விஸ்வரூபம்; தமிழக அரசின் தடையை ஆதரிப்போம்!
நேற்றும் – இன்றும் facebook ல் எழுதியது
சற்று முன்பு (30-1-2013) கேரளாவிலிருந்து விஸ்வரூபம் படத்தைப் பார்த்து விட்டு தோழர் தவமுதல்வன், தோழர் சண்முகநாதன் இருவரும் பேசினார்கள்.
தோழர் தவமுதல்வன் தேயிலைத் தோட்ட தொழிலாளர் பிரச்சினைக் குறித்து, ‘பச்சை ரத்தம்’ என்கிற சிறந்த ஆவணப் படத்தை எடுத்தவர். தோழர் சண்முகநாதன் புதிய தமிழ் படம் இயக்க இருக்கிறார்.
‘விஸ்வரூபம் நீங்கள் எழுதியதைப் போலவே அமெரிக்க சார்பு கொண்ட பார்ப்பன இந்து கண்ணோட்டத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்ல இதுவரை சினிமாவில் இவ்வளவு இழிவாக இஸ்லாமியர்களை சித்தரித்து படம் வரவில்லை. மிக மிக ஆபத்தான படம்.
இந்தப் படத்தை எந்த பெயரில் தடை செய்தாலும் அதை நாம் வரவேற்க வேண்டும்,’ என்றார்கள்.
இது குறித்து தோழர் தவமுதல்வன் விரிவாக எழுதுவதாகவும் குறிப்பிட்டார்.
-ஜனவரி 30ஆம் தேதி எழுதியது
***
ஜெயேந்திரன் கொலை செய்தார் என்பதற்காக ஜெயலலிதா கைது செய்தார்.
’இல்லை ஜெயலலிதாவிற்கும் ஜெயேந்திரருக்கும் தனிப்பட்ட முறையில் தகராறு அதனால் அவரை கைது செய்து பழித் தீர்க்கிறார்’ என்றார் நடுநிலையாளர்கள் .
ஆனால் ஜெயேந்திரன் கொலை செய்தது உண்மை. அவர் என்ன காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்ற விவாதங்கள் எனக்கு தேவையற்றது. அவரை கைது செய்ததை நான் வரவேற்றேன். ஆதரித்தேன்.
அதுபோல் விஸ்வரூபத்தை அதிமுக அரசு தடை செய்திருக்கிறது. அந்தப் படம் அமெரிக்க சார்பு கொண்ட இந்து பார்ப்பன கண்ணோட்டதோடு மிக தீவிரமான இஸ்லாமியர் மீதான வெறுப்பை உமிழ்ந்திருக்கிறது.
அதிமுக அரசு என்ன காரணங்களுக்காக விஸ்வரூபத்தை தடை செய்தார்களோ அதற்கான காரணம் எனக்கு தேவையற்றது.
அமெரிக்க உளவுத்துறையின் கையாளைப் போல் ‘விஸ்வரூபம்’ இங்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை அணி சேர்க்கும் வேலையை செய்கிறது.
ஜெயேந்திரன் கைதானபோது, அதை எப்படி நாம் வரவேற்றோமோ அதுபோல் இந்தத் தடையையும் நாம் வரவேற்க வேண்டும்.
ஆனால், இஸ்லாமியர்கள் மத சார்பற்றவர்களோடு இணைந்து அவர்களை முன்னிலைப்படுத்தி உணர்ச்சி வசப்படாமல், ஊடகங்களின் இந்துக் கண்ணோட்டத்திற்கு பலியாகாமல் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.
-ஜனவரி 30ஆம் தேதி எழுதியது
***
Raj Jebaஎன்பவரின் கேள்வியும் நான் எழுதிய பதிலும்
Raj Jeba: மதிமாறன், ஒரு சிறு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். ஜெயேந்திரனை கைது செய்த போது ‘இந்துக்கள்’ மனதில் ஏற்பட்ட விளைவும், ‘விசுவரூபம்’ தடையால் ‘இந்துக்கள்’ மனதில் இன்று ஏற்பட்டிருக்கும் விளைவும் ஒன்றா? பிரச்சனைகளை புறவயமாக பார்ப்பது தானே மார்க்சிய அணுகுமுறை. எனவே பரீசலனையுடன் ஒரு பதிலை தாருங்கள்.
வே மதிமாறன்: விஸ்வரூபத்தை அரசு தடை செய்யாமல் இருந்து, இஸ்லாமியர்களின் எதிர்ப்பு மட்டும் தீவிரமாக இருந்திருந்தால், பிரச்சினை இந்நேரம் மதக் கலவரமாக வடிவம் பெற்றிருக்கும்.
விஸ்வரூபம் தடை விவகாரத்தில் அரசின் பங்களிப்பு முக்கியமாக இருந்த போதும் ஊடகங்கள் இஸ்லாமியர்களையே குறிவைத்து தாக்கின என்பதையும் கவனிக்க வேண்டும். ஊடகங்களின் ஆதரவு தனக்கு நெகிழ்ச்சியளிப்பதாகவும் அவைகளுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார் கமல்.
‘விஸ்வரூபத்திற்கு பாதுகாப்பு’ என, இந்து சார்பு கொண்ட அரசும், காவல் துறையும் இறங்கி இருந்தால், இந்நேரம் துப்பாக்கிச்சூடு.. என்று கோதாவில் இறங்கி.. விளையாடியிருக்கும்.
மாறாக, அரசின் தற்காலிக தடையே அதை தடுத்தது.
பல பார்ப்பன அறிவாளிகளும், இந்து அமைப்புகளும் ஜெயலிலிதா அரசின் நடவடிக்கை என்பதினாலேயே அமைதிக்காக்கிறா்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஜனவரி 31ஆம் தேதி எழுதியது
தொடர்புடையவை:
விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்
padam nandraaka ullathu islaamiyarkalukku ethiraay ondrum illai. islaamiyarkal kobappada ondrum illai vendumenil theeviravaathikalukku kobam varlaam – pinaraay vijayan.. kerala markisat thalaivar
பல பார்ப்பன அறிவாளிகளும், இந்து அமைப்புகளும் ஜெயலிலிதா அரசின் நடவடிக்கை என்பதினாலேயே அமைதிக்காக்கிறா்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.////
சோ விஸ்வரூபத்திற்கான தடையை ஆதரிக்கிறார்.. மதிமாறனும் ஆதரிக்கிறார்..
ஏன், சோவின் தடை ஆதரவை மதிமாறன் மறைக்க வேண்டும்?
தமிழக அரசின் தடையென்பது மதக் கலவரம் மூண்டுவிடுமோ,
என்ற அச்சம் அல்ல, இதைப் பயன் படுத்தி எப்படியும் 10,
கோடியாவது கறந்து விடலாம் என்ற வியாபாரப்புத்தியே!
thangalin muganul mugavari tharumaaru katukolkindran