It’s Spiritual

Quotes-by-Bhakti-Charu-Swami-on-Spiritual-Realization
‘உன்னையே நீ உணர்ந்திருக்கிறாயா.. நீ யார்?’
‘கொலைகாரன்’
‘அது மத்தவங்க உன்ன சொல்றது’
‘சட்டப்படி நீ யார்?’
’நிரபராதி’

ஆக மனதை ‘ஒரு’ நிலை படித்தினால்
எந்த நெருக்கடியிலும்
உண்மையை சொல்ல வேண்டிய
அவசியம் இருக்காது.
பொய்யின் மகத்துவத்தை
பரிபூரணமாக உணரலாம்.
கொலை செய்தாலும்
சட்டத்திலிருந்து தப்பிக்கலாம்.
அதுதான் ஆன்மீகத்தின் சூட்சமம்
சட்டத்தின் சூட்சமும் அதுவே.
அதுதான் உன்னையே நீ
அறிந்து கொள்வதின் நுட்பமும்.
That’s Spiritual life.

கந்தனோ – வடிவேலனோ – முருகனோ
சையத்தோ – சார்லஸோ..
பெயர்கள் தான் வேறு.. வேறு..
பணம் பொருள் ஒன்றுதான்..

மன்னிக்கவும்
பரம்பொருள் ஒன்றுதான்..

*

டிசம்பர் 4 ஆம் தேதி face book ல் எழுதியது

தொடர்புடையவை:

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

பிரேமானந்தாவுக்கு தண்டனை ஜெயேந்திரனுக்கு விடுதலை; இது கம்யுனிஸ்ட் கட்சி ஸ்டைல்..

5 thoughts on “It’s Spiritual

  1. உங்க விளக்கம் ..நடிகையுடன் சேர்ந்து’அவர் ‘ ஆன்மீக ஆராய்ச்சி செய்தது போலிருக்கே!

  2. //‘உன்னையே நீ உணர்ந்திருக்கிறாயா.. நீ யார்?’
    ‘கொலைகாரன்’
    ‘அது மத்தவங்க உன்ன சொல்றது’
    ‘சட்டப்படி நீ யார்?’
    ’நிரபராதி’//

    இதை படிச்சவுடனே அலுவலகத்தில் சத்தமாக சிரித்துவிட்டேன்.வடிவேல் அருஜுன் கிட்ட ஒருபடத்துல நான் யாருன்னு கேப்பாரு.அதுக்கு அர்ஜுன் “பொறம்போக்கு”ன்னு சொல்லுவாரு.அதுதான் நினைவு வந்தது

  3. Dear Mathimaran,

    அருமை.

    ஆனால்,

    //கந்தனோ – வடிவேலனோ – முருகனோ
    சையத்தோ – சார்லஸோ..//

    இதில் கடைசி இரண்டு பெயர்கள் அல்லாவோ – கிருத்துவோ என்று எழுதியிருந்தால் தான் சரி. ஆனால் நிலவரம் நீங்கள் அவ்வாறு எழுத அனுமதிக்கவல்லை. நிலவரம் உங்களை இந்த பின்னூட்டத்தைக் கூட அனுமதிக்க விடாது என்பது இன்னும் கொடுமை.

  4. அதுதான் பார்ப்பனியம் என்று அடிக்கடி சொல்வாரே அதைப்போல் இதுதான் பெரியாரியம் univerbuddy

  5. மதிமாறன் வாசகர்களுக்கு,

    4-5 முறை எனது பின்னூட்டங்கள் வெளியிடப்படவில்லை. ஆகையால் தான் //நிலவரம் உங்களை இந்த பின்னூட்டத்தைக் கூட அனுமதிக்க விடாது என்பது இன்னும் கொடுமை// என்று மேலே எழுதினேன்.

    மதிமாறன் அவர்களுக்கு,
    இம்முறை sensor இல்லாமலே செய்திருக்கிறீர்கள். நன்று.

    duraicool அவர்களுக்கு,

    சந்தடி சாக்கில் தந்தை பெரியார் அவர்களின் மீதி அவதூறு செய்திருக்கிறீர்கள். அவர் முகமதியத்தையும் முகமதியர்களையும் போதுமான அளவு விமர்சித்து இருக்கிறார்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading