மெல்லிசை மன்னருக்குதான் நம்மீது எவ்வளவு கருணை
இசை என்னும் பேரறிவை பேரன்பாக மாற்றித் தந்தவர். ஒரே பாடலை எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் புதுசு புதுசாக இனிமை சேர்க்கிறார். மெல்லிசை மன்னருக்குதான் நம்மீது எவ்வளவு கருணை.
21 October 2016
கண்ணதாசன், சந்திரபாபு இவர்களுடன் மெல்லிசை மன்னரின் நட்பும் அவரின் இசை சிறப்பும் குறித்த என்னுடைய பேட்டி புதுயுகம் தொலைக்காட்சியில், பதிவு செய்யப்பட்டப் பிறகு ஒளிபரப்பானது. ‘நான் பேசியதில் எந்த இடம் எடிட் செய்யப்பட்டது’ என்று என்னாலேயே கண்டுபிடிக்க முடியாத அளவிற்குச் சிறப்பாகத் தொகுக்கபட்டிருந்தது. நன்றி புதுயுகம் பிரபு.
‘இனியவை இன்று’ என்ற நிகழ்ச்சிகளிலிருந்து என்னுடையதை மட்டும் தொகுத்து youtube ல் வெளியிட்ட தோழர் Ashok Kumar க்கும் நன்றி.
இது ஒளிபரப்பாவதற்கு முதல்நாள் ஆகஸ்ட் 1 தேதி, வேறு தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில், தோழர் கவிதா முரளிதரனுடன் கலந்து கொண்டேன். அவர் இந்தியா டுடேவின் ஆசிரியராக இருந்தபோது, அந்த இதழில் வெளியான பெருமாள் முருகன் விவகாரத்தையொட்டி அசோகமித்ரன், வாசந்தி கட்டுரைகளை வெளியிட்டமையைக் கண்டித்து நான் எழுதியதற்குப் பிறகு அப்போதுதான் அவரைச் சந்தித்தேன்.
என் எழுத்தை தனிமனித விமர்சனமாக பார்க்காமல், என்னோடு தோழமையாகப் பேசியதும், தோழர்.ஞாநி நடத்திய மெல்லிசை மன்னர் நினைவலைகள் கூட்டத்தில் நான் நன்றாகப் பேசியதாக நண்பர்கள் சொன்னதாகக் குறிப்பிட்டும் சொன்னார். ‘நாளை புதுயுகத்தில் மெல்லிசை மன்னர் குறித்த என் நிகழ்ச்சி வருகிறது பாருங்கள்’ என்றேன். அதைப் பார்த்துத் தனிப் பதிவாகத் தன் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவரின் நான்கு வரி பாராட்டு, என்னை அதிக மகிழ்ச்சியடைச் செய்தது.
ஆகஸ் 2 அன்று அவர் எழுதிய அந்த வரிகளோடு, இந்த இணைப்பை பகிர்கிறேன்:
‘நேற்று நிகழ்ச்சியைப் பார்க்கும்படி Mathimaran சொன்ன போது கூட அது இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. இன்று காலை புதுயுகத்தில் ஒரு மணி நேரம் அவ்வளவு விறுவிறுப்பாக எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றியும் தொடர்புடைய திரைப்பிரபலங்கள் பற்றியும் நம்மில் பலருக்கு தெரியாத விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மதிமாறனின் இசை அறிவும் உழைப்பும் பிரமிப்பிற்குரியது. மிக உற்சாகமான காலைப்பொழுது..’ – நன்றி தோழர்.கவிதா
21 October 2015
பா.மாலதி அருமை தோழர் எந்த ஒரு கருத்தையும் மற்றவருக்கு சொல்லும் போது அந்த கருத்துடன் நாம் இருக்க வேண்டும் சும்மா பேருக்கு பேச கூடாது நீங்கள் கருத்து கூறும் போது அதில் உண்மை எழுச்சி இருக்கும் வாழ்த்துக்கள் தோழர்
Unlike · Reply · 5 · 21 October 2015 at 23:02
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி தோழர்.
Like · Reply · 1 · 21 October 2015 at 23:10
Ramarajan Subramanian
Ramarajan Subramanian அண்ணா இப்ப MSV Sir இருந்திருந்தா உங்க மடில ஏறி உக்காந்து சொல்லிருப்பாரு நீ தான் யா ரசிகன்னு
Unlike · Reply · 2 · 22 October 2015 at 00:52
Syed Mohamed
Syed Mohamed அருமை
Like · Reply · 22 October 2015 at 11:21
38 You, Venkat Raman, Venugopal Chinnasamy and 35 others
Comments
Ganesan Rajamani Rajamani Ganesan
Ganesan Rajamani Rajamani Ganesan நன்றி மதிமாறன்
Unlike · Reply · 1 · 21 October at 23:25
Ganesan Rajamani Rajamani Ganesan
Ganesan Rajamani Rajamani Ganesan https://www.youtube.com/watch?v=ufwwcCxpz8E
M.G.R & Saroja Devi in Oru Pennai Parthu – Deiva Thai
youtube.com
Unlike · Reply · Remove Preview · 1 · 21 October at 23:29
Ganesan Rajamani Rajamani Ganesan
Ganesan Rajamani Rajamani Ganesan https://www.youtube.com/watch?v=oXOs-ytaqD0
Avalukku ena Alagiya Mugam
TMS and MSV appear on this song. This is from Server Sundaram movie
youtube.com
Unlike · Reply · Remove Preview · 1 · 21 October at 23:31
Nmh Mukhthar
Nmh Mukhthar மெல்லிசை அவர்களை பற்றி நீங்கள் மாய்ந்து, வியந்து, மகிழ்ந்து பேசும் அழகு, என்னை எம்.எஸ்.வி பற்றி ஆராய தோன்றுகிறது
Like · Reply · 1 · 21 October at 23:46 · Edited
Mathimaran V Mathi replied · 1 Reply
Gnanashanmugam Subramanian
Gnanashanmugam Subramanian எம்.எஸ்.வி அய்யாவைப்பற்றி இந்த உலகிற்கு யாரும் சொல்லாத, சொல்ல முன்வராத விசயங்கள், மேதமையை வெளிக்கொண்டு வந்தீர்கள். இசை பற்றி புதிய புரிதல்களை ஏற்படுத்தியுள்ளீர்கள். நன்றி. பாடல்களை உன்னிப்பாகவும் ஆழ்ந்தும் கேட்க வைத்திருக்கிறீர்கள். சொல் புதிது சுவை புதிது பொருள் புதிது.
Unlike · Reply · 2 · Yesterday at 10:40
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி.
Like · Reply · 19 hrs
மிக உன்னதமான பதிவு இது. மெல்லிசை மன்னரைப் பற்றியும் இசையை அவர் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு நகர்த்திச் சென்றது பற்றியும் மிக அருமையாகக் கூறியிருக்கிறீர்கள். மகிழ்வோடு கேட்டு இரசித்தேன்.
மெல்லிசை மன்னர் அருமையான இசையமைப்பாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் “நம்மீது கருணை” எங்கிருந்து வந்தது?. இன்றைய இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் நம்மை கொல்வதை பார்த்தால், மெல்லிசை மன்னரின் கருணையை புரிந்து கொள்ள முடிகிறது.
மொசார்ட், பீத்தோவன் போன்ற மேதைகளின் இசைக்கு ஈடாக தமிழிசை உலகில் யாராவது இருக்கின்றாரா?.
மொகலாய சாம்ராஜ்யத்தில் தான்சேன் போன்ற மேதைகள் இருந்தனர். ஆனால், அவர்களுடைய இசையை பதிவு செய்யும் தொழில் நுட்பம் அந்த காலத்தில் கிடையாது. ஆகையால் அவை அழிந்து விட்டன.