முஸ்லிம்களுக்கு எதிராகப் படம் எடுத்தார் எனக் கண்டனம். பிறகு, ஜெயிச்சிட்ட நெல்சா என ஜெயிலருக்கு முட்டு.
தள்ளாத வயதிலும் தலைவர்தான் சூப்பர் ஸ்டார் என ரஜினிக்குக் கைத்தடி. கும்பல் கும்பலா குடும்பத்தோடு படம் பார்ப்பது.
இப்ப சங்கி காலில் விழுந்தார் எனப் புலம்பல். எத்தன அவதாரங்க நம்மாளுக்கு.
அவர்கள் சரியாக இருக்கிறார்கள் வியாபாரமானாலும் அரசியல் ஆனாலும்.
நம்மாட்களுக்குத்தான் சினிமாவிற்கு ஒரு தலைவர். அரசியலுக்கு ஒரு தலைவர்.
சினிமா தலைவர் அரசியலில் சங்கியானால் புலம்பல். அவர்கள் சினிமாவிலேயே சங்கிதாங்க.
யார் காலில் யார் விழுந்தால் நமக்கென்ன. நாளை நாடுதழுவிய நீட் எதிர்ப்புப் போராட்டம். அது குறித்து விவாதியுங்கள். திமுக இளைஞரணி அழைக்கிறது
