ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு..

M_S_VISWANATH_1281847g Rajapart Rangadurai

பி. மாதவன் இயக்கிய, ராஜபார்ட் ரங்கதுரையைப் பலரும் காவியத்தலைவனுடனும் இன்னும் சில நாடகங்களைப் பின்னணியாகக் கொண்ட படங்களோடும் ஒப்பிடுகிறார்கள்.

ராஜபார்ட் ரங்கதுரை, தமிழில் வந்த பல சிறந்த சினிமாக்களோடு ஒப்பிடும்போது குறைபாடுகள் உள்ளதுதான். ஆனால், சங்கரதாஸ் சுவாமிகள் பாணியிலான நாடகத்திற்கும் அதுபோன்ற நாடகக் குழுக்களில் உள்ள கலைஞர்கள் பற்றிய பின்னணியைக் காட்டியதில் இந்தப் படமே முதன்மையானது. இன்றும் தென் மாவட்டங்களில் நாடக கலைஞர்கள் மத்தியில், ராஜபார்ட் ரங்கதுரைக்குப் பெரிய மரியாதை உண்டு.

ராஜபார்ட் ரங்கதுரையின் ஒட்டுமொத்த திரைக்கதையில் செயற்கைத் தனம் இருக்கிறது. ஆனால், அதையும் மீறி அந்தப் படத்தில் இந்தியத் தரத்திற்கு இணையாக அல்லது முன் மாதிரியான சில முக்கியத்துவம் உண்டு.

முதன்மையானது,மெல்லிசை மன்னரின் இசை. பாடல்கள். அந்தக் கால நாடகக் காலத்தை இன்றும் காற்றில் நிறுத்தும் பாடல்கள். சங்கரதாஸ் சுவாமிகள் பாணியில் அமைந்த ‘தில்லை அம்பல..’ – ‘வந்தேன் வந்தனம்..’ போன்றவை.

‘மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்..’ பாடலின் வித்தியாசமான காம்போஸிசன் இந்திய இசை உலகிற்கே புதிது.

சங்கரதாஸ் சுவாமிகளின் பாணியில் பாடல் ஆரம்பித்து, பிறகு அதிலிருந்து தரம் உயர்ந்து, துவங்கும் பல்லவி.
முதல் சரணம் முடிந்து, மீண்டும் பல்லவி வரும்போது, ஒரு பாடலில் இரண்டு மெட்டுக்கள். இரண்டும் ஒன்றொடு ஒன்று தழுவி, உரசல் இல்லாமல்.. இனிய உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.

‘மதன மாளிகையில்..’ ஆண் குரல் பாடிக் கொண்டிருக்கும்போதே, பெண் குரல் அதே வரியை வேறு மெட்டில் ஆண் குரலின் மேல் மெல்லத் தவழ்ந்து செல்லும்.
ஆண் குரல் அமைதிகாக்க, பெண் குரல் முடியும் முன்னே.. இப்போது மீண்டும் ஆண் குரல் பெண் குரலின் மேல் மெல்லத் தடவி செல்லும்..

இந்த மாயா ஜாலத்தை மெல்லிசை மன்னர்தான் இசை உலகில் முதலில் செய்தார். மெல்லிசை மன்னரின் இந்தப் பாணியைப் பின்பற்றி, இசைஞானி, சிட்டுக்குருவி படத்தில், ‘என் கண்மணி.. உன் காதலி.. எனைப் பார்த்ததும்..’ – பகல் நிலவு படத்தில், ‘பூ மாலையே.. தோள் சேரவா..’ போன்ற பாடல்களில் மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.

இந்தச் சிறப்புக் குறித்து மெல்லிசை மன்னரிடம், நான் கேட்டபோது. அவர் மிகச் சாதாரணமாக எந்தப் பெருமையும் இல்லாமல்,
“கம்போசிங் போது பல மெட்டுக்கள் போட்டோம்.. எதுவும் திருப்பதியா அமையல… அப்போ அடிக்கடி டீ கொண்டு வந்து கொடுத்த பையன்.. ஜன்னல் வழியா எனக்குச் செய்கை செய்தான். ‘முதல் மெட்டு, அய்ந்தாவது மெட்டு இரண்டையும் கலந்து போடு’ என்று. அப்படிப் போட்டதுதான் இது” என்றார்.

இந்தப் படத்தின் இரண்டாவது சிறப்புச் சிவாஜி கணேசன். அவரைத் தவிர்த்து வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. நாடக மேடையில் கம்பீரம், யதார்த்தம், மிகைப் படுத்தப்பட்ட உணர்ச்சி என்று அழகியலாக அள்ளித் தெளித்திருப்பார்.

‘அம்மாம்மா.. தம்பியென்று..’ பாடலில் அவர் உடல் மொழி நடிப்பிற்குப் பாடம். விஸ்வநாதன், சிவாஜி, டி.எம்.எஸ் மூவரும் இணைந்து கலங்கடிப்பார்கள்.

பாடலின் குளோசப் ஷாட்டுகளில் – டேபிள் டென்னிஸ் பேட்டை அந்த தாளத்தோடு அவர் ‘சிங்க்’ செய்கிற விதம் சிறப்பாக இருக்கிறது என்பது சாதாரணம்.
பாடலின் முடிவில், தான் கொண்டு வந்த மஞ்சப் பையை, குனிந்து எடுத்துக் கொண்டு கூனிக் குறுகி, அந்த இடத்தை விட்டு அவர் வெளியிருகிற விதம், அதுவரை அந்தப் பாடலில் நிகழ்த்தப்பட்ட ஒட்டுமொத்த உணர்வுகளையும் தொகுத்து சொல்வதுபோல் முடியும்.

இந்தப் படத்தில் வருகிற அண்ணனன் தம்பி – உறவு, பின்னாட்களில் ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்திலும் பயன்படுத்தப்பட்டது.

‘ஜின்ஜினுக்கான் சின்னக் கிளி..’ பாடலில் பப்பூன் வேடம். பாடல் இரண்டு மூன்று குளோசப் ஷாட்டுகளைத் தவிர, பெரும்பாலும் மிட் ஷாட், லாங் ஷாட் களாகவே இருக்கும்.

அதுபோன்ற ஷாட்டுகளில் முகபாவனைகள் அவசியமற்றது அல்லது பயனற்றது. அதனால் கை, கால் அசைவுகள் மூலமாக அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் சிறப்பு. குளோசப்பில் சோக முகப் பாவனைகளும், மற்ற ஷாட்டுகளில் காமெடியான உடல் அசைவுகளுமாகச் செய்திருப்பார்.

ஒரு டூப் மூலம் பல்டியடிக்கிற காட்சிகள் போக, பாடலின் இறுதியில் வாழைப்பழத்தோல் வழுக்கிக் கிழே விழுந்தவுடன், நேராக சிவாஜியை மட்டும் வட்டமிட்டு அடிக்கிற ஒளி, அதனுடன் முடிகிற அந்தப் பாடல் மிக நவீனம்.
சிவாஜியின் பாவனைகள் பார்வையாளர்களைப் பரிதாப உணர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.

இவை அந்தப் படத்தின் திறமை சார்ந்தவை. ஆனால், இவை எல்லாவற்றையும் விட, அதில் சொல்லப்படுகிற ஒரு செய்தி தான் ‘ராஜபார்ட் ரங்கதுரை’ மீது நான் மரியாதை கொள்வதற்கு முக்கியக் காரணம்.

முதலாளியின் மகளைத் திருமணம் முடிப்பது போன்ற செயற்கையான காட்சிகள் இருந்தாலும், இந்தப் படத்தின் தொழிலாளர் வர்க்கக் கண்ணோட்டம் சிறப்பானது.

ஒரு முதலாளியின் சதியால், நாடகத் தொழில் நசிந்து, கலைஞர்கள் வாய்ப்பின்றி வறுமையில் இருக்கும்போது,
சதி செய்த முதலாளியின் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, மீண்டும் நாடகம் நடத்துவதற்கு நிதி வழங்கி அவர்களின் பசிக்கு உணவு வாங்கித் தரும் காட்சி, மிகச் சிறப்பானது. வர்க்கக் கண்ணோட்டம் கொண்டது.

பிறகு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாகப் பட்டினியால் இருக்கும்போது அந்தக் கலைஞன் அவர்களுக்கு நிதி திரட்டுவதற்கு நாடகம் நடத்தி, தன் உயிரையே தியாகம் செய்வான்.

இதற்காகவே ‘ராஜபார்ட் ரங்கதுரை’ தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக என் மனதில் பதிந்து விட்டது.

ஆக, ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு ஒப்பிடுவதே…

5 December at 07:16

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம்

உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி

கடலுக்குப் பிறகு காவியத் தலைவனின் கதை முடித்த கலைஞன்

மனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை

14 thoughts on “ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு..

 1. 13 shares

  RajaRaja Ark அருமை சரியான விமர்சனம்
  5 December at 07:18 · Unlike · 2

  RajaRaja Ark நீங்கள் எப்போதும் மாறுபட்டு சிந்திப்பவர் வாழ்த்துக்கள்
  5 December at 07:19 · Unlike · 2

  வே மதிமாறன் நன்றி தோழர்.
  5 December at 07:22 · Like · 2

  Siva Ganesh Maharaja wonderful review
  5 December at 07:25 · Unlike · 3

  Vinoth Kumar பூமாலையே தோள் சேரவா பாடல் தான் அவ்வகையில் முதல் பாடல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்……. !!!! தகவலுக்கு நன்றி
  5 December at 07:31 · Unlike · 4

  வே மதிமாறன் நன்றி.
  5 December at 07:33 · Like · 2

  Gopal Govindan அப் படத்தின் முதல் சிறப்பே நடிகர் திலகம்தான். அவரைத் தவிர யாரும் அதில் இவ்வளவுச் சிறப்பாக நடித்திருக்க முடியாது நண்பரே. நீங்கள் கூறிய மற்ற காரணங்களும் உண்மைதான்.
  5 December at 07:35 · Unlike · 2

  Dakshinamurthy Kamatchisundaram · Friends with Poovannan Ganapathy
  Super write up, Mr V C Ganesan Honored
  5 December at 07:46 · Unlike · 2

  Kaadhal Sugumar ஆஹா அழகுணர்ச்சி
  5 December at 07:48 · Unlike · 2

  Selva Selvaraj மிக அருமை சார்…..
  5 December at 08:19 · Unlike · 2

  Selvaraj Ksraj · Friends with Anbu Veera and 4 others
  அருமை சரியான விமர்சனம் அதேசமையம் ராஜ்கபூர்ணடித்த மேரா நாம் ஜோக்கர் படத்தில் வரும்அதேமாத்ரிதான் ஜின்ஜினுக்கான் சின்னக் கிளி..’ பாடலில் பப்பூன் வேடம். பாடல் அமைந்திருக்கும்
  5 December at 08:27 · Unlike · 4

  வே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு.
  5 December at 08:43 · Like · 2

  Mani S Kandan அருமை அருமை… நுட்பமான பதிவு…
  5 December at 08:50 · Unlike · 3

  வே மதிமாறன் நன்றி.
  5 December at 08:51 · Edited · Like · 2

  Sivakumar Shanmugam · 9 mutual friends
  அறிவுகூர்ந்த அருமையான விமரிசனம்
  5 December at 09:36 · Unlike · 2

  Seeni Mohan · Friends with டி.வி.எஸ். சோமு and 217 others
  ’என் சுவாசக்காற்றே படத்தில் ரகுமான் ‘தீண்டாய் மெய் தீண்டாய்’ என்ற பாடலில் அந்தப் பாணியை சிறப்பாகப் பயன்படுத்தி இருந்தார்.
  5 December at 09:43 · Like · 2

  Nawin Seetharaman ‘அற்புதம்’ தோழர் (வழக்கம் போலவே) – இதோ இன்னொரு முறை குடும்பத்தோடு (!) “ராஜபார்ட் ரங்கதுரை” பார்க்கப் போகிறேன்
  5 December at 11:00 · Unlike · 2

  Gangeyan Sundaram தரமான,முதல் தரமான, ஆங்கிலத்தில் சொல்வதானால் “தி பெஸ்ட்”.நான் ஒரு முறை பெரியாரின் சிக்கனத்தைப் பற்றிப் படித்திருக்கின்றேன். அதாவது “tolded” என்று தன்னுடைய உதவியாளரிடம் தந்தி அடிக்கச்சொன்னாராம். அதைப்போலச் சொல்வதானால் “The best of the bests!”.
  5 December at 17:52 · Unlike · 2

  Gopalsamy Santhosh மதன மாளிகையில்..’ ஆண் குரல் பாடிக் கொண்டிருக்கும்போதே, பெண் குரல் அதே வரியை வேறு மெட்டில் ஆண் குரலின் மேல் மெல்லத் தவழ்ந்து செல்லும். ஆண் குரல் அமைதிகாக்க, பெண் குரல் முடியும் முன்னே.. இப்போது மீண்டும் ஆண் குரல் பெண் குரலின் மேல் மெல்லத் தடவி செல்லும்..
  அருமை.
  இசையின் முதல் உத்தியை புதுமையை வார்த்தைகளில் compose செய்துவிட்டீர்கள் தோழர்!
  5 December at 18:30 · Edited · Unlike · 5

  மலேசியா சிவா உங்கள் எழுத்து என்னை ராஜபாட் ரங்கதுரை படத்தை பார்க்க வைக்கிறது .
  5 December at 18:36 · Unlike · 2

  Prabhu Rajadurai எப்போதோ மோசமான ஒளித்தரத்துடன் இலங்கை ரூபவாகினியில் பார்த்த படம் இன்னமும் என் நினைவில் இருப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்…நன்றி!
  5 December at 19:03 · Unlike · 2

  வே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு..
  5 December at 19:53 · Like · 1

  Venkat Raman Tamil cinema vil counter point payanpadutha padavae illai endru silage maedhavigal (?) solla kaetturikkiraen…
  5 December at 20:34 · Unlike · 2

  Govi Lenin மிக அருமையான-அற்புதமான- ஆழமான பதிவு தோழர். திரும்பத் திரும்ப படிக்கத்தூண்டும் ரசனையுடன் எழுதியிருக்கிறீர்கள். மெல்லிசை மன்னரின் இசையில் ‘பெரிய இடத்துப் பெண்’ படத்தில் ‘அன்று வந்ததும் அதே நிலா’ பாட்டிலும்கூட இதேபோல ஆண்-பெண் குரல்கள் ஒன்றையொன்று தடவித் தழுவிச் செல்லும் counter point முறையில் அமைந்திருக்கும்.
  5 December at 23:14 · Unlike · 3

  வே மதிமாறன் நன்றி தோழர்.
  5 December at 23:15 · Like · 1

  Vijayaraj Cholan 10 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க பேச்சாளர் வெற்றிகொண்டான் ஒரு பரப்புரைக் கூட்டத்தில் சொல்லக் கேட்டது .
  ஜின்ஜினுக்கான் சின்னக்கிளி பாடல் குறித்து இயக்குனர் சிவாஜிக்கு விளக்கும் போது சிவாஜி கேட்டாராம் “முகத்தில் எந்த பாதியில் சோகத்தையும் எந்த பாதியில் மகிழ்ச்சியையும் காட்ட வேண்டுமென்று ?”
  Yesterday at 02:59 · Like

  முனியாண்டி ராஜ். · 6 mutual friends
  அருமையான பதிவு, நண்பரே… சிவாஜியின் நடிப்பாற்றலோடு மற்றவரை ஒப்பிடுவது உண்மையிலேயே அபத்தம்.. படம் உட்பட!!!!
  Yesterday at 06:07 · Like

  வே மதிமாறன் http://mathimaran.wordpress.com/2012/03/11/514-1/

 2. இந்த மாயா ஜாலத்தை மெல்லிசை மன்னர்தான் இசை உலகில் முதலில் செய்தார். மெல்லிசை மன்னரின் இந்தப் பாணியைப் பின்பற்றி, இசைஞானி, சிட்டுக்குருவி படத்தில், ‘என் கண்மணி.. உன் காதலி.. எனைப் பார்த்ததும்..’ – பகல் நிலவு படத்தில், ‘பூ மாலையே.. தோள் சேரவா..’ போன்ற பாடல்களில் மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.

 3. நண்பர் மதிமாறன்,

  உண்மையில் பாராட்டப்படவேண்டிய கட்டுரை. நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா சங்கதிகளுடனும் எனக்கு உடன்பாடே.

  காவியத் தலைவன் என்ற படம் 1920-30களைப் பிரதிபலிக்கும் படமே இல்லை என்பது எனது கருத்து. இதை ராஜாபார்ட் ரங்கதுரை படத்துடன் ஒப்பீடு செய்வதன் ஒரே காரணம் இரண்டும் நாடக்குழுக்கள் பற்றியது என்பதால் மட்டுமே.

  நடிப்பு என்ற வகையில் , சிவாஜி ஒரு நாடகக் கலைஞர். எனவே அவர் நடிப்பு அந்தப் படத்தில் பொருத்தமாக இருந்தது. இசை என்று பார்த்தால் எம் எஸ் வி யின் இசை மேதமை அபிரிமிதமாக வெளிப்பட்ட மற்றொரு சிறப்பான படம் ராஜபார்ட் ரங்கதுரை. நியாயமாக வசந்த பாலன் காவியத் தலைவன் படத்திற்கு எம் எஸ் வியைத்தான் அணுகியிருக்கவேண்டும். அவர்தான் இன்றைய இசை அமைப்பாளர்கள் மத்தியில் நாடக இசை பற்றிய ஞானமும் பின்புலமும் கொண்டவர். அல்லது இளையராஜாவை ஒப்பந்தம் செய்திருக்கலாம். எ ஆர் ரஹ்மான் ஒரு வணிகத்தின் நிர்பந்தம் என்று எடுத்துக்கொள்ளலாம். அவர் ஆர்மோனிய இசை இல்லாமலே நாடகக் குழுக்களின் இசையை அமைத்தது ஒரு வரலாற்றுப் பிழை. பாடல்களில் பழமை ஒரு துணுக்குக் கூட தென்படவில்லை.டிஜிடல் தரத்தில் முப்பதுகளின் இசையை கொண்டுவந்துவிட்டால் போதுமா? அந்த பழமையின் வேர்களை வெட்டிவிட்டு ரஹ்மான் இசை அமைத்திருப்பது ஒரு பின்னடைவு.

  எம் எஸ் வியின் மதன மாளிகையில் பாடல் பற்றி சரியாக சொல்லியிருப்பதற்கு நன்றி. கவுண்டர் பாயிண்ட் இளையராஜாவுக்கு முன்னே தமிழில் வந்துவிட்டது என்ற உண்மையை நீங்களாவது தெரிந்து வைத்திருக்கிறீர்களே? சிறப்பான பதிவுக்கு மீண்டும் எனது நன்றியும் பாராட்டுக்களும்.

 4. இந்த பாடல் விஷயம் மட்டுமல்ல பலவிசயங்களும் இப்படிதான்.
  நாம் கேள்விப்படும் வரை அல்லது அனுபவப்படும்வரை நமக்கு தெரிந்ததுதான் உண்மை என்று நம்பி இருப்போம்.அதை நிருபிப்பதற்காக வாதிட்டுகொண்டும் இருப்போம். பின்னர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள நேருகையில் மட்டுமே நாம் முன்னர் கொண்டிருந்த கருத்தை மாற்றிக்கொள்ள நேரிடுவதை நாம் கண்குடாக கண்டிருப்போம்.
  இதுவரையிலும் தங்கள் கேள்விப்பட்ட பாடல்தான் அவ்வகையில் முதல் முயற்சி என கருதிகொண்டிருந்தவர்கள் நண்பர் மதிமாறன் முலம் ஒரு தகவலை அறிந்துகொண்டபின்னர் இன்னொரு உண்மையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
  அதே போல மதிமாறனைவிட வயதிலோ அனுபவத்திலோ முத்தவர்கள் இதற்கும் முன்னர் கலையுலகில் இவ்வகையிலொரு பாடலை குறிப்பிட்டு நமக்கு சொன்னாலும் நாம் ஏற்றுகொள்ள நேரிடும்.
  இந்நிலையில் மாற்றம் என்பது நமது நிலைபாட்டில் தானே தவிர அது உண்மையை என்றும் பாதிப்பதில்லை என்பதை பகுத்தறிவுடன் ஆராய்ந்தால் புரிந்துகொள்ளாலாம்.

 5. மதிமாறன் சார்

  ராஜபாட் ரங்கதுரை படம் பற்றி பேச்சு வந்தாலே என் தந்தையின் நினைவு வரும். அந்தப் படம் அவருக்கும் மட்டுமல்ல எனக்கும் பிடித்த படமே! காவியத் தலைவன் போன்ற படங்களுக்கு ரகுமான் இசை எந்த விதத்திலும் பொருந்தாது. கூத்து மேடைகளுக்கென்று தனிப்பட்ட இசை ஒன்று இருக்கிறது . அந்த அசலை அப்படியே கொண்டு வரும் யுக்தி பழைய இசை அமைப்பாளர்களுக்கே உரித்தானது . ரகுமான் அதில் கத்துக்குட்டி . அவர் கற்றுக் கொள்ளவேண்டியதே நிறைய இருக்கிறது . வணிக வெற்றிக்காக உண்மையான நாடக இசை பொய்யாக்கப்பட்டுள்ளது. காவியத் தலைவனை நிஜமான காவியத்தோடு ஒப்பிடாதீர்கள்.

 6. //‘மதன மாளிகையில்..’ ஆண் குரல் பாடிக் கொண்டிருக்கும்போதே, பெண் குரல் அதே வரியை வேறு மெட்டில் ஆண் குரலின் மேல் மெல்லத் தவழ்ந்து செல்லும்.
  ஆண் குரல் அமைதிகாக்க, பெண் குரல் முடியும் முன்னே.. இப்போது மீண்டும் ஆண் குரல் பெண் குரலின் மேல் மெல்லத் தடவி செல்லும்..//
  யப்பா ரசனைக்காரர்பா

 7. திரு.காரிகன் அவர்கள் இங்கே இன்ப அதிர்ச்சி …

 8. நண்பர் மது,

  உண்மைதான். இது நான் அடிக்கடி சொல்லிவருவதுதான். இளையராஜாவுக்கு முன்னே சாதனைகள் செய்யப்பட்டுவிட்டன என்பதை எத்தனை சொன்னாலும் சிலரது உள்ளங்களில் அந்தக் கருத்து ஏறாது. இப்போது மதிமாறன் சொன்னது என் கருத்துக்கு அதிக வலிமையூட்டுகிறது.

Leave a Reply

%d