Site icon வே. மதிமாறன்

முதலீடு மட்டும் அந்நியமல்ல, அரசே அந்நியம்

அந்நிய முதலீடு nokia வால் ஆயிரக்கணக்காண தொழிலாளர்கள் தெருவில் நிற்கிறார்கள். இன்னொரு அந்நிய முதலீடு hyundai மூட்ட முடிச்சு கட்டிக்கிட்டு இருப்பதாகத் தகவல்.

மண்ணின் மைந்தர்களான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாய நிலங்களில் கம்பெனி நடத்துகிற அந்நிய நிறுனங்கள் லாபம் சம்பாதிக்கிறார்கள்.
முதலீடு மட்டும் அந்நியமல்ல, அரசே அந்நிய அரசாகத்தான் இருக்கிறது.

அரசை விட அந்நிய நிறுவனங்கள் சிறப்பாகத் தொழில் நடத்துமென்றால்,
அரசாங்கத்தையே அந்நிய முதலீட்டாளர்களிடம் ஒப்படைத்து விட வேண்டியது தானே..?

9 September at 13:53

பூந்தமல்லியைத் தாண்டி இருங்காடுக்கோட்டையிலிருந்து ‘அந்நிய முதலீடு’ hyundai கம்பெனியில் துவங்குகிறது. ஸ்ரீபெரும்பந்தூர் வழியாகச் சுங்குவார் சத்திரம் வரை nokia , saint gobain என்று சாலையெங்கும் நிரம்பி வழிகிறது அந்நிய முதலீடு.

எந்த இந்திய தொழிலாளர் சட்டங்களும் அங்குச் செல்லுபடி ஆகாது. பல விபத்துகளில் தொழிலாளர்கள் இறந்திருக்கிறார்கள். கேட்க நாதியில்லை. காரணமே இல்லாமல் பல தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். யார் கேட்டது?

‘வெளிநாட்டு கம்பெனி வருவதால் நம்ம ஊரு சிங்கப்பூர் மாதிரி மாறிடும்’ விவசாயிகள் ‘நல்ல விலை’ என்று நிலங்களை விற்றுவிட்டு செய்வதறியாது விழிக்கிறார்கள்.

இதோ nokia ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களை விவசாயக் கூலிகளாக போவதற்குக்கூட வழியில்லாமல் செய்திருக்கிறது.
‘நாங்க தான் வெளிநாட்டு கம்பெனியை கொண்டு வந்தோம்’ என்று மாறி மாறி மார் தட்டியது திமுகவும், அதிமுகவும்.
அப்படியானால், தெருவில் நிற்கும் தமிழர் நிலைக்கு நீங்கள் தானே காரணம்.
இருந்தும் குற்ற உணர்வே இல்லாமல் எப்படி மீண்டும் அந்நிய முதலீடு? கூச்சமே இல்லாமல் குடுமிபிடி சண்டை?
*
அந்நிய முதலீடு நாடகமாகவே முடிந்தால் மகிழ்ச்சி. தப்பிப்
பார்கள் தமிழர்கள்.

10 September

பட்டாசு: வெடித்து சிதறும் தொழிலாளர்கள்

Exit mobile version