Site icon வே. மதிமாறன்

‘நம்புங்கள் ஆனால், நமபி வீடாதீர்கள்’

13131118_1199310473412643_8235057817677923419_o
இரண்டு திருமணம் செய்து கொண்டும் குழந்தையே பெற்றுக் கொள்ள விரும்பாமல், தன் மனைவிகளை குடும்பத்தார், ஊரார் ‘மலடி’ என்று இழிவுப்படுத்தவும் அனுமதிக்காமல், வாரிசு அரசியலுக்கு வாய்ப்பே இல்லாமல் வாழ்ந்த முற்போக்காளன் முருகனின் முன்.

தோழர். ராஜாராம். சிங்கப்பூரியன். இவரின் தாயாரே சிங்கப்பூரில் பிறந்தவர்.
21 ஆம் தேதி, மாலை சிங்கப்பூர் விமான நிலையத்தில் என்னை நண்பர்களுடன் வரவேற்றார். அன்றிலிருந்து எங்குச் சென்றாலும் அவர் காரிலேயே எங்களை அழைத்துச்சென்றார். 30 தேதி வரை வேலைக்கு விடுமுறை எடுத்து என்னுடனே பயணித்தார். வீட்டுக்கும் கூட ஒரு வாரம் போகாமல் இருந்தார்.

சிங்பூரிலிருந்து மலேசியாவிற்கு இவர் தலைமையில் தான் சென்றோம். அவர் உடன் இருந்தது மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருந்தது.

எனக்கும் அவருக்குமான அரசியல் உறவு அவ்வளவு பொருத்தம். திரு. சிவபாலன் அவர்கள் தலைவராகவும் தோழர். ராஜாராம் துணைத் தலைவராகவும் இருக்கும் திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் 23 காலை ‘திருவள்ளுவரும் சோசலிசமும்’ என்ற தலைப்பில் என் சிறப்புரையோடு கருத்தரங்கம் நடந்தது.

இதுவரை நான் பேசாத புதிய தலைப்பு. வள்ளுவரைப் பற்றி என் பேச்சின் மூலமாக நானே நிறையத் தெரிந்து கொண்டேன்.
‘நான் சரியா பேசுவேன்’ என்று தோழர் ராஜாராம் சொன்னதை நம்பி என்னை அதற்கு முன் அறியாத அய்யா சிவபாலன் அதை ஏற்றுக் கொண்டு சிறப்பாக நடத்தி முடித்தார். என்னையும் சிறப்பாக உபசரித்தார்.

மலேசிய ஜோகுரில் நடந்த கருத்தரங்கமும் தோழர் ராஜாராம் மூலம் அமைந்ததே. நன்றி தோழர் ராஜராம்.
*
துவக்கத்தில் முருகனின் முற்போக்கு அம்சத்தை குறிப்படக் காரணம், குடும்பத்திற்கே வாரிசு வேண்டாம் என்று நினைத்தவன் எப்படி முப்பாட்டனாக இருக்க முடியும்?
ஆகையால், முருகன் பேரைச் சொல்லிக் கொண்டு பேராண்டிகளாகச் சுற்றித் திரிபவர்களை நம்ப வேண்டாம்.

Exit mobile version