காந்தி படுகொலையும் அப்பாவி பார்ப்பனஅகிம்சாமூர்த்திகளும்

‘காந்தி படுகொலை நினைவுநாளை ஒட்டி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதை தனி தனியாக நான்கு பகுதிகளாக வெளியிட்டு இருந்தேன். முதலில் இருந்து சேர்ந்தார்போல் படிப்பதற்காக அதை முழுமையாக்கி ஒரே தலைப்பில் வெளியிட்டு இருக்கிறேன்.

ந்தக் கூட்டம் காந்தியை ஆதரிக்கிற கூட்டமல்ல. அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள், காந்தியை ஆதரிக்க முடியாது. கூடாது.

அப்படின்னா இது என்ன கூட்டம்?

காந்தியை கொன்ன பார்ப்பன பயங்கரவாதிகளை கண்டிக்கிற கூட்டம். பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவிடம் சேத்துபட்டு போலிசார் கோட்சேவைபோல் நடந்துகொண்டதை கண்டிக்கிற கூட்டம். அப்படிதான் இதுநடந்துகிட்டு இருக்கு.

காந்தி கொல்லப்பட்டபோது பெரியார், இந்தியாவிற்கு ‘காந்திதேசம்’ என்று பெயர் வைக்கச் சொன்னார். காரணம், காந்தி மேல் கொண்ட அன்பினால் அல்ல. காந்தியை கொன்ற பார்ப்பன இந்து மதவெறியர்கள், காந்தியை தங்களுக்கு எதிராக கருதி கொன்றார்கள் என்பதால்.  காந்தி கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள்வரை, காந்தியை கடுமையாக எதிர்த்த பெரியார்தான் காந்தி தேசம் என்று பெயர் வைக்கச் சொன்னார்.

காந்தி கொலைக்கு முன்னும்  பின்னும் கூட காந்தியை பெரியார் ஆதரிக்கவில்லை என்பது மட்டுல்ல, கடுமையாக எதிர்க்கவும் செய்தார். 1956 ல் ‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவிற்கு அவமானம்’ என்று அறிவித்தார். காங்கிரசின் காமராஜர் ஆட்சியின்போதுதான் ‘காந்திப்பட எரிப்பு’ போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி செய்த சதிக்கு,  காந்தி கொலை செய்யப்பட்டிருந்தாலோ, மாவீரன் பகத்சிங்கிற்கு செய்த துரோகத்திற்கு பகத்சிங்கின் தோழர்கள் அல்லது புரட்சிகர இளைஞர்கள் காநதியை கொலை செய்திருந்தாலோ பெரியார் அவர்களை கண்டித்திருக்க மாட்டார். அந்தக் கொலையை ஆதரித்துதான் இருப்பார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, ரெட்டை வாக்குரிமையைகேட்டு அண்ணல் அம்பேத்கர், லண்டனில் வட்டமேசை மாநாட்டில் கடுமையாக காந்தியோடு மோதினார். அம்பேத்கரை வாதத்தால் வெல்லமுடியாத காந்தி, ‘எங்க ஊருக்கு வா உன்ன கவனிச்சிக்குறேன்’ என்று இந்தியாவிற்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.

நாட்டையே, பதட்டமாக மாற்றிவிடுகிறார் காந்தி. ‘அய்யோ காந்தி செத்துவிடுவாரோ’ என்று எல்லாத் தலைவர்களும் கவலை கொள்கிறார்கள்? அவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பதட்டப்படுகிறார்கள்.

ஆனால், ஒரேஒரு தலைவர் மட்டும்தான், அம்பேத்கருக்கு தந்தி கொடுக்கிறார், ‘கோடிகணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிடவும், ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல. அதனால் உங்கள் நிலையில் இருந்து இறங்கி வராதீர்கள்’ என்று. அப்படி தந்திகொடுத்த ஒரே தலைவர் பெரியார்.

பெரியார்-காந்தி சந்திப்பின்போது, ‘பிராமணர்கள் யாருமே சரியில்லை என்று சொல்வதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். ஒரே ஒரு பிராமணர் கூடவா சரியில்லை என்கிறீர்கள்’ என்று பெரியாரிடம் கேட்டார் காந்தி.

அதற்கு பெரியார், ‘எனக்கு ஒருத்தர்கூட நல்லவரா தெரியல’ என்றார்.

‘கோபால கிருஷ்ண கோகுலேகூடவா நல்லவர் இல்ல’ என்று திருப்பி கேட்கிறார் காநதி.

பெரியார், ‘உங்களைப் போன்ற மகாத்மாவிற்கே ஒரு பார்ப்பனர்தான் நல்லவராக தெரிகிறார்….’ என்று பதில் அளித்திருக்கிறார்.

அதுபோல், ‘தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலைக்கு இந்துமதம்தான் காரணம்’ என்று இந்து மதத்தை, வேதத்தை அம்பலப்படுத்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும என்று அம்பேத்கர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து, காந்தி தனது அரிஜன் என்ற பத்திரிகையில், ‘இந்து மதத்தில் யாரோ சிலர் செய்த தவறுக்காக இந்து மதத்தையே குறை சொல்வது தவறு. இந்து மதத்திற்குள் இருந்துகொண்ட அதை திருத்தம செய்யவேண்டும்’ என்று அம்பேத்கருக்கு மறுப்பு எழுதுகிறார்.

அதற்கு பதில் எழுதும்போது அம்பேத்கர், “சிறப்பான காரணங்கள் இருந்தால் தவிர, பொதுவாக என் எதிராளிகளோடு சர்ச்சையில் இறங்கும் வழக்கம் எனக்கு இல்லை. எனது எதிராளி ஒரு ‘அனாமதேய ஆத்மா‘வாக இருந்திருந்தால், நானும் போனால் போகட்டும் என விட்டிருப்பேன். ஆனால், ‘மகாத்மாவே’ என் எதிராளியாக இருப்பதால், அவர் முன்வைத்துள்ள வழக்கை நான் சந்திக்க முயன்றாக வேண்டும் என்றே கருதுகிறேன்.” என்று காந்தியை கந்தலாக்கி தொங்க்கவிட்டிருப்பார் டாக்டர் அம்பேத்கர்.

பதில்களின் மூலமாகவே  அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு காந்தியிடம் இருந்து பதிலே இல்லை.

இப்படி பார்பபனர்களுக்கும், இந்து மதத்திற்கும் காவடி தூக்கிய காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

நந்தனாரும் வள்ளலாரும்

பெரியாரும் அம்பேத்கரும்

பார்ப்பனர்களுக்கு விசுவாசமுள்ளவராக இருந்த காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

இதற்கான முடிச்சு தமிழ்நாட்லதான் இருக்கு.

நந்தனாரை, வள்ளலாரை எதற்கு கொன்றார்களோ அதற்காகவேதான் காந்தியையும் கொன்றார்கள்.

இந்து மதத்திற்குள் இருந்துகொண்டே ஜாதிக்கு எதிராக பேசுவது, இந்து மதத்திற்குள் பார்ப்பனர்களுக்கு எதிரான சீர்திருத்தத்தை செய்ய முயற்சிப்பது, இந்து மதத்திற்குள் தனது உரிமையை கோருவது, இந்துமதத்திற்குள் பார்ப்பனியத்திற்கு எதிராக சமயநல்லிணக்கத்திற்கு முயற்சிப்பது இதுபோன்ற எந்த செயலையும் பார்ப்பனர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படி தீவிரமாக இயங்குபவர்களை ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து சோரம் போக வைப்பார்கள். அதையும் மீறி முயற்சிப்பவர்களை கொலை செய்து விடுவார்கள்.

அப்படித்தான் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்த வள்ளலாரை ஜோதியில் கலந்தார்கள். சிவனை தரிசிக்க, சிவன் தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பாடாய்படட நந்தனை கொளுத்தினார்கள்.

பெரியபுராணத்தில் வருகிற நந்தன் கதை அதைத்தான் உணர்த்தியது, எச்சரித்தது.

சமணம், புத்தம் சமயங்களால் வீழ்ச்சியுற்ற சைவசமயத்தை, பார்ப்பனியத்தை மீட்டுருவாக்கம் செய்யவந்ததே பெரியபுராணம். அதனால்தான் அதில் வருகிற 63 நாயன்மார்கள் கதாபாத்திரங்களையும், பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கி அவர்களை முன்னுறுத்தி, சைவசமயத்திற்குள் அய்க்கியபடுத்தி எழுதப்பட்டது.

எல்லா ஜாதியைச் சேர்ந்த நாயன்மார்களுக்கும் காட்சி தரும்போது சிவன் பார்ப்பன உருவம் கொண்டுதான் காட்சி தந்திருக்கிறான். குயவருக்கு காட்சி தந்தால் குயவராகவோ, இயற்பகை நாயனார் என்கிற செட்டியாருக்கு காட்சி தரும்போது செட்டியாராகவோ கூட வரவில்லை. பார்பபன உருவம் கொண்டுதான் வந்திருக்கிறான். காட்சி தந்திருக்கிறான்.

கடவுள் பார்ப்பன உருவத்தில்தான் வருவானே தவிர சூத்திர உருவத்தில் வருவது அவனுக்கு இழுக்கு. பார்ப்பன உருவத்தில் வருவான், பன்னி அவதாரத்தில்கூட வருவான். ஆனால், சூத்திரர் உருவத்தில்வரமாட்டான். அது கடவுள் தன்மையின் புனிதத்திற்கு எதிரானது என்று உணர்த்துவதின் மூலம் பார்ப்பன மேன்மையை அதன் மூலமாக பார்ப்பன நலனை பாதுகாப்பது என்ற அழுத்தமான உள்ளர்த்ததோடு  எழுதப்பட்டது.

சூத்திரர்களுக்கு  எல்லாம் பார்ப்பன உருவத்தில் வந்து காட்சி தந்த சிவன், அப்படிக்கூட நந்தனார் என்கிற தாழ்த்தப்பட்டவருக்கு மட்டும் நேரில் வந்தும் காட்சி தரவில்லை. கனவிலும் வரவில்லை.

சைவசமயத்திற்கு ஆள் பிடிக்கும் பிரச்சார முயற்சியில்கூட, தாழ்த்தப்பட்டவரை அங்கீகரிக்கிற தன்மையில் இல்லாமல், ‘புனிதமாக அவமானப்படுத்துகிற’, அங்கேயும் தீண்டாமையை கடைப்பிடித்து, ‘தாழ்த்தப்பட்ட மக்கள் அப்படி பிறஜாதி மக்களைபோல் இறைவனை வழிபட நினைப்பது கூடாது’ என்கிற கருத்தையும உள்ளடக்கிதான் நந்நனார் காதாபத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மற்ற ஜாதிக்காரர்களுக்கு காட்சி தந்த சிவன், நந்தனாருககு காட்சிதரவில்லை என்பது மட்டுமல்ல, நந்தனாரின் வேண்டுகோளுக்கு அவர் கனவில் வந்து பதில் சொல்லாமல், தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் வந்து பதில் சொல்லியிருக்கிறான்.

தில்லைவாழ் அந்தணர்கள் அதான் தீட்சிதப் பார்ப்பனர்கள் நந்தனிடம், “சிவன் எங்கள் கனவில் வந்து சொன்னான். உன்மீது உள்ள தீண்டாமை என்கிற இழிவு நீங்கவேண்டுமானால், நெருப்பில் இறங்கி உன்னை நீ சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி நெருப்பில் இறங்கி வெளியே வந்தால், நீ தூய்மையாகிவிடுவாய். உன்னை சிவன் ஏற்றுக்கொள்வான்.“ என்று சொல்லியிருக்கிறார்கள். நெருப்பில் இறங்குனப் பிறகு எங்க வெளியே வருவது? நந்தனின் கதையை இப்படித்தான் முடித்தார்கள் பார்ப்பனர்கள்.

ஆக, இந்துமதத்திற்குள் இருந்துகொண்டு, அல்லது இந்துமதத்தை ஒத்துக்கொண்டு பார்ப்பனியத்திற்கு எதிராக தன்னை அறியாமல் உண்மையான பக்தியோடு இயங்கினால்கூட கொலை செய்துவிடுவோம் என்பதாக எச்சரிப்பதுதான் நந்தன் கதை.

2000 ஆம் ஆண்டுகால வரலாற்றில், பார்ப்பனியத்தை இந்து மதத்திற்குள் இருந்துகொண்டு, ‘சிவன் நம் கடவுள், கண்ணன் நம் கடவுள்’ என்று சொல்லிக்கொண்டு, பார்ப்பனியத்தை எதிர்த்தவர்கள் யாரும் ஜெயித்ததில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் சைவசமயம் நம்முடையது. சிவன் நம்கடவுள் என்று முழங்கிய பார்ப்பனரல்லாத ‘உயர்’ஜாதிக்காரர்களின் கோமாளித்தனமான பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனியத்தின் இன்னொரு நுட்பமான வடிவமான சுயஜாதி பிரியத்திற்குள் சிக்கி மீண்டும் பார்ப்பனியத்திடமே சரணடைந்தது.

இந்தப் பார்ப்பன அல்லாத ‘உயர்’ஜாதிக்காரர்களைப் போல் அல்லாமல், வள்ளலார் தனித்து இயங்கினார். அவரும் பார்ப்பனியக் கடவுளின் ஆதரவு நிலையில் இருந்து பார்ப்பனியத்தை எதிர்த்தார். அவருக்கும் சிவலோக பதவியைத்தான் தந்தார்கள் பார்ப்பனர்கள்.

அகம் வேறு, பிரம்மம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல், பார்ப்பனியம்தான் இந்துமதம். இந்துமதம்தான் பார்ப்பனியம்.  இதை புரிந்துகொண்டு பார்ப்பனியத்தோடு துண்டாக கோடு கிழித்து எதிர்நிலையில் நின்றவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.

2500 ஆண்டுகளுக்கு முன்னால் புத்தர், ‘பார்ப்பனியம்தான் வேதம். வேதம்தான் பார்ப்பனியம்’ என்று எதிர்நிலையில் போராடியதால்தான் ஜெயித்தார்.

2500 ஆண்டுகள் தாண்டி புத்தருக்கு பிறகு, ‘பார்ப்பனியம்தான் இந்துமதம். இந்துமதம்தான் பார்ப்பனியம்’ என்று எதிர்நிலையில் நின்று பார்ப்பனியத்தோடு மோதிய பெரியாரும், அம்பேத்கராலும்தான் பார்ப்பனியத்தின் தோலுரிக்க முடிந்தது.

‘யார் ரவுடி?’கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார்,

உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது காந்தி, இந்துமதத்திற்குள் இஸ்லாமிய ஆதரவு நிலையை கடைப்பிடித்தார். இது பார்ப்பனர்களின் கோபத்தை தூண்டுவதாக இருந்தது. அதற்குதான் காந்திக்கு ‘செக்ட்ச்’ போட்டார்கள் பார்ப்பனர்கள்.

இதை தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், காந்தி கொலைவழக்கில் கைதாகி, கோர்ட்டை தன்னுடைய பிரச்சார மேடையாக பயன்படுத்திய கோட்சேவின் கோர்ட் பேச்சே சாட்சி.

“பிரிவினைக்கு பிறகு காந்தி பாகிஸ்தானுக்கு 50 கோடிரூபாய் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார். அதைக்கூட பொறுத்துக்கொண்டோம். ஆனால், இந்துக்கோயில்களில் பிரார்த்தனையின்போது, இஸ்லாமிய பாங்கு ஓசை ஒலிக்கச் செய்தார். அதை மன்னிக்கவே முடியாது. அதனால்தான் கொன்றேன்” என்றான் கோட்சே. இதை அவன் தெருவில் சொல்லவில்லை. தன்னை குற்றவாளியாக நிறுத்திய கோர்ட்டில் துணிச்சலோடு பேசிய பேச்சு.

சாந்த சொரூபிகளாக அப்பாவியாக காட்சி தருகிற பார்ப்பனர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கிட்டின் காரணமாக  உயர்கல்வியில், வேலை வாய்ப்புகளில் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆபத்து வரும்போதும், கோயில்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களால், பார்ப்பனர்களின் ‘புனித’த் தன்மைக்கு பாதிப்பு வரும்போது, கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்கள். பார்ப்பனியத்தின் ரவுடித்தனத்தை அப்போது நன்கு உணரலாம்.

ஒருத்தர் அந்த ஏரியாவுலேயே பெரிய ரவுடியா இருப்பாரு, அவர பாத்தாலே பார்ப்பனர்களில் இருந்து எல்லா ஜாதிமக்களும் பயந்து ஓடி ஒளிந்துகொள்வார்கள். அவரு எங்கவேணுன்னாலும் போவாரு, என்ன வேணுன்னாலும் கேக்கமலே எடுத்துப்பாரு, யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது. கேட்டா வெட்டுதான்.

எலலாத்துக்கும் துணிஞ்ச ரவுடியை கோயில் கர்ப்பகிரகத்திற்குள் நேராஉள்ளபோய், ரவுடித்தனத்தோடு இல்ல, பக்தியோடகூட சாமிய தொட்டு கும்பிட சொல்லுங்களேன் பாக்கலாம். அப்போதெரியும் உண்மையான ரவுடி யாருன்னு? அப்போ வெட்டு ரவுடிக்கு விழும். வெட்டுனது சாந்தசொரூபிகளான பார்ப்பனர்களாக இருப்பாங்க.

இந்தியாவின் மாபெரும் தலைவராக இருந்தார் காந்தி. அவர் அளவிற்கு  மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றத் தலைவர்கள் அவருக்கு முன்பும்  யாருமில்லை. பின்பும் யாருமில்லை. பிரிட்டிஷ் அதிகாரத்தின் உச்சியில் இருந்த மவுண்பேட்டன் போன்ற வெள்ளைக்காரன் கூட காந்தியை பார்த்தால், எழுந்து நின்னு கூம்பி்ட்டான். ஆனால்,  இந்த செல்வாக்கு எல்லாம், இந்துக் கோயிலுனுல் செல்லாது. அங்கே காந்தி கைகட்டி ஒரு முட்டாள் பார்ப்பான் முன்னால் நிக்கனும். அதைமீறி நடந்தால் சாகனும். அப்படித்தான் சாகடிக்கபட்டார் காந்தி.

இந்துக் கோயிலுனுள், இஸ்லாமிய பாங்கு ஒலிக்கச் செய்ததால், என்ன புனிதம் கெட்டுபோய்விட்டது? புனிதம் கெட்டுப்போய்விட்டது என்று தீர்மானிப்பதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது? காந்தியும் இந்துதான். அதுவும் இந்துமதத்தையும் ராமனையும் தன் கண்களாக கருதியவர்தான் காந்தி. அவருக்கு தெரியாத இந்துமதப் புனிதமா?

‘இஸ்லாமிய பாங்கு ஒலித்ததால் இந்துமத புனிதம் கெட்டுபோய் விடடது’ என்கிற உண்மையான இந்துவின் மத உணர்வில் இருந்துதான் காந்தியை பார்ப்பனர்கள் கொன்றார்களா? அப்படியானால், அதுஏன் பார்ப்பனர்களை தவிர மற்ற ஜாதி இந்துக்களுககு தவறாக தெரியவில்லை.?

சரி. அப்படியானால் இந்துக் கடவுள்களை போற்றி, சமஸ்கிருதத்தை தவிர தமிழ் போன்ற மற்ற மக்கள் மொழிகளில் அர்ச்சனை செய்ய ஏன் மறுக்கிறார்கள்?

சிவனை போற்றிபாடுகிற தேவாரம், திருவாசகத்தை கோயிலுனுள் பாடுவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? திருவாசகமும், தேவராமும் என்ன அரபு மொழியில் அல்லாவை பற்றிய பாடல்களா?

பார்ப்பன நலனேயே பிரதானமாக கொண்டதாக அல்லது பார்ப்பன ஆதரவாக இருந்தாலும் தேவாரத்தையும், திருவாசகத்தையும் கருவறை அர்ச்சனைபாடலாக பாட பார்ப்பனர்கள் ஏன் மறுக்கிறார்கள்? அவைகள் தமிழில் இருப்பதாலா?

உண்மையில் இந்துமதத்திற்கு புனிதம் என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால், ஜெயேந்திரன் கொலை செய்தபோதும், காமகளியாட்டத்தில் ஈடுபட்டபோதும், காஞ்சிபுரத்தில் ஒரு பார்ப்பனர் கோயில் கருவறையை, ‘கரு’ உண்டாக்கும் அறையாக மாற்றியபோதும் பார்ப்பனர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை? வீதியில் இறங்கி போராடவில்லை. இந்து மத புனிதத்தின்படியே ஒரு பார்ப்பனரல்லாதவர் கருவறைக்குள் நுழைவதைவிட புனிதக்கேடு இல்லையா இது? இல்லை அதுதான் உண்மையான புனிதமோ?

“பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான வேதமும் அதன் தொடர்ச்சியான இந்துமதமும் எந்த மாறுதலுக்கும் உள்ளாக்கப்பட முடியாதது. கூடாது” என்று பார்ப்பனர்கள் சொல்வது உண்மைதானா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் டாக்டர் அம்பேத்கரிடம்தான் போகவேண்டும்.  அவரிடம்தான் பார்ப்பனியத்தின், வேதங்களின், புராணங்களின், ஆகமங்களின், இதிகாசங்களின் மிக நுட்பமான மர்ம முடிச்சுகளை அவி்ழ்த்து அம்பலப்படுத்துவதற்கான ‘மந்திரம்’ இருக்கிறது.

பனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்!

பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்!

கோயில்களில், இந்து மதத்திற்குள் தங்களுக்கான ஆதிக்கத்திற்கு, லாபத்திற்கு ஆபத்து வருகிறது என்றால் பார்ப்பனர்கள் கொலைகூட செய்ய தயங்கமாட்டார்கள் என்பதைதான் காந்தி கொலை நிரூபித்திருக்கிறது.

தனக்கு இணையாக அல்லது தன்னை எதிர்த்து ஒரு பெரிய தலைவர் உருவாவதை காந்தி எப்போதும் விரும்பியதில்லை. அது கட்சிக்கு வெளியேயும் சரி, உள்ளேயும் சரி. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடிய பகத்சிங் போன்ற புரட்சியாளர்களிடம் மட்டுமல்ல, ஹிட்லர் போன்ற பாசிஸ்டுகளின் உதவியை நாடிய சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களிடமும் கூட எதிராக அல்லது அலட்சிமாகத்தான் நடந்துகொண்டார் காந்தி.  டாக்டர் அம்பேத்கருடனான அவரின் மோதல்களில், அவருடைய இந்து கண்ணோட்டம் மிக பெரிய அளவில் பங்காற்றினாலும், ‘தன்னை மீறி, தன்னை நேரடியாக எதிர்த்து ஒரு தலைவர் உருவாகக்கூடாது’ என்கிற காந்தியின் உளவியலும் சம பங்கில் வினையாற்றியிருக்கிறது.

அவர் என்ன நினைக்குறாரோ, அதைத்தான் மற்றவர்கள் செய்யவேண்டும். அல்லது தன்விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கக்கூடாது என்கிற சத்தியாகிரக சர்வாதிகாரியாகத்தான் காந்தி இந்திய அரசியலை நடத்தியிருக்கிறார். 1946 ல் இருந்து அவரின் செல்வாக்கு காங்கிரசுக்குள்ளேயே சரிய ஆரம்பித்தது. அவர் கட்சியில் இருந்த நேரு, பட்டேல் போன்றவர்களே அவர் பேச்சை உதாசீனப்படுத்தினார்கள். அவர் விருப்பத்திற்கு மாறாகவே அவரின் அரசியல் அவரை சுற்றி, சுற்றி சுழன்றது. தன் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக பல்வேறு கோமாளித்தனங்களை செய்தார் காந்தி.

பாகிஸ்தான் பிரிவினையின்போது அதை எதிர்த்தார். ஆனால் அவர் விருப்பத்திற்கு மாறாக நடந்தது. பிறகு பிரிந்த பாகிஸ்தானுக்கு 50 கோடி ரூபாய் தரவேண்டும் என்று வலியுறுத்தினார். அதை நிராகரித்தார் வல்லபாய் பட்டேல். இந்து-முஸ்லீம் கலவரம் கட்டுக்கடங்காமல் போனது. காந்தியை எதிர்த்த காங்கிரஸ் தலைமை பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கிறது என்பதாலயே அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாடு எடுத்தார். அதன் மூலமாக நேரு, வல்லபாய் படேல் போன்றவர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.

இஸ்லாமியர்களை விரோதிகளாக சித்தரித்த பார்ப்பனிய இந்து பயங்கரவாதிகளை எதிர்த்து செயல்படுவதல்ல காந்தியின் நோக்கம். அவரின் தன் முனைப்பு அரசியலின் விளைவாக அவரை அறியாமல் முளைத்த முற்போக்கு கிளை அது. பார்ப்பனிய பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கு சரியான செயல் திட்டம் இல்லாமல், இந்துக் கோயில்களில் இஸ்லாமிய பாங்கு ஒலிப்பது போன்ற கோமாளித்தனங்களை செய்தார். அதில் அவர் நோக்கம் இந்துமதத்தை அவமானப்படுத்தவேண்டும் என்பதல்ல.  இந்துமதத்தை அவமானப்படுத்தும், பலவீனப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மனம் அறிந்து செய்ததில்லை காந்தி.

‘தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்ல’ என்று டாக்டர் அம்பேத்கர் ஆதாரத்துடன் நிரூபித்தபோது, ‘ஹரிஜன்’ என்ற பச்சையான இந்து பெயர் வைத்து தாழ்த்தப்பட்ட மக்கள்தான் உண்மையான இந்துக்கள் என்று இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற ஒற்றைச் சொல்லாகவே ‘ஹரிஜன்’ இந்துச் சொல்லை அவர்கள் மீது திணித்து, மீண்டும் இந்துமதத்திற்குள் அடைத்தார். இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ‘ஹரிஜன்’ என்ற சொல் செல்வாக்கு செலுத்திய அளவிற்கு வேறு எந்த சொல்லும் செலுத்தவில்லை. ஜாதி இந்துக்களும் அந்தச் சொல்லையே தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பதற்கு பயன்படுத்தினர். பயன்படுத்துகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மதமாற்றத்தை தடுக்க பெரும் முயற்சி எடுத்த இந்து பார்ப்பன மற்றும் ஆரியசமாஜ்களால் செய்யமுடியாததை காந்தி என்கிற தனிமனிதர் செய்தார்.

“காந்தியிசம் என்பது இந்துயிசத்திற்கும் இந்துயிசத்தின் வறட்டு சூத்திரங்களுக்கும் ஒரு தத்துவ முறையிலான நியாயப்படுத்துதலே” என்பார் அண்ணல் அம்பேத்கர். அந்தக் காந்திதான் இந்துக் கோயில்களில் இஸ்லாமிய பாங்கு ஒலிக்கச் செய்தார். அந்தக் காந்தியைத் தான் இந்து பார்ப்பன பயங்கரவாதிகள் கொன்றனர்.

உண்மையில், இந்துக்கோயிலில் இஸ்லாமிய பாங்கு ஒலிப்பது இஸ்லாத்தை அவமானப்படுத்துகிற செயல். பாங்கு ஒலிப்பது என்பதே தொழுகைக்கு அழைப்பதுதான். இந்துக்கோயிலினுள் பாங்கு ஒலித்தால் முஸ்லிம்களை அங்குவந்து தொழுகை நடத்த அழைப்பது போன்றதுதான்.

‘உருவவழிபாடு, இறைவனுக்கு இணைவைப்பது இஸ்லாத்திற்கு எதிரானது’ என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. காந்தியின் இந்துக்கோயில் பாங்கு ஒலி, இஸ்லாத்திற்கு எதிரானதுதான். உண்மையில் தங்கள் மதநம்பிக்கைக்கு எதிரானது என்று முஸ்லீம்கள் தான் காந்திமீது வீரோதம் கொண்டிருக்கவேண்டும்.

இஸ்லாத்தை அவமானப்படுத்துவது காந்தியின் நோக்கம் அல்ல. பிரச்சினையை தீர்ப்பதற்கும், ‘இஸ்லாமியர்கள் இந்தியர்கள் தான்’ என்று காந்தி நிறுவுகிறார் என்று காந்தியை இஸ்லாமியர்கள் நம்பினார்கள். சாதாரண இந்து நம்பிக்கை கொண்ட மக்களும் காந்தியின் செயல் நம் மதத்திற்கு எதிரானது அல்ல என்று புரிந்துகொண்டார்கள். இந்து பார்ப்பன அறிவாளிகள் தான் இதை எதிராக நினைத்தார்கள். மதப் புனிதம் கெட்டுப்போய்விடுகிறது என்று பொய்சொன்னார்கள்.

உண்மையில் காந்தியின் கொலை இந்து மதப்புனிதத்திற்காக அல்ல. இந்துக்கோயில்களில் பார்ப்பனிய மேன்மையை காலப்போக்கில் காலி செய்துவிடும் என்பதால்தான். இயல்பாகவே பார்ப்பனர்களைத் தவிர மற்ற இந்துக்கள் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களான மசூதி, தர்கா போன்ற இடங்களில் அங்கு இருக்கும் இஸ்லாமிய மதப்பெரியவரிடம் மந்திரித்து தாயத்து கட்டிக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை ஒரு இந்து சாமியாரிடம் காட்டும் பக்தியோடும், நம்பிக்கையோடுமே நடந்து கொள்வார்கள்.

இதுபோன்ற மனநிலை கொண்ட ‘இந்து’ மக்களிடம், காந்தியின் ‘இந்துக்கோயில் பாங்கு ஒலி’  நடவடிக்கை பார்ப்பனிய மேன்மையை தகர்ப்பதாக தீவிர இந்து பார்ப்பனர்கள் உணர்ந்ததாலேதான், காந்தி கொலையை அவர்களின் பிரதிநிதியாக இருந்து கோட்சே செய்தான்.

“இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது.  இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.” என்று காந்தியை கொன்ற கோட்சே கோர்ட்டில் சொன்னான். இதுதான் இந்து பார்ப்பன மனது.

டாக்டர் அம்பேத்கர் சொல்வார்:

“ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான்.”

டாக்டர் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு சரி. காந்தி கொலையை பார்ப்பன கும்பல்தான் செய்தது என்று வரலாற்று சம்பவத்தை நாம் சொன்னால், உடனே நம்மீது பாய்ந்து புடுங்குகிற பார்ப்பனர்கள், காந்தி கொலையை, கோட்சேவை கண்டிப்பத்தில்லை. மாறாக நம்மைதான் கடும் வெறுப்புக் கொண்டு புடுங்குகிறார்கள். விட்டால் கோட்சேவை போல் கொலைகாரனாகவும் மாறுவார்கள்போல.

‘இந்து மதம் புனிதமானது. எந்த மாற்றமும் அதில் செய்யமுடியாதது. மசூதியில் பகவத்கீதையை பாடினால் சும்மா இருப்பாங்களா? காந்தியால் இந்துமதப் புனிதம் கெட்டுபோனது. அதனால்தான் கோட்சே கொன்றார்’ என்று வாதிடுகிறார்கள் பார்ப்பன அறிவாளிகள். அப்படியா? இந்து மதம் புனிதமானதா? எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாததா?

இந்தவாதம் பச்சை பொய் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

“பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து. பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது” என்கிறார்.

புத்தரின் எழுச்சியால் தோல்வியுற்ற பார்ப்பனர்கள், தங்களின் வேதக் கடவுள்களை கும்பிடுவதை கைவிட்டார்கள். புத்தரின் இயக்கத்தால் வேதக் கடவுள்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அற்று போனதே அதற்கு காரணம். அதனால்தான் தங்களால் உயர்வாக பேசப்பட்ட கடவுள்களை குறித்தே மிக கேவலமான கதைகளை அவர்களே பரப்பினார்கள். ‘பிரம்மா தன் மகளுடன் உறவு கொண்டார்’ என்றும் ‘இந்திரன் பெண் பித்தன். பிறர் மனைவியை அதுவும் மரியாதைக்குரிய ரிஷி பத்தினிகளோடு கள்ளஉறவு வைத்திருந்தான்’ என்றும் எழுதி தங்களின் கடவுளை கைவிடுதற்கான காரணத்தை உண்டாக்கினார்கள் என்ற உண்மையை டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தினார்.

“எங்கே இந்திரன், எங்கே வருணன், எங்கே பிரம்மா, எங்கே மித்ரன், வேதங்களில் கூறப்படும் இந்தக் கடவுளர்கள் எல்லோரும் எங்கே என்று அவர்களை (பிராமணர்களை) ஒருவர் கேட்கலாம். அவர்களெல்லாம் மறைந்து போனார்கள். அது ஏன்? இந்திரனையும் வருணைனையும் பிரம்மாவையும் வழிபடுவது லாபம் தருவதாக இல்லாமல் போனதே இதற்குக் காரணம். பிராமணர்கள் வேதக் கடவுளர்களைக் கைவிட்டது மட்டுமின்றி, சில இடங்களில் முஸ்லீம் பீர்களை வணங்குவோராகக் கூட மாறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக, மிக வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்ற ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம்.

பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில் பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டு தோறும் உர்ஸ விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.

அவர் முஸ்லீம் உடை அணிந்து, தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்.”

