புதிய தலைமுறையின் ‘நவீன’ பார்ப்பனியம்

1403598_729218937156657_5482782967106153859_o

இது என்ன நியாயம்?

‘மகாகவிக்குக் கிடைக்க வேண்டிய தேசிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கிடைக்கவில்லை’ என்ற தலைப்பில் இன்று (11-12-2014) புதியதலைமுறையில் நேர்படப்பேசு நிகழ்ச்சியில், விவாதம் நடைபெற இருக்கிறதாம். பாரதியாருக்கு கிடைத்திருக்கிற இந்த அங்கீகாரம் அவரின் தகுதிக்கும் திறமைக்கும் மீறிய கொண்டாட்டம்.

தமிழ் நாட்டிலேயே அவர் அளவிற்குக் கொண்டாடப்படுகிற கவிஞர்கள் அல்ல, தலைவர்களே கிடையாது.

இந்து அமைப்புகள், கம்யுனிஸ்டுகள், நவீனங்களிலிருந்து முற்போக்கு, பிற்போக்கு எல்லா வகையான இலக்கியவாதிகள், பெரியார்-அம்பேத்கர் பற்றிப் பேசுகிற கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், பேராசிரியர்கள், வைதிகப் பார்ப்பனர்கள், கருத்து சுதந்திரப் பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்கள், புரட்சிகரப் பார்ப்பனர்கள், இயக்கங்கள், ஜாதி அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், தலித் அரசியல் பேசுகிறவர்கள், திராவிட இயக்க கண்ணோட்டம் கொண்டவர்கள், இஸ்லாமிய அறிவாளிகள் இப்படி எல்லாத் தரப்பினராலும் போற்றப்படுகிற ஒரே நபர் பாரதியார்.

தமிழ் நாட்டில் எந்தத் தலைவர்களுக்கும் இல்லாத அங்கீகாரம் ஒரு கவிஞனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவரை இந்த அளவிற்குப் பொதுத்தளத்தில் நிறுத்துவதற்கு ஆரம்பகாலத்திலிருந்தே கம்யுனிஸ்டுகளிடம் நிலவிய, பெரியார் எதிர்ப்பு மனோபாவமே முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

ஆக, பாரதியைக் குறித்து இப்படியான தலைப்பில் ஓட்டுடெப்பு நடத்துவதும், விவாதிப்பதும் புதியதலைமுறையின் பச்சையான பார்ப்பனிய ஆதரவு கண்ணோட்டம் தான்.

இந்தத் தலைப்புப் பெரியாருக்கும் டாக்ர் அம்பேத்கருக்கும் தான் பொருந்தும்.
ஆனால், பெரியார் – டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள், நினைவுநாட்களில் அவர்களைப் பற்றி விவாதமே நடத்துவதில்லை. அப்படியே நடத்தினாலும்,
‘அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம் இன்றும் பொருந்துகிறதா? திருத்தலமா?’ – ‘பெரியார் கொள்கைகள் இன்றும் தேவைப்படுகிறதா? திராவிடம் இனி எடுபடுமா?’ என்பது போன்ற படு பச்சையான பார்ப்பனக் கண்ணோட்டம் கொண்ட தலைப்புகள் தான் தரப்படுகிறது.

பாரதியை இப்படித் தொடர்ந்து தூக்கிப் பிடிப்பது, மறைமுகமாகப் பார்ப்பனியத்திறகு சொம்பு தூக்குகிற ‘நவீன’ வேலை.

11 December 

புரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும்

பாரதியும் பாரதிதாசனும் சின்ன விவாதமும்

பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

12 thoughts on “புதிய தலைமுறையின் ‘நவீன’ பார்ப்பனியம்

 1. Bharathi, parpanaga nadakkadatal than agraharathilirundu talli vaikka pattar. Periyarukkum, Ambedkarukkum angigarm kidaikkavillai endru neengal ezudinal neengal sari. Intha katturai verum varattu pulambal. Neengal ennai tittuvatharkaga solgiren, nanum oru parpanthan.

 2. நீங்கள் கூறுவதில் பெரியாரையும் அண்ணலையும் அணுகுவதில் தயங்கும் மீடியாக்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் பாரதியை கொண்டாடுவது பார்ப்பனீயத்தை கொண்டாடுவது என்பது எனக்கு உறுத்துகிறது ..

 3. Vck Mathi Aadhavan · 222 mutual friends
  பார்ப்பனியத்திறகு சொம்பு தூக்குகிற ‘நவீன’ வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது புதியதலைமுறை.
  22 hrs · Unlike · 6

  Moses Prabhu பன்முகம் கொண்ட பாரதி பற்றிய விவாதம் சுவாரஸ்யமாக உள்ளது
  22 hrs · Like · 1

  Venmani Mani பன்முகம் கொண்ட பாரதி அல்ல..பார்ப்பண குணம் கொண்ட பாரதி… கனகசுப்புரத்தினம் கூட பின்னாளில் பாரதிதாசன் என பெயர் வைத்துகொண்டதற்காக வருந்தியிருக்கிறார்.
  22 hrs · Unlike · 9

  Senguttuvan Senguttuvan பெரியார் அம்பேத்கர் பிறந்தநாள்
  நினைவுநாட்களில் அவர்களைப்பற்றி விவாதமே நடத்துவதில்லை
  22 hrs · Unlike · 7

  Venmani Mani பாரதி பூணூல் அறுத்தவர் என்பதால் அவர் எப்படி பார்ப்பண சிந்தை கொண்டவராக இருக்க முடியும் என்கிறார்கள்.அவர் பூணூல் அறுத்ததே தமிழர்களின் கழுத்தில் போட்டு இறுக்கத்தான்.. அதற்குள்ளே யானை இறுக்கி விட்டது.
  22 hrs · Unlike · 11

  Anbu Mani ஊடகங்கள் அ
  ஆர்எஸ்எஸ் அஜண்டா விற்கு ஏற்ப தாளம் போடுகின்றன .
  22 hrs · Unlike · 6

  புதிய பாமரன் பாரதி குறித்து பெரியாரின் விமர்சனங்கள் என்னவாய் இருந்தது என்பதை ஒரு தனி இடுகையில் கூறுங்கள் தோழர்.
  21 hrs · Unlike · 3

  Kaniyur Vasanth · Friends with பிரபா அழகர் and 15 others
  Oodagangal naveena parppana mayam aagaivittadhu…
  20 hrs · Unlike · 1

  தமிழ் Kathalan அந்தளவுக்கு அவா ஒரத் இல்லை ஒஓய்…..
  20 hrs · Unlike · 3

  ஷாஜஹான் உலகரசன் · Friends with பிரபா அழகர் and 66 others
  நேரடியாகவோ மறைமுகமாகவோ பாரதியால் எனக்கும், தமிழினத்திற்கும் ஏற்பட்ட நன்மை என்ன? அதுவில்லாமல் பெண் விடுதலைக்கு பாரதிக்கு பங்குள்ளது என்று கூறுபவர்களின் கருத்தை செருப்பால் அடிக்கதான் தோண்றுகிறது
  18 hrs · Like · 1

  Rajarahm Vijayaraghavan · 18 mutual friends
  Vennamani Mani@//பன்முகம் கொண்ட பாரதி அல்ல..பார்ப்பண குணம் கொண்ட பாரதி… கனகசுப்புரத்தினம் கூட பின்னாளில் பாரதிதாசன் என பெயர் வைத்துகொண்டதற்காக வருந்தியிருக்கிறார்//புதிய செய்தியாக இருக்கின்றது. இது பற்றி இன்னும் அதிக தகவல் உண்டா?
  10 hrs · Like

  Senthil VK // இந்தத் தலைப்புப் பெரியாருக்கும் டாக்ர் அம்பேத்கருக்கும் தான் பொருந்தும்… // தேசிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது…!
  10 hrs · Like

  த.அறிவு மதி தேசிய அங்கீகாரம் கிடைக்கும் அளவிற்கு பாரதி ஒரு வெங்காயமும் செய்யவேயில்ல
  10 hrs · Unlike · 3

  த.அறிவு மதி ஒரு திருடனை திருடன் என்று உலகம் அறிய அம்பள படுத்திய பின்னரும்.. இவர்கள் பரவாயில்லை அவன் செல்ல திருடன் என்று சொல்வதுமாதிரி இருக்கு இவனுங்க செய்றது
  9 hrs · Unlike · 3

  த.அறிவு மதி ஒரு சாதி வெறியன் தாழ்த்தப்பட்டவனை அடித்துக்கொண்டிருக்கும் போது இன்னொருத்தன் வந்து அடிப்பதை நிறுத்த சொல்லி விட்டு எல்லா கெட்ட வார்த்தைகளாலும் திட்டுனா எப்படி இருக்கும் அது மாதிரிதான் இந்த பார்ப்பன பாரதியின் கவிதை நியாயம்…..
  இத போயி வெக்கம் கெட்ட பயலுக மெச்சுறானுங்க

  இவனுங்க தெரிந்தேதான் செய்கிறானுங்க . தெரியாமல் ஒன்றும் செய்யவில்லை தோழர்
  இதை தவரு என்று சொன்னால் ஏற்கவே மாட்டான்
  9 hrs · Edited · Like · 2

  Joe Inigo · Friends with Dalit Murasu and 2 others
  I referred your book, Bhara(thiya) Janatha Party.
  9 hrs · Like

  Joe Inigo · 3 mutual friends
  ஆரிய நாடும் சிங்களத் தீவும்
  *
  பாரதத் தேசம் என்று சொல்லாத நேரங்களில் – ‘இது ஆரிய நாடு’ எனறு அழுத்தமாகச் சொல்கிறார். …See More
  9 hrs · Unlike · 6

  Venmani Mani நண்பர் ராஜாராம.. அறிவுப்பண்ணை வெளியீட்டகம் சார்பாக “பாரதி வளர்த்தது பார்ப்பணியமே” என்ற நூலில் ஆதாரங்களோடு வெளியிட்டு இருககிறார்கள்…இது தவிர வேறு நூல்களின் பெயர்களையும் நண்பர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.
  8 hrs · Unlike · 2

  Selvaraj Ksraj · 6 mutual friends
  இது என்ன நியாயம்? குயில் எப்போகூவும் மயில் எப்பொழுது ஆடும் என்று காத்திருக்கலாம் நாய்களிடமும் கழுதைகளிடமும் இதை எதிர்பார்க்கலாமா ?
  8 hrs · Like · 1

  Ven Mani · Friends with பிரபா அழகர் and 121 others
  புதிய தலைமுறை அல்ல
  இது காவி தலைமுறை
  7 hrs · Unlike · 3

 4. தன்னைப் பார்ப்பானாக பாரதியாரும் நினைத்ததில்லை, தமிழர்களும் நினைப்பதில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா, என்று தனது பூணூலையே அறுத்தெறிந்த பாரதியாரை பார்ப்பானாகப் பார்த்த அபத்தத்தின் விளைவு தான் இந்தப் பதிவு.

 5. ஜாதிவெறியை நன்றாகத் தூண்டிவிட்டு, எல்லோரும் ஜாதியை பசக்கென்று பிடித்துக் கொள்ள உதவிய பெரியாருக்கு தேசிய அங்கீகாரம் என்ன அகில உலக அங்கீகாரம் கூட கொடுக்கலாம்.

 6. british law va copy adhichathukku romba parattellam thevai illa. inga ulla makkalukku panna nallathukku kandippa parattalam.

Leave a Reply

%d bloggers like this: