லாத மூடனே..?? கொங்கர்களை ஆதிக்க வெறியினர் என்று சொன்னால் உன்னோட நக்கு அழுகி போகும்… கொடுத்து வாழ்ந்த கொங்கன்.. காளிங்கராயன் வரலாரையும் அன்னன்மார் வரலாரையும் படி..

 13. நானும் கவுண்டர் தான் தாழ்த்தப்பட்டவன் எங்க வீட்டு பொண்ண கூட்டிக்கிட்டு போவன் அத நாங்க பாத்துக்கிட்டு இருப்போமா. சலுகை னா மட்டும் நான் தாழ்த்தப்பட்டவன்னு முன்னடி போறிங்க

 14. சாதியே கடவுளப்பா! சரணம் பேத மூத்திரக்
  குழிகட்குள் புரளும் பார்ப்பனீய பன்றி சாதியப்பா!

  காதல்வதம் கவுரவகொலை ஆதரவுவன் கொடுமையாளனுக்கு;
  முதலமைச்சர் வேட்பாளர் கொக்கரிப்பு அடையாளம்!

  தேளாகி நாமம்விபூதி மறைவில் மதமாற்றம் திணிப்போர்கு;
  தலித்பெண் உடலுறவுகற்பை சூறையாடுவது அடையாளம்!

  கற்பழிப்பு நிகழ்ந்தும் கல்பொம்மை கோயிலாய் மெளனம்காப்பது;
  கற்பனை சாதிமூத்திர குழிகூர்மங்கட்கு அடையாளம்!

  நாடுவிட்டு வெளியேறா முதலாம் அன்னியன்வழி பேதவம்சத்தோர்கு;
  குடுமிநூலை அகற்றிடாதிமிர் குற்றப்பேச்சு அடையாளம்!

  சாதி மூத்திர குழிகட்குள் மூச்சுவிடும் மானுட பன்றிகட்கு,
  ஓதுமதம் பேதஓட்டு கூட்டுவேட்டை அடையாளம்!

 15. //தலித் மாப்பிளை வசதியானவராக நிறைய சம்பாதிப்பவராக இருந்தால், அவர் சார்ந்த ஜாதியில் இருந்து மட்டுமல்ல, அவர் குடும்பத்திடமிருந்தே அவரை பிரிந்து உயர் நடுத்தர வர்க்க அடையாளத்தை முன்னிலைப்படுத்தி அவரின் குடும்ப அடையாளத்தை முற்றிலுமாக மாற்றிவிடுவார்கள். (மாப்பிள்ளையின் மனப்பூர்மான சம்மதத்துடன்)//
  பார்பனர்களை பொருத்த வரையில் இது கலப்பு திருமணம் செய்தால் மட்டும் இல்லை; என்று தனிக்குடித்தினம் என்று ஒன்று வேரூன்றியதோ, பார்ப்பன குடும்ப அமைப்பே இரு பெற்றோர்களையும் தவிர்த்து (குறிப்பாக ஆண் பெற்றோரோ அல்லது உடன்பிறப்புகளோ இல்லவே இல்லாதவாறு மிக சுயநலத்தோடுடு பெண்கள் நடந்து கொளல்) நடக்கும் ஒரு புது வடிவை பெற்று விட்டது. என்றேனும் ஒரு நாள் குடும்பத்தில் கல்யாணம் அல்லது கோயில்/மடத்து பீடாதிபதியை சந்தித்தல் போன்ற நாட்களில் தான் கணவனோ/மனைவியோ வேறு ஒரு ஜாதி/மொழி பேசுபவர் என்று நிறைய (தூரத்து) உறவுகளுக்கேக் கூட தெரிய வரும் ! அந்த அளவுக்கு individualism/ individual rights வளர்ந்தாயிற்று.

  //அதையும் மீறி திருமணம் நடந்தால், ‘எனக்கு ஒரு பொண்ணு இருந்தா.. அவ செத்துப் போயிட்டா’ என்று ‘தலை முழுகி’ விடுவார்கள்.//
  இது 1960s/70s மிஞ்சிப்போனால் late 80s வரை நிலவி இருக்கக் கூடும். இப்போது அவ்வாறு கூட இல்லை. மனமுவந்து திருமணம் நடத்திக் குடுப்பார்களோ இல்லையோ, தலை முழுகியும் விடுவதில்லை. பண்டிகை நாட்களில் அனைவரும் ஒன்று கூடி வாழ்துக்கள் பரிமாறும் அளவுக்கு நாகரீகமாகத் தான் இருக்கிறார்கள்.

  பார்ப்பனர்களை ஜாதிக்கு வாலும் பிடிப்பதில்லை; அதை உதறித் தள்ளும் அளவுக்கும் மனமில்லை. இதுவே யதார்த்தம். இது போன்ற உரையாடல்களில் தயவு செய்து இந்த 2% சமூகத்தை தவிர்க்கவும். பார்ப்பன வசவுகள் போதும். காதே புளிக்கிறது.

 16. ஜாதி வெறி இருந்தால்தான் இஸ்லாம் வளரும், முஸ்லிம்கள் பிழைக்க முடியும்:

  குஜராத் இனப்படுகொலை செய்வதற்கு முன்பு, தேவ்டியாமவன் மோடி ஹிந்துக்களிடம் திரும்பத்திரும்ப ஒரு வேண்டுகோள் வைத்தான்:

  “ஓ ஹிந்துக்களே !!. உங்களுடைய ஜாதியை மூன்று நாட்களுக்கு மறந்து ஹிந்துவாக ஒன்று சேருங்கள். துலுக்கன்களை பாக்கிஸ்தானுக்கு விரட்டி விடுவோம். இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு அனுப்பி விடுவோம்”.
  ————————-

  ஒரு வேளை ஹிந்துக்கள் ஜாதிவெறியை மறந்து ஒன்று சேர்ந்துவிட்டால் முசல்மானின் நிலை என்னாகும் என நினைத்துப் பார்த்தேன்… அப்பப்பா.. ஈரக்குலையெல்லாம் நடுங்குது… ஒரு முசல்மான் கூட இந்தியாவில் இருக்க மாட்டான் … 24 மணி நேரத்தில் முஸ்லிம்களை அல்லாஹ்விடம் அனுப்பிவிடுவர்…

  இஸ்லாத்தை வளர்க்க, முஸ்லிம்களை பாதுகாக்க ஹிந்துக்களின் ஜாதிவெறி மிக மிக அவசியம். எங்களுக்காக தலித்துக்களை உதைத்து இஸ்லாத்துக்கு விரட்டிவிடும் உயர்ஜாதி ஹிந்துக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை… அதற்கு மேல் அம்மா அய்யாவிடம் பெட்டி வாங்கிக்கொண்டு “இன்னும் நல்லா ஒதைங்க… ” என சொல்லி அத்திம்பேர் அம்பேத்கர் போல் பேக் டோர் அரசியல் செய்யும் தலித் தலைவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை…
  —————————–

  ஆம்.. தமிழ்நாட்டில் ஹிந்துக்கள் மூன்று நாட்களுக்கு ஜாதியை மறந்துவிட்டால், முசல்மான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். ஆகையால்தான் கீழவெண்மணி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீது உயர்ஜாதி ஹிந்துக்கள் செய்த கொடுமையை பெரியார் கண்டிக்கவில்லை. ஏனென்றால் ஜாதி சாக்கடையை ஒழிக்க முடியாது, அதை விட்டு வெளியேறத்தான் முடியும் என்பது பெரியாருக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான் “இன இழிவு நீங்க, இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.

  “உதை வாங்கினால்தான் இஸ்லாத்துக்கு ஓடி வருவான்” என்பது பெரியாருக்கு தெரியும். இஸ்லாமிய வளர்ச்சிக்கு மறைமுகமாக ஜிஹாத் செய்த பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் என்பதில் என்ன சந்தேகம்?.
  ——————————–

  “இன்ஷா அல்லாஹ், 2025ல் தமிழகம் ஒரு குட்டி பாக்கிஸ்தானாக வேண்டும்… டெல்லி செங்கோட்டையில் மீண்டும் பேரரசர் அவ்ரங்சீப் குத்பா ஓத வேன்டும்… பாராளுமன்றத்தின் தலைமீது இஸ்லாமிஸ்தான் பச்சைக்கொடி பறக்க வேண்டும் என்பது எங்கள் அவா”. எங்கள் கனவை நனவாக்க ஜாதிப்போரை கட்டவிழ்த்துவிடும் தேவர், வன்னியர், முக்குலத்தோர், அத்திம்பேர் அம்பேத்கர் மற்றும் அனைத்து ஜாதிவெறி மாவீரருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

  “உங்களுடைய எதிரிகளை வைத்தே எதிரிகளை வீழ்த்துவேன்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். திருக்குரான் சத்தியவேதம் என்பது, 1400 வருடங்களாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

  ஜாதி வெறி வாழ்க !!. நல்லா அடிச்சுக்கிட்டு சாவுங்க !!.

Leave a Reply

%d bloggers like this: