இசை என்னும் பேரறிவை பேரன்பாக மாற்றித் தந்தவர். ஒரே பாடலை எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் புதுசு புதுசாக இனிமை சேர்க்கிறார். மெல்லிசை மன்னருக்குதான் நம்மீது எவ்வளவு கருணை.
21 October 2016
கண்ணதாசன், சந்திரபாபு இவர்களுடன் மெல்லிசை மன்னரின் நட்பும் அவரின் இசை சிறப்பும் குறித்த என்னுடைய பேட்டி புதுயுகம் தொலைக்காட்சியில், பதிவு செய்யப்பட்டப் பிறகு ஒளிபரப்பானது. ‘நான் பேசியதில் எந்த இடம் எடிட் செய்யப்பட்டது’ என்று என்னாலேயே கண்டுபிடிக்க முடியாத அளவிற்குச் சிறப்பாகத் தொகுக்கபட்டிருந்தது. நன்றி புதுயுகம் பிரபு.
‘இனியவை இன்று’ என்ற நிகழ்ச்சிகளிலிருந்து என்னுடையதை மட்டும் தொகுத்து youtube ல் வெளியிட்ட தோழர் Ashok Kumar க்கும் நன்றி.
இது ஒளிபரப்பாவதற்கு முதல்நாள் ஆகஸ்ட் 1 தேதி, வேறு தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில், தோழர் கவிதா முரளிதரனுடன் கலந்து கொண்டேன். அவர் இந்தியா டுடேவின் ஆசிரியராக இருந்தபோது, அந்த இதழில் வெளியான பெருமாள் முருகன் விவகாரத்தையொட்டி அசோகமித்ரன், வாசந்தி கட்டுரைகளை வெளியிட்டமையைக் கண்டித்து நான் எழுதியதற்குப் பிறகு அப்போதுதான் அவரைச் சந்தித்தேன்.
என் எழுத்தை தனிமனித விமர்சனமாக பார்க்காமல், என்னோடு தோழமையாகப் பேசியதும், தோழர்.ஞாநி நடத்திய மெல்லிசை மன்னர் நினைவலைகள் கூட்டத்தில் நான் நன்றாகப் பேசியதாக நண்பர்கள் சொன்னதாகக் குறிப்பிட்டும் சொன்னார். ‘நாளை புதுயுகத்தில் மெல்லிசை மன்னர் குறித்த என் நிகழ்ச்சி வருகிறது பாருங்கள்’ என்றேன். அதைப் பார்த்துத் தனிப் பதிவாகத் தன் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவரின் நான்கு வரி பாராட்டு, என்னை அதிக மகிழ்ச்சியடைச் செய்தது.
ஆகஸ் 2 அன்று அவர் எழுதிய அந்த வரிகளோடு, இந்த இணைப்பை பகிர்கிறேன்:
‘நேற்று நிகழ்ச்சியைப் பார்க்கும்படி Mathimaran சொன்ன போது கூட அது இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. இன்று காலை புதுயுகத்தில் ஒரு மணி நேரம் அவ்வளவு விறுவிறுப்பாக எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றியும் தொடர்புடைய திரைப்பிரபலங்கள் பற்றியும் நம்மில் பலருக்கு தெரியாத விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மதிமாறனின் இசை அறிவும் உழைப்பும் பிரமிப்பிற்குரியது. மிக உற்சாகமான காலைப்பொழுது..’ – நன்றி தோழர்.கவிதா
21 October 2015
