இது விஸ்வரூபம் விமர்சனம் கிடையாது…
இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து.. இன்றுவரை facebook ல்எழுதியது
*
இந்திய சினிமாவில் இதுவரை இந்து, கிறித்துவ இயக்குநர்கள், நாயகர்கள்; இந்திய முஸ்லிம்களிடமிருந்து, இந்தியாவை ‘பாதுகாத்தார்கள்’. தேசபக்தர்களாக விரைத்து நின்றார்கள்.
இம்முறை ஆப்கானிஸ்தான் ‘முஸ்லிம்’ தீவிரவாதிகளிடமிருந்து அமெரிக்காவை பாதுகாத்திருக்கிறார் ஒரு இந்து பார்ப்பனர், சுன்னத் செய்து கொண்டு.
இந்தியர், சர்வதேச ‘இஸ்லாமிய’த் தீவிரவாதிகளிடமிருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காக புறப்பட்டதின் அவசியம் என்ன?
அப்படி அமெரிக்காவை பாதுக்காத்து படம் எடுத்தவர், அதை இந்திய மொழிகளில் எடுக்க வேண்டி மர்மம் என்ன?
ஆங்கிலத்தில் எடுத்து, ஹாலிவுட்டையே கலக்கிருக்க வேண்டிய உலக நாயகன்…
-பிப்ரவரி 3ஆம் தேதி எழுதியது
**
ஆப்கானிஸ்தான் ‘இஸ்லாமிய’ தீவிரவாதிகள், தன்நாட்டில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தூரம் இருக்கும் அமெரிக்கா மீது மட்டும் கொலைவெறியோடு இருப்பது ஏன்?
தன் நாட்டுக்கு அருகில் இருக்கிற இந்தியா மீதோ, சீனா மீதோ, ஆப்பிரிக்க நாடுகள் மீதோ இல்லாத கோபம்…
இன்னும் சரியாக சொல்ல வேணடும் என்றால் ஆப்கானிஸ்தானிற்குள் ராணுவத்தை நிறுத்தி வைத்திருந்த ரஷ்யா மீதுகூட இல்லாத கோபம்..
அமெரிக்கா மீது வரக் காரணம் என்ன?
விஸ்வரூப பார்ப்பன ‘பாய்’ விடை சொல்கிறாரா..?
பார்த்தவர்கள் சொல்லுங்களேன்..
-பிப்ரவரி 3ஆம் தேதி எழுதியது
**
பொதுவாக பெரும்பாலான ஜாதி உணர்வு கொண்ட ஆச்சாரத்தை தீவிரமாக கடைப்பிடிக்கிற பார்பனர்களிலிருந்து, ‘அதுபோன்ற ஜாதி உணர்வெல்லாம் எனக்கு கிடையாது.’ என்று அரசியலில் தீவிரமாக புழங்குகிற பார்ப்பனர்கள் இன்னும் கருத்து சுதந்திர பார்ப்பனர்கள் வரை,
அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மீதும் காழ்ப்புணர்ச்சியும்..
அமெரிக்கா மற்றும் அயோரப்பிய நாடுகள் மீது காதலுமாக இருக்கிறார்கள்…
அதுபோன்ற கண்ணோட்டம் உலக நாயகனிடமும் இருக்கிறது…
-பிப்ரவரி 4ஆம் தேதி எழுதியது
**
இரண்டு நாட்களுக்கு முன்…
///வீடு இருக்கா? இல்ல கடன் கொடுத்தவன் கைப்பற்றி விட்டானா?
‘இன்னைக்கே கூட அது நடக்கலாம்….’ என்று சொல்லி நாலு நாளாச்சி…
பாவம் எங்க தங்கியிருக்காரோ, என்ன சாப்பிடுறாரோ..?
பயணம் பஸ்சா? ரயிலா? இல்ல நடந்தா..?
ச்சே.. எப்படியெல்லாம் வாழ்ந்த ஒரு மனுசன்..? நினைக்கவே…
எப்படி இருந்த அவரு இப்படி ஆயிட்டாரு.?///
என்று நான் எழுதியதை பல நண்பர்கள் நான் கமல் பற்றிதான் எழுதினேன் என்று புரிந்து கொண்டார்கள்.
உண்மையில் எங்கள் நண்பர் ஒருவர் தனது வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால்… தலைமறைவாகிவிட்டார். அவர் பற்றிதான் எழுதினேன்.
கமல் பற்றிய கவலை எனக்கில்லை.. ஏன் என்றால்….
‘கை வண்டி இழுத்தாவது கமலுக்கு கஞ்சி ஊத்த பல ‘ஞாநி’ கள் இருக்கும்போது நான் எதுக்குங்க அவரை பத்தி…?
-பிப்ரவரி 4ஆம் தேதி எழுதியது
தொடர்புடையவை:
விஸ்வரூபம்; தமிழக அரசின் தடையை ஆதரிப்போம்!
விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்
உலக நாயகன் ஹாலிவுட் இல் வலது கால் வைக்க கோலிவுட் உக்கு போட்ட வாய்க்கரிசி விஸ்வரூபம் !!!
THE REASON IS SIMPLE.
WHY SOME PEOPLE ARE SUPPORTING PAKISTAN AND OTHER MIDDLE EAST COUNTRIES, EVENTHOUGH, AT ANY CONDITION, THEY ARE NOT SUPPORTING / FAVOURING INDIA.
WHY SOME PEOPLE ARE FAVOURING ONE RELIGION AND DEGRADING ANOTHER?
EACH GROUP MAY BE HAVING SELFISH REASONS.
கமல் பற்றிய கவலை எனக்கில்லை.. ஏன் என்றால்….
‘கை வண்டி இழுத்தாவது கமலுக்கு கஞ்சி ஊத்த பல ‘ஞாநி’ கள் இருக்கும்போது நான் எதுக்குங்க அவரை பத்தி…?
இங்கே….இங்கே….இங்கய தான்……நீங்க ….சூப்பர்
@GOPALASAMY
//WHY SOME PEOPLE ARE SUPPORTING PAKISTAN AND OTHER MIDDLE EAST COUNTRIES,//
அதே, அதே.. கர்நாடகா மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை பாகிஸ்தான் விசுவாசத்தால் (?!) ஏற்றிய தீவிரவாத அமைப்பான ஸ்ரீராம சேனாகாரர்களை விடவும் அதிகமா யாராலாவது பாகிஸ்தானுக்கு சப்போட்டு பண்ண முடியுமா? அவ்வளவு பாசத்த பாகிஸ்தான்மேல வச்சுட்டு ஏன் இங்க இருந்து அவுங்க கஷ்டப்படனும், மொதல்ல அவுகள போகச்சொல்லுங்க, திரு.கோபாலசாமி.
Muttaal mathi.. Padathil americavin thaakudhale mudhalil sollapattu irukiradhu.thavira oru ooraie alzitha americavai palzhi vaangathaan oruvan manidhavedigundaaga maarugiraan.idhu kooda theraamal ennayaa padam paartheer.