இந்து மதத்திற்கு புனிதம் என்று ஒன்று கிடையாது. அவர்கள் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள்.  மாறாது என்கிற வார்த்தையை தவிர மற்றவை மாறிப்போகும் என்கிற மார்க்கிய விஞ்ஞானத்திற்கு பொருத்தமாக ஏகப்பட்ட மாற்றங்களை இந்து மதம் செய்திருக்கிறது என்று டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

ஆக, இந்து மத புனிதத்திற்காக அல்ல காந்தி கொலை. பார்ப்பன மேலாதிக்கத்தை பாதுக்காப்பதற்கே.

காந்தியின் துரோகம் தெரியவேண்டும் என்றால், அம்பேத்கர், பகத்சிங் கண்களால் பார்க்க வேண்டும்.

பார்ப்பன பயங்கரவாதம் புரியவேணடு்ம் என்றால், காந்தியின் கொலையின் ஊடாக பார்க்க வேண்டும்.

காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்.

காந்தியை கொலைசெய்த பார்ப்பன பயங்கரவாதத்தை மன்னிக்கவும் மாட்டோம்.

வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறுத்தியதை கண்டித்தும்’ பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு.

மேடையில் பேசியசெய்திகளோடு, புதிய செய்திகளையும் சேர்த்து வெளி்யிட்டு இருக்கிறேன்.

14 thoughts on “காந்தி படுகொலையும் அப்பாவி பார்ப்பனஅகிம்சாமூர்த்திகளும்

 1. http://www.jeyamohan.in/?p=368

  பெரியார் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கருத்துக்களை இங்கே காணுங்கள். பழைய பதிவுதான்…..

 2. பாலா, ஒரு அரைகுறையின் உளறல்களை பார்க்க சொல்கிறீர்களே.. சரி பார்த்தாச்சு , விவாதிக்கலாமா ?

 3. அற்புதமான கட்டுரை.. இந்த எளியவன் நிறைய தெரிந்துக்கொண்டேன்..

 4. இந்த ஜெயமோகன் என்கிறவன் சுத்த களவானி பயல இருப்பான்போல….. என்ன எழுதியிருக்கான் ஒரு அடிப்படையே இல்லாம காழ்ப்புணர்ச்சியோட…. அத படிக்கச் சொல்லி பால பரிந்துரைக்கிறாரு…. பாலா, வாங்க அந்த கூறுகெட்டவன பத்தி விவாதிக்கலாம்…..

  பால மாதிரி பார்ப்பனர்களுக்கு பெரியாரை திட்டி எழுதுறதுதான் கண்ணுக்குத் தெரியிது…
  தலித் முரசில் அம்பேத்கர் பெரியார் பற்றி சிறப்பான கட்டுரையயை எஸ்.வி.ராஜதுரை எழுதியிருக்கிறார்அதை படியா பாலா…. அத களவானி பயலையும் படிக்கச் சொல்லு… நீ வா விவாதிக்கலாம்..

 5. பாலா என்ற பெயரில் பல பின்னூட்டங்கள் இடப்படுகின்றன என்பதை தெளிவுபட கூறிக் கொள்கிறேன்.

  நான் அக்கட்டுரையைப் படித்தேன். இங்கே விவாதத்திற்கு இட்டேன். அவர் நல்லவரா? இவர் நல்லவரா? என்பதை விவாதம் தான் தீர்மானிக்க வேண்டும்.

  எதையும் 360 கோணப் பார்வையில் விவாதிப்பது சாலச் சிறந்தது.

  தலித் முரசின் இணையமுகவரியைக் கொடுங்களேன், படிக்கிறேன்.

 6. பாலா
  ////நல்லவரா? இவர் நல்லவரா? என்பதை விவாதம் தான் தீர்மானிக்க வேண்டும்.///
  நீங்கள் நல்லவர் இல்லை என்பது மட்டும் தெளிவான ஒன்று. நீங்கள் ஜெயமோகனைவிட மோசமானவர். பாரதியை ஆதார்தோடு விமர்சித்தால், அதற்கு எதிர்வினையாக உங்களின் பார்ப்பன சாதி உணர்வை ஒன்றையே பின்னணியாக கொண்டு, மீண்டும் பாரப்பன சாதி வெறியன் பாரதியை ஆதரிக்கிறிர்கள்.

  ///எதையும் 360 கோணப் பார்வையில் விவாதிப்பது சாலச் சிறந்தது.///

  நீங்கள் 3600 கோணல் பார்வையில்தான் விவாதிப்பீர்கள். உங்களிடம் பார்ப்பன சாதி வெறியை தவிர வேறேதும் இல்லை.ஆகையால்தான், பாரதி பற்றிய ஆதாரத்தோடு வந்ததற்கு அவதூறாக விமர்சிக்கிறீர்கள்.

  பெரியாரைப் பற்றி அவதூறாக வந்ததற்கு ஆர்வத்தோடு எடுத்து இங்கே போடுகிறீர்கள். நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா?

 7. பாரதியார் மீது பற்றும் பெரியார் மீது வெறுப்பும் கொண்ட பார்ப்பனசாதி வெறியன் பாலா தயவு செய்து விவாதத்திற்கு வரவும். கழிசடை ஜெயமோகன் என்கிற பார்ப்பன தாசனின் பெரியார் அவதூறு குறித்து விவாதிப்போம்.

 8. நண்பர் வே. மதிமாறன்,
  வணக்கம்.

  உங்கள் கற்பனையும் எழுத்து திறமும் மிக அறுமை.
  படித்த உங்களுக்கு இந்திய மற்றும் ஹிந்து மத ஞானம் மிக அறுமை

  உங்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள மற்ற இன மக்கள் நீங்கள் தாழ்த்தப்பட்ட என்று கூறும் இன நண்பர் / சகோதர சகோதரிகளை,

  நீங்கள் சொல்லும் பிராமன இன மக்கள் மட்டும் தான் தழத்துகிறர்களா?

