பெரியாரையும் என்னையும் ஆதரிப்பதாலேயே விரோதங்களைச் சந்திப்பவர்

12742724_1025333110857365_556754387827163161_n
என் பிறந்தநாளை எனக்கும் நினைவூட்டி, நான் கூச்சபடும்படி என்னைப் பெரிய தலைவனைப்போல் வாழ்த்தி மகிழ்ந்த தோழர்கள், எல்லோரும் என்னை என் அரசியலோடு தொடர்புபடுத்தியே வாழ்த்தினார்கள்.

அதில் தோழர் லியோ ஜோசப் எழுதிய வாழ்த்து, என் அரசியலை அங்கீகரித்து மேலும் என்னை உற்சாகத்தோடு பணியாற்ற அழைத்தது.
லியோ, பள்ளி ஆசிரியர். பெரியார் – டாக்டர் அம்பேத்கரை இணைத்து சிறப்பாகத் தொடர்ந்து எழுதி வருகிறவர். அதேபோல் என் எழுத்துக்களை என்னைவிடவும் அதிகமாக இணையங்களில் தொடர்ந்து கொண்டு செல்கிறார்.

பெரியாரையும் என்னையும் ஆதரிப்பதற்காகப் பலரிடம் சண்டையிட்டு அதிக விரோதங்களையும் சம்பாதித்துக் கொண்டவர்.
‘அண்ணே.. அண்ணே..’ என்று என்னை அன்போடு உருகி, உருகி அழைத்த தம்பிகள் சிலரே
‘வெறும் உட்ஜாதி உணர்வு அரசியல் அல்ல. அது ஆதிக்க ஜாதி ஆதரவாகவே முடியும்’ என்ற என் விமர்சனத்திற்காகவும் ‘போட மயிறு. நீ ஒத வாங்கப்போற’ என்று என் முகத்திற்கு நேராக பாசம் காட்டிவிட்டு போயிருக்கிறார்கள்.

ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், லியோ வை நான் இதுவரை சந்தித்ததில்லை. போனிலும் பேசியதில்லை.

எல்லாவற்றையும் விட மிகச் சிறப்பு சமீபத்தில், டாக்டர் அம்பேத்கர் எழுத்துக்களை Blue Buddha என்றை தலைப்பில் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் முறையில் தன் தோழர்களுடன் இணைந்து கொண்டு வந்திருக்கிறார். இது தமிழுக்குப் புதிது. பெரிய அமைப்புகளே செய்யாத ஒரு செயலை தோழர்கள் செய்திருக்கிறார்கள். இது குறித்துத் தனிப் பதிவாகப் பிறகு எழுதுகிறேன்.

இப்படியான அரசியல் கண்ணோட்டத்தோடு செயல்படுகிற தோழர் லியோ என்னைக் குறித்து எழுதியிருப்பது மீண்டும் சொல்கிறேன், எனக்கான மகத்தான அங்கீகாரம். நன்றி லியோ.
-வே. மதிமாறன்.

எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளரும் பெரியாரிய – அம்பேத்கரிய செயற்பாட்டாளருமான திருமிகு. வே. மதிமாறன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மிகச் சமீபத்தில் வாடஸ்அப் குழு விவாதம் ஒன்றில் , நீயெல்லாம் மதிமாறன் சொம்பு தானே, உனக்குத் தலித் போராட்டம் பற்றி , அம்பேத்கர் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது என்று என் மேல் கோபக் கனல் வீசினார்கள். அதே விவாத குழுவில் நீ ஒரு பதிவு அம்பேத்கரைப் பற்றிப் போட்டுவிட்டு ஒன்பது பதிவு பெரியாரைப் பற்றிப் போடுகிறாய் , நீ பேச வந்துட்டியா எனத் தூய்மைவாதம் பேசினார்கள்.

நேற்று ஒரு தோழர் உங்களுக்கு மதிமாறன் எழுதுவது தான் புரியும், ரவிக்குமார் எழுதினால் புரியாதா, அவர் மோடியையெல்லாம் புகழவில்லை, நீயெல்லாம் ரவிக்குமார் என்ன எழுதினார் என்று புரிந்து கொள்கிற அளவுக்குப் புத்திசாலியல்ல என்று மட்டம் தட்டினார்.

பெரியாரை புகழ்ந்தால் அல்ல, அவர் சாதி ஒழிப்பைப் பற்றி , பெண் விடுதலைப் பற்றி இதுவெல்லாம் பேசியிருக்கிறார் எனச் சில பதிவுகளைப் பகிர்ந்தால் கூட நான் பட்டியலின மக்களுக்கே துரோகி என்கிற அளவில் சித்தரிக்கப்பட்டு விடுகிறேன். ஆனால் என் பதிவுகளின் தொடக்கத்தில் வெறுமனே நான் அம்பேத்கர் என்று குறிப்பிட்ட போது , டாக்டர் அம்பேத்கர் என்று குறிப்பிடுங்கள் என எனக்குச் சுட்டிக் காட்டி திருத்தியவர் தோழர் மதிமாறன்.

தனது கடைசி மூச்சு வரை டாக்டர் அம்பேத்கர் போராடிய பிற்படுத்தப்பட்ட மக்களான சூத்திரர்களே அண்ணல் அம்பேத்கரின் சிலையை உடைக்கும் மடமையை, அவர்களின் சாதி வெறியை துகிலுரித்துத் தொடர் பதிவுகள் எழுதி , டாக்டர் அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்பதை வெளிச்சமிட்ட , நானறிந்த ஒரே எழுத்தாளர்.
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையிலும் வைத்து வணங்கப்படத் தகுதியான தலைவர் டாக்டர் அம்பேத்கர் என்பதைத் தரவுகளோடு அவர் பதிவுகள் சுட்டியிருக்கின்றன.

பாரதியின் காவி முகத்தை , வ.உ.சி.யின் ஒப்புயர்வற்ற தியாகத்தைத் தனது நூல்களின் வழி எனக்குக் கல்வி புகட்டிய ஆசானும் தோழர் தான். காந்தி நண்பரா துரோகியா என்ற தனது நூலின் மூலம் காந்தியின் துரோகங்களைப் பட்டியலிட்டு மகாத்மாவின் கோவணத்தை மீண்டும் ஒருமுறை உருவி அவரின் உண்மை சொரூபத்தைப் போட்டுடைத்தவர்.

சமீபத்திய தனது பேட்டியில் கூட, காந்தியைப் போல், நேருவைப் போல், டாக்டர் அம்பேத்கர் எப்போது அனைவராலும் பொதுவான தலைவராகக் கொண்டாடப் படுகிறாரோ , அன்று தான் இந்தியாவின் சுதந்திர தினம் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டவர் தோழர்.

எந்தச் சாதியினரிடம் காணப்பட்டாலும் சாதிப் பற்று அருவருக்கத்தக்கது, அது பட்டியலின சாதியினராக இருந்தாலும்.
பெரியாரை அந்நியமாக்கி, அண்ணல் அம்பேத்கர் மட்டுமே என்பவர்களை விடத் தோழர் மதிமாறன் அவர்களின் மூலமாகவே டாக்டர் அம்பேத்கர் எனக்குள் ஆழப் பதிந்திருக்கிறார் என்பதை நான் பெரும் மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன்.

தந்தை பெரியார் குறிப்பிடுவது போல மொழிப் பற்று, தேசப் பற்று, இனப் பற்று ஆகிய அனைத்தையும் விட, மக்கள் நலன் என்கிற பற்றே எல்லாவற்றிலும் பிரதானமானது என்கிற உணர்வோடு தொடர்ந்து பயணிக்கும் எழுத்தாளர், பெரியாரிய – அம்பேத்கரிய செயற்பாட்டாளர் தோழர் மதிமாறன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

– லியோ
16 October

‘பிரியாணி வாங்கி தின்னுட்டு எழுதுறான் மதிமாறன்’

‘மதிமாறன் பேச்சை நிறுத்தச் சொல்லுங்கள்’

6 thoughts on “பெரியாரையும் என்னையும் ஆதரிப்பதாலேயே விரோதங்களைச் சந்திப்பவர்

  1. Raakkeshkrishna உண்மையின் பக்கம் நிற்க்கும் தோழருக்கு வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 4 · 16 October at 19:55
    Karai Anbu
    Karai Anbu உண்மைக்கு கைகுடுத்து தோழருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 4 · 16 October at 20:13
    Leo Joseph D
    Leo Joseph D எனக்கு பெரிய விருது கிடைத்தது போல அவ்வளவு சந்தோஷம் தோழர்… உங்கள் வாழ்த்து எனக்கு பெரும் உந்துதல்… மிக்க நன்றி!
    Unlike · Reply · 19 · 16 October at 20:17
    Arunachalam Geetha
    Arunachalam Geetha Thozar Leo Joseph , I share your opinion about Mr.Mathimaran. Had Mr.Mathimaran compromised even a little bit on his beliefs and principles, he wld be a thousand times more popular and rich. But he has stuck on steadfast to the the truths he believes in . That is wat makes thozar Mathi who he is. Hats off to you Mathi sir.
    Like · Reply · 5 · 16 October at 21:27
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி மேடம்.
    Like · Reply · 1 · 17 October at 00:31
    Suresh Devaraj
    Suresh Devaraj u are steadfast in your beliefs.. kudos to you sir..
    Like · Reply · 1 · 17 October at 17:45
    Mathimaran V Mathi
    Write a reply…

    Karthik Kamal Kanth
    Karthik Kamal Kanth · 7 mutual friends
    மதி என்ற வார்த்தைக்கு சந்திரன் நிலவு என்று பொருள்..நேரடித்தொலைக்காட்சி விவாதங்களில் மதிமாறன் போன்ற கற்பூரபுத்தி மதிநுட்பமிகுந்த அதுவும் தற்காப்பற்ற கூர்மையான attacking அதிரடி கருத்தாளர் வேறெவறும் காண்போரைக் கவருவதில்லை.. மதிமாறன் என்றொரு app ஐ வருங்காலத்தில் துவக்க சக மதிமாறன் ரசிகன் லியோவுக்கு பரிந்துரைக்கிறேன்..
    Like · Reply · 4 · 16 October at 22:00
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர் Karthik Kamal Kanth.
    Leo Joseph D மதிமாறனின் ரசினல்ல, தோழன். //மதிமாறன் என்றொரு app ஐ// இல்லை. டாக்டர் அம்பேத்கர் என்றால் அடுத்து பெரியார் தானே, அதனால் பெரியார் என்றொரு app ஐ வருங்காலத்தில் துவக்குவார்.
    Like · Reply · 2 · 17 October at 09:47
    Arunachalam Geetha
    Arunachalam Geetha சரி தோழர். பெரியார் என்ற app ஐ துவங்கியபின் Mathimaran என்ற appஐ துவங்கவேண்டும் என்று முன்மொழிகிறேன். I welcome friends to second my proposal.
    Like · Reply · 1 · 17 October at 17:13 · Edited
    Mathimaran V Mathi
    Write a reply…

    Raja Raja Choolan
    Raja Raja Choolan · 3 mutual friends
    the morden periyaar….mr mathi sir……he only knows the accurate medicines that can kill the latest viruses…….
    Like · Reply · 1 · 16 October at 22:11
    Samad Arafath
    Samad Arafath · 4 mutual friends
    முகநூல் என்ற ஒன்று இல்லையென்றால் நானும் உங்களின் வாசகனாக மட்டுமே இருந்திருப்பேன்.இன்று உங்களின் அன்றாட பதிவுகளை படிக்கவும் என் அறிவு எட்டியவற்றை உங்கள் பதிவுகளில் எழுதமுடிகிறது,,,,வாழ்த்துக்கள் sir,..
    Like · Reply · 16 October at 22:21
    Kasi Ramar
    Kasi Ramar · Friends with Raaj Kumar and 1 other
    உண்மைக்கு மனதில் பட்ட கருத்தை தெளிவாக சொல்லும் மதிமாறன் அண்ணனுக்கும் அதற்கு வலுவூட்டும் தோழருக்கும் வாழ்த்துக்கள்,
    Unlike · Reply · 2 · 16 October at 23:00
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi லியோவோடு போனில் கூட பேசியதில்லை.
    Like · Reply · 4 · 16 October at 23:09
    Kasi Ramar
    Kasi Ramar · Friends with Raaj Kumar and 1 other
    அண்ணே விவாத நிகழ்ச்சியில் அடுத்து எப்ப வர்றீங்க,
    Like · Reply · 16 October at 23:12
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi தெரியலியே..
    Like · Reply · 1 · 17 October at 09:48
    Lenin Lenin
    Lenin Lenin · Friends with Annamalai and 8 others
    They will not call mathi.yaravadhu sondha kaasula sooniyam vachikivaanagala.paarpana aadharavu oodagangalai sonnen
    Like · Reply · 17 October at 11:24 · Edited
    Mathimaran V Mathi
    Write a reply…

    Saravanan K
    Saravanan K · Friends with Leo Joseph D and 299 others
    வாழ்த்துகள் தோழர்
    Unlike · Reply · 2 · 17 October at 06:59
    அ.கனி வண்ணன்
    அ.கனி வண்ணன் நெகிழ்வான பதிவு.தோழமைகளோடு இணைந்திருப்பது மகிழ்ச்சி. தோழர்களுக்கு வாழ்த்துகளும் அன்பும் Leo Joseph D Mathimaran V Mathi
    Unlike · Reply · 5 · 17 October at 07:21
    Marimuthu Pandiyan
    Marimuthu Pandiyan · 21 mutual friends
    Nanbenta
    Unlike · Reply · 1 · 17 October at 09:58
    Marimuthu Pandiyan
    Marimuthu Pandiyan · 21 mutual friends
    Thanks anna
    Like · Reply · 5 mins
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி தம்பி.
    Like · Reply · Just now
    Mathimaran V Mathi
    Write a reply…

    Shanmuganantham Shanmugam
    Shanmuganantham Shanmugam வாழ்த்துகள் தோழர்… தங்களின் அரசியல் செயல்பாடுகள் மேலும் கூர்மையடைய…
    Unlike · Reply · 3 · 17 October at 10:36
    Arun Raja
    Arun Raja இது போல் உண்மையான பெரியார் அம்பேத்கர் சிந்தனையுடைய தோழர்கள் உருவாகிகொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள் தோழர்களே
    Unlike · Reply · 4 · 17 October at 11:14
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி
    Like · Reply · 1 · 31 mins
    Mathimaran V Mathi
    Write a reply…

    Thajudeen Shamim
    Thajudeen Shamim · 2 mutual friends
    அவார்வாழ்க
    Unlike · Reply · 2 · 17 October at 23:45
    Arunachalam Geetha
    Arunachalam Geetha ”அண்ணே…அண்ணே…’ என்று என்னை அன்போடு உருகி உருகி அழைத்த தம்பிகள் சிலரே…….” வேதனையாக இருக்கிறது !!!
    Unlike · Reply · 2 · 18 October at 03:23 · Edited
    Anbu Mathi
    Anbu Mathi மிகச் சரியான பார்வை தோழர் லியோ ஜோசப்!
    பாராட்டுகள்!
    Unlike · Reply · 3 · 18 October at 06:34
    Jamals Jamals
    Jamals Jamals · 22 mutual friends
    வாழ்த்துக்கள்.
    Unlike · Reply · 2 · 18 October at 13:26
    பூ.ஆ.இளையரசன் பெரியார்
    பூ.ஆ.இளையரசன் பெரியார் · 146 mutual friends
    வாழ்த்துகள் தோழர் அருமை
    Unlike · Reply · 2 · 19 October at 07:27
    Dhalapathi Raj
    Dhalapathi Raj மானுடப்பற்றொன்றே
    மகத்தானது என்றுரைக்கும்
    மதிமாறன் பணி தொடரட்டும் !
    Like · Reply · 13 mins
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி தோழர்.
    Like · Reply · 4 mins

  2. “ஜாதி இல்லை, இல்லை, இல்லவே இல்லை.…”

    ஒரு பெரிய பெரியாரிஸ்ட்டும் சின்ன தலித்தும் ப்ரண்ட்ஸ். ஒரு நாள் பெரியாரிஸ்ட்கிட்ட தலித் ஒரு டவுட்ட கேக்கறாரு….

    தலித்: அண்ணே… ஒரு சின்ன டவுட்டு…

    பெரியாரிஸ்ட்: ம்ம்… சொல்றா…

    தலித்: அண்ணே… ஜாதி இல்ல ஜாதி இல்லனு ஒங்க ஆளுங்க மேடைல பேசறாங்க… ஆனா கடைசில, அவுங்கவுங்க ஜாதிக்குள்ளதானெ சம்பந்தம் வக்கறது, கொடுக்கறது வாங்கறது எல்லாம் பண்றாங்க… எங்கள கீழ்ச்சாதியா ஒதுக்கிதான வக்கறாங்க… எங்கண்ணே பெரியாரு ஜாதிய ஒழிச்சாரு?.

    பெரியாரிஸ்ட்: ஓஹோ.. அப்படி வர்ரியா… சரி.. என் ஜாதி என்னடா?

    தலித்: தேவருங்க…

    பெரியாரிஸ்ட்: ஒன் ஜாதி என்னடா?

    தலித்: பறயனுங்க…

    பெரியாரிஸ்ட்: என் ஜாதி ஒங்கிட்ட இருக்கா?

    தலித்: இல்லண்ணே…

    பெரியாரிஸ்ட்: ஒன் ஜாதி எங்கிட்ட இருக்கா?

    தலித்: இல்லண்ணே…

    பெரியாரிஸ்ட்: அப்ப ஜாதி எங்கடா?

    தலித்: இப்படி சொன்னா எப்படிண்ணே…. ஒங்க ஜாதி ஒங்ககிட்ட…

    பெரியாரிஸ்ட்: டேய்…. ஜாதி இருக்குனு எப்பவாச்சும் நாங்க சொன்னோமாடா?.

    தலித்: இல்லண்ணே… ஜாதி இல்லேன்னுதாண்ணே சொல்றீங்க…

    பெரியாரிஸ்ட்: (சிவாஜி ஸ்டைலில், கண்கள் சிவக்க) அதத்தான் திருப்பி திருப்பி சொல்றேன்… ஒன் ஜாதி எங்கிட்ட இருக்காடா?.

    தலித்: இல்லண்ண….

    பெரியாரிஸ்ட்: என் ஜாதி ஒங்கிட்ட இருக்காடா?.

    தலித்: (கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்) இல்லண்ணே….

    பெரியாரிஸ்ட்: (கையில் பீச்சட்டியுடன்) ஜாதி இருக்காடா பற நாயே?.

    தலித்: இல்லண்ணே…இல்லண்ணே.. ஜாதி இல்லவே இல்லண்ணே… (அழுது கொண்டே தலைதெறிக்க ஓடுகிறார்)

  3. மக்கள் நலன் என்கிற பற்றே எல்லாவற்றிலும் பிரதானமானது என்கிற உணர்வோடு தொடர்ந்து பயணிக்கும் எழுத்தாளர், பெரியாரிய – அம்பேத்கரிய செயற்பாட்டாளர் தோழர் மதிமாறன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Leave a Reply

%d bloggers like this: