பெரியார் அடுத்தத் தலைமுறைகளுக்குப் பாய்ச்சலுடன் செல்வார்
31-03-2015 அன்று புதுவைப் பல்கலைக் கழகத்தில் அய்யா பேராசிரியர் அருளியார் தலைமையில் நான் சிறப்புரை. அருகில் டாக்டர் இளமதி சானகி ராமன், நோக்கவுரை நிகழ்த்திய டாக்டர் அரங்க. நலங்கிள்ளி – பேராசிரியர்.
அய்யா அருளியார்; ஆய்வாளர், தமிழறிஞர், பேச்சாளர் என்று பன்முகத் தன்மைக் கொண்டவர். அவர் என் பேச்சை மிக உன்னிப்பாக முழுமையாகக் கேட்டு என்னைப் பாராட்டியது, அய்யா என்னை வாழ்த்தி, அங்கீகரித்த்தாகவே எடுத்துக் கொண்டேன். அய்யாவிற்கு நன்றி.
பல்கலைக் கழகத்தில் பெரியார் பற்றிய இந் நிகழ்ச்சி சிறப்பாகத் துணிச்சலோடு நடந்ததற்கும் நான் விரிவாக 2 மணி நேரம் பேசியதற்கும் அய்யா முனைவர் அரங்க. நலங்கிள்ளியே காரணம். அய்யாவைப் போன்ற உறுதியான கொள்கையாளர்கள் இருக்கும் வரை பெரியார் அடுத்தத் தலைமுறைகளுக்குப் பாய்ச்சலுடன் செல்வார். நன்றி.
பெரியாரை பேசப் பேச ஆர்பரித்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் மாணவர்கள் அதிலும் மிக அதிகமாகப் பெண்கள்.
//பெரியாரை பேசப் பேச ஆர்பரித்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் மாணவர்கள் அதிலும் மிக அதிகமாகப் பெண்கள்.//- Encouraging!! Pls keep going…
புதுவைக்கு வந்தீர்கள் என்னால் வரமுடியாத சூழ்நிலை
பெரியார் இயற்கை மகிழ்வான வாழ்வு, மற்றவை செயற்கை,பயம் ,எதிர்பார்ப்பு ,ஏமாற்று,ஏமாற்றம் .