பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?

pirabakaran

பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று சிங்கள ராணுவத்தின் செய்தியை விடுதலைப் புலிகளின் எதி்ர்ப்பாளர்கள் திரும்ப திரும்ப உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் உறுதியில் அந்தச் செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்ற விரும்பமும் இணைந்திருக்கிறது. அந்த விருப்பமே அவர்களை உறுதியாக சொல்ல வைக்கிறது.

‘பிரபாகரன் இறக்கவில்லை’ என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உறுதியாக சொல்கிறார்கள். இவர்களின் உறுதியையும் இவர்களின் விருப்பமே  தீர்மானிக்கிறது.

இலங்கைஅரசும், உளவுத்துறையும் வெளியிட்ட படங்கள்தான் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள்,  பார்ப்பனர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கும் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அவர் உயிரோடு இருக்கக் கூடாது, விடுதலைப் புலிகள் இயக்கம் இத்தோடு முடிந்து விட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான்  இலங்கை ராணுவத்தின், இந்திய உளவு நிறுவனங்களின் செய்திகளை, படங்களை ஒரு சின்னன சந்தேகமின்றி நம்பவும், அவைகளை தனது படங்கள் போல எடுத்து பயன்படுத்தவும் செய்கிறார்கள்.

எந்தப் படங்களை வைத்து இவர்கள் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று உறுதியாக சொல்கிறார்களோ, அந்தப் படங்களைப்பார்த்துதான் ஆதரவாளர்கள் சந்தேகங்களை எழுப்புகிறார்கள். அவர் உயிரோடு இருப்பதாகவும் நம்புகிறார்கள்.

இதில் வேடிக்கை இலங்கை ராணுவம் வெளியிட்டு இருக்கிற பிரபாகரன் பற்றிய படத்தை, செய்தியை இலங்கை அதிபர் ராஜபக்சேவே நம்பவில்லை. அதனால்தான் ‘உண்டு, இல்லை‘ என்று திட்டவட்டமாக அறிவிக்க மறுக்கிறார். ராணுவம் வெளியி்ட்டு இருக்கிற பிரபாகரன் பற்றிய படங்களின் மூலம் தான் செய்த கொலைகளையும், வெறியாட்டத்தையும் திசை திருப்பவும், மீதமிருக்கிற தமிழர்களைப் பற்றி பேசாமல் பிரபாகரன் பற்றியே பேசவேண்டும் என்ற நோக்கத்திற்காகவுமே ராஜபக்சே மவுனம சாதிக்கிறார்.

அவரின் பிரதிநிதியாகவே செயல்படுகிற இங்கு இருக்கிற ஊடகங்கள் ‘பிரபாகரன் இறந்து விட்டார்‘ என்ற செய்தியை சிறப்பாக பரப்பிக் கொண்டிருக்கிறது. அதை மறுத்து ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ என்று யாராவது நம்பினால், அப்படி நம்புவதே தவறு, என்று ராஜபக்சே ஆதரவு ஊடகங்களும் பார்ப்பனர்களும் எரிச்சலும், கோபமும் அடைகிறார்கள்.

பிராமணர் சங்கத்தின் பத்திரிகையான தாம்ப்ராஸ்…

‘‘இலங்கையில விடுதலைப்புலிகளின் தலைவர் திரு. வேலுபிள்ளை பிரபாகரன் இறந்து விட்டார் என்று இலங்கை ராணுவமும், இறக்கவில்லை என்று விடுதலைப் புலிகளின் சில ஆதரவாளர்களும் கூறுகின்றார்களே இதில் எது உண்மை?

எம். ராதாகிருஷ்ணன், சேலம்

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடித்தது மட்டுமின்றி, அவர்களை ஈழத்தில் செயல்பட முடியாத அளவிற்கு விரட்டியடித்து விட்டது இலங்கை ராணுவம் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வேலுபிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தான் அரசியில் நோக்கர்களும், நடுநிலை பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

என்று மனமார எழுதுகிறது.

சோ துக்ளக்கில்…

விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை இலங்கை அரசு வெளியிட்டதிலிருந்து – அது பொய்ச் செய்தி என்று கூறுகிற மறுப்புகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பது நிரூபிக்கப்படாத வரையில், பிரபாகரன் இறந்துவிட்டார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்: பல பத்திரிகைகளும், இந்திய அரசும் கூட, இந்தச் செய்தியை அப்படித்தான் பார்க்கின்றன.

………………………………………………………..

இது எப்படி வீரமரணம் என்பது நமக்குப் புரியவில்லை. அப்பாவி மக்களை தனக்குப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, அவர்கள் மத்தியில் தான் பாதுகாப்பாக இருந்துகொண்டு, இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பிக்க வழி தேடிய பிரபாகரனின் மரணம் எப்படி வீரமரணமாகும்?

……………………………………

தமிழ்த் தலைவர்களைக் கொன்று, தமிழர்களை அடிமைப்படுத்தி, அவர்களுடைய சிறுவர்களை இலங்கை ராணுவத்திற்குப் பலியாக்கி, தமிழர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, பிரபாகரன் நடத்தியது விடுதலைப் போர் அல்ல: தான் ஆள்வதற்கு, தன்னுடைய சர்வாதிகாரத்தின் கீழ் ஒரு நிலப்பரப்புதான் அவர் நாடியது. ஒரு நிலப்பரப்பைத் தனதாக்கி, அதில் வாழ்ந்த மக்களைத் தன்னுடைய அடிமைகளாக்கி விட, ஒருவர் நடத்திய வெறிச் செயல்கள் விடுதலைப் போராட்டம் அல்ல, ஆதிக்க வெறி.

…………………………………..

பற்பல காரணங்களினால், சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துவிட்ட இலங்கைத்தமிழர்கள். இனி நிம்மதியுடன் வாழ்வதற்கு இப்போது வழி பிறந்திருக்கிறது. இந்த வாய்ப்பு கானல் நீராகப் போய்விடாமல் பார்த்துக் கொள்வது இந்திய அரசின் கடமை.

தமிழர்களின் வாழ்க்கை அல்ல, தமிழர்களே முடிந்திருக்கிறார்கள். ஆனால் சோ, ‘இனி நிம்மதியுடன் வாழ்வதற்கு வழி பிறந்திருக்கிறது’ என்று எழுதுகிறார்.

இவர்கள் விடுதலைப் புலிகளை எதிர்த்து எழுதுவதை நாம் குறை சொல்லவில்லை. அது அவர்களின் அரசியல் நிலை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பதை எதிர்த்து இலங்கை அரசையோ,  ராணுவத்தையோ,  ராஜபக்சேவையோ கண்டித்து ஒரு வார்த்தைகூட எழுத மறுக்கிறார்களே, ஏன்?

கேட்டால்,  ‘அப்பாவி மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்திருக்கிறார்கள் விடுதலைப் புலிகள்’ என்று சொல்கிறார்கள்.

சரி. இதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.

சங்கர மடத்தில் புகுந்து ஒரு தீவிரவாத கும்பல் அங்கிருக்கிற ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் இன்னும் அவர்களை ஸேவிக்க வந்த பார்ப்பனர்களை, சொர்ணமால்யா போன்ற பக்தர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ராணுவம் அல்லது காவல் துறை என்ன செய்யவேண்டும்?

தீவிரவாதிகளிடம் தந்திரமாக பேசி அல்லது கோரிக்கையை நிறைவேற்றி பிணைக்கைதிகளாக இருக்கிற ஜெயெந்திரன்-விஜேயேந்திரன்  இன்னும மத்தியம் ஒருமணிக்கு ஜெயேந்திரனை தரிசிக்க வந்த பார்ப்னர்களை பத்திரமாக  மீட்க வேண்டும். இதுதான் முறை.

ஆனால், அதற்குப் பதில் ராணுவம் , ஜெயெந்திரன்-விஜேயேந்திரன்  உட்பட்ட ஒட்டுமொத்தப் பார்ப்பனர்களையும் கொன்று, அதன் பிறகு தீவிரவாதிகளையும் கொன்றுவிட்டால் அது மனித தர்மமாகுமா? அதைச் செய்வதற்கு ராணுவம் எதற்கு?

இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளுடனான போரில் என்றாவது, ஒரு இடத்திலாவது ஈழத் தமிழர்களை பாதுக்காக்க வேண்டும் என்று செயல்பட்டதா?

‘மாறாக நீ என்னடா கொல்றது நானே கொல்றேன்’ என்று  ஒரு நாட்டு ராணுவம் தன் சொந்த நாட்டு மக்களை இப்படித்தான் கொல்லுமா? உலகில் எந்த நாட்டிலாவது பிணைக்கைதிகளை முற்றிலுமாக கொன்று அதன் பிறகு தீவிரவாதிகளை கொன்ற ராணுவம் இருக்கிறதா?

இதுபொல் இன்னொரு குற்றச்சாட்டையும் சொல்கிறார்கள் சோ போன்ற பார்ப்பனர்கள்,  ஈழத்தில் இருக்கிற தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் துப்பாக்கி முனையில் மிரட்டித்தான் தனக்கு ஆதரவாக வைத்திருக்கிறாகள் என்று.

சரி. இது உண்மையாக இருந்தால்,  உலகம் முழுவதும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களில் மிகப் பெருமான்மையானவர்கள்,  விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பதற்கு எது காரணம்? அவர்களை யார் மிரட்டுவது?

தமிழர்களைக் கொன்று குவிக்கிற இலங்கை ராணுவம் நேர்மையானது. ராணுவத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்கள் தீவிரவாதிகள். கொலைக்காரர்கள். நன்றாகத்தான் இருக்கிறது மனுநீதி.

இவைகள் பிராமணர் சங்கம், சோ போன்ற பார்ப்பன உணர்வை மறைக்காமல் வெளிபடுத்துகிறவர்களின் நிலை. இதே நிலைதான் முற்போக்காக ‘ரொம்ப நல்லவன்’ மாதிரி பேசுற பார்ப்பனர்களின் நிலையுமாக இருக்கிறது.

இணையத்தில் விரவி இருக்கிற பார்ப்பனர்களில் பலர், ஈழப் பிரச்சினையில் பெரும்பாலும் எந்த கருத்தும் சொல்லாதவர்கள் அல்லது ஈழமக்களுக்கு எதிராக இலங்கை அரசும் இந்திய ராணுவமும் செயல் பட்டதை கண்டித்து எழுதாதப் பார்ப்பனர்கள். இவர்கள் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரப்பப்பட்ட பிறகு, மிகுந்த வருத்தத்தோடு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள்.

“பிரபாகரன் இறந்து விட்டார் என்பதற்காக ஈழ விடுதலைப் போராட்டம் இத்துடன் முடிந்து விடாது. அது எந்த தனிநபரையும் சார்ந்து இல்லை.” என்று ஒரு போராளியைப் போல் சிலர் பிரகடனப் படுத்தினார்கள். அவர்கள் உறுதியாக சொல்ல வருகிற செய்தி இதுதான் ‘பிரபாகரன் இறந்துவிட்டார்.’

இன்னும் சிலர் “விடுதலைப் புலிகள் மீது நமக்கு விமர்சனம் இருந்தாலும் 30 ஆண்டுகளாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதை நினைத்து வருத்தமாகத்தான் இருக்கிறது. பிரபாகரன் இறந்து விட்டார். விடுதலைப் புலிகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். இனி அங்கே விடுதலைப் போராட்டம் நடைபெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று நினைக்கும் போது இன்னும் அதிக வருத்தமாகத்தான் இருக்கிறது.” என்று ஈழப் போரட்டத்தில் அதிக அக்கறை உள்ளவர்கள்போல், ஒட்டு மொத்தமாக ஈழப் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தார்கள். இவர்கள் சுற்றி வளைத்து சொல்ல வருகிற செய்தி இதுதான்:

“ ஒழிஞ்சான்டா பிரபாகரன். முடிஞ்சுதுடா விடுதலைப் புலிகள் இயக்கம்”

விடுதலைப் புலிகள் இயக்கமோ அதன் தலைவர் பிரபாகரனோ பார்ப்பன எதிர்ப்பாளகளோ இந்து மத எதிர்ப்பாளர்களோ் அல்ல. இன்னும் சொல்லப்போனால் பிரபாகரன் உட்பட அவர்களில் பலர் இந்து மத கடவுள் நம்பிக்கையாளர்கள்தான். ஆனாலும் பார்ப்பனர்கள் ஏன் அவர்கள் மீது கடும் வெறுப்பு கொண்டு இருக்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கு  பார்ப்பனர்கள் இப்படி பதில் சொல்லக்கூடும்: “விடுதலைப் புலிகள் யாரை வேண்டுமானலும் கொலை செய்பவர்கள். வன்முறையாளர்கள். அவர்களை நாம் எப்படி ஆதரிக்க முடியும்?”

அப்படியானால் இவர்கள் ஆதரிக்கிற இலங்கை ராணுவம் என்ன ‘வாடியப் பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்கிற வள்ளலார் வழி வந்தவர்களா? இவர்களின் குரு ஜெயேந்திரன் என்ன சங்கரராமனுக்கு கனகா அபிஷேகமா செய்து வைத்தார்? இவர்கள் தீவிரமாக ஆதரிக்கிறவர்களின் யோக்கியதை இப்படி இருக்கும்போது, அப்புறம் ஏன் இவ்வளவு வன்மம் விடுதலைப் புலிகளின் மேல்? இதற்கான விடையை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் நீங்கள் தந்தை பெரியாரிடம்தான் வந்தாக வேண்டும்.

தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசை கண்டிக்காத, இலங்கைக்குத் துணை நின்ற இந்தியாவைப் பற்றி ஒரு வார்த்தை எழுதாத  இவர்கள்தான் மனிதாபிமானம் பற்றி பேசுகிறார்கள். நம்புகங்கள் தோழர்களே,  பார்ப்பனர்களும் தமிழர்கள்தான். பாவம் பெரியார்.

jesus‘இயேசு கிறிஸ்து என்று ஒருவர்  இருந்தார்’ என்பதற்கு பைபிளைத் தவிர எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. ஆனால் அப்படி ஒருவர் இருந்தார் என்று இன்னும் கோடிக்கணக்கான மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுகூட பரவாயில்லை, அப்படி இல்லாத ஒரு நபர் ‘இப்போது வரப்போகிறார்‘ என்று 2000 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் உண்மை என்று நம்பி ரொம்ப சீரியசா கண்ணீர் மல்க ‘வருகீறாரா’ என்று ஆவலோடு காத்துக் கிடக்கிறார்கள் மிகப் பலர்.

அதையே நம்புகிறவர்கள் இருக்கும்போது, தங்களின் தலைவர் அல்லது தாங்கள் விரும்புகிற தலைவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவரையில், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாதவரையில் அவர் உயிரோடு இருக்கிறார் என்று அவர் ஆதரவாளர்கள் நம்புவதில் என்ன தவறு இருக்க முடியும்?

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

65 thoughts on “பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?

 1. i am tired of hearing about the fuken dickheads like cho,sapramaniasamy and intelluctual “hindu” ram…particularly cho..these are all the people who make me remain about periyar words..”pambayum,pappannayum partha pappana adi”…

 2. யாருய்யா இந்த சோ, அவன் பத்தி எழுதி எதுக்கு உங்க நேரத்த வீனாக்குரீங்க?

 3. DEAR FRIEND,
  FANTASTIC ARTICLE, EVENTHOUGH THESE PEOPLE NEVER CORRECT THEMSELF THAT IS THEIR WAY, ONE DAY REGRET…I THINK
  IQBAL

 4. மிக அருமையான அலசல்.பார்ப்பனர்களின் தோலுரிப்பு.
  மு.சுகுமார்,வேலூர்

 5. விழிப்படைய வைப்போர் கூட விழியிழந்தவர்கள் என்பதை உங்கள் கட்டுரை உணர்த்துகிறது.

  உலகத்தின் முடிவில் அனைவரும் உயிர்த்தெழுவார்கள் என்ற நம்பிக்கை கிறிஸ்தவர்களுக்கு உண்டு. அதை ஒரு பகுத்தறிவுவாதி தனது தேவைக்காக பயன்பபடுத்தியுள்ளது, தனது கருத்தியலுக்கு உடன்பாடற்ற விடயங்கள் கூட தன் தேவைக்கானதாக இருந்தால் அதை முன்னுதாரணமாக ஏற்றுக் கொள்ளப்படுவது கூட தவறில்லை என்ற நிலைக்கு தள்ளியுள்ளது.

  உண்மையை ஏற்றுக் கொண்டு நாம் புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலியாவது செலுத்துவோம். இது மனிதநேயமிக்கவர்களின் கடமை.

  உண்மைகள் தொடர்ந்து உறங்குவதில்லை. ஒரு நண்பரின் வேதனையை பாருங்கள்:
  http://thesamnet.co.uk/?p=12638

 6. //தங்களின் தலைவர் அல்லது தாங்கள் விரும்புகிற தலைவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்படாதவரையில், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாதவரையில் அவர் உயிரோடு இருக்கிறார் என்று அவர் ஆதரவாளர்கள் நம்புவதில் என்ன தவறு இருக்க முடியும்?//

  நச் வரிகள் மதி சார்…! பிரபாகரன் இன்னமும் இருக்கிறார் என்பதை நம்பும் தமிழர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் பிரபாகரன் வாழிய பல்லாண்டு என வாழ்த்துகிறேன்.

  ஒரு சிறு விண்ணப்பம்…!

  பத்திரிகைகளை அலசி ஆராய்வதில் வல்லவர் தாங்கள் என எனக் தெரியும். நக்கீரனில் திரு.பிரபாகரன் குறித்து வெளியாகிய கட்டுரைகள் குறித்தும் ஒரு அலசல் பதிவு எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி!

 7. u have all rights to write anything in the net. But one thing dont point out any particulay religion ( U FUCKER U CRITIZISE THE CHRISTIANITY) THERE IS NO DIFFERENT BETWEEN Mr. SOO AND U . Think before u write any thing ( weather it will hurts anybody r not)

  immebychella@yahoo.com
  203.125.211.241

 8. மிக அருமையான அலசல்.பார்ப்பனர்களின் தோலுரிப்பு.

 9. i think you are thinking widely about a discussion and much confussions.
  what do you like to say???

 10. மதிமாறன்,
  ந‌ல்ல‌ அல‌ச‌ல்…
  தலைவர் இருக்கிறார்..தக்க சமயத்தில் தோன்றுவார்.
  சோவின் துக்ளக்,தினமலர்,தாம்ப்ராஸ்,ஹிண்டு ராம்,சுசாமி போன்ற‌
  த‌மிழின‌ விரோதிக‌ள் சொல்வ‌து எல்லாம் தெரிந்த‌துதான்.
  ப‌ச்சை த‌மிழ‌ர் என்று கூறும் தின‌கனை(சன் குழுமம்)யும் தோலுரிங்க‌ள்…

  அன்புட‌ன்,
  ம‌ற‌த்த‌மிழ‌ன்..

 11. இருபது நாட்களுக்கு முன்பாக இப்பதிவை எழுதியிருந்தால் நிச்சயம் எவரையும் சென்று சேர்ந்திருக்காது. கடந்த பத்து நாட்கள் வரை இவ்விஷயம் உணர்ச்சியைக் கொண்டு அணுகப்பட்டு வந்தது. அறிவைக் கொண்டு அணுகப் படுவதன் தொடக்கமாகத் தங்கள் பதிவு அமையட்டும்.

 12. இங்கு இயேசு பற்றி பேசுகின்ற அறிவுஜீவிகளுக்கு ஏன் அங்கு தமிழ்ர்கள் படுகொலை போது வாய் திறக்கவில்லை…..

  இயேசு உதரணம் அருமை….

 13. அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாதவரையில் அவர் உயிரோடு இருக்கிறார் என்று அவர் ஆதரவாளர்கள் நம்புவதில் என்ன தவறு இருக்க முடியும்?//

  கே பி அவர்கள், “தலைவர் நம்மிடத்தில் இல்லை” என்று சொல்லிவிட்டாரே. தன் குடும்பத்துடன் கடைசி நொடி வரை போராடினான் என்று நினைத்து பெருமைப்படுகிறேன் நான்.

  தமிழீழத்தைத் தவிர எல்லாக் கட்டுமானங்களையும் உருவாக்கித் தந்தான். தமிழீழத்துக்காக இறுதி வரை முயற்சித்தான். முடியாமல் தான் போய்விட்டது. 🙁

 14. வணக்கம் திரு.மதிமாறன் …..தங்கள் ஆக்கத்தை வாசித்தேன் ….உங்கள் கருத்தகளை கூறியுள்ளீர்கள்….அது உங்கள் கருத்து சுதந்திரம்….ஆனால் அந்த மாவீரன் உள்ளாரா? இல்லையா? என்ற வாதங்களை ஒரு புறம் வைத்துவிட்டு அந்த மாமனிதன் என்ன லட்ஷியத்துடன் 30௦ ஆண்டுகளுக்கு மேலாக பாடுபட்டாரோ அந்த தமிழ் மக்களின் விடுதலைக்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம் என உங்களையும் மற்றும் தமிழக உறவுகளையும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழ்……….

 15. Hey bloody Tamizh fools….dont drag Jesus christ into this.
  It is the Christians in USA, UK, Paris, Germany & Norway who is supporting you bloody tamilzhians. Not your bloody Hindu Brothers in Tamizhnadu. They are busy watching cricket, Rajnikanth and hiding behind the skirts of AMMA.

  You brainless beggars..how dare you compare the son of God with Prabhakaran. Prabha maybe a good leader but still a criminal. Whoever yields the sword will die by the sword. The same will happen to Rajapakse.
  Even EV Ramasamy naicker had never told anything about Jesus. Because like the Hindu beggars…there is no Idol worship in christianity. You bloody fools worshipping Stones, statues, Kali, Bairavan (dog), Nagaatha (snake) and all animals. Why do u go to USA, UK & other western countries to work. Coz the christians there are kind to you. Why do u go to Middle east? Coz the Muslims there allow you to work. Why dont u go to Tamilnadu. COZ AMMA AND KALAIGNAR WILL CUT UR BALLS.

  WELL DONE MR. IMMANUEL

  may_bull1965@yahoo.com
  81.255.2.226

 16. DEY MADIMARAA…unakku blog ezhutha computer kandu pudichu kuduthathey oru christian thandaa.

  Hey bloody Tamizh fools….dont drag Jesus christ into this.
  It is the Christians in USA, UK, Paris, Germany & Norway who is supporting you bloody tamilzhians. Not your bloody Hindu Brothers in Tamizhnadu. They are busy watching cricket, Rajnikanth and hiding behind the skirts of AMMA.

  Brainless Madimaaraa..how dare you compare the son of God with Prabhakaran. Prabha maybe a good leader but still a criminal. Whoever yields the sword will die by the sword. The same will happen to Rajapakse.
  Even EV Ramasamy naicker had never told anything about Jesus. Because like the Hindu beggars…there is no Idol worship in christianity. You bloody fools worshipping Stones, statues, Kali, Bairavan (dog), Nagaatha (snake) and all animals. Why do u go to USA, UK & other western countries to work. Coz the christians there are kind to you. Why do u go to Middle east? Coz the Muslims there allow you to work. Why dont u go to Tamilnadu. COZ AMMA AND KALAIGNAR WILL CUT UR BALLS.

  may_bull1965@yahoo.com
  81.255.2.226

 17. மிக அருமையான பதிவு. எனக்கு கோவமே immanuel மீதுதான் Fuck என்ற வார்த்தையை அவர் பயன் படுத்திர்க்க கூடாது. இயேசு ஒன்ரும் கடவுள் இல்லையே. அந்த காலத்தில் வாழ்ந்த ஒரு ஒழுக்கமான நல்ல மனிதர். proof – See THE DAVINCI CODE Mr. Immanuel.

 18. பார்ப்பனர் புராணம் அற்புதமா இருந்தது.

  கேள்வி கேட்டு ஒரு தலைப்ப போட்டு அதுக்கு பதில் சொல்லாம இருந்தது – வெளக்கெண்ணெயியில வாய் கழிவினக் கணக்கா சோக்கா இருக்கு.

  லாஜிக்காவது மண்ணாங்கட்டியாவது , ஏய் பாப்பாத்தி ! ஸ்டார்ட் மூசிக்…பார்ப்பான் பார்ப்பான்…

 19. Evidence from the Jewish Source

  The arrest of Jesus is documented in the Mishnah, the earliest collection of documents in the Talmud. The Talmud
  is rabbinic discussions pertaining to Jewish law, ethnics and history.
  The first century historian Flavius Josephus mentions Jesus in Antiquities of the Jews 18 3:63.

  Josephus also mentions the martyr of Jesus’ half brother James (20:200).

  Evidence from the Early Church

  The early persecuted church is evidence in itself. Many of the early church fathers had close relations with the
  apostles as their students. The apostle John became the bishop of the church of Ephesus and his student Poly
  Carp became the bishop of Smyrna. Irenaeus of Lyons studied under Poly Carp. All of them centered their writings
  and teachings on Jesus as the Messiah.

  Biblical View of the Evidence

  Knowing and understanding the Bible for what it truly is only serves to reveal the evidence in greater proportion in
  light of this discovery. The New Testament is twenty – seven separate documents that were brought together and
  form a cohesive whole. Twenty – one of these documents are actually epistles (or letters) written in the early first
  century to churches, Christians and followers of Christ instructing them concerning the Christian life as well as the
  life of Christ and His teachings. The four gospels are four separate accounts of the life of Jesus by four different
  authors. The events and facts were recorded by eyewitnesses giving first hand testimony to the accounts of Jesus’
  life and their personal involvement of what they had seen and heard.

  Historical records also document the persecution and execution of many of the apostles and Christians of the first
  century. Had Jesus not lived and been resurrected they certainly would not have died for a mythical character.
  Those claiming Christ as a mythical figure are ignorant of facts possessing the shallowest of intellect and certainly
  not historians by any account. Had Jesus not existed the first century historians and ruling government would
  have been aggressive in exposing and crushing the matter with vehemence.
  Now there was about this time Jesus, a wise man, if it be lawful to call him a man; for he
  was a doer of wonderful works, a teacher of such men as receive the truth with pleasure.
  He drew over to him both many of the Jews and many of the Gentiles. He was [the] Christ.
  And when Pilate, at the suggestion of the principal men amongst us, had condemned him
  to the cross, those that loved him at the first did not forsake him; for he appeared to them
  alive again the third day; as the divine prophets had foretold these and ten thousand other
  wonderful things concerning him. And the tribe of Christians, so named from him, are not
  extinct at this day….

 20. //DEY MADIMARAA…unakku blog ezhutha computer kandu pudichu kuduthathey oru christian thandaa.// ha…ha..ha..

  Dont drag Parpanar into this.

  இதை போலவே முஸ்லிம் பற்றி எழுத முடியுமா உங்களால்? எழுதினால் உங்களுக்கு காயடித்து விடுவார்கள்.

  இவண்
  பிரபாகரனை ஆதரிக்கும் பார்ப்பான்

 21. ஐயா பிராபகரன் நலமுடனே இருக்கட்டும்; இன்னும் நூறு அஆண்டுகள் வாழ்ந்து தமிழ் இனத்திற்கு குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு வழிகாட்டியாக, கார்டியனாக, ஏன் கடவுளாக இருக்கட்டும்.

  இலங்கை அரசின் வன்முறைகளை ஆயிரக்கணக்காக கொலைகளையும் கொடுமைகளையும் சாடுங்கள்; உலகத்தில் உள்ள நல்லவர்களை வல்லரசுகளை நாடுங்கள்; ராஜபக்சே நாசமாக போக சபியுங்கள்.

  இதில் பார்பனர் எங்கே வந்தனர்.? அவர்கள் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானவர்கள்.

  வடக்கிலாவது சர்மா என்றும் திரிவேதி என்றும் பட்டங்களை போட்டுக்கொண்டு . காண்பித்து கொள்வது உண்டு தமிழ் நாட்டிலே தன் குலத்தை சொல்லிக்கொள்வது பாவம் அல்லது அறிவீனம் என எண்ணி வாயையும், xxx பொத்திக்கொண்டு இருப்பவர்கள்.

  நமககு நம்மவரான கலைஞர் போன்றோரும் இன்ன பிற சுத்த தமிழர்களும் ஒன்றும் செய்யவில்லையே என ஆற்றாமை இருந்தாலும் அதை சொல்லிக்கொள்ள முடியாது பார்பனரை வழமை போல் திட்டுகிறோம்.

  கிறிஸ்துவர்கள் என்ன மொழியில் வசை பாடினாலும் ஏற்றுக்கொள்வோம். அவ்வாறு எதிர்ப்பை காட்டிக்கொள்ள அஞ்சும் பார்ப்பனை ரெண்டு தட்டு தட்டி வைப்போம். வாழ்க சீர்திருத்தம். .

 22. //இதை போலவே முஸ்லிம் பற்றி எழுத முடியுமா உங்களால்? எழுதினால் உங்களுக்கு காயடித்து விடுவார்கள்.//

  பரிசுத்த ஆவியில் இட்டிலி வேகுமா?

  786 அல்லாவின் தொலைபேசி எண்ணா?

  இந்தக் கேள்விகளை எல்லாம் தைரியமாகக் கேட்டவர்கள் தான் மதிமாறன் போன்ற பகுத்தறிவாளர்கள். இது வரை பகுத்தறிவாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மதவாதிகள் பலரும் பதில் சொல்ல இயலாமல் தங்களுக்குத் தாங்களே காயடித்துக் கொண்ட சம்பவங்கள் பல இருக்கின்றன.

  இவ்வளவு பேசுகிறீர்களே, மதங்கள் கூடாது என்று சொல்லுகிற பகுத்தறிவாளர்கள்தான் இந்த நாட்டிலே சிறுபான்மையினரும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று போராடி வருகிறார்கள். மதப்பற்று, இறை நம்பிக்கை என்ற ”மையப் புள்ளியில்” மட்டும் ஒன்று கூடுகிற இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளுகிறீர்கள். ஆனால் ஒரு பகுத்தறிவாளன் மாட்டினால் அவனை இழுத்து வைத்து உதைப்பதில் மட்டும் எல்லா மதத்துக்காரர்களுக்கும் உலக மகா ஒற்றுமையோடு ஒன்று கூடி விடுகிறீர்கள்.

  தேடி வந்து நீங்களாவே காயடிச்சுக்கிறீங்களே, நீங்கள்ளாம் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்லவங்கப்பா!

 23. “நேதாஜி உயிருடன் உள்ளார். அவர் கொரியாவில் இருக்கிறார். சீனாவில் இருக்கிறார். வருகிற தைப்பூசத்துக்கு முதுகுளத்தூர் வருவார். பர்மா போனபோது சுபாசைப் பார்த்து நேராக நேருவுக்கு டிரங்கால் போடச் சொன்னேன் அடியேன்.. வரும் கந்தசஷ்டிக்கு சுபாஸ் இந்தியா மீது படை எடுப்பார்.” இவ்வாறெல்லாம் கூறி வந்த முத்துராமலிங்கத் தேவரையும் அவரது அரசியலையும் விமர்சித்த பெரியார் “நேதாஜி உயிரோட இருக்கிறார்னு சொல்லுறதெல்லாம் ஒரு கொள்கையா?” எனக் கேட்டிருக்கிறார். அதைப்பற்றித் தங்கள் கருத்தென்ன?

  கருப்பன்

 24. ராம அவதாரக் கதை போல அல்ல, கிருத்துவினது. கிருத்துவின் பிறப்போடுதான் கிருத்துவ மதம் சம்பந்தப் பட்டுள்ளது. வரலாறும் அதை வைத்துத்தான் கணக்கிடப் படுகிறது. ஆனால், இந்த சிறிய விவாதத்தை நயமாக எடுத்துச் செல்லாமல், இவ்வளவு கொச்சையாக சில கிருத்துவர்கள் இருப்பதைப் பார்த்தால், இந்த மதமும் ஒரு அடிப்படைவாத மதமோ என்று என்ன வைக்கிறது.

  அன்பர்களே! உலகில் இன்று அனைத்து இசங்களும் மாய்ந்து விட்டன. புத்தன் என்று சொல்லிக்கொண்டு, பச்சையாய்க் கொல்கிறான். கிருத்துவன் என்று சொல்லிக்கொண்டு போக்கிரி போல் எழுதுகிறான், பொய் சொல்கிறான் புஷ், ஹோல்ம்ஸ் ……… …… ….. . கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு எளிய மக்கள் இனக்கொலை நடந்ததை ஆதரிக்கிறான் சீனன், கியூபன், வியட்நாமியன் …. ….. .

  எல்லா இசங்களும் தோற்று விட்டன. ஆக, மனிதன் தோற்று விட்டான். இது நேர்மையற்ற உலகம்.

  அடுத்து, இந்திய, தமிழக பாரப்பான் கைகள் ஈழ மக்களின் ரத்தம் தோய்ந்துள்ளது. அதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். தமிழக மக்களின் பால் உள்ள காழ்ப்பால், ஒன்றுமறியாத, ஈழ மக்களை பழி தீர்த்துள்ளான் பாரப்பான்.

  யூதர்கள், கிருத்துவை சிலுவையில் அறைந்ததற்காக, மக்களால் வெறுக்கப்பட்டு ஜெருசலத்திலிருந்து வௌியேறியதாக சொல்லப் படுகிறது. அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. சரியோ, தவறோ அவர்கள் மீண்டும் தனக்கான தேசம் அமைத்துக் கொண்டார்கள்.

  ஆனால், பிழைப்பு தேடி 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப்பரப்பில் வந்தடைந்த பாரப்பான், தான் குறிப்பாக எங்கிருத்து வந்தான் என்று கூட அவனுக்கு தெரியாது. ஆக, அவர்களுக்கு என்று ஒரு மொழியும் இல்லை, சொந்த நிலமும் இல்லை. அவர்கள் குடியேறிய மன்னின் மக்களோடு ஒன்றி வாழவும் இல்லை. புகுந்த நிலத்தின் மக்களை ஏமாற்றியே, ஏய்த்தே, ‘கெடுத்தே’ வாழ்ந்தனர்.

  இவர்கள் தங்களுக்கான ஒரு தேசத்தையும் அமைத்துக்கொள்வது இயலாது. அதனால் தான் தொடர்ந்து மிரட்டியும், ஏய்த்தும் வாழும் வாழ்க்கை. ஈழம் பிறந்தால் இந்தியா உடையலாம். அதனால், தங்களது மேலாண்மை அழியும். ஆக, இந்தியாவைக் காக்க எல்லா மக்களையும் வதைக்கின்றனர். காஷ்மீரம், அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர், ஈழம் என்று நீளும் அட்டூழியங்கள். ஆனால், காலம் மாறும். மாறிக்கொண்டுள்ளது. இம்மக்களுக்கெல்லாம் விடிவு வரும். அப்போது பிராமனர்கள் எங்கே ஓடுவார்கள்?

  இவர்களைப் போல ஒரு இழிவான இனம் உலகில் இருக்க முடியாது.

 25. ந‌ல்ல‌ அல‌ச‌ல்…
  தலைவர் இருக்கிறார்..தக்க சமயத்தில் தோன்றுவார்.
  சோவின் துக்ளக்,தினமலர்,தாம்ப்ராஸ்,ஹிண்டு ராம்,சுசாமி போன்ற‌
  த‌மிழின‌ விரோதிக‌ள் சொல்வ‌து எல்லாம் தெரிந்த‌துதான்.
  ப‌ச்சை த‌மிழ‌ர் என்று கூறும் தின‌கனை(சன் குழுமம்)யும் தோலுரிங்க‌ள்…

  அன்புட‌ன்
  மன்னை முத்துக்குமார்.

 26. //ஜெயெந்திரன்-விஜேயேந்திரன் உட்பட்ட ஒட்டுமொத்தப் பார்ப்பனர்களையும் கொன்று, அதன் பிறகு தீவிரவாதிகளையும் கொன்றுவிட்டால்//

  இது மட்டும் நடந்து விட்டால்……!

  நினைக்கும்போதே புல்லரிக்குதே ,

  ம்………. இதெல்லாம் எப்ப நடக்கறது?

 27. //ஈழமக்களுக்கு எதிராக இலங்கை அரசும் இந்திய ராணுவமும் செயல் பட்ட//

  should be corrected as
  ஈழமக்களுக்கு எதிராக இலங்கை அரசும் இந்திய ராணுவமும் தமிழக அரசும் செயல் பட்ட

 28. கீ.மூ கீ.பீ எல்லாம் மதிமாறன் படிக்காத பொய்களா ?.

  மதிமாறன் ஒரு முட்டாள் அல்ல அவர் இறந்து விட்டார்.

  நீச்சயமாக மதிமாறன் ஒரு முட்டாள் அல்ல அவர் இறந்து விட்டார் !

  மதிமாறன் அல்லாத வேறு கீ.மூ படிக்காத பொய் மா.மூ மட்டுமே
  இறைமகன் ஏசுவை இப்படி ஆறறிவு அற்றமையோடு விமர்சிக்க முடியும் !

  மதிமாறன் ஒரு முட்டாள் அல்ல அவர் இறந்து விட்டார்.

  – சாம் ஆ. தியாபிலஸ்

 29. //விடுதலைப் புலிகள் இயக்கமோ அதன் தலைவர் பிரபாகரனோ பார்ப்பன எதிர்ப்பாளகளோ இந்து மத எதிர்ப்பாளர்களோ் அல்ல. இன்னும் சொல்லப்போனால் பிரபாகரன் உட்பட அவர்களில் பலர் இந்து மத கடவுள் நம்பிக்கையாளர்கள்தான். ஆனாலும் பார்ப்பனர்கள் ஏன் அவர்கள் மீது கடும் வெறுப்பு கொண்டு இருக்கிறார்கள்?//

  புலிகள் ஒரு இனமக்களுக்காகப் போராடினார்கள். அந்த இனத்தில் கிறித்தவர்களும் இருக்கிறார்கள், சைவர்களும் இருக்கிறார்கள், அதில் விருப்பங் கொண்ட சில இசுலாமியரும் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களில் ஒவ்வொரு கொள்கை கொண்டோரும் உளர். புலிகள் தோன்றிய பின்னர் மதவகையில் மக்களிடையே முற்போக்கு பெருகியே இருக்கிறது. சமசுகிருத மந்திரங்களின் பின்னணியில் கிடக்கும் கடவுளரை, புராணக் குப்பைகளை வெறுக்கவே செய்தார்கள் பலர். சிலர் ஆரியத்தைக் களைந்து
  தமிழ மதத்தை மீட்டெடுக்க நினைக்கிறார்கள். எப்படியாயினும் புலிகள் மீது போகிற போக்கில் முத்திரைகளை குத்தி விட்டுச் செல்கிறீர்கள்
  ஏதோ கூட இருந்து பார்த்தது போல் ! பிரபாகரனுக்கு முருகனைப் பிடிக்கும், மடுமாதா, வற்றாப்பளை அம்மனுக்குப் பொங்கல் வைப்பார் போன்ற இணையத்துக் கதையாடல்கள் தாண்டி, கடவுளர் விடையங்களில் பெரும் அக்கறை கொண்டிருந்தவரல்லர் என்பதே உண்மை. அதுவும் இந்து, சந்து மதங்களில் அவர்கள் தவிர்க்கவே செய்தார்கள். போராளிகளும் பொங்கல், மாவீரர் நாள் போன்ற திருநாட்களையே ஒழுகினார்கள். மதச் சடங்குகளுடன் அவர்கள்
  மணம் முடிப்பதில்லை.பின்பு எப்படி அவர்கள் சந்து சமைய நம்பிக்கையாளர் ஆகிறார்கள்

  இரா.திருமாவளவன் என்னும் மலேயா எழுத்தாளர் பிரபாகரனைச் சந்தித்த போது, அவர் சொன்னதாக திருமா பதிந்திருப்பது>
  “ஆரியர்கள் தமிழர்களை அரக்கர்கள் என்றும் அசுரர்கள் என்றும் பழித்து எழுதியிருக்கிறார்கள். புராணத்தில் அசுரர்களைக் கருப்பர்களாகவும் தடித்த மீசை உடையவர்களாகவும் காட்டியுள்ளனர்.யார் அப்படி இருக்கிறார்கள், நாம் தானே..” இதைச் சொன்னது சாட்சாத் பிரபாகரனே!

  ஜெகத் கஸ்பார் அவரை நேர்கண்ட போது கேட்ட கேள்வி, கடவுள் பற்றி நேரிடையாகக் கேட்டபோது, அவர் மனம்நோகாது இயற்கை என்ற சொல்லாடலை கையாண்டிருக்கிறார் பிரபாகரன்>
  “இதுநாள் வரை உங்களைக் கடவுள் தான் காப்பாற்றியதாக எடுத்துக் கொள்ளலாமா?”

  “இயற்கை ஒரு வேளை நான் செய்துமுடிக்க வேண்டிய வேலைகள் இன்னும் இருப்பதாக நினைக்குது போல!” என்று மறுமொழிந்திருக்கிறார்.!

  புலிகள் இயக்கத்தில் யாழ்ப்பாணப் பார்ப்பனக் குடும்பத்து இளைஞ இளைஞிகள் பலர் இணைந்திருந்தார்கள். புலிகள் வீரமணி ஐயர் எனுங் கலைஞரை அவர் கலைச்சேவைக்காக கௌரவித்திருந்தார்கள். இதனால் அவர்கள் பார்ப்பன ஆதரவாளர்களாக ஆகி விடமாட்டார்கள்!

  தமிழகப் பார்ப்பனர் புலிகளை வெறுப்பதன் காரணம், சூத்திரம் மிக
  எளிதானது, சிறு குழந்தைக்கு கூடத் தெரியும்> புலிகள் தமிழ் மக்களின் விடுதலை, தமிழுக்காகப் போராடினர். தமிழ், தமிழ் மக்களை பெரும்பாலான பார்ப்பனருக்குப் பிடிக்காது! தவிரவும் அவர்களுக்காகப்
  பரிந்து பேசியோர் பெரும்பாலானோர், தமிழ்த்தேசிய, திராவிட பாரம்பரியத்தைச் சேர்ந்தோர்!

 30. தமிழீழ விடுதலைப் புலிகள் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பட்டே செயற்படுபவர்களாகத் தங்களை வரித்துக் கொண்டவர்கள். அவர்களுக்குள் ஆரம்பகாலம் முதலே பல பிராமணர்கள் போராளிகளாக இருந்து வந்தமைக்கும் வீரச்சாவடைந்தமைக்கும் பல ஆதாரங்களும் வெளிப்படையாகவே இருந்து வந்துள்ளன.

  தலைவன் உள்ளான்.

 31. ‘இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்தார்’ என்பதற்கு பைபிளைத் தவிர எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. ஆனால் அப்படி ஒருவர் இருந்தார் என்று இன்னும் கோடிக்கணக்கான மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுகூட பரவாயில்லை, அப்படி இல்லாத ஒரு நபர் ‘இப்போது வரப்போகிறார்‘ என்று 2000 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் உண்மை என்று நம்பி ரொம்ப சீரியசா கண்ணீர் மல்க ‘வருகீறாரா’ என்று ஆவலோடு காத்துக் கிடக்கிறார்கள் மிகப் பலர்.

  அதையே நம்புகிறவர்கள் இருக்கும்போது, தங்களின் தலைவர் அல்லது தாங்கள் விரும்புகிற தலைவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவரையில், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாதவரையில் அவர் உயிரோடு இருக்கிறார் என்று அவர் ஆதரவாளர்கள் நம்புவதில் என்ன தவறு இருக்க முடியும்?

  well said.

 32. vanakam maran avrgale…. thalaivar pirabagaran innum uyirodi than irukirargal yendru nambum thamilargalil nanum oruvan. avarin vali kattuthalil meendum niduthalaikaga poraduvargal.. thamil elam kandippaga kidaikum…

 33. நல்ல பதிவு 🙂

  //பத்திரிகைகளை அலசி ஆராய்வதில் வல்லவர் தாங்கள் என எனக் தெரியும். நக்கீரனில் திரு.பிரபாகரன் குறித்து வெளியாகிய கட்டுரைகள் குறித்தும் ஒரு அலசல் பதிவு எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.//

  இங்கே சென்று இந்த சுட்டியில் படியுங்கள்

  http://krnathan.blogspot.com/2009/06/blog-post.html

 34. India natin sudanderam pera padu patta thalivarkuluku nan kodukum mariyathiyai AANBU ANNAN PRABHARANukum kodupan

 35. tamilan endru solvatharku ingu nam yarukume thaguthi illai en tamil makalai koondodu kondru kuvikum singalanai adharikum katchikalai kai niraya panam vangigondu ottu potta enam thane nam inam. tamilanin valvadhara pirachanaiyil kuda onnu sera mudiyatha indha arasiyal vadhikalaium iyakkangalum irundhu enna pirayojanam. Nam inge ondru pattu irundhal tamil eelam eppotho malarnthu irukum. Nam arasiyal vadhigal avargalin viduthalai poratathaium arasiyalaki vitargal.

 36. tamil eelam viraivil malarum …prabagaran entrum tamil makkalin idhayathil thanthaiyaga …kadavulaga …entrentrum vazhvaar… thuklak pontra parpana parethesikalai vittuthallunkal …vazhga tamil

 37. can you prove, is there any indian christian terrorist like Rss, sivasena,vhp and alqueida? No. Because they are original Great Indian. The aforesaid all kind of terrorist are being in india. Christian people believe jesus will coming soon. This is their faith and hope. why? the true christian people want to leave the worid and want to live with jesus. According to the Bible no fraud, robbery and illegal activity in the heaven. That is why the true christian want to live in heaven also expecting the jesus second coming.. My opininon and scorning against christian people is unnecessary.

 38. பிரபாகரன் பற்றிய நல்ல அலசல். மீண்டும் வருவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மதம் சார்ந்த கருத்துக்களை தவிர்த்து விட்டு அ னைவரும் தமிழர் என்ற உணர்வோடு ஒன்றுபட்டு ஈழத்திற்காக பாடுபடவேண்டிய நேரம் இது. சோ,சு.சாமி ,ராம் போன்ற கசடுகளை கருத்திற் கொள்ள வேண்டாம் .

 39. சாவிலும் வாழும் இனமென்று
  சரித்திரம் சொல்லட்டும்

  சத்திய வேள்வியில் வெல்வோமென்ற
  நம்பிக்கை பரவட்டும்

 40. மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.

 41. Dear Thozhar

  I have read continue peraanmai picture essay it is very brilliant, nice & correct .Today world radical cinema is possible because cinema money investment owners are capitalist thoughts mind people.So avoid political pictures same time people how do exploit from capitalist, to be shown in picture , village and city poor people how do against fight with landlord & Industrial Owners,poor life like that story picture is possible as on today.

  yours truly
  P.Selvaraj,Neelangarai

 42. Eela makkalu oru seithi

  inimel tamilnattu makkalaiyum athan thalaivarkalaiyum nambathirikal

  Electionalil nan jeyikkavendum endurm thirudan entra karunanithi thanakku manthiri pathavi tharuvar entrum kathiruntha thirumavalavan ellam mudinthapinnal iyo en makkal mulveliyile thavikkirarkale endru kannir viduvor mathiyil en thalaivan kudummbathodu setthu kadalil karainthalume namakku perumaithan
  rajan

 43. yenna vendumanalum ealuthi vittu urukai poola PARPPANARAI thottu kollvathu oru valakkamaga pooi vittathu.ethanai than “PARPPANOPHOBIA” yendru solvargalo.

 44. நண்பருக்கு என் வணக்கம்……

  உன்களை போல் நானும் தலைவர் மீது பற்று உடையவந்தான்…… ஆனாலும் இந்து கடவுள் மேல் மிகுந்த பற்று உடையவன். நீங்கள் சொல்வது போல் ஒரு சில பார்பனர்கள் இருப்பது உண்டு. அதற்க்காக அனைத்து இந்துக்களையும் குறை சொல்வதில் நியாயம் இல்லை… நீங்கள் வேண்டுமானல் பெரியார் வழி நடக்கலாம்,, இது உங்களுடைய சுய உரிமை ஆனால் தலைவரின் பெயரை சொல்லி நீங்கள் இந்துக்களை புலிகளுக்கு எதிரானவர்கள் என்று பிரச்சாரம் செய்ய வேண்டாம். இது என்னை போன்றவர்களை அதிகம் பாதிக்கும்……..\\

  தவறாக ஏதேனும் கூறியிருந்தால் மன்னிக்கவும்……………………………

  இப்படிக்கு என்றும்
  உங்கள்

  இராவண்ணா.தனேஷ்………………………………….

 45. nam thalaivan irukkiran namakkul vetrumai vendam tamilarai ondru pattal than nam thalaivan varuvar thani eelam petru tharuvar

 46. அரசியலில் மதத்தினை இனைப்பது தவறு

 47. சோ முன்பு கோமாளி நடிகராக இருந்தபொழுது நடிகர்திலகம் சிவாஜீகணேசனிடம் தான் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப்போவதாகக் கூறினார்.இதனைக்கேட்டு அடக்கமுடியகமல் விழுந்து விழுந்து சிரித்த சிவாஜீ பின்பு சொன்னார் டேய் சோ! நீ பத்திரிகை ஆரம்பித்தால் அது நிச்சயமாக கள்ளுக்குடித்த ஒரு குரங்கின் செயலைப்போலத்தான் இருக்கும் என்று.இது எவ்வளவு உண்மை என்பதனை வாசகர்கள் ஊகித்துக்கொள்ளுங்கள்.

 48. யுக புருஷன் என்று யாரை சொல்லமுடியும்? ,
  அவரை பற்றி பேசும்போதும் நினைக்கும் போதும் மனதில் உத்வேகம் பி றக்கவேண்டும் அப்படி இந்த உலகில் வாழ்ந்தவர்களில் இருவருக்கு மட்டுமே அந்த வார்த்தை [யுகப்ருஷன் ]பொருந்தும் ஒருவர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் [இப்போது உங்கள் மனதிடம் கேட்டுப் பாருங்கள் நேதாஜி இறந்து விட்டாரா?.. பதில் கிடைக்குமா?]

 49. தலைவர் கண்டிப்பாக வருவார் .

 50. டேய் சோ! நீ பத்திரிகை ஆரம்பித்தால் அது நிச்சயமாக கள்ளுக்குடித்த ஒரு குரங்கின் செயலைப்போலத்தான் இருக்கும் என்று சிவாஜீகணேசன் கூறியது எவ்வளவு உண்மை.
  கர்ணன்

Leave a Reply

%d bloggers like this: