‘செத்தாண்டா சேகரு….’ – ராஜபக்சே வருகை
‘மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ராஜபக்சேவிற்கு அழைப்பு’
வாய்யா.. வா.. என் தலைவர் வைகோ விடம் நீ வசமா மாட்டப் போற.. எப்படி இலங்கை திரும்புற பாத்துடுறோம். போன முறை மத்திய பிரதேசம் வரை உன்னை விரட்டிக் கிட்டு வந்தார் என் தலைவன். அப்ப நீ தப்பிச்சிட்டே.. இப்ப முடியாது.
ஏன்னா… மத்திய மந்திரியா மேடையிலேயே தலைவன்… இருக்கும்போது உன்ன தப்ப விடுவாரா..? தலைவனை மீறி அப்படியே நீ தப்ப முயற்சி பண்ணாலும், எங்க சின்ன அய்யா அன்புமணியின் உடும்பு பிடியிலிருந்து உன்னய கடவுளாலகூட காப்பாத்த முடியாது.
“சரியான ஆம்பளயா இருந்தா எங்க ஏரியாவுக்கு வாயா..”
21 இரவு facebook ல் எழுதியது.
இந்திய உளவுத்துறையின் செயல்பாடு உண்மையில் சரியில்லை. விடுதலைப் புலி ஆதரவாளர்களான தமிழ் நாட்டு கோபக்காரத் தலைவர்களைப் பற்றி சரியா மதிப்பீடு செய்யாமல் ஏனோ தானோ என்று அறிக்கை கொடுத்திருப்பார்கள் போலும். அதான் ராஜபக்சேவிற்கு அழைப்பு.
எங்க வி.பு. ஆதரவுத் தலைவர்களைப் பற்றி,
‘அவர்கள் அந்த அளவுக்கு ஒர்த்தில்ல.. ஏதோ எதுகை மோனைக்கு எடுப்பா இருக்குமேன்னு பேசிகிட்டு இருக்காய்ங்க..’ என்று உளவுத்துறை, மோடிக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கும் போல..
வம்ப வீணா விலை கொடுத்து வாங்குது மோடி அரசு. பெரிய பிரச்சினை ஆகப்போகுது.
யாருக்கு? யாருக்கோ.
*
‘ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அம்மா ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக அமைதியா இருக்கேன். இல்லன்னா… டெல்லிக்கு வர ராஜபக்சேவை களமாடி கந்தல் பண்ணிடுவேன்.’
*
பதவி ஏற்பை வந்து பார்க்குமாறு, இந்திய ராஜபக்சே இலங்கை மோடி யை அழைத்திருக்கிறார் இதில் என்ன ஆச்சர்யம்?
*
இன்று காலை facebook ல் எழுதியது.
ஐயா, நலமா, நீங்கங்கள் எழுதுவதை அவப்போது படிப்பேன், முடிந்தால் தொடர்பு கொள்ளவும்
அன்புடன்
வடிவேல்
9841472909