என்ன செய்து கிழித்தார் பெரியார்?

38691590.jpg

.

என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?

பனை ஏறும்தந்தை தொழிலில்

இருந்து தப்பித்து

தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்

பெரியாரின்

முரட்டுத்தனமான அணுகுமுறை

அதெல்லாம் சரிபட்டு வராதுங்க

இதுமுடி

வெட்டும் தோழரின் மகனான

எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

என்னங்க

பெரியார் சொல்லிட்டா சரியா?

பிரமணனும் மனுசந்தாங்க.

திராவிட இயக்கம்

இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?

இப்படி இந்தியா டுடே

பாணியில்கேட்டவர்

அப்பன் இன்னும்

பிணம் எரித்துக் கொண்டிருக

இங்கே டெலிபோன் டிபார்மென்டில்

சுபமங்களாவை விரித்தபடி

சுஜாதா

சுந்தர ராமசாமிக்கு

இணையாக

இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்

அவருடைய மகன்.

ஆமாம்

அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

.

-‘இனிமாத இதழ், 1993 அக்டோபர்

9 thoughts on “என்ன செய்து கிழித்தார் பெரியார்?”

 1. இப்படிக் கேட்கும் தமிழர்களுக்கு சரியான சவுக்கடி….
  இப்படித்தான் பாராட்ட நினைத்தேன்.
  ம்ஹூம்…
  வேண்டாம் தோழா!
  காலம் காலமாய்
  சவுக்கடியும் சாணிப்பாலும்
  பெற்ற தமிழனை அவர்தானே
  திருப்பியடிக்கச் செய்தார்.

  இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்..

  தொடரட்டும் தங்கள் பணி..மதிமாறன்

 2. உங்கள் பதிவின் தலைப்பை பார்த்தவுடன், சினம் கொண்டேன். சரி, அப்படி என்னத்தான் எழுதி இருக்கீர்கள் என்று படித்துப் பார்த்தேன். படித்த பின்புத்தான் தெரிந்தது தங்களின் கருத்து. மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்.

Leave a Reply