  உங்களக்கு கட்டயமாக தெரியும் வேறு எத்தனை இன மக்கள் அவர்களை தாழத்த முற்படுகிறார்கள் என்று. இருந்தாலும் நான் என்னால் முடிந்த சில நிகழ்வை தெறிவிக்க ஆசை. இது பற்றி தங்கள் கருத்தை அறிய ஆசை.

  1 . திருநெல்வேலி மற்றும் மதுரை பக்கம் அடிகடி நிகழும் தேவர், நாடார் மற்றும் நீங்கள் தாழ்த்தப்பட்ட என்று கூறும் இன நண்பர் / சகோதரர் சண்டை.

  2 . உளுந்தூர்பேட்டை அருகில் இறுக்கும் பாளையம் என்ற ஊரில் உள்ள Chruch தேர் பவனி நீங்கள் தாழ்த்தப்பட்ட என்று கூறும் இன நண்பர் / சகோதர தெரு வர விடாமல் நடந்த சண்டை

  உங்களுக்கு உலக ஞானம் இறுக்கும் என்று நினைக்கிறேன்.

  அமெரிக்காவில் சில பல ஆண்டு முன் கருப்பு இன மக்களை மாடு குதிரை போன்று பல் ஆட்டி பார்த்தபின் வாங்கிய வெள்ளைகாரர்கள் பற்றி ஏன் நீங்கள் பேசவில்லை.

  வெள்ளைகாரர்கள் பின்பற்றும் மதம் பற்றி ஏன் எழுதவில்லை?

  இஸ்லாம் மதத்தில் இறுக்கும் வேறுபாடுகள் மற்றும் அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் செய்தி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டிய செய்தி இல்லை.

  எனக்கு உலகில் உள்ள அணைத்து மதம் மீதும் நம்பிக்கை இருக்கிறது. நான் எந்த மத கோட்பாடுகளை தாழ்வாக பார்பதோ எழதுவதோ இல்லை.

  உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், மற்றவர்கள் நம்பிக்கை பற்றி எழுத யாருக்கும் உரிமை இல்லை.

  உலகில் உள்ள அணைத்து உயரினங்களும் தங்கள் கூட்டத்திலும் மற்ற உயரினகளைவிட தான் பெரியது என்று போராடுவதும் இயல்பு. இந்த இயல்பு இறுக்கக்கூடாது என்று எல்லா மத போதனைகளும் சொல்லுகின்றன.

  எடுத்துகாட்டாக எனக்கு ஏன் நண்பன் அனுப்பிய ஒரு SMS நினைவிற்கு வருகிறது

  மனித உடம்பில் இறுக்கும் ஒரு ஒரு அவயங்களும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று ஒரு சண்டை போட்டனவாம்.

  அப்போது மூளை சொன்னது, “நான் தான் எல்லா அவயங்களை இயக்குகின்றான் , எனவே நான் தான் பெரியவன்” என்றதாம்.

  உடனடியாக கைகள் சொன்னது, “நான் தான் எல்லா வேலையும் செய்கிறேன் ,எனவே நான் தான் பெரியவன்” என்றதாம்.

  உடனடியாக கால்கள் சொன்னது, “நான் தான் எல்லா இடத்திற்கும் நான் தான் அழைத்து செல்கிறேன் ,எனவே நான் தான் பெரியவன்” என்றதாம்.

  உடனடியாக வாய் சொன்னது, “நான் தான் எல்லாரிடமும் பேசுகிறேன், சாப்பாடு நான் தான் மென்று தருகிறேன், எனவே நான் தான் பெரியவன்” என்றதாம்.

  இப்படி வயிறு, சிறுகுடல், பெருகுடல் என எல்லா அவயங்களும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று ஒரு சண்டை போட்டனவாம்.

  இதனால் அந்த மனிதனுக்கு சற்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாம்.

  அப்போது, அசனவாய் சொன்னது “நான் தான் பெரியவன்” என்றதாம். கூடவே தான் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் இருந்ததாம்

  அசனவாய் வேலை செய்யாததால் மற்ற எல்லா அவயங்களும் ஆட்டம் கண்டணவம்.

  அப்போது எல்லா அவயங்களும் அசனவாய் தான் பெரியவன் என்று சொன்னதம்.

  இந்த கதை எப்படி இருக்கிறதோ அப்படி தான் உலகில் உள்ள அணைத்து மக்களும் தான் மற்றும் தன் இனம் பெரியது என்று பறைசாற்றுகிறது.

  இந்த கதை எப்படி நாம் எல்லா உடல் அவயங்களும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைகிறோமோ அதுபோல எல்லா மக்களும் தங்களுக்கு உள்ள வேற்றுமை அற்று ஒன்றாக இருக்கவேண்டும்.

  ஒற்றுமையாக இருக்க வேண்டிய நாம் வேற்றுமை வளரவிட கூடாது.

  நீங்கள் ஒரு உண்மையான முற்போக்கு சிந்தனைவாதி என்றால் எல்லா மதத்தில் இருக்கும் குறைகளை சொல்லுகள், முடிந்தால் எல்லா மதநண்பர்களும் செரிசெய்துகொள்ளட்டும்.

  மாற்றாக நம் முன்னால் முதல்வர் கருணாநிதி மற்றும் சோனியாகாந்தி போல இந்து மதத்தை குற்றம் சொல்லிவிட்டு, தேவாலையத்தில் அப்பமும் மசூதியில் கஞ்சியும் குடிக்கும் குருட்டு முற்போக்கு சிந்தனைவாதியாக இருக்காதீர்கள்

  இங்ஙனம்

  மணிமாறன் கருணாநிதி

 9. என்ன மதிமாறன், பதில் இல்லவே இல்லை? உங்கள் கூச்சல் வெறும் அரை கூச்சலு போல இறுக்கு?

Leave a Reply

%d bloggers like this: