ஸ்ரீ இராமஜெயம்
வனவாசம் புறப்பட்ட ராமன், தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாது சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி;
“ராமா, உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள்.
உனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை, என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டுக்குப் போனாய் என்று எனது தந்தையார் கேள்விப்படின், “ஹா-புருஷவேஷத்துடன் வந்த ஒரு பெண் பிள்ளைக்கா என் புதல்வியைக் கொடுத்தேன்.” என்று தம்மை நொந்து கொள்வார்.
இம் மடவுலகர், ராமனிடம் சூர்யனைப் போன்ற தேஜஸ் ஜொலிக்கின்றது என்று கூறுகின்றனர். இது முழுப் பொய்யான வார்த்தை. மனைவியைப் பிறர்க்கு ஒப்படைத்துப் பிழைக்கும தன்மையான கூத்தாடியைப் போல் நீயாகவே என்னைப் பிறர்க்குக் கொடுக்க விரும்புகின்றனை”
(அயோத்தியா காண்டம் 30 ஆவது சர்க்கம்; 229 ஆவது பக்கம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காரச்சாரியார் மொழி பெயர்ப்பு)
நமக்கு ஒரு பிரச்சினை, அவமானம் என்றால் ராமனிடம் முறையிடலாம். ஆனால் ராமனுக்கே பெரிய அவமானம் என்றால் யாருக்கிட்ட போய் முறையிடுவது?
(‘தங்கப்பதக்கம்’ சினிமாவுல, சிவாஜிகிட்ட பிரமிளா பேசுன வசன பாணியில் படிக்கவும்)
சீதை தன் கணவன் ராமனை இப்படி கேவலமாக பேசிய இந்த ‘சுட்சுவேஷனுக்கு’ப் பொருத்தமாக ஒரு பாடல் போட வேண்டும் என்றால், தியாகய்யர் பாடிய “எந்துகோ… ராமா… ஈ… ஜென்மமு…” என்கிற கீர்த்தனையை இப்படி புரிந்து கொள்ளலாம்,
“உனக்கு எதுக்கு ராமா இந்த ஜென்மம்”
–வே.மதிமாறன்
