‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்

denmark-ur-103

புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்த அந்த நாடுகளின் வீதிகளில் இறங்கி போராடியதால்தான்….. உலக நாடுகளின் கவனத்திற்கு ஈழப்பிரச்சினை போனது….

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் இருந்து போன தமிழர்களும் போராட்டங்களில் அவர்களோடு கலந்து கொள்ளவேண்டும்.

தமிழர்கள்தான் என்றல்ல, பிறமொழி பேசுகிறவர்கள் வெள்ளைக்காரர்கள் என்று எவ்வளவு பேரை சேர்த்துக் கொண்டு போராட முடியுமோ அவ்வளவு பேரோடு சேர்ந்து போராடுவதுதான்….ஈழமக்களின் துயரங்களை உலகஅளவில் கொண்டு செல்லும்…

மாறாக இங்கு இருக்கிற அரசியல் கட்சிகை நம்பினால்….. நம்பவைததுக் கழுத்தறுப்பார்கள்.

விரிவாக தெரிந்து கொள்ள, கீழ் உள்ள ஒலி சுட்டி……

12.4.2009 அன்று நண்பர் மகிழ்நன் அதிகாலைக்காக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் ஒலிவடிவில்… அதிகாலை (வே.மதிமாறன் நேர்காணல்) வெளியிட்டு இருந்தது. அதன் இணைப்பையும் இதில் ஏற்கனவே கொடுத்திருந்தோம்.

‘தனித்தனி கேள்வி-பதில்களாக வெளியட்டால் இன்னும் நீங்கள் சொன்ன செய்திகள் ஆழமாக கேட்பவரை போய் சேரும். இன்னும் அதிகமானவர்கள் கேட்க முடியும்’ என்று நண்பர்கள்  கேட்டுக்கொண்டதால், ஒலி வடிவப் பேட்டியை ஒவ்வொரு கேள்விகளாக வெளியிடுகிறோம்.

இந்தக் கேள்விகளை தனித்தனியாக சிறப்பான முறையில் தொகுத்து எடிட் செய்த நண்பர் ஸ்ரீதருக்கு நன்றி.

கேட்க விரும்பினால், கீழே உள்ள ஒலி சுட்டியை அழத்தவும்.

12.4.2009 அன்று எடுத்தப் பேட்டி.

முற்றும்

4 thoughts on “‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்

  1. நீங்கள் முதலில் பாரதியார் பற்றி கட்டுரை வெளியிட்ட போது விளம்பரம் தேடும் ஒரு ஆசாமி என்றே நினைத்தேன். என் அறியாமையை மன்னிக்கவும்.

    என்றாவது ஒரு நாள் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.

  2. ‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்../////

    ஆப்பு தமிழகத் தலைவர் அனைவருக்கும் நல்ல ஆப்பு இது ஒலி சுட்டி……

  3. /புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்த அந்த நாடுகளின் வீதிகளில் இறங்கி போராடியதால்தான்….. உலக நாடுகளின் கவனத்திற்கு ஈழப்பிரச்சினை போனது….//

    அதுதானே உண்மை.

    இன்னும் எத்தனை காலம் ஈழத்தமிழனை ஏமாற்றுவார்கள் பார்க்கலாம். இந்த பித்தலாட்ட அறிக்கைகளில் உச்சமானது “ஐந்தாவது ஈழப்போர் தொடரும்”.

    இன்று வவுனியா வதைமுகாம்களில் அல்லல்படும் ஈழத்தமிழனின் அவலநிலை இப்படி அறிக்கை விடுபவர்களுக்கு தெரியாதா?

Leave a Reply

%d bloggers like this: