“ராம… ராம….”

rama2.gif

ஸ்ரீ இராமஜெயம்

வனவாசம் புறப்பட்ட ராமன், தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாது சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி;

ராமா, உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள்.

உனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை, என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டுக்குப் போனாய் என்று எனது தந்தையார் கேள்விப்படின், “ஹா-புருஷவேஷத்துடன் வந்த ஒரு பெண் பிள்ளைக்கா என் புதல்வியைக் கொடுத்தேன்.என்று தம்மை நொந்து கொள்வார்.

இம் மடவுலகர், ராமனிடம் சூர்யனைப் போன்ற தேஜஸ் ஜொலிக்கின்றது என்று கூறுகின்றனர். இது முழுப் பொய்யான வார்த்தை. மனைவியைப் பிறர்க்கு ஒப்படைத்துப் பிழைக்கும தன்மையான கூத்தாடியைப் போல் நீயாகவே என்னைப் பிறர்க்குக் கொடுக்க விரும்புகின்றனை

(அயோத்தியா காண்டம் 30 ஆவது சர்க்கம்; 229 ஆவது பக்கம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காரச்சாரியார் மொழி பெயர்ப்பு)

நமக்கு ஒரு பிரச்சினை, அவமானம் என்றால் ராமனிடம் முறையிடலாம். ஆனால் ராமனுக்கே பெரிய அவமானம் என்றால் யாருக்கிட்ட போய் முறையிடுவது?

(‘தங்கப்பதக்கம்சினிமாவுல, சிவாஜிகிட்ட பிரமிளா பேசுன வசன பாணியில் படிக்கவும்)

சீதை தன் கணவன் ராமனை இப்படி கேவலமாக பேசிய இந்த சுட்சுவேஷனுக்குப் பொருத்தமாக ஒரு பாடல் போட வேண்டும் என்றால், தியாகய்யர் பாடிய எந்துகோ… ராமா… ஈ… ஜென்மமு…என்கிற கீர்த்தனையை இப்படி புரிந்து கொள்ளலாம்,

உனக்கு எதுக்கு ராமா இந்த ஜென்மம்

வே.மதிமாறன்

4 thoughts on ““ராம… ராம….”

  1. “உனக்கு எதுக்கு ராமா இந்த ஜென்மம்”

    Rama jenmam was necessary to vanquish the demon Ravana.Since, a boon protected him against every being except humans and monkeys, Vishnu took an avathar as a human being to kill the demon! You can also say that lust killed ravana rather than Rama.

    Shiva blessed Ravana for a life of 3 crore years.If Rama had not killed that demon, he would still be ruling the earth now and human beings will not have any freedom because of the decahedral demon.

  2. ஆக மொத்தத்தில் சீதாவை களவாண்டு போனதால் ராவணன கொல்லப்படவில்லை. அவன் மிக நல்லவனாகவே (சீதா ஒன்றை தவிர்த்து) இருப்பினும் கூட அவன் அசுரன் என்ற ஒரேயொரு காரணத்தால் மட்டுமே அவன் கொல்லப்படுகிறான். இந்த காரணத்தால்தான் ராமன் என்ற மாமாப் பயலை நாங்காள் திட்டுகிறோம்.

    அசுரன்

Leave a Reply

%d bloggers like this: