நம்ஸ்காரம்: பெரியவர ஸேவிச்சா…
காலில் விழுகிற பழக்கம் இழிவானது என்பதே பெரியார் கொள்கை. திராவிட இயக்க கொள்கை. ஆனாலும் சில நேரங்களில் தன் காலில் விழுகிறவர்களை‘ ‘ஆசிர்வதித்திருக்கிறார்’ கலைஞர்.
பெரியார் இயக்கத்திற்கு நேர் எதிராக, பார்ப்பனர்கள் காலில் விழுவதை புண்ணியமாக, புனிதமாக கருதுகிறார்கள். அதுவும் மணமக்கள், வயதில் மூத்தவர்கள் காலில் விழுந்து ‘நம்ஸ்காரம்’ செய்வதை, தங்கள் திருமணங்களில் ஒரு முக்கிய சடங்காகவே வைத்திருக்கிறார்கள்.
ஏனென்றால் அவர்களின் ஆசிர்வாதம் இவர்களை சிறப்பாக வாழ வைக்கும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
நேற்று (டிச.6) நடந்த சோ மகனின் திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் கலைஞர் தான் மிக வயதானவர், அவர்தான் அங்கு மிகப் பெரிய பிரமுகர். காலில் விழுவதற்கான தகுதி என்று அவர்கள் வைத்திருக்கிற எல்லாமும் அவரிடம் இருக்கிறது.
சோ வின் மகனும் மருமகளும் கலைஞர் காலில் விழுந்தார்களா? விழவில்லை என்றால், அங்கு வந்த யார் காலிலும் விழவில்லையா? இல்லை கலைஞர் காலில் மட்டும் விழவில்லையா?
பார்ப்பன குடும்பத்து மணமக்கள், காலில் விழுவதற்கு வயதானவராக, பிரபலமாக, தலைவராக, முன்னால் முதல்வராக இருந்தால் மட்டும் போதாதா?
கூடுதலாக அந்தக் கால்கள் பார்ப்பன கால்களாகவும் இருக்க வேண்டுமா?
பல பார்ப்பன குடும்ப திருமணங்களில் முக்கிய விருந்தினராக கலைஞர் கலந்து கொண்டிருக்கிறார். அவர் காலில் மணமக்கள் விழுந்து ‘ஆசிர்வாதம்’ வாங்கியிருக்கிறார்களா?
இது பற்றி விவரம் தெரிந்தவர்கள் விளக்குங்களேன்.
*
டிசம்பர் 9 அன்று face book ல் எழுதியது
தொடர்புடயவை:
சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?
Bharatiya Janata Party மீது..?
சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்
சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..
பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..
இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!
பிரேமானந்தாவுக்கு தண்டனை ஜெயேந்திரனுக்கு விடுதலை; இது கம்யுனிஸ்ட் கட்சி ஸ்டைல்..
அண்ணே…
இப்படியெல்லாம் நீங்கள் முடிவு பண்ணக் கூடாது. படத்தைப் பார்த்துட்டு அப்புறம் பேசுங்க. ஓகே..
http://news.vikatan.com/article.php?module=news&aid=22045&category=183&phid=7717#album_list
கோபால் அவர்கள் கலைஞரிடம் ஆசீர்வாதம் வாங்கும் படத்திற்கு சுட்டி கொடுத்தார். கீழே ராம. கோபாலனிடம் ஆசீர்வாதம் வாங்கும் படம்.
http://news.vikatan.com/article.php?module=news&aid=22045&category=183&phid=7711#album_list
இரண்டு படங்களையும் நெருக்கிப் பார்க்கும்போது, கலைஞர் முன்னால் சும்மா குனிந்து கொண்டு இருப்பதையும், ராம. கோபாலன் முன்னால் முட்டி போடுவதையும் காணலாம். ஏனிந்த வேறுபாடு?
பெரியவா விஷயத்தில் கலைஞர் செஞ்ச உதவிக்கு இது கூட பண்ணலைனா எப்படி?
நன்றாக படத்தைப் பாருங்கள். இரண்டுமே திருமண நாளன்று வேறு வேறு தருணங்களில் எடுக்கப்பட்டவை. முதல் படம் திருமணம் ஆன உடனேயே எடுக்கப்பட்டது (மடிசார் புடவை = பஞ்சகச்சம்)
இரண்டாவது புடவை + பேண்ட் ஷர்ட். அதனால்தான் சரியாகக் குனிய முடியவில்லையோ அல்லது போட்டோகிராபர் சரியாக எடுக்கவில்லையோ., தெரியாது.
எப்படியோ ’ஆசி’ வாங்கினாச் சரி.
\\காலில் விழுகிற பழக்கம் இழிவானது என்பதே பெரியார் கொள்கை. திராவிட இயக்க கொள்கை. ஆனாலும் சில நேரங்களில் தன் காலில் விழுகிறவர்களை‘ ‘ஆசிர்வதித்திருக்கிறார்’ கலைஞர்.\\இவரு பெரியார் கொள்கைப் படியே வாழ்ந்து வருபவராக்கும். பெரியார் சொல்லித்தான் இந்த கொள்கைப் பிடிப்பாளர் சாராயக் கடைகளைத் திறந்து விட்டாராக்கும். காலில் விழுவதே உம்ம கொள்கைப் படி தப்பு, பிராமணன் வந்து விழுந்தா மட்டும் இனிக்குமாக்கும். பேசாம பேரை மதியிழந்த மாறன், அப்படின்னு வைத்துக் கொள்ளும்.
kalaignarukku pidikkathathai seyyavendaam enru irunthiruppaarkal….