Site icon வே. மதிமாறன்

கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தாக்குதல் – யார் காரணம்?

cricket-ball1

ஆட்டக்காரர்களை வீரர்கள் என்பது கேவலமானது என்பதால், ஆட்டக்காரர்களை ஆட்டக்காரர்கள் என்றே குறிப்பிட்டு இருக்கிறேன்.

 

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இதில் 8 ஆட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கினறன.

 திட்டமிட்டு இலங்கை ஆட்டக்காரர்கள் மீது மட்டும் தாக்குதல் நடந்திருப்பதால், இந்த பழியை பாகிஸ்தான் மீது போட்டு, ‘பாகிஸ்தானில் சர்வேதச இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துவருவது, இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.’ என்று அறிவித்து பாகிஸ்தானில் தீவிரமாக மூக்கை நுழைக்க அமெரிக்க முயற்சிக்கலாம்.

 மும்பை குண்டு வெடிப்பில், பாகிஸ்தானை `கார்னர்` செய்த அமெரிக்க, இந்த முறை இந்தத் தாக்குதலை வைத்து மிகத் தீவிரவமாக பாகிஸ்தானுக்கு எதிராக இயங்க அதிக வாய்ப்பிருக்கிறது.

 ஆக, இந்த தாக்குதலை தீவிரவாதிகள் பெயரில், அமெரிக்க தீவிரவாதமே செய்திருக்க அதிக வாய்பிருக்கிறது. பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினையான இந்த விவகாரத்தில்,  இன்னும் சில மணிநேரங்களில் அமெரிக்க மூக்கை நுழைத்து கருத்து சொல்வதின் மூலம் அது நிரூபிக்கப்படலாம்.

 இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு காரணமாக இருக்கிற இந்திய அரசு, பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை கொஞ்சமும் கூச்சமில்லாமல் வன்மையாக கண்டிப்பதின் மூலம், அமெரிக்காவிற்கு பாகிஸ்தானை காட்டிக்கொடுக்கலாம்.

 காட்டிக் கொடுப்பதற்கு என்ன தகுதி வேண்டும்?

ஞானம் இருந்தால் போதும்.

இந்தியாதான் ஞான பூமியாயிற்றே?

இங்கே ‘ஞாநி’ களுக்கா பஞ்சம்?

Exit mobile version