
வர்க்கப் பாசம், ஜாதி பாசத்தைவிட பெரிதா?-ஜாதி பாசம், வர்க்கப் பாசத்தைவிட பெரிதா?
–க. தமிழரசன்
தன் சொந்த ஜாதிக்குள் உள்ள பணக்காரருக்கும் ஏழைக்கும் பிரச்சினை வரும்போது, ஜாதி பாசத்தை வர்க்க பாசம் மிஞ்சிவிடுகிறது. சரவணா ஸ்டோரில் வேலை பார்க்கும் நாடார் தொழிலாளிக்கு நாடார் முதலாளியால் பிரச்சினை வரும்போது ஜாதி சங்கம் முதலாளிக்குத்தான் சார்பாக நடந்து கொள்ளும்.
ஜெயேந்திரன் என்கிற பணக்காரன், ஏழையான சங்கரராமன் என்கிற பார்ப்பனரை கொலை செய்தபோது, பிராமணர் சங்கம் ஜெயேந்திரனுக்குதான் துணை நின்றது. சங்கரராமன் குடும்பத்தின் மீது பார்ப்பனர்கள் வெறுப்படைந்தனர். ஜாதி பாசத்தை வர்க்கப் பாசம் வென்றது.
ஒரு வேளை இப்படி இருந்திருந்தால்…. சங்கரராமன் என்கிற பார்ப்பனரை கொலை செய்தது, ஜெயேந்திரனுக்கு பதில் பங்காரு அடிகள் என்று வைததுக் கொள்ளுங்கள்… இந்நேரம் பங்காரை தூக்கில் ஏற்றி இருப்பார்கள் பார்ப்பனர்கள். வர்க்கம், ஜாதி மாறி இருக்கும்போது….. வர்க்க பாசத்தை ஜாதி பாசம் வெல்லும்.
தனிமனிதர்களை கடவுளாக வழபடுகிற வழக்கம் உள்ள பார்ப்பனர்கள், பங்காரு போன்றவர்களை கடவுளாக அல்ல சாமியாராகவே ஒத்துக் கொள்வதில்லை. பங்காரு போன்ற ‘தெய்வங்களிடம்’ ரொம்ப தெளிவாக பகுத்தறிவாளனைப் போல் நடந்து கொள்வார்கள். ஆனால் ஜெயேந்திரனிடம்….?
கொலை பண்ணினாலும் நம்பளவா நம்பளவாதான்.
சட்டம், கடமை, ஒழக்கம், நீதி, நேர்மை, ஜனநாயகம், தரம், தகுதி என்று தங்களின் ஆயுதங்களுக்கு பல புனைப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். பொதுவான பார்ப்பன நலன் பாதிக்கப்படும்போது இவைகளை ஒவ்வொன்றாக எடுத்து நாகாஸ்திரமாக வீசுவார்கள். அப்போது பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற, எந்த கிருஷ்ண பரமாத்மாவும் வந்து, தன் காலால் தேர் சக்கரத்தை அழுத்த மாட்டான்.
குறிப்பு:
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உணர்வாளர்கள் பொங்கி எழுந்தபோது…. ‘விடுதலைப் புலி ஆதரவாளர்கள்’ என்று கட்டம் கட்டி ஜெயிலுக்கு அனுப்பிய பார்ப்பன பத்தரிகைகள், இப்போது ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு அறிக்கைக்கு பிறகு அடக்கி வாசிக்கிறார்கள் பாருங்கள்….. அதுதான் பார்ப்பன பாசம்.
அதுபோல், ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதைப் பார்த்து வராத கோபம்…. இப்போது இந்த பதிலை பார்த்தவுடன் பொங்கி எழுவார்கள் பாருங்கள்… அதுதான் ‘பிராமின்ஸ் ஒன்லி’. அதுவேதான் ஜாதி பாசம்.
*
2009 ஆம் ஆண்டு நம்பவர் மாதம் எழுதியது
தொடர்புடயவை:
பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்!(ஈழம்-பிரபாகரன் பற்றி..)
பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !
சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்
