Site icon வே. மதிமாறன்

‘இறந்து போன பெண்ணிற்கு இந்த விபச்சார ஊடகங்களும்..’

‘இறந்து போன பெண்ணிற்கு இந்த விபச்சார ஊடகங்களும்..’
என்று கலைமாமணி Sve சேகர் SHARE செய்திருக்கிறார்.

ஆனால், ஊடகங்களுக்குக் கோபம் வரவில்லை என்பதுகூடப் பரவாயில்லை. அவர்களால் அவரைப் புறக்கணிக்கக் கூட முடியாது.

இவ்வளவு இழிவாகச் சொன்ன பிறகும் ‘இறந்து போன பெண்ணிற்கு..’ செய்தி வெளியிட்ட மக்கள் தொலைக்காட்சியில், நேற்று 11 ஆம் ஆண்டு விழா வாழ்த்துச் சொல்லி குழைகிறார் நாடக சாம்ராட் Sve S.
‘சத்திரியர்’ களின் வீரமோ இப்படிப் பார்ப்பனர்கள் முன் சரிந்து விழுகிறது.

ஏற்கனவே திரு. நாராயணனுடனான News7 Tamil விவகாரத்தில், கலைமாமணி Sve சேகரிடம் திரு. வைகுண்டராஜன், பவ்யமாகவும் என்னை மிகத் தரக்குறைவாகவும்
‘ அண்ணாச்சி எவன் அப்படிச் சொன்னானோ அவன இனி எங்க சேனல் உள்ளேயே விடமாட்டேன்’ என்று சொல்லியதாகச் சேகர் பதிவு செய்தார்.

இது என்னை மட்டுமல்ல, முற்போக்காளர்கள், சிறுபான்மை சமூகத்தவர்கள் அனைவரையும் அவமானப்படுத்திய செயல்.
‘Sve சேகருக்கு ஆட்சேபனை இல்லாத முற்போக்காளர்கள் மட்டும்தான் News7 Tamil நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்’ என்று இனி எனக்குப் பதில் கலந்து கொள்கிறவர்களையும் சேர்த்து அவமானப்படுத்தியது.

இதுவரை வைகுண்டராஜனோ, News7 Tamil நிர்வாகமோ கலைமாமணியைக் கண்டிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
‘விபச்சார ஊடகங்கள்’ – என்று சொன்ன பிறகும் சேகர் facebook ல் எழுதிய வேறு செய்தியை எடுத்துத் தங்கள் தொலைக்காட்சியில் வெளியிட மறக்கவும் இல்லை.

‘கெட்ட வார்த்தையில் திட்டினாலும் அதைத் திட்டுவதற்கான தகுதி, திறமை அவாள்களுக்கு மட்டுமே உண்டு’ என்று ‘அவாள்கள்’ மட்டுமே நினைப்பதில்லை என்பதுதான் எல்லா பண்பாட்டு அவமானங்களுக்கும் காரணம்.
8 september

Exit mobile version