மனோரமா-சிவாஜி ஒப்பீடல்ல..
• மனோரமா ‘பெண் சிவாஜி’ எல்லாம் இல்லை. தனித்துவம் மிக்க நடிக‘ர்’. (ஆண்களைதான் ‘ர்’ சேர்த்து சொல்லனுமா?)
• சிவாஜியை ‘ஆண் மனோரமா’ என்று நாம் சொல்வோமா?
• மனோரமாவோடு ஒப்பிடுவதற்கு ஆண்-பெண் இருபாலரிலும் நடிகர்கள் இல்லை.
• ‘பெண் சிவாஜி’ என்கிற பட்டம் சிவாஜிக்குதான் பெருமை சேர்ந்தது. மனோரமாவை தனித்து அடையாளப்படுத்தவில்லை.
• பெண் – அதுவும் காமெடி நடிகை என்பதால், அவரின் திறமைக்கு உரிய மரியாதைக் கிடைக்கவில்லை.
• மனோரமாவை பாராட்டும்போது கூடச் சிவாஜியைப் பாராட்டுகிற மனோபாவம், சிவாஜி ரசிகரின் மனோபாவம். அதில் ஆண் என்கிற எண்ணமும் வினையாற்றுகிறது.
• மிகப் பெரும்பானையான ரசிகர்களைத் திருப்திப்படுத்தி… மசலாப் படங்களிலும் நடித்துக் கொண்டே.. திரைத்துறையில் தன்னுடைய இருப்பையும் முன்னணியில் வைத்துக் கொண்டு, தரமான நடிப்பைத் தருவது, மிகுந்த சிரமமான பணி.
அதில் தான் மனோராவிற்கும் சிவாஜிக்கும் ஒற்றுமை.
10 December
மனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை
அருமையான ஒப்பீடு