பனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்! பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்!
காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1
நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும் -2
‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய் – 3
பகுதி -4
கோயில்களில், இந்து மதத்திற்குள் தங்களுக்கான ஆதிக்கத்திற்கு, லாபத்திற்கு ஆபத்து வருகிறது என்றால் பார்ப்பனர்கள் கொலைகூட செய்ய தயங்கமாட்டார்கள் என்பதைதான் காந்தி கொலை நிரூபித்திருக்கிறது.
தனக்கு இணையாக அல்லது தன்னை எதிர்த்து ஒரு பெரிய தலைவர் உருவாவதை காந்தி எப்போதும் விரும்பியதில்லை. அது கட்சிக்கு வெளியேயும் சரி, உள்ளேயும் சரி. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடிய பகத்சிங் போன்ற புரட்சியாளர்களிடம் மட்டுமல்ல, ஹிட்லர் போன்ற பாசிஸ்டுகளின் உதவியை நாடிய சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களிடமும் கூட எதிராக அல்லது அலட்சிமாகத்தான் நடந்துகொண்டார் காந்தி. டாக்டர் அம்பேத்கருடனான அவரின் மோதல்களில், அவருடைய இந்து கண்ணோட்டம் மிக பெரிய அளவில் பங்காற்றினாலும், ‘தன்னை மீறி, தன்னை நேரடியாக எதிர்த்து ஒரு தலைவர் உருவாகக்கூடாது’ என்கிற காந்தியின் உளவியலும் சம பங்கில் வினையாற்றியிருக்கிறது.
அவர் என்ன நினைக்குறாரோ, அதைத்தான் மற்றவர்கள் செய்யவேண்டும். அல்லது தன்விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கக்கூடாது என்கிற சத்தியாகிரக சர்வாதிகாரியாகத்தான் காந்தி இந்திய அரசியலை நடத்தியிருக்கிறார். 1946 ல் இருந்து அவரின் செல்வாக்கு காங்கிரசுக்குள்ளேயே சரிய ஆரம்பித்தது. அவர் கட்சியில் இருந்த நேரு, பட்டேல் போன்றவர்களே அவர் பேச்சை உதாசீனப்படுத்தினார்கள். அவர் விருப்பத்திற்கு மாறாகவே அவரின் அரசியல் அவரை சுற்றி, சுற்றி சுழன்றது. தன் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக பல்வேறு கோமாளித்தனங்களை செய்தார் காந்தி.
பாகிஸ்தான் பிரிவினையின்போது அதை எதிர்த்தார். ஆனால் அவர் விருப்பத்திற்கு மாறாக நடந்தது. பிறகு பிரிந்த பாகிஸ்தானுக்கு 50 கோடி ரூபாய் தரவேண்டும் என்று வலியுறுத்தினார். அதை நிராகரித்தார் வல்லபாய் பட்டேல். இந்து-முஸ்லீம் கலவரம் கட்டுக்கடங்காமல் போனது. காந்தியை எதிர்த்த காங்கிரஸ் தலைமை பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கிறது என்பதாலயே அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாடு எடுத்தார். அதன் மூலமாக நேரு, வல்லபாய் படேல் போன்றவர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.
இஸ்லாமியர்களை விரோதிகளாக சித்தரித்த பார்ப்பனிய இந்து பயங்கரவாதிகளை எதிர்த்து செயல்படுவதல்ல காந்தியின் நோக்கம். அவரின் தன் முனைப்பு அரசியலின் விளைவாக அவரை அறியாமல் முளைத்த முற்போக்கு கிளை அது. பார்ப்பனிய பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கு சரியான செயல் திட்டம் இல்லாமல், இந்துக் கோயில்களில் இஸ்லாமிய பாங்கு ஒலிப்பது போன்ற கோமாளித்தனங்களை செய்தார். அதில் அவர் நோக்கம் இந்துமதத்தை அவமானப்படுத்தவேண்டும் என்பதல்ல. இந்துமதத்தை அவமானப்படுத்தும், பலவீனப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மனம் அறிந்து செய்ததில்லை காந்தி.
‘தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்ல’ என்று டாக்டர் அம்பேத்கர் ஆதாரத்துடன் நிரூபித்தபோது, ‘ஹரிஜன்’ என்ற பச்சையான இந்து பெயர் வைத்து தாழ்த்தப்பட்ட மக்கள்தான் உண்மையான இந்துக்கள் என்று இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற ஒற்றைச் சொல்லாகவே ‘ஹரிஜன்’ இந்துச் சொல்லை அவர்கள் மீது திணித்து, மீண்டும் இந்துமதத்திற்குள் அடைத்தார். இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ‘ஹரிஜன்’ என்ற சொல் செல்வாக்கு செலுத்திய அளவிற்கு வேறு எந்த சொல்லும் செலுத்தவில்லை. ஜாதி இந்துக்களும் அந்தச் சொல்லையே தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பதற்கு பயன்படுத்தினர். பயன்படுத்துகின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் மதமாற்றத்தை தடுக்க பெரும் முயற்சி எடுத்த இந்து பார்ப்பன மற்றும் ஆரியசமாஜ்களால் செய்யமுடியாததை காந்தி என்கிற தனிமனிதர் செய்தார்.
“காந்தியிசம் என்பது இந்துயிசத்திற்கும் இந்துயிசத்தின் வறட்டு சூத்திரங்களுக்கும் ஒரு தத்துவ முறையிலான நியாயப்படுத்துதலே” என்பார் அண்ணல் அம்பேத்கர்.
அந்தக் காந்திதான் இந்துக் கோயில்களில் இஸ்லாமிய பாங்கு ஒலிக்கச் செய்தார். அந்தக் காந்தியைத் தான் இந்து பார்ப்பன பயங்கரவாதிகள் கொன்றனர்.
உண்மையில், இந்துக்கோயிலில் இஸ்லாமிய பாங்கு ஒலிப்பது இஸ்லாத்தை அவமானப்படுத்துகிற செயல். பாங்கு ஒலிப்பது என்பதே தொழுகைக்கு அழைப்பதுதான். இந்துக்கோயிலினுள் பாங்கு ஒலித்தால் முஸ்லிம்களை அங்குவந்து தொழுகை நடத்த அழைப்பது போன்றதுதான்.
‘உருவவழிபாடு, இறைவனுக்கு இணைவைப்பது இஸ்லாத்திற்கு எதிரானது’ என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. காந்தியின் இந்துக்கோயில் பாங்கு ஒலி, இஸ்லாத்திற்கு எதிரானதுதான். உண்மையில் தங்கள் மதநம்பிக்கைக்கு எதிரானது என்று முஸ்லீம்கள் தான் காந்திமீது வீரோதம் கொண்டிருக்கவேண்டும்.
இஸ்லாத்தை அவமானப்படுத்துவது காந்தியின் நோக்கம் அல்ல. பிரச்சினையை தீர்ப்பதற்கும், ‘இஸ்லாமியர்கள் இந்தியர்கள் தான்’ என்று காந்தி நிறுவுகிறார் என்று காந்தியை இஸ்லாமியர்கள் நம்பினார்கள். சாதாரண இந்து நம்பிக்கை கொண்ட மக்களும் காந்தியின் செயல் நம் மதத்திற்கு எதிரானது அல்ல என்று புரிந்துகொண்டார்கள். இந்து பார்ப்பன அறிவாளிகள் தான் இதை எதிராக நினைத்தார்கள். மதப் புனிதம் கெட்டுப்போய்விடுகிறது என்று பொய்சொன்னார்கள்.
உண்மையில் காந்தியின் கொலை இந்து மதப்புனிதத்திற்காக அல்ல. இந்துக்கோயில்களில் பார்ப்பனிய மேன்மையை காலப்போக்கில் காலி செய்துவிடும் என்பதால்தான். இயல்பாகவே பார்ப்பனர்களைத் தவிர மற்ற இந்துக்கள் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களான மசூதி, தர்கா போன்ற இடங்களில் அங்கு இருக்கும் இஸ்லாமிய மதப்பெரியவரிடம் மந்திரித்து தாயத்து கட்டிக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை ஒரு இந்து சாமியாரிடம் காட்டும் பக்தியோடும், நம்பிக்கையோடுமே நடந்து கொள்வார்கள்.
இதுபோன்ற மனநிலை கொண்ட ‘இந்து’ மக்களிடம், காந்தியின் ‘இந்துக்கோயில் பாங்கு ஒலி’ நடவடிக்கை பார்ப்பனிய மேன்மையை தகர்ப்பதாக தீவிர இந்து பார்ப்பனர்கள் உணர்ந்ததாலேதான், காந்தி கொலையை அவர்களின் பிரதிநிதியாக இருந்து கோட்சே செய்தான்.
“இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.” என்று காந்தியை கொன்ற கோட்சே கோர்ட்டில் சொன்னான். இதுதான் இந்து பார்ப்பன மனது.
டாக்டர் அம்பேத்கர் சொல்வார்:
“ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான்.”
டாக்டர் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு சரி. காந்தி கொலையை பார்ப்பன கும்பல்தான் செய்தது என்று வரலாற்று சம்பவத்தை நாம் சொன்னால், உடனே நம்மீது பாய்ந்து புடுங்குகிற பார்ப்பனர்கள், காந்தி கொலையை, கோட்சேவை கண்டிப்பத்தில்லை. மாறாக நம்மைதான் கடும் வெறுப்புக் கொண்டு புடுங்குகிறார்கள். விட்டால் கோட்சேவை போல் கொலைகாரனாகவும் மாறுவார்கள்போல.
‘இந்து மதம் புனிதமானது. எந்த மாற்றமும் அதில் செய்யமுடியாதது. மசூதியில் பகவத்கீதையை பாடினால் சும்மா இருப்பாங்களா? காந்தியால் இந்துமதப் புனிதம் கெட்டுபோனது. அதனால்தான் கோட்சே கொன்றார்’ என்று வாதிடுகிறார்கள் பார்ப்பன அறிவாளிகள். அப்படியா? இந்து மதம் புனிதமானதா? எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாததா?
இந்தவாதம் பச்சை பொய் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்:
“பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து. பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.
இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது” என்கிறார்.
புத்தரின் எழுச்சியால் தோல்வியுற்ற பார்ப்பனர்கள், தங்களின் வேதக் கடவுள்களை கும்பிடுவதை கைவிட்டார்கள். புத்தரின் இயக்கத்தால் வேதக் கடவுள்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அற்று போனதே அதற்கு காரணம். அதனால்தான் தங்களால் உயர்வாக பேசப்பட்ட கடவுள்களை குறித்தே மிக கேவலமான கதைகளை அவர்களே பரப்பினார்கள். ‘பிரம்மா தன் மகளுடன் உறவு கொண்டார்’ என்றும் ‘இந்திரன் பெண் பித்தன். பிறர் மனைவியை அதுவும் மரியாதைக்குரிய ரிஷி பத்தினிகளோடு கள்ளஉறவு வைத்திருந்தான்’ என்றும் எழுதி தங்களின் கடவுளை கைவிடுதற்கான காரணத்தை உண்டாக்கினார்கள் என்ற உண்மையை டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தினார்.
“எங்கே இந்திரன், எங்கே வருணன், எங்கே பிரம்மா, எங்கே மித்ரன், வேதங்களில் கூறப்படும் இந்தக் கடவுளர்கள் எல்லோரும் எங்கே என்று அவர்களை (பிராமணர்களை) ஒருவர் கேட்கலாம். அவர்களெல்லாம் மறைந்து போனார்கள். அது ஏன்? இந்திரனையும் வருணைனையும் பிரம்மாவையும் வழிபடுவது லாபம் தருவதாக இல்லாமல் போனதே இதற்குக் காரணம். பிராமணர்கள் வேதக் கடவுளர்களைக் கைவிட்டது மட்டுமின்றி, சில இடங்களில் முஸ்லீம் பீர்களை வணங்குவோராகக் கூட மாறியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக, மிக வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்ற ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம்.
பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில் பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டு தோறும் உர்ஸ விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.
அவர் முஸ்லீம் உடை அணிந்து, தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்.”
இந்து மதத்திற்கு புனிதம் என்று ஒன்று கிடையாது. அவர்கள் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள். மாறாது என்கிற வார்த்தையை தவிர மற்றவை மாறிப்போகும் என்கிற மார்க்கிய விஞ்ஞானத்திற்கு பொருத்தமாக ஏகப்பட்ட மாற்றங்களை இந்து மதம் செய்திருக்கிறது என்று டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
ஆக, இந்து மத புனிதத்திற்காக அல்ல காந்தி கொலை. பார்ப்பன மேலாதிக்கத்தை பாதுக்காப்பதற்கே.
காந்தியின் துரோகம் தெரியவேண்டும் என்றால், அம்பேத்கர், பகத்சிங் கண்களால் பார்க்க வேண்டும்.
பார்ப்பன பயங்கரவாதம் புரியவேணடு்ம் என்றால், காந்தியின் கொலையின் ஊடாக பார்க்க வேண்டும்.
காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்.
காந்தியை கொலைசெய்த பார்ப்பன பயங்கரவாதத்தை மன்னிக்கவும் மாட்டோம்.
வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.
23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறுத்தியதை கண்டித்தும்’ பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு.
மேடையில் பேசியசெய்திகளோடு, புதிய செய்திகளையும் சேர்த்து வெளி்யிட்டு இருக்கிறேன்.
தொடர்புடையவை:
காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1
நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும் -2
‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய் – 3
ஆகையால் சகோதர சகோதரர்களே, காந்தியானவர் இந்தியாவின் தன்னினிகரற்ற தலைவர் என்றும், இன்னும் உலகம் போற்றும் பெரிய தலைவர் என்றும் நினைத்து வந்தீர்கள் அல்லவா?
ஆனால் நம்ப சகோதரர் மதிமாறன் ஆணிததரமாக முழங்குவதை படித்தால் அவர்தான் தான் இன்றைய இந்தியாவின் தன்னிகரற்ற தலைவர் என்பது போல தோன்றுகிறது அல்லவா. இந்தியாவின் 120 கோடி மக்களும், நம்ப மதிமாறன் அவர்களின் பின்னால் திரண்டு, காந்தியை அம்பலப் படுத்தி , பார்ப்பனர்கள் சதியையும் அம்பலப் படுத்தி புதிய சரித்திரம் படைக்கப் போகிறார்கள். புரிந்ததா? சரி, படுக்கையை விட்டு எழுந்து பல்லை விளக்கிட்டு டீயைக் குடிங்க. டாக்டரைப் பாக்க அப்பாயின்ட்மென்ட் இருக்கு.
சூரியனை பார்த்து குலைக்கும் இந்த நாய்களை இக்னோர் செய்யுங்கள் .காந்தி செய்த ஒரே தப்பு இந்த நாய்களெல்லாம் பதவிக்கு வந்து ஆசியாவின் டாப் டென் ஆக சுதந்திரம் வாங்கி தந்தது தான்.
Mr. Tricykaran,
From your comment it seems that you do not have any thing to dispute in this post. It also shows how frustrated you are now. Sorry, take a break and come back with meaningful comments.
Nithil
மிக அருமையான பேச்சு தோழர் மதிமாறன் அவர்களே ! வாழ்த்துக்கள் !
பார்பனர்கள் தங்களுக்கு தேவை என்றால் ,மாற்றமே இல்லாதது என்று சொல்லி வந்த எந்த ஆசாரத்தையும் தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றி கொள்வார்கள். இப்படிதான் வெள்ளைக்காரனிடம் அரசாங்க உத்தியோகங்களை பெற, அவனிடம் நெருங்க குடுமியில் இருந்து கிராப்புக்கு மாறினார்கள். கடல் தாண்டி போக கூடாது என்கிற விதியை தாண்டி வெளிநாடுகளுக்கு சென்றனர். ஹிட்லரின் தொடர்ச்சியான வெற்றியை கண்டு ஜெர்மன் மொழி படித்த கூட்டம் தானே இது.( என்ன ஒரு தொலை நோக்கு பார்வை ,உலகிலே எந்த இனமும் இவ்வளவு தூரம் குறுக்கு வழியில் சிந்திக்காது) .ஆங்கிலேயர் ஆட்சியில் பார்ப்பன அல்லாத மக்களை தூண்டிவிட்டு சுதந்திரத்துக்கு போராட சொல்லிவிட்டு ,இந்த கும்பல் மட்டும் ஆங்கிலேயனுக்கு அலுவல் பார்க்க சென்றதே ..இந்த கும்பல்தான் இன்று தேச பற்றை பற்றி பேசுகிறது.
Mr. Nithil,
I am not frustrated. Majority of the Indian people, not only Indian people even the entire world understand the importance and truth in Gandhis work and principles. Nelson Mandela and Martin Luther were ardent followers of Gandhi. During Gandhis Birth Anniversary BBC had given more coverage, than the Indian Media. They started broadcasting about Gandhis Principles two days ahead of his Anniversary.
நீங்கள் மக்களிடம் சென்று, சாதிக் காழ்ப்புணர்ச்சிக் கருத்துக்களை கூறிப் பாருங்கள், அவர்கள் அதை வரவேற்க மாட்டார்கள். எனக்கு ஒரு விரக்தியும் இல்லை.
நான் மக்களை ஒருங்கிணைக்கும் கருத்துக்களை எழுதுபவன். இங்கே பிரிவை தூண்டும் கருத்துக்கள் உள்ளன. ஒன்றாக சேர விரும்புபவர் சேர்ந்து விடுவார்கள். நீங்களும் வந்து சேர்ந்து கொள்ளுஙகள்.
எந்த ஒரு மதத்தை சேர்ந்தவரொ, சாதியை சேர்ந்தவரோ தங்களின் பிரிவுக்கு என தாங்களே எல்லாப் பொருட்களையும் உற்பத்தி செய்தோ, தாங்கள் உற்பத்தி செய்வதை தங்கள் பிரிவினரிடம் மற்றுமே விற்றோ வாழ முடியுமா? சேர்ந்துதான் வாழ முடியும்.
//கோட்சேயின் கொலை வெறியை மன்னிக்கவும் மாட்டோம்//
இந்தக் கருத்து சரியான கருத்தே.
மத வெறி, இன வெறி இவை கோட்சேவின் மனதிலே புகுத்தப் பட்டு அவன் ஒரு கொடூர பயங்கரவாதி ஆகி இருக்கிறான்.
அவனுக்கு காந்தியைப் பிடிக்கவில்லை என்றால் காந்தியின் கொள்கைகளில் ஏதாவது தவறு இருந்தால் அதை மக்களிடம் விளக்கி இருக்க வேண்டும். ஆனால் காந்தியின் கொள்கை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இவன் ஆத்திரத்தினால் உந்தப் பட்டு காட்டுமிராண்டி படு கொலை செய்து இருக்கிறான்.
ஆனால் அந்தக் கொலையை அவனும் அவன் நண்பர்களும் , சில உறவினர்களும் சேர்ந்து திட்டம் தீட்டி செய்துள்ளனர். இந்த கொலை செயலுக்கும் அவன் சமுதாயத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
ஆனால் கோட்சேவின் சாதியை காரணம் காட்டி காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் ஒரு சமுதாயத்திற்கு எதிராக விஷம் கக்குவதை பொது மக்கள் புரிந்து கொள்ளுவார்கள்.
காந்தி – இந்திய வரலாறு இது வரை கண்ட தலைவர்களில் எல்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருக்கிறார். கரிகாலன், அசோகன், ஹர்ஷன், விக்கிரமாதித்தன், இராச இராசன், அக்பர், சிவாஜி… இவர்கள் எல்லோரையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக, இவர்கள் எல்லோரின் கொள்கைகளின் பிம்பமாக திகழ்கிறார்.
அஹிம்சை தான் இந்திய சமுதாயத்தின் அடிப்படைத் தத்துவமாக எப்போதும் இருந்து வருகிறது. அஹிம்சையை இந்தியாவின் ஆயுதமாக உலகிற்கு அடையாளம் காட்டியவர் காந்தி.
மக்களின் எதிர்ப்பைக் காட்ட அஹிம்சை முறையே மிகச் சிறந்தது என உலகின் பல நாடுகளும்,
காந்தியைக் கண்டு அதிசயித்து, இன்னும் இன்னும் அவருக்கும், அவரின் அஹிம்சை கொள்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
காந்தி தனக்காக பில்லியன் கணக்கில் சொத்து குவிக்கவில்லை.
பதவி எதையும் விரும்பவில்லை.
வாரிசுகளுக்கு நாட்டை பட்டா எழுதிக் கொடுக்கவில்லை.
கவர்ச்சி காட்டி அரசியல் செய்யவில்லை.
தன்னுடைய அரசியல் எதிரிகளுக்கு எதிராக வன்முறையை ஏவவில்லை.
எல்லா மக்களையும் இணைக்கும் நோக்கத்திலே செயல் பட்டார்.
அவருக்கும் அண்ணல் அம்பேதகருக்கும் அரசியல் கருத்து வேறுபாடு இருந்தது.
அம்பேத்கரும், நேர்மையான அப்பழுக்கற்ற தலைவர்.
பணம் , பதவி பற்றி கவலைப் பட்டதில்லை.
வாரிசு அரசியல் நடத்தவும் இல்லை.
இருவரும் தத்தமது கடமையை சரியாக செய்தனர்.
நமக்கு காந்தி, அம்பேத்கர் இருவருமே இந்தியாவின் மிகச் சிறந்த சுயநலமற்ற அரசியல் தலைவர்கள்.
இந்திய மக்கள் அனைவரும் இருவருக்குமே நன்றியுடன் இருப்பார்கள்.
இயல்பாகவே பார்ப்பனர்களைத் தவிர மற்ற இந்துக்கள் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களான மசூதி, தர்கா போன்ற இடங்களில் அங்கு இருக்கும் இஸ்லாமிய மதப்பெரியவரிடம் மந்திரித்து தாயத்து கட்டிக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை ஒரு இந்து சாமியாரிடம் காட்டும் பக்தியோடும், நம்பிக்கையோடுமே நடந்து கொள்வார்கள். Apdiya??? I meant to say, I have known lot of people including brahmins go to durghas to get treated.. Just my 2 cents.
———————————
வேதிமாறன் அவர்கே..
நல்ல (மறைக்க பட்ட) வரலாற்று தொகுப்பு
தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து ராஜீவ் காந்தியை கொன்றது ஏன்?
தோழர் மதிமாறன் அவர்களே,
/// இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து.///
“சனாதனமானது” என்றால் “எல்லாருக்கும் பொதுவானது” என்று அர்த்தம்.
காந்தியை அனைவரும் கொண்டாடுவதற்குக் காரணம், சுதந்திரம் வாங்கித்தந்தார் என்பது தான். ஆனால் நமக்கு கிடைத்தது சுதந்திரமும் அல்ல, அதை வாங்கித்தந்தது காந்தியும் அல்ல என்பது தான் மெய். காந்தியின் அரசியல் செயல்பாடுகளை நுணுகிப் பார்க்க விரும்பும் அனைவரும் தோழர் மதிமாறனின் வார்த்தைகளில் அம்பேத்கர், பகத்சிங் கண்களால் காந்தியை பார்க்க விரும்புபவர்கள் இந்த சுட்டியில் பார்க்கலாம்
http://senkodi.wordpress.com/2009/03/18/ghandi-congress/
தோழமையுடன்
செங்கொடி
//ram (14:29:51) : தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து ராஜீவ் காந்தியை கொன்றது ஏன்?///
ராஜீவின் ஒற்றை உயிருக்கு தந்த மதிப்பை…..ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு தர மறுத்ததேன்
//ram (14:29:51) : தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து ராஜீவ் காந்தியை கொன்றது ஏன்?///
என்று தமிழர்களுக்கு ஒரு கேள்வியை வைத்து ,
எல்லா பார்பனர்களையும் போல் நானும் தமிழன்தான், நானும் தமிழ் தான் பேசுறேன் என்று சொல்லி ஏமாற்றாமல் , தன்னை தமிழன் இல்லை என்று ஒப்புக்கொண்ட ராம் அவர்களின் நேர்மையை பாராட்டுவோம் !
//ram (14:29:51) :
தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து ராஜீவ் காந்தியை கொன்றது ஏன்?//
ram நீங்க யாரு?
//காந்தியை அனைவரும் கொண்டாடுவதற்குக் காரணம், சுதந்திரம் வாங்கித்தந்தார் என்பது தான். ஆனால் நமக்கு கிடைத்தது சுதந்திரமும் அல்ல, அதை வாங்கித்தந்தது காந்தியும் அல்ல என்பது தான் மெய்.//
pure words..
//ஆனால் நமக்கு கிடைத்தது சுதந்திரமும் அல்ல//
இதை வ. உ. சி கேட்டால் ஒத்துக் கொள்வானா? செக்கிழுத்து சிரமப் பட்டது அவன் தானே.
இதை கட்ட பொம்மன் கேட்டால் ஒத்துக் கொள்வானா? கப்பம் கட்ட மறுத்ததால் தூக்கிலே தொங்க வேண்டிய அவலம் அவனுக்குத் தானே வந்ததௌ?
இதை திருப்பூர் குமரன் கேட்டால் ஒத்துக் கொள்வானா? கொடியை ஏந்தியதற்க்காக மண்டை பிளக்கப் பட்டு மரணமடைந்தது அவன் தானே?
ஜாலியன் வாலாபாக்கிலே கண்மூடித் தனமாக சுடப்பட்ட, மக்கள் கேட்டால் ஒத்துக் கொள்வானாவார்களா?
நிழலின் அருமை வெய்யிலில் தெரியுமா? இப்போது நிழலில் நிற்கிறோம். அடப் போய்யா, இன்னா பெரிய வெய்யில் என கேட்கத் தோன்றும்.
வெள்ளைக்காரர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தைக் கொள்ளைக்காரர்களிடம் பறி கொடுத்து விட்டோம்.
பிறப்பு சான்றிதழ் முதல் சாவு சான்றிதழ் வரை எல்லாவற்றுக்கும் அதிகாரியிடம் கை கட்டி கையூட்டு கொடுத்து,
போலீசு, லோக்கல் ரவுடி எல்லொருக்கும் மாமூல் கொடுத்து,
மாநாட்டு செலவுக்கு உண்டி குலுக்கும் வட்டச் செயலாளரிடம் இருந்து என்னைக் காக்க அவர் கூறும் கப்பத்தைப் கட்டி, பலருக்கும் அடிமையாகவே எல்லோரும் வாழ்கிரோம்.
காந்தி வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்.
கொள்ளைக் காரர்களிடமிருந்து, ரவுடிகளிடம் இருந்து, பண்ணையார்களிடம் இருந்து, பெரு முதலாளிகளிடம் இருந்து ….. இன்னும் பலரிடம் இருந்து நாம் சுதந்திரம் அடைய வேண்டியது பாக்கி உள்ளது.
ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டு,
மக்களைப் பிரித்து வைத்து, சாதிக் காழ்ப்புணர்ச்சி, மதக் காழ்ப்புணர்ச்சி, இனக் காழ்ப்புணர்ச்சி , மொழிக் காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றை எல்லாம் தூண்டி விட்டு, மக்களை சுரண்டிப் பிழைக்கும் அராஜக சக்திகளின் அலங்கார வார்த்தைகளுக்கு மயங்கி,
அடிமையாகவே கிடக்கிறோம்!
/////ram (14:29:51) : தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து ராஜீவ் காந்தியை கொன்றது ஏன்?///
என்று தமிழர்களுக்கு ஒரு கேள்வியை வைத்து ,
எல்லா பார்பனர்களையும் போல் நானும் தமிழன்தான், நானும் தமிழ் தான் பேசுறேன் என்று சொல்லி ஏமாற்றாமல் , தன்னை தமிழன் இல்லை என்று ஒப்புக்கொண்ட ராம் அவர்களின் நேர்மையை பாராட்டுவோம் !///
மட்டு…நீ நக்கலடிச்சாலும் நக்காட்டாலும் நான் தமிழன் தாங்கிறத உங்கப்பனாலும் பாட்டனாலும் கூட மாத்த முடியாது. கேள்விய திசை திருப்பாம ராஜீவ் காந்தி கொலைக்கு மொத்த தமிழர்களும் பொறுப்பேற்கிறீர்களா என்று வாக்குமூலம் கொடுக்கத் தயாரா? நேரடியாக அதற்கு ஒரு கட்டுரையை மதியில்லா மறனை வைத்து எழுதச் சொல்லுங்கள். தலைப்பு “தமிழர்களாகிய நாங்கள் ராஜீவ் காந்தியை ஏன் கொன்றோம்?” என்று இருக்க வேண்டும். ஆம்பளைன்னா அப்படி ஒரு கட்டுரையை எழுதி தமிழ்ப் பற்றை பறை சாற்றுங்கள் பார்க்கலாம்.
மகிழ்னன்
////ram (14:29:51) : தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து ராஜீவ் காந்தியை கொன்றது ஏன்?///
ராஜீவின் ஒற்றை உயிருக்கு தந்த மதிப்பை…..ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு தர மறுத்ததேன்//
அப்படியென்றால் நீங்கள் ராஜீவ் கொலையை ஆதரிக்கிறீர்கள் தானே? அப்படியெனில் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து தான் ராஜீவைக் கொலை செய்தோம் என்று வாக்குமூலம் கொடுத்து ஒத்துக் கொள்ளுங்களேன்.
ஒரு காந்திக்கொலைக்கு எல்லா பார்ப்பனர்களையும் நீங்கள் பொறுப்பேற்க சொல்லும் போது, ஒரு ராஜீவ் கொலைக்கு எல்லாத் தமிழர்களும் பொறுப்பேற்பது தானே சரி.
பார்ப்பன சாதிவெறி ram க்கு என்ன கோபம் வருது பாத்தியா? .தான் இந்து மதத்தை காக்ககதான் கொலை செய்தேன் என்று சொல்லியிருக்கிறான் கொட்செ. ஆனால், இந்த பாப்பான் ram தமிழன கொற சொல்றாரு. இந்தாளு தமிழனாம் தமிழனாம் வெக்கக்கேடு.
ram மாதிரி சாதிவெறியனுங்கள என்ன சொன்னாலும் திருத்தவே முடியாது.
இந்தாளு கோபம் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிராக இல்லாம அத கேக்கறவங்கமேலதான் வருது. பத்து பெரியாரு அம்பேத்கர் வந்தாலும் இவனுங்கள திருத்தமுடியாது.
ராம் சார், டென்ஷன் ஆவாதேள், // கேள்விய திசை திருப்பாம ராஜீவ் காந்தி கொலைக்கு மொத்த தமிழர்களும் பொறுப்பேற்கிறீர்களா என்று வாக்குமூலம் கொடுக்கத் தயாரா?//
மொத்த தமிழர்களும் பொறுப்பு ஏற்கிறீர்களா ? என்று கேள்வி கேட்டால் ,யாரை நோக்கி கேள்வி கேட்கிறீர்கள் ? மொத்த தமிழர்களை நோக்கி … அப்போ அந்த மொத்த தமிழர்களில் நீங்கள் இல்லை , நீங்கள் தமிழர் இல்லை என்று தானே அர்த்தம்.குழந்தைக்கு கூட புரியும் இந்த சின்ன லாஜிக். இதை கேட்டால் வேதத்தில் உள்ள மந்திங்களை போலவே கத்துகிறீர்களே…
பின்னூட்டமிடும் தோழர்கள், இது நாம் விவாதிக்கும் தளம் மட்டுமே.. மற்போர் நடத்தும் இடமல்ல. அதிக சினத்துடன் பயன்படுத்தும் சொற்கள் இருபுறமும் கூருள்ள கத்தி போன்றது. சில நேரத்தில், அது பயன்படுத்தியவரையே பதம் பார்த்து விடுவதுமுண்டு. தகுந்த காரணமின்றி கடுமையான சொற்களை பயன் படுத்துவதால் என்ன பயன் ஏற்பட்டு விட்டது ?
தமிழனுடைய உண்மையான எதிரி யார் என்பதை நாம் காணத் தவறியதுதான், தமிழனின் இப்போதைய இந்தத் தோல்வி நிலைக்கும், தமிழனின் அழிவிற்கும் முதற்காரணம். தமிழர்களுக்குள் சாதி என்ற சாக்கடையை ஊற்றி நம்மை நாறடித்து, அந்த சாக்கடையையே கருவியாகக் கொண்டு நம் சகோதரனையே வெட்டிச் சாய்க்க நம்மைத் தூண்டிவிட்ட பார்ப்பனர்கள்… இப்போது, ஆடு நனைகிறதே என்ற ஓநாயாக நமக்கு சமத்துவ வேதம் ஓத வருகிறார்களே.. மெத்தப் படித்த முட்டாள்களுக்குக் கூட புரியும் இது உழைத்து வாழும் நம்மைப் போன்றவர்களுக்கு புரியாமல் போனதென்ன ?
திரு இராம் அவர்களின் சினம் பாயவேண்டிய இடம் எது தெரியுமா..? (1)முப்பதாயிரத்துக்குமேற்பட்ட தமிழர்களை கொத்துக் குண்டுகளாலும், நச்சுப் புகை செலுத்தியும் கொன்று அழித்தார்களே, சோனியாவும், மன்(ண்ணு)மோகனும், மலையாளிகளும், பார்ப்பனர்களும் சேர்ந்து..
(2) ஆயிரத்துக்குமேற்பட்ட இராமேசுபுரத்து மீனவப் பெண்களின் தாலியை அறுத்துநடுத்தெருவில் அலையவிட்டார்களே ஆன்றனியோ மைனோ சோனியாவும் மண்ணுமோகனும்..
உங்கள் கோபத்தின் இலக்கு இவர்கள் மட்டுமே திரு இராம் அவர்களே..
ஒரு தமிழச்சியின் மான உணர்ச்சியே இராசீவின் உயிரை எடுத்தது.
காசிமேடு மன்னாரு
///////ஒரு காந்திக்கொலைக்கு எல்லா பார்ப்பனர்களையும் நீங்கள் பொறுப்பேற்க சொல்லும் போது,…./////
ஒட்டுமொத்த இந்துக்களின் சார்பாகத்தான் காந்தியைக் கொன்றொழித்ததாக உங்க ஆளு கோட்சேயே சொல்லிட்டான். சாட்சாத் தன்னை பார்ப்பான் என்றோ ‘ஹிந்து’ என்றோ சொல்லிக்கொள்கிற, எண்ணிக்கொண்டிருக்கிறவாள் எல்லோரும் தாண்டா அம்பி பொறுப்பு! இதுல நாங்க வந்து புதுசா சொல்றதுக்கு எதுவுமில்லயேடா அம்பி ராம்.
/////நான் தமிழன் தாங்கிறத உங்கப்பனாலும் பாட்டனாலும் கூட மாத்த முடியாது. /////
கோட்சே கூட காந்தியைக் கொல்லும்போது கொஞ்ச நேரம் இசுலாமியனாக வேடமிட்டிருந்தானே அதுபோன்றதுதான் இந்த அம்பி தன்னையும் ஒரு தமிழன் என்று சொல்லிக்கொள்வது. என்ன இருந்தாலும் கோட்சேயின் வாரிசுகளுக்கு இதைத்தாண்டி யோசிக்கத் தெரியாதில்லையா?
டேய் அம்பி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி முதல் ராமகோபாலன், சோ, ஜெயாமாமிகள் வரை உங்களுடைய வரலாறு நெடுகிலும் உழைக்கும் தமிழர் மரபுக்கு எதிரான பார்ப்பனிய வசவுகளையும் அவதூறுகளையும் பார்க்கலாம். உங்கப்பன், பாட்டன் என்று எவன் நினைத்தாலும் நீ தமிழனாக முடியாதுடா அம்பி; சமஸ்கிருத விட்டையாகத்தான் நீ இருக்கமுடியும்!
//////கேள்விய திசை திருப்பாம ராஜீவ் காந்தி கொலைக்கு மொத்த தமிழர்களும் பொறுப்பேற்கிறீர்களா என்று வாக்குமூலம் கொடுக்கத் தயாரா? /////
தோழர் மதிமாறன் எழுதியுள்ள இப்பதிவு குறித்து கருத்துக்கள் எதுவும் பதிந்து விவாதிக்க வக்கற்ற நீதாண்டா அம்பி அனைத்தையும் திசைமாற்றுகிறாய். முதலில் காந்தியின் கொலை குறித்து இக்கட்டுரை எழுப்பியுள்ள கேள்விகளுக்கு யோக்கியமான பதிலைப் பதிவு செய்துவிட்டு பிறகு வாடா அம்பி, மற்றதை விவாதிப்போம்.
//////நீங்கள் மக்களிடம் சென்று, சாதிக் காழ்ப்புணர்ச்சிக் கருத்துக்களை கூறிப் பாருங்கள், அவர்கள் அதை வரவேற்க மாட்டார்கள். எனக்கு ஒரு விரக்தியும் இல்லை./////
நாங்கள் மக்களிடம் இந்து-கிறித்தவ மதங்களின் சாதிய இழிநிலை குறித்து நிறைய பேசியிருக்கிறோம். அதனை பாதிக்கப்பட்ட மக்கள் புறக்கனித்ததாக எந்த அனுபவமும் இல்லை. மேலும் இதுகுறித்து உங்களுக்கு ஒரு வேண்டுகோளையும் இங்கே வைக்கிறேன்.
நீங்கள் திருச்சிக்காரராக இருப்பதால் உங்கள் ஊருக்கு அருகிலுள்ள லால்குடியை ஒட்டிய திண்ணியம் எனும் ஊரில் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி கள்ளர் சாதிவெறியர்களால் வாயில் ‘பீ’ வைத்தது இந்த ‘ஹிந்து’மதம். வாயில் பீ வைக்கப்பட்டவர் வழக்கு தொடரமுடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு இடையே துனிந்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த ‘நீதி’பதி எதிரிகளைக் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தாராம். நீங்கள் அவரிடத்தில் சென்று பேசிப்பாருங்கள், சாதியக் காழ்ப்புணர்ச்சியின் பிறப்பிடத்தை நீங்கள் அங்கே அறிந்துகொள்வீர்கள், ஐயா!
/////எந்த ஒரு மதத்தை சேர்ந்தவரொ, சாதியை சேர்ந்தவரோ தங்களின் பிரிவுக்கு என தாங்களே எல்லாப் பொருட்களையும் உற்பத்தி செய்தோ, தாங்கள் உற்பத்தி செய்வதை தங்கள் பிரிவினரிடம் மற்றுமே விற்றோ வாழ முடியுமா? சேர்ந்துதான் வாழ முடியும்.///////
நியாயமான கேள்விதான் ஐயா. ஆனால் இக்கேள்வியினை நீங்கள் கேட்கவேண்டிய இடம் வேறு. நாலு வருணம், நாலாயிரம் சாதி, நான் ஒசந்தவன் – நீ தாழ்ந்தவன், நான் பாப்பான் – நீ பறையன் என்று பிரிவினைகளை வெறும் பேச்சோடு மட்டுமின்றி சட்டமாகவே வைத்திருந்த மநு(அ)தர்மத்தையும் இந்துமதத்தையும் பார்த்து நீங்கள் எழுப்பவேண்டிய கேள்வி இது. நாங்கள் பிரிவினை பேசுபவர்கள் அல்ல. இந்துமதம் மோசடியாகப் பராமரித்து வரும் இந்த சாதிய இழிவுநிலைகளை அம்பலப்படுத்தி மக்களை விழிப்படையச் செய்வதைத்தாண்டி எமது இலக்கு வேறில்லை.
ஐயா திருச்சிக்காரரே,
எதை சுதந்திரம் என்கிறீர்கள்? சொந்த நாட்டு மக்களை அவர்களின் இடத்தில் கிடைக்கும் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் சூரையாடுவதற்காக; அரசு அந்த மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே அவர்களின் மீது போர் தொடுப்பதை சுதந்திரம் என்கிறீர்களா?
ஏகபோகங்கள் கொழுத்துத் திளைப்பதற்கு ஏற்ற எல்லாவற்றையும் செய்துவிட்டு சர்க்கரை இல்லையென்றால் செத்துப்போக மாட்டீர்கள் என திமிர்த்தனம் காட்டுவதை சுதந்திரம் என்கிறீர்களா?
வஉசி, கட்டப்பொம்மன் என்று பெயர்களை அடுக்கி உணர்ச்சி வசப்படுவதில் பொருளில்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை என்று போராடினாலும், வாழ வழியில்லை வேலை தாருங்கள் என்று போராடினாலும், மக்கள் எதற்க்காகப் போராடினாலும் காவல் துறை குண்டாந்தடியோடு ஏன் வருகிறது? என்று சிந்தித்துப் பாருங்கள். சுதந்திரம் என்பதன் பொருள் அப்போது விளங்கும்.
தோழமையுடன்
செங்கொடி
பிகு: நான் கொடுத்திருக்கும் சுட்டியை சொடுக்கி படித்துப்பாருங்கள். காந்தியின் மகாத்மா அங்கு சாயம் வெளுத்திருப்பது தெரியும்.
இரணியன் அவர்களே,
//நாங்கள் பிரிவினை பேசுபவர்கள் அல்ல. இந்துமதம் மோசடியாகப் பராமரித்து வரும் இந்த சாதிய இழிவுநிலைகளை அம்பலப்படுத்தி மக்களை விழிப்படையச் செய்வதைத்தாண்டி எமது இலக்கு வேறில்லை.//
வரவேற்கிறோம். சாதி முறையினால் இழைக்கப் பட்ட அநீதிகளை சுட்டிக் காட்டி, மக்களிடையே தொடர்ந்து பிரச்சாரம் செய்யுங்கள். நானும் உங்களுடன் தோள் கொடுக்கிறேன். மக்களாலேயே, மக்களின் மன மாற்றத்தாலேயே சமத்துவ சமுதாயம் உருவாக்கப் பட முடியும்.
பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தின் மீது பற்று உள்ள நிலையிலேயே உள்ளனர். சாதி வேறுபாடு குறைய, முற்றாக நீங்க இந்துக்கள் முயற்ச்சி எடுக்க வாய்ப்பு உள்ளதே தவிர, இந்து மதத்தை அவர்கள் விடும் வாய்ப்பு மிகவும் குறைவு அல்லது வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் பின் பற்றப் படும் இந்து மதத்திலே சாதிய முறையை முற்றாக ஒழித்து சமத்துவ மனநிலைக்கு எல்லா இந்துக்களையும் திருப்புவதுதான் சமத்துவ சமுதாயம் அமைக்க சாத்தியமான வழியாகும். அந்த சமத்துவ சமுதாயத்திலே எல்லோரும் ஒரே மக்களாக இணைவதொடு, பிற மதங்களை சார்ந்தவர்களுக்கும் சமத்துவ நிலையிலே இணைக்கப் படுவார்கள், அவர்களுக்கு முழு மத சுதந்திரமும், பாதுகாப்பும், சம அந்தஸ்தும் அளிக்கப் படும்.
இந்து மதமோ, எந்த மதமோ – இந்திய சமுதாயத்தில் சாதிப் பாகுபாடுகள் குறைந்து கொண்டே வருகின்றன. இது உண்மையா இல்லையா என்பது உங்களுக்கே தெரியும். இன்னும் குறையும். முழுமையான சமத்துவ சமுதாயம் அமைக்கப் பட்டே தீரும். மனு , கினு வையெல்லாம் ஏற கட்டியாகி விட்டது. மனுதான் இந்து மதத்தை தோற்று வித்த நபரா? மனு வருவதற்கு முன் இந்து மதம் இல்லையா? சமத்துவ பிரச்சாரத்தை எல்லாரிடமும் செய்து வருகிறோம்.
உங்களின் முக்கியக் குறிக்கோள் சாதீய அநீதியை நீக்கி சமத்துவ சமுதாயம் அமைப்பதா, அல்லது இந்து மதத்தை எதிர்ப்பதா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்து மதத்தை எதிர்ப்பது தான் உங்களின் குறிக்கோள் என்றால் நீங்கள் எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். உலகின் மிகப் பழமையான மதமாக இருக்கும் இந்து மதம், அவ்வப் போது பின்னடைவை சந்தித்தாலும் பிறகு இன்னும் வலிமையுடன் எழுந்து வருகிறது. இந்து மதத்தை எதிர்ப்பது தான் உங்களின் குறிக்கோள் என்றால் நீங்கள் எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
நீங்கள் எப்படி செயல் பட்டாலும், சமத்துவ சமுதாயம் அமைக்க முயற்சி எடுப்போம், அமைத்தே திருவோம் என நான் உறுதி கூறுகிறேன். நம்பிக்கையுடன் செயல் படுவோம்.
நான் கூறுவதில் உள்ள உண்மைகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
இரணியன் அவர்களே,
//நீங்கள் திருச்சிக்காரராக இருப்பதால் உங்கள் ஊருக்கு அருகிலுள்ள லால்குடியை ஒட்டிய திண்ணியம் எனும் ஊரில் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி கள்ளர் சாதிவெறியர்களால் வாயில் ‘பீ’ வைத்தது இந்த ‘ஹிந்து’மதம். வாயில் பீ வைக்கப்பட்டவர் வழக்கு தொடரமுடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு இடையே துனிந்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த ‘நீதி’பதி எதிரிகளைக் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தாராம். நீங்கள் அவரிடத்தில் சென்று பேசிப்பாருங்கள், சாதியக் காழ்ப்புணர்ச்சியின் பிறப்பிடத்தை நீங்கள் அங்கே அறிந்துகொள்வீர்கள், ஐயா!//
திண்ணியம் சம்பவத்தில் வாயிலே பீ திணிக்கப் பட்ட போது, என் வாயில் பீ திணிக்கப் பட்டதாகவே அவமான உணர்வில் குறுகிப் போனேன். நாகரீக சமுதாய மனநிலை உள்ள யாரும் அப்படித்தான் நினைப்பார்கள்.
மக்களின் மன நிலையில் மாற்றம் வேண்டும், காட்டு மிராண்டி மனநிலையில் இருந்து மாறி நாகரீக மனிதனின் மன நிலைக்கு அவர்கள் வர வேண்டும். நம் முன்னே உள்ள பணி எத்தகையது என்பதை புரிந்து கொள்கிறோம்.
சட்டம் என்பது ஓரளவு தான் உதவி செய்யும் (முதலில் நமது நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? ) மக்களின் மனநிலை மாற வேண்டும். மாற்றுவோம்.
இதே போல ஒரு பீ திணிப்பு நிகழ்ச்சி இதே பிரிவினரிடையே போன மாதம் நடை பெற்றதாக செய்தி வந்ததை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்த சம்பவத்தில் சமபந்தப் பட்ட எல்லாரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல, வேறு ஒரு மதத்தை சேர்ந்தவர்கள். எனவே பிரச்சினையின் மூல காரணம் என்ன- மனிதன் மிருக குணம் உள்ளவனாக இருப்பது- அது எல்லா மார்க்கத்தை சேர்ந்தவரிடமும் இருக்கிறது. இதிலே வெறுமனே இந்து மதத்தை திட்டி விட்டு ஓய்ந்தால், பிரச்சினை தீருமா? மீண்டும் அதே நிகழ்வுகள் நடைபெறும் – எல்லா மார்க்கத்தினரிடமும் நடை பெறுகிறது.
சாதீயக் கருத்துக்கள் இந்து மதத்தின் முக்கிய கருத்து போல ஆக்கப் பட்டு விட்டது. தங்களின் சுக வாழ்விற்காக, எதிர்த்துப் பேச முடியாத வேலையாட்களை பெறுவதற்கு பண்ணையார்களும், பிரபுக்களும், ஒரு பிரிவினரை அடக்கி கட்டம் கட்டினர். புரோகிதனும் அதிலே ஒத்து வூதி விட்டான்.
எல்லா பொறுப்பும் இந்து மதத்தின் மீது சுமத்தப் பட்டு, மத சகிப்புத் தன்மையும், அஹிம்சைக் கருத்துக்களும், உண்மையைத் தேடும் பகுத்தறிவு கருத்துக்களும், சமத்துவக் கருத்துக்களும் உள்ள ஒரு மதம், சாதீய அநீதிக்கு சப்பைக் கட்டு கட்டும் மதமாக ஆக்கப் பட்டு விட்டது.
அந்த மதத்தில் உள்ள சாதியக் கருத்துக்கள் அழிக்கப்பட்டு, இந்திய சமுதாயம் சமத்துவ சமுதாயம் ஆக நான் முழு முயற்சி எடுப்பேன்.
இதற்க்கு உள்நோக்கம் கற்பித்து , என்னை யாராவது திட்டினால் திட்டட்டும். என்னுடைய பணி கடுமையானது, முடிந்த வரையில் பணி செய்வேன்.
செங்கொடி அவர்களே,
நான் எழுதியதை முழுதாகப் படித்தீர்களா?
//வெள்ளைக்காரர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தைக் கொள்ளைக்காரர்களிடம் பறி கொடுத்து விட்டோம்.
பிறப்பு சான்றிதழ் முதல் சாவு சான்றிதழ் வரை எல்லாவற்றுக்கும் அதிகாரியிடம் கை கட்டி கையூட்டு கொடுத்து,
போலீசு, லோக்கல் ரவுடி எல்லொருக்கும் மாமூல் கொடுத்து,
மாநாட்டு செலவுக்கு உண்டி குலுக்கும் வட்டச் செயலாளரிடம் இருந்து என்னைக் காக்க அவர் கூறும் கப்பத்தைப் கட்டி, பலருக்கும் அடிமையாகவே எல்லோரும் வாழ்கிரோம்.
காந்தி வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்.
கொள்ளைக் காரர்களிடமிருந்து, ரவுடிகளிடம் இருந்து, பண்ணையார்களிடம் இருந்து, பெரு முதலாளிகளிடம் இருந்து ….. இன்னும் பலரிடம் இருந்து நாம் சுதந்திரம் அடைய வேண்டியது பாக்கி உள்ளது.
ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டு,
மக்களைப் பிரித்து வைத்து, சாதிக் காழ்ப்புணர்ச்சி, மதக் காழ்ப்புணர்ச்சி, இனக் காழ்ப்புணர்ச்சி , மொழிக் காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றை எல்லாம் தூண்டி விட்டு, மக்களை சுரண்டிப் பிழைக்கும் அராஜக சக்திகளின் அலங்கார வார்த்தைகளுக்கு மயங்கி,
அடிமையாகவே கிடக்கிறோம்!//
சோனியாவும் மண்ணுமோகனும்..
மன்னாரு
கோட்சே செய்த செயலுக்கு, மொத்த பார்பன சமுகத்தை கொலைவெறிக் கூட்டம் என்று தைரியமாக எழுதி உங்கள் பாராட்டுகளை பெரும் நமது வேதி மாறன் ; சோனியா – எந்த ஜாதியோ அவர்களை எதிர்த்தோ, மன்மோகன் எந்த ஜாதியோ அவர்களைப் பற்றி எழுதியோ தன பகுத்தறிவை பகிர்ந்து கொள்ளாதது ஏன்
அதுக்கெல்லாம் மேல போன பதிவில் ராமேஸ்வரம் கோயிலை, ஆயிரம் கால் மண்டபம் என்று படம் பிடித்துக் காட்டிய தன சிறு தவறை ஒத்துக்கொள்ளும் ஒரு சரியான மனநிலையில் இல்லாத ஒரு மனிதனின் எழுத்துக்களை – எப்படி பகுத்தறிவு என்று ஏற்று கொள்ள முடியும் .
வேதிமாறன்,
ஆதிக்கம் செலுத்தும் எல்லா மனிதரையும் எதிர்க்கும் உங்கள் முனைகள் வருடங்களில் உலக பணக்காரப் பட்டியலில் இடம் பிடித்து விட்ட ஒரு குடும்பத்தின் வெறியாட்டங்களை எழுதவே இல்லையே. உயிர் பயமாக இருக்கும். இல்லையேல் நாளைய அரசியல் உள்நோக்காக இருக்கும். வரலாற்று பகுத்தறிவு ( ?? ) பேசும் உங்களுக்கு சமகால நெருடல்களை பேசும் தேவை இல்லை என்றால் நீங்கள் எதற்க்காக பகுத்தறிவு கோடி பிடிதிருகிருரீர்கள் என்று அனைருக்கும் விளங்கும்
வேதிமாறன்,
அம்பேத்கார் எங்கெல்லாம் ஹிந்துக்கள் என்று எழுதி கருத்துக்களை கூறியுள்ளாரோ அங்கெல்லாம் தெளிவாக பார்பனர் என்ற சொல்லாடல் மிகவும் அருமையான சூழ்ச்சி – வாழ்த்துக்கள்
Vikram /
///வேதிமாறன்,
அம்பேத்கார் எங்கெல்லாம் ஹிந்துக்கள் என்று எழுதி கருத்துக்களை கூறியுள்ளாரோ அங்கெல்லாம் தெளிவாக பார்பனர் என்ற சொல்லாடல் மிகவும் அருமையான சூழ்ச்சி – வாழ்த்துக்கள்////
பார்ப்ப்பனர்கள் பொய் சொல்வதிலும், உண்மைக்கு எதிராக பேசுவதிலும் கில்லாடிகள் என்பதை Vikram நிருப்பிக்கிறார்.
அப்பேத்கர் தன் எழுத்துக்கள் முழுக்க பார்ப்பனர்களை தோல்உரிந்து இருக்கிறார். ஆனால் அவர் ஆங்கிலத்தில் பிரமின்ஸ் என்றுதான் குறிப்பிடுகிறார். அதை மாற்றமல் மதிமாறன் பிராமணர்கள் என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறார்.
அம்பேத்கர் மேற்கோள்களில் பார்ப்பனர் என்றுகூட மதிமாறன் குறிப்பிடவில்லை. ஆனால் இந்து Vikram என்ற பார்ப்பனர் எப்படி பொய் சொல்கிறார் பாருங்கள்.
திருச்சிக்காரரே,
நான் சொல்லியிருப்பதை புரிந்துகொள்ள முயலுங்கள். நமக்கு கிடைத்தது சுதந்திரமல்ல என்றும் சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் காந்தி மக்கள் எழுச்சியை தடுத்து எவ்வாறு ஏகாதிபத்தியங்களுக்கு குழலூதினார் என்பதை அந்த சுட்டி ஆதாரங்களுடன் நிறுவுகிறது. ஆனால் நீங்களோ பின்னால் பிழை வந்துவிட்டதாக ஒரு மத நம்பிக்கையைப் போல் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். முதலில் படித்து புரிந்துகொண்டு பின் உங்கள் வாதங்களை முன்வையுங்கள்.
செங்கொடி.
சிவராஜ்,
உங்களை போன்ற வெறியர்கள் உள்ள வரை இந்த அரசியல் கட்டுமானங்களில் இருந்து மீழ்ச்சி என்பது இல்லை
நீங்கள் இன்னொரு இனவெறியர்
என்னை எதை வைத்து பார்பனர் என்றீர்கள்,
நான் தோழர் மதிமாறனின் கருத்துகளை எதிர்த்தால் – நான் பார்பனராக இருக்க வேண்டும் என்று ஒரு முடமான கருத்து.
நீங்கள் நேர்ந்து கொண்ட கருத்து
பார்ப்ப்பனர்கள் பொய் சொல்வதிலும், உண்மைக்கு எதிராக பேசுவதிலும் கில்லாடிகள் – – -நீங்கள் ஜாதிவெறியர் என்பதற்கு இந்த ஒரு வரி போதும்
ஆகையால் சகோதர சகோதரர்களே, காந்தியானவர் இந்தியாவின் தன்னினிகரற்ற தலைவர் என்றும், இன்னும் உலகம் போற்றும் பெரிய தலைவர் என்றும் நினைத்து வந்தீர்கள் அல்லவா?
ஆனால் நம்ப சகோதரர் மதிமாறன் ஆணிததரமாக முழங்குவதை படித்தால் அவர்தான் தான் இன்றைய இந்தியாவின் தன்னிகரற்ற தலைவர் என்பது போல தோன்றுகிறது அல்லவா. இந்தியாவின் 120 கோடி மக்களும், நம்ப மதிமாறன் அவர்களின் பின்னால் திரண்டு, காந்தியை அம்பலப் படுத்தி , பார்ப்பனர்கள் சதியையும் அம்பலப் படுத்தி புதிய சரித்திரம் படைக்கப் போகிறார்கள். புரிந்ததா? சரி, படுக்கையை விட்டு எழுந்து பல்லை விளக்கிட்டு டீயைக் குடிங்க. டாக்டரைப் பாக்க அப்பாயின்ட்மென்ட் இருக்கு.//
இதுவரை பதுங்கியிருந்த பார்ப்பன பூனை, எனக்கு அம்பேத்கர் பிடிக்கும் அவர் நல்லவர் வல்லவர் என்று புகழாரம் சூட்டி பிறகு இந்து மதம் நல்ல மதம் தான். ஆனால் அதில் சிலர் தான் தவறு செய்கின்றனர் என்று தனது பார்ப்பனத்தன்மையை மெதுவாக தலைகாட்டி வந்து இப்போது காந்தி கொலையில் நாம் பார்ப்பனீயத்தை கண்டித்தவுடனே முழுவதும் வெளிவந்து விட்டது இந்த பார்ப்பன பூனை.
இது தான் பார்ப்பனீயம்.
பதுங்கவும் தெரியும்! பாயவும் தெரியும்! கீறி பிறாண்டவும் தெரியும்! அது தான் பார்ப்பனீயம்!
திருச்சி – ஓய், என்ன! இப்ப உம்ம சவுண்ட் பலமாயிருக்கு!
//மக்களின் மன நிலையில் மாற்றம் வேண்டும், காட்டு மிராண்டி மனநிலையில் இருந்து மாறி நாகரீக மனிதனின் மன நிலைக்கு அவர்கள் வர வேண்டும். நம் முன்னே உள்ள பணி எத்தகையது என்பதை புரிந்து கொள்கிறோம்//
அதை தான் நாங்களும் சொல்கிறோம். காட்டு மிராண்டித்தனமாக ஒரு சாராரை அடிமைபடுத்தும் இந்து மதத்தின் மனநிலையில் இருந்து மாறி நாகரீக மனிதனின் மன நிலைக்கு மாறும் ஓய்!!!!
/// Vikram (02:35:14) :
சிவராஜ்,
உங்களை போன்ற வெறியர்கள் உள்ள வரை இந்த அரசியல் கட்டுமானங்களில் இருந்து மீழ்ச்சி என்பது இல்லை
நீங்கள் இன்னொரு இனவெறியர்
என்னை எதை வைத்து பார்பனர் என்றீர்கள்,
நான் தோழர் மதிமாறனின் கருத்துகளை எதிர்த்தால் – நான் பார்பனராக இருக்க வேண்டும் என்று ஒரு முடமான கருத்து.
நீங்கள் நேர்ந்து கொண்ட கருத்து
பார்ப்ப்பனர்கள் பொய் சொல்வதிலும், உண்மைக்கு எதிராக பேசுவதிலும் கில்லாடிகள் – – -நீங்கள் ஜாதிவெறியர் என்பதற்கு இந்த ஒரு வரி போதும்///
சரி நீங்கள் சாதி வெறி இல்லாதவர் அப்பழுக்கற்றவர் என்று வைத்தக்கொள்வோம்… அம்பேத்கர் பறறி நீங்கள் சொன்ன பொய்யை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே….. அதனால்தான் உங்ளை பார்ப்பான சாதி வெறியன் என்று சொன்னேன்.
வேந்தன்,
சாதிக் காழ்ப்புணர்ச்சி – அது எந்த சாதிக்கெதிராக இருந்தாலும் அதை சுட்டிக் காட்ட நான் தயங்குவதில்லை.
நான் சொன்ன கருத்துக்கள் அப்படியே உள்ளன. I stand with my words.
அம்பேத்கர் எல்லா இந்தியரும் நன்றி செலுத்த வேண்டிய முக்கிய் தலைவர்,
இந்து மதம் சாதிய கட்டில் இருந்து விடுபடுகிறது,
காந்தியை கொலை செய்த வெறியன் கோட்சேயை, அதற்க்கு அவனுக்கு உதவிய அவனது உறவினர், நண்பர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்,
இதை சாக்காக வைத்து ஒரு சமுதாயத்தின் மீது விஷம் கக்குவதை பெரும்பாலான மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்,
– Fair enough?
நீங்கள் என்னை ஏக வசனத்தில் அழைத்தாலும் , வைதாலும், மிரட்டினாலும் நாம் தெளிவாக உண்மைகளை வெளிப்படுத்துவோம்.
சவுண்டு அதிகமாகும் வாய்ப்பு உள்ளதே அல்லாமால், குறையும் வாய்ப்பு இல்லை.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
வேந்தன்,
//மக்களின் மன நிலையில் மாற்றம் வேண்டும், காட்டு மிராண்டி மனநிலையில் இருந்து மாறி நாகரீக மனிதனின் மன நிலைக்கு அவர்கள் வர வேண்டும். நம் முன்னே உள்ள பணி எத்தகையது என்பதை புரிந்து கொள்கிறோம்//
//அதை தான் நாங்களும் சொல்கிறோம். காட்டு மிராண்டித்தனமாக ஒரு சாராரை அடிமைபடுத்தும் இந்து மதத்தின் மனநிலையில் இருந்து மாறி நாகரீக மனிதனின் மன நிலைக்கு மாறும் ஓய்!!!!//
யார் மனிதனுக்கு மனிதன் மரியாதை செலுத்துகிறார்கள், யார் இகழ்ச்சியும் காழ்ப்புணர்ச்சி யும் செலுத்துகிறார்கள் என்பது படிப்பவர்களுக்கே தெரியும். இந்து மதத்தில் உள்ள சாதி முறை முற்றாகக் களையப் படும். அதற்க்கான முயற்ச்சி தொடர்ந்து நடை பெரும். கடைசி சாதி உணர்வாளரும், சாதிக் காழ்ப்புனர்ச்சியாளரும் மாறும் வரை தோடர்ந்து உழைப்போம்.
unga kaaruthuku maarupattu pesara ellarum parpanara?? ennai kodumai sir ithu
இங்கே கருத்துக்களை பதிவு செய்துள்ளவர்களில் எத்தனை பேர் “கோட்சேவின் வாக்குமூலம்” என்ற நூலைப் படித்திருக்கிறீர்கள் என்பதே என் ஐயம்.
படித்தபின் உங்கள் அனைவருடைய கருத்துக்களுமே மாறிப்போகக்கூடுமோ, என்னவோ யார் கண்டது..