கூந்தல் மற்றும் கொண்டை போடுகிற பெண்கள் ஹெல்மெட் அணிவது பிரச்சினையாக இருக்கிறதாம். மகிழ்ச்சி.
அப்படியாவது கூந்தலிலிருந்து கிராப்புக்கு மாறட்டும்.
1930 களிலேயே பெரியார், ‘பெண்கள் கிராப் வெட்டிக் கொள்ளுங்கள்’ என்றார். அப்படி வெட்டிக் கொள்கிற பெண்களுக்கு ரூ.500 தருவதாகவும் அறிவித்தார்.
அவரின் அறிவிப்பை மிகத் தீவிரமாகப் பெரியார் கருத்துக்களைப் பேசுகிற பெண்களே இன்றுவரை கடைப்பிடிக்காதபோது, மற்ற பெண்களிடம் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்?
எப்படியோ அன்று பெரியார் சொன்னது இன்று ‘ஹெல்மெட்’ சட்டம் மூலமாக, மாற்றத்திற்குள்ளானால் மகிழ்ச்சிதான்.
2 July
பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு
