இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்
இளையராஜாவின் இறைநம்பிக்கை, இந்துமத பற்று ஒரு பகுத்தறிவாளன் என்கிற முறையில் உங்களுக்கு தவறாகவோ, ஆபத்தானதாகவோ தெரியவில்லையா?
–தமிழ்ப்பித்தன்
பெரியாருக்கு எதிராகவும், மிகத் தீவிரமாக இயங்கினார் முத்துராமலிங்கத் தேவர். பெரியாரை மிகக் கேவலமான வார்த்தைகளால் ஏசி இருக்கிறார் என்று தெரிந்தும், ஜாதி உணர்வைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்கும் அல்லாமல், அவர் மீது பாசமாக இருக்கும் ‘தேவர் பெரியாரிஸ்ட்’டின் ‘பார்ப்பனரல்லாத’ உணர்வு,
பாமக போன்ற ஜாதிக்கட்சி என்ன தவறு செய்தாலும், அதை விமர்சிக்க மறுக்கிற, ஏதோ ஒரு வகையில் பாமக மீது பாசமாக இருக்கிற வன்னிய பெரியாரிஸ்ட்டுகளின் ‘வன்னியப் பகுத்தறிவு’,
‘அண்ணாதுரை முதலியாரின் மறைவுக்குப் பிறகு முதல்வராகும் தகுதி நெடுஞ்செழியன் முதலியாருக்கும், அன்பழகன் முதலியாருக்கும்தான் இருந்தது. அதை கருணாநிதி தட்டிப் பறித்துவிட்டார்’ என்கிற பொய்யான காரணத்தை உண்மையாக நம்பி, அதை உள் அரசியலாக வைத்து, வெளியில் ‘கருணாநிதி தமிழன விரோதி, திராவிட இயக்க கொள்கையையே குழிதோண்டி புதைத்துவிட்டார்’ என்று முற்போக்காக குற்றம் சாட்டி, திராவிட இயக்க எதிர்ப்பாளர்களான பழ. நெடுமாறனையும், ராமதாஸையும் – கருணாநிதி எதி்ர்ப்பிற்காகவே ஆதரிக்கும், முதலியார் பெரியாரிஸ்ட்டுகளின் திராவிட இயக்க ‘பாசம்’,
தலித் அரசியல் என்று பொதுவாக பேசினாலும், தன் ஜாதித் தலைவரை மட்டும் ஆதரிக்கிற, சில நேரங்களில் தலித் விரோத ஆதிக்க ஜாதி தலைவர்களை ஆதரித்தாலும்கூட, உட்ப்பிரிவு தலித் ஜாதி தலைவர்களை ஒப்புக்குக்கூடஆதரிக்க விரும்பாத, தலித் ‘ஒற்றுமை’ அரசியல் பேசுகிற தலித் ‘அறிவுஜீவி’,
மார்க்சிய இயக்கத்தில்கூட தன் ஜாதிக்காரன் இருக்கிறானா எனறு தேடிப் பார்த்து ‘இயங்கியல்’ அடிப்படையில் தொடர்பு வைத்துக் கொள்கிற, பார்ப்பன மார்க்சிஸ்டின் ‘வர்க்க’ உணர்வு,
நவீன அறிவியல் வளர்ச்சியை அவ்வப்போது, ‘அப்டேட்’ செய்து கொண்டு ஒரு விஞ்ஞானியைப்போல் பேசி, தன்னை இறை மறுப்பாளராக, பகுத்தறிவாளராக அறிமுகப்படுத்திக்கொள்ளும் வைரமுத்து போன்ற பல திரைமுற்போக்காளர்களின் சுயஜாதி பாசம்,
‘தமிழ்மண், தமிழனின் மண்’ என்று நீட்டி முழங்கிவிட்டு, தேவர் ஜெயந்தியின்போது , ‘போற்றிப் பாடடிப் பெண்ணே, தேவர் காலடி மண்ணே’ எனறு சுருதி கூட்டுகிற சில தமிழ்த்தேசியவாதிகள்,
பகுத்தறிவாளர்களில் யார் ‘நம்மாளு’? என்று பகுத்து அறிகிற இந்த முற்போக்காளர்களின் சுயஜாதி உணர்வு, பார்ப்பன ஜாதியைத் தவிர மற்ற ஆதிக்க ஜாதிகளை ஆதரிக்கிற அல்லது விமர்சிக்க மறுக்கிற தன்மை, அறியாமையால் ஆனதல்ல. மிகச் சரியாக திட்டமிடப்பட்டது. அது அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் லாபமாக இருக்கிறது. ஓட்டாகவோ, பணமாகவோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களின் செல்வாக்கை பெறுவதற்கான வழியாகவோ இருக்கிறது. அல்லது அந்த ஜாதியை விமர்சித்தால், தன் கட்சியில் இருக்கிற ‘அந்த’ஜாதிமுற்போக்காளர்களின் மனம் புண்பட்டு, அவர் வேறுகட்சிக்கோ, அமைப்பிற்கோ போய் விடக் கூடாது என்கிற முன் எச்சரிக்கை உணர்வும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால் இசைஞானி இளையராஜாவின் இந்துமத இறைநம்பிக்கை இதுபோல் ஆனதல்ல. ஒரு எளிய பக்தனுக்கு இருப்பதுபோல், முழுமையான அறியாமையால் ஆனது.
இந்துமதம் என்பதே ஜாதிதான். இறைநம்பிக்கையைவிட ஜாதி நம்பிக்கைதான் ஆபத்தானது. அதுஒன்றுதான் இந்து மதத்தை பாதுகாப்பது. ‘ஜாதியை பாதுகாக்கிறது’ என்பதற்காகத்தான் தந்தை பெரியார் இந்துமத்தையே எதிர்த்தார். ஆனால் ‘நம்மாளுகளில்’ பலர் இந்து மதத்தையும் கடவுளையும் எதிர்த்துவிட்டு ஜாதியை பாதுக்காக்கிறார்கள்.
ஆக, இந்த ‘பகுத்தறிவாளர்களின்’ சுயஜாதி உணர்வைவிட, பக்திமானான சுயஜாதி உணர்வற்ற இசைஞானி இளையராஜாவின் இறைஉணர்வு ஆபத்தானதல்ல. அறியாமையால் ஆனது. அப்பாவித்தனமானது.
‘முற்போக்காளர்’களின் ஜாதி அபிமானத்தைவிட, ‘பிற்போக்காளர்’களின் ஜாதி உணர்வற்ற இறைஉணர்வு முற்போக்கானது.
தொடர்புடைய பதிவுகள்:
இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!
இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்
பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்
கிழியல் தொடங்கிடுச்சா…………அடுத்த இன்னிங்க்ஸா!!!! கலக்குங்க…கலக்குங்க
பகுத்தறிவை போர்வையாக போர்த்திக் கொண்டு…….சாதியின் உள்ளத்திற்கு வெப்பம் தரும்படியாக இதமாக, பதமாக பாதுகாக்கும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்……….
அப்பாடா.. ஒரு வழியாக முதல் தடவையாக உம் கருத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்…
பரவாயில்லை இந்த ரேஞ்சில் போனால் நீர் ஒரு நல்ல சிந்தனையாளராக உருவாக வாய்ப்பிருக்கிறது
//முற்போக்காளர்’களின் ஜாதி அபிமானத்தைவிட, ‘பிற்போக்காளர்’களின் ஜாதி உணர்வற்ற இறைஉணர்வு முற்போக்கானது//
-திருக்குறள் மாதிரி நச்சென்று சொன்னீர்கள்… அருமை.
-வினோ
நல்லாதான்யிருக்கு உங்கள் சொல்லாடல் கருத்துக்களுடன்.
//ஒரு எளிய பக்தனுக்கு இருப்பதுபோல், முழுமையான அறியாமையால் ஆனது.//
இங்கே தான் நான் மாறுபடுகிறேன் உங்களிடம். இளையராஜாவின் பேச்சுகளை கவிதைகளை படிக்கையில் அவர் அறியாமையில் பேசுவதை போல தோன்றவில்லையே.
சாட்டையடி!
இளையராஜா என்பவர் சமூக சீர்திருத்தவாதியோ, இந்து மதத்தை பரப்புபவரோ இல்லை.எல்லா அறியாமை இந்துக்களை போன்றே அவரும் இந்து மதத்தை பின்பற்றுகிறார். அவளவுதான்! அவரிடம் இந்த முற்போக்கு சிங்கங்கள் பகுத்தறிவை எதிர்பார்பது இதுங்களின் சாதிய அரிப்பை தீர்த்து கொள்ளத்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை..
இந்த பதிவில் நீங்கள் குற்றம்சாட்டும் அனைவரும் எந்தவித எதிர்கருத்தும் இன்றி ஏற்று கொள்ளலாம் ஆனால் இளையராசா பத்திய கருத்தது சரிதானா? என்று யோசித்து பாருங்கள்.
சுயசாதி அபிமானமில்லாத தாழ்த்தப்பட்டவர் பார்ப்பன அடிவருடி அல்லவா? தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து தன்னுடைய அடையாளத்தை மறைத்துகொண்டு இறைவனை கொண்டாடுகிறேன் என்பது பித்தலாட்டம் இல்லையா?
இன்னும் இளையராசா பிறந்த பண்ணைபுரத்தில் இரட்டைகுவளை முறை நடைமுறையில் உள்ளது அதனை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? அப்படி ஒடுக்குமுறை உள்ள சமூகத்தில் பிறந்து “போற்றி பாட்டி பொண்ணே தேவர்காலடி மண்ணே!” அப்படின்னு பாட்டு போட்டுட்டு அப்பாவி பக்தன் என்று சொல்வது எவ்வளவு அபத்தம்?
பெரியார் படத்திற்கு இசை அமைக்கவில்லை என்பது பத்தி நாம் அலட்டி கொள்ள தேவை இல்லை. அதே நேரத்தில் “சண்டியர்” பின்பு விருமாண்டியாக மாறிய பொழுது அதற்கு இசை அமைத்தது அப்பாவி பக்தன் இளையராசாதான். நீங்கள் எஆர்ரகுமானை எப்படி பார்பனியதாசன் என்று அழைக்கிறீர்களோ அதே தகுதிகள் இளையராசாவுக்கும் உண்டு.
இளையராசாவின் இசை ஒப்பற்றது என்பதில் எள்ளளவும் மாற்று கருத்து எனக்கில்லை அதே நேரத்தில் இளையராசாவின் பார்ப்பனிய சேவை ஆதிக்க வெறியர்களுக்கானசேவை குறித்து பாரபட்சமில்லாமல் ரசிகர்மன்ற கண்ணோட்டத்தை விட்டு வெளியில் வந்து நீங்கள் விமர்சிக்க வேண்டும்.
தமிழன்பன்
இசய் ஞானி யின் இந்துமத இறய் நம்பிக்கயய் அவரது நிகரற்ற இசய்யோடு பொருத்திப் பார்த்து அந்த உண்மய்யான இசய்க் கலய்ஞனய் வம்புக்கிழுப்பதில் என்ன உழ பூரிப்போ தெரியவில்லய், மேல் சாதிவுணர்வோடு இருக்கும் போலி பகுத்தறிவார்களுக்கு.. இந்து மத இறய் நம்பிக்கய்யில் அவருக்கு விமர்சனக் கண்னோட்டம் இருந்ததா என்ன.. சராசரியான இந்து என்று அறியாது நம்பிக்கொண்டிருக்கும் எண்ணற்ற அப்பாவி கடவுள் நம்பிக்கய்யாளரிடமிருந்து அவரய் மட்டும் எப்படி வேறுபடுத்திப் பிரித்தார்கள் ? அப்புறம் ஏன் இந்த அதீத எதிர்பார்ப்பெல்லாம் அவரிடம் ? போலிப்பகுத்தறிவு வாதிகளய்க் கூட அவர் விமர்சித்ததில்லய்யே.. தன்னுடய்ய இசய்வழியில் அவர் சரியாகவே பயணப்பட்டிருக்கிறார்.. அவரய்ப்போல நேர்மய்யாளர் ஒருவர் உண்டா என்பது அய்யமே.. எப்படியென்றால் இசய்ஞானி அவர்களுக்கு திராவிடர் கழகம் நடத்திய பாராட்டு விழாவில் பெரியார் திடலில் அய்யாவின் சிலய்க்கு மாலய் அணிவிக்க அவரய் பணித்தபோது, தந்தய்ப் பெரியாரின் கொள்கய்களில் எனக்கு உடன்பாடு இல்லய், அதனால் என் மனதுக்கு விரோதமாக என்னால் நடக்கமுடியாது என்று நேராகவே சொல்லிய நேர்மய்யாளன் அவர். அய்யாவின் தொண்டர் என்று சொல்லி ஊரய் ஏமாற்றும் போலி பகுத்தறிவுவாதியல்ல, வேடதாரியுமல்ல, அவர் ஒரு உண்மய்யான நேர்மய்யாளன்.
1. தேவர் காலடி மண்ணே என்கிற பாடல் யார் இசையமைத்தார்கள் என்பது சரியாக நினைவிற்கு வரவில்லை. ஒரு வேளை அது ‘இளைய…’ ச்ச இருக்காது.
2. ‘பெரியார்’ படத்திற்கு இசையமைக்க முடியாது என சொன்னதும் அறியாமையா ?
3. தன் சாதியைக் குறிப்பிட்டவர் மீது வழக்குத் தொடுத்ததும் சாதி உணர்வில்லாத இறை நம்பிக்கையாளரின் செயல் தானோ ?
‘அப்பாவியா’ இருந்தா இறை நம்பிக்கை இருப்பது பகுத்தறிவாதிக்கு ஓ.கே வா?
இளையராஜாவை ஏன் பெரிய ஆளாக மாற்றுகிறீர்கள்.அந்த ஆள் ஏதோ பொழப்புக்கு ஏதோ பன்றாரு.
//பகுத்தறிவாளர்களின்’ சுயஜாதி உணர்வைவிட, பக்திமானான சுயஜாதி உணர்வற்ற இசைஞானி இளையராஜாவின் இறைஉணர்வு ஆபத்தானதல்ல. அறியாமையால் ஆனது. அப்பாவித்தனமானது.//
அய்யா! ஜாதி உணர்வு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கவேண்டும்.அப்போதுதான் நாம் ஏன் தாழ்த்தப்பட்டு இருக்கிறோம் என்ற எண்ணம் வந்து,அந்த அடிமையிலிருந்து விடிபட முயற்சிக்க முடியும்.
இளையராஜவுக்கு ஜாதி உணர்வு இல்லையென்பது பாராட்டப்பட வேண்டியது இல்லை. மாறாக வெட்கப்பட வேண்டியது.
அது சரி, மதிமாறன் ஏன் இளயராஜாவை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறார்.
இளைய ராஜா அவர்கள் தன்னை பகுத்தறிவாளராக அடையாளம் காட்டிக் கொண்டது கிடையாது.
அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றே தோன்றுகிரது.
ஆனால் அவர் தன் கடவுள் நம்பிக்கையை அடுத்தவரிடம் திணித்தது இல்லை.
நான் வண்ங்கும் கடவுளை எல்லொரும் வணங்க வேண்டும் என்று பலவந்தப் படுத்தியாகத் தெரியவில்லை.
பிற மார்க்கத்தினர் தெய்வங்களாக வணங்கு பவரை அவர் இழிவு செய்யவோ, அவமானப் படுத்தவோ இல்லை.
அவர் அமைதியான ஆன்மீகத்திலே ஈடுபட்டவராகவே தெரிகிறார்.
அவரை குறை சொல்வது எந்த வகையிலே நியாயம்?
//சுயசாதி அபிமானமில்லாத தாழ்த்தப்பட்டவர் பார்ப்பன அடிவருடி அல்லவா? தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து தன்னுடைய அடையாளத்தை மறைத்துகொண்டு இறைவனை கொண்டாடுகிறேன் என்பது பித்தலாட்டம் இல்லையா? //
இளைய ராஜா சாதி வித்யாசம் பார்க்காமல் இருக்கிரார். அதுதான் அவர் மீது சுமத்தப் படும் குற்றம்.
அதாவது ஒரு மனிதனாக அவரை வாழ விடாமல் அவர் மேல் பாய்கிறார்கள்.
இளைய ராஜா யார் காலையும் வருடி வாழவில்லை. அப்படி வாழ வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை.
அய்யோ, இவ்வளவு பெரிய மனிதன் ஆகி பேரும் , புகழும் பெற்று விட்டானே என்று அல்சர் பட்டு பலர் அவரை எதிர்க்கிரார்கள்.
//அப்படி ஒடுக்குமுறை உள்ள சமூகத்தில் பிறந்து “போற்றி பாட்டி பொண்ணே தேவர்காலடி மண்ணே!” அப்படின்னு பாட்டு போட்டுட்டு அப்பாவி பக்தன் என்று சொல்வது எவ்வளவு அபத்தம்? //
இளைய ராஜா அமைத்தது வெறும் இசை மட்டும் தான்.
படத்தைன் கதை, கருத்து, புலம், காட்சி, வசனம், பாடல்கள் எதுவும் இவர் செய்தது இல்லை.
//பாமக போன்ற ஜாதிக்கட்சி என்ன தவறு செய்தாலும், அதை விமர்சிக்க மறுக்கிற, ஏதோ ஒரு வகையில் பாமக மீது பாசமாக இருக்கிற வன்னிய பெரியாரிஸ்ட்டுகளின் ‘வன்னியப் பகுத்தறிவு’,
‘அண்ணாதுரை முதலியாரின் மறைவுக்குப் பிறகு முதல்வராகும் தகுதி நெடுஞ்செழியன் முதலியாருக்கும், அன்பழகன் முதலியாருக்கும்தான் இருந்தது. அதை கருணாநிதி தட்டிப் பறித்துவிட்டார்’ என்கிற பொய்யான காரணத்தை உண்மையாக நம்பி, அதை உள் அரசியலாக வைத்து, வெளியில் ‘கருணாநிதி தமிழன விரோதி, திராவிட இயக்க கொள்கையையே குழிதோண்டி புதைத்துவிட்டார்’ என்று முற்போக்காக குற்றம் சாட்டி, திராவிட இயக்க எதிர்ப்பாளர்களான பழ. நெடுமாறனையும், ராமதாஸையும் – கருணாநிதி எதி்ர்ப்பிற்காகவே ஆதரிக்கும், முதலியார் பெரியாரிஸ்ட்டுகளின் திராவிட இயக்க ‘பாசம்’,
//
தோழர் மதிமாறன் அவர்களே நீங்கள் இளயரஜவுக்கு சப்பைக்கட்டு வாங்குவதை பார்த்தால் மேல சொன்னதில் நீங்களும் ஒரு வகை போலத்தான் தோன்றுகிறது.
அவரை யாரும் எதிர்க்கவில்லை. அவர் என்றைக்கு பெரியார் படத்திற்கு இசை அமைக்க முடியாது என்றாரோ அன்றே அவரின் அறியாமை பகுத்தரிவாதிகளுக்கு அம்பலமாகியது. அதற்க அவரை ஒன்றும் விமர்சனம் செயவில்லை. ஏன் என்றால் அவர் பர்பனரள்ளதர். ஒரே காரணம்.
உங்களின் தாரசு ஒரு பக்கம் சாய்ந்து உள்ள்ளது. சரி செய்யவும்.
//……….
பாமக போன்ற ஜாதிக்கட்சி என்ன தவறு செய்தாலும், அதை விமர்சிக்க மறுக்கிற, ஏதோ ஒரு வகையில் பாமக மீது பாசமாக இருக்கிற வன்னிய பெரியாரிஸ்ட்டுகளின் ‘வன்னியப் பகுத்தறிவு’,
‘அண்ணாதுரை முதலியாரின் மறைவுக்குப் பிறகு முதல்வராகும் தகுதி நெடுஞ்செழியன் முதலியாருக்கும், அன்பழகன் முதலியாருக்கும்தான் இருந்தது. அதை கருணாநிதி தட்டிப் பறித்துவிட்டார்’ என்கிற பொய்யான காரணத்தை உண்மையாக நம்பி, அதை உள் அரசியலாக வைத்து, வெளியில் ‘கருணாநிதி தமிழன விரோதி, திராவிட இயக்க கொள்கையையே குழிதோண்டி புதைத்துவிட்டார்’ என்று முற்போக்காக குற்றம் சாட்டி, திராவிட இயக்க எதிர்ப்பாளர்களான பழ. நெடுமாறனையும், ராமதாஸையும் – கருணாநிதி எதி்ர்ப்பிற்காகவே ஆதரிக்கும், முதலியார் பெரியாரிஸ்ட்டுகளின் திராவிட இயக்க ‘பாசம்’
………………//
தோழர் மதிமாறன் அவர்களே நீங்கள் இளயரஜவுக்கு சப்பைக்கட்டு வாங்குவதை பார்த்தால் மேல சொன்னதில் நீங்களும் ஒரு வகை போலத்தான் தோன்றுகிறது.
அவரை யாரும் எதிர்க்கவில்லை. அவர் என்றைக்கு பெரியார் படத்திற்கு இசை அமைக்க முடியாது என்றாரோ அன்றே அவரின் அறியாமை பகுத்தரிவாதிகளுக்கு அம்பலமாகியது. அதற்க அவரை ஒன்றும் விமர்சனம் செயவில்லை. ஏன் என்றால் அவர் பர்பனரள்ளதர். ஒரே காரணம்.
உங்களின் தாரசு ஒரு பக்கம் சாய்ந்து உள்ள்ளது. சரி செய்யவும்.
//சுயசாதி அபிமானமில்லாத தாழ்த்தப்பட்டவர் பார்ப்பன அடிவருடி அல்லவா?//
ஆஹா, எப்டிங்க… இந்த மாதிரி பார்முலா எல்லாம் டிரைவ் பண்றீங்க! பயங்கர ரிசர்ச் போங்க!
http://kgjawarlal.wordpress.com
இதுக்கு எக்குத்தப்பா பேசுறவுங்க கொஞ்சம் “பேராண்மை” பற்றி மதிமாறன் என்ன எழுதி இருக்கார்னு படிச்சுட்டு வங்க.
தாழ்த்தப்பட்ட இளைஞன் நல்ல நிலைக்கு உயரும் பொழுது தான்சார்ந்த சமூகத்திற்கு முன்னேறவழி காட்ட வேண்டுமே அன்றி என்னை எல்லோரும் ஏத்து கொண்டார்கள் என்று தன் சுயசாதி மக்கள் படும் இன்னல்களை மறந்து போனால் சரிதானா?
அம்பேத்கார் பற்றி பெரியார்வாதியின் பார்வையில் எழுதிய மதிமாறன் பெரியார் அம்பேத்காரை போற்றுவதற்கு காரணம் அம்பேத்காரின் படிப்பு தாழ்த்தப்பட்டவர்களுக்கு பயன்பட்டதே காரணம் என்று எழுதி இருக்கிறார். இளையராசா தாழ்த்தப்பட்டவர்களுக்கு எப்படி பயன்பட்டார் என்று நீங்கள்தான் கூறவேண்டும்.
இந்த அப்பாவி பக்தர் ஒன்றுமே தெரியாதவர் பாவம் என்கிறார் மதிமாறான். அய்யா பாவலரின் தம்பிதான் நீங்கள் கூறும் அப்பாவி பக்தர். இன்றைக்கு கோவில் கோவிலாக அலைகிறார் அந்த கொவில்களுக்குள்ளே போவதற்கு உரிமை தேடித்தந்தவர் பெரியார் என்பதை மறந்து திருவாசகத்திற்கு உருகி கொண்டு இருக்கிறார். பெரியாரை புரம்தள்ளுகிறார்.
மதிமாறன் இந்த கட்டுரைக்கு மறு ஆய்வு கட்டுரை எழுத வேண்டும். இவரை போலே அம்பேத்காரும் அப்பாவி பக்தனாக இல்லாமல் போனதால்தான் நீங்களும் நானும் இன்று ஏதோ இந்த நிலைக்கு வந்து இருக்கிறோம்.
போகிற போக்க பார்த்தா மதிமாறன் “இப்ப யாருங்க சாதி பார்க்கிறா? என்று எழுத ஆரம்பித்து விடுவார் போல தெரிகிறது. அவருக்கு ஆதரவு கொடுத்து எழுதும் பலர் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
//போகிற போக்க பார்த்தா மதிமாறன் “இப்ப யாருங்க சாதி பார்க்கிறா? என்று எழுத ஆரம்பித்து விடுவார் போல தெரிகிறது//
அப்படி எல்லா மக்களும் சாதி வேறுபாடு பார்ப்பதை நிறுத்தினால் கூட,
“ஏனையா சாதியை விட்டு விட்டீர்கள், சாதியை விடாதீர்கள் ஐயா”, என்று கூறுவார்கள் போல் உள்ளது.
சாதி உணர்வு மனதில் புதைந்து கிடப்பதையே இது காட்டுகிறது.
//இளையராசா தாழ்த்தப்பட்டவர்களுக்கு எப்படி பயன்பட்டார் என்று நீங்கள்தான் கூறவேண்டும்//
இளையராஜா அரசியல்வாதியா? சமூக சிந்தனையாளரா? அரசு அதிகாரியா?
அவர் உதவி செய்ய கூடிய அதிகாரத்திலே இருக்கிறாரா?
இசை எல்லோருக்கும் பொதுவான விஷயம்.
அலெக்சாண்டர் பிளமிங் பென்சிலினை கண்டு பிடித்தார் என்றால் அது உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் தான்.
எடிசன் பல்பு கண்டு பிடித்தார் என்றால் அது உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் தான்.
அது போல ராஜாவின் இசையும் உலகில் எல்லோருக்கும் பொதுவானதுதான்.
இளையராஜா தனது திறமையால் இசையினால் தமிழ் மக்களை தன்னை திரும்பி பார்க்கச் செய்தவர்.திரையுலகில் இட ஒதுக்கீடு இருந்து அதன் மூலம் அவர் மேலே வ்ந்து தன் ஜாதியை கண்டு கொள்ளவில்லை என்றால் அவரை குறை சொல்லலாம். மேலும் பாரதிராஜா,பாக்கியராஜா,இளையராஜா என்று ஜாதி பார்க்காத நட்பால் திரையுலக கூட்டணி தொடங்கியவர்கள்.தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பவரை இதுபோல் விமரிசனம் செய்வது தவறு.
//அய்யா பாவலரின் தம்பிதான் நீங்கள் கூறும் அப்பாவி பக்தர். இன்றைக்கு கோவில் கோவிலாக அலைகிறார் பெரியாரை புரம் தள்ளுகிறார்//
தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு தலைவரை விரும்புவார்கள்.
தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்யார் பெரியாரை தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்கிரார்களா என்று சொல்ல முடியாது. பெரியாரை தலைவராக ஏற்றுக் கொள்ளாதவர்களை எல்லாம் புறக்கணிக்க, குறை சொல்ல முடியுமா?
Com.Mathi– who is “AGG MARK” paguththarivathi? unkal paarvaiyil?
பெரியார் அவர்களின் இலக்கு சாதி பிரிவினைகள் ஒழிய வேண்டும்; உயர்வு தாழ்வு கருதும் எண்ணப் போக்கு கூடாது என்றே நான் நம்புகிறேன். (இறை மறுப்பு என்பது வேறு; சமூக ஏற்ற தாழ்வு என்பது வேறு; நாம் இரண்டையும் ஒன்றிணைத்து பார்க்கலாமா?)
எனவே, இறை பக்தியுடனும், அதாவது, சாதியை “தோற்றுவித்த” இந்துக்கள் வணங்குகின்ற அதே தெய்வங்களை மறுக்காமலும், அதே சமயம் சாதி வேற்றுமை பாராமல் இருப்பதும் , அல்லது பார்ப்பனர்கள் அல்லாத சாதி சேர்ந்தவர்களும் தங்கள் சாதிப் பட்டையை தொங்கவிட்டுக் கொண்டு அலையாமல் இருந்தால் அது தவறு எனக் கருத முடியாது அல்லவா? (இளைய ராஜாவுக்கு நீங்கள் சொன்ன குறைகள் உண்மையிலேயே குறைகள் தானா? )
Hmmm Neenga enna dhan sonnalamum இளையராஜா Karuppu paapan…
avar Music kku naan adimai aanal avar Bathi Karuthu enaku pidikavilai..
Ingu neenga avarukku support la yelutuvathu romba tavaru….
Manidhan tavaru seibavan dhan
Well Said – as usual
இளையராஜா தனது திறமையால் இசையினால் தமிழ் மக்களை தன்னை திரும்பி பார்க்கச் செய்தவர்.திரையுலகில் இட ஒதுக்கீடு இருந்து அதன் மூலம் அவர் மேலே வ்ந்து தன் ஜாதியை கண்டு கொள்ளவில்லை என்றால் அவரை குறை சொல்லலாம்…….
பெரியார்’ படத்திற்கு இசையமைக்க முடியாது என சொன்னது என் ?
இளையராஜாவை கண்டிக்கிற பகுத்தறிவாளர்கள் யாரும், ராமதாசையோ பாமகாவையோ, முத்துராமலிங்கத்தையோ கண்டிக்கவில்லை பாருங்கள்…… இந்த பதிலும் அதைத்தான் சொல்லியிருக்கிறது… இங்கு வந்து இளையராஜாவை திட்டுகிவர்களும் அதைத்தான் நிருப்பித்து இருக்கிறார்கள்.
எப்படி இருந்தாலும் சாதி உணர்வை, தலித் விரோதத்தை மறைமுகமாவது காட்டி விடுகிறார்கள். சாதி ஒழிக்கிறது முடியாத காரியம்.
இளையராஜாவின் அறியாமை என்று நீங்கள்
எழுதி விட்டீர்கள் !
உங்களின் அறியாமையை (?) எண்ணி அவர்
சிரித்துக் கொள்வார் !
எது அறியாமை ? எது அறிவுடைமை ?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவும்
சரியான விடை கிடைக்காத கேள்வி இது !
உங்கள் எழுத்துத் திறமைக்கு (கருத்துக்கு அல்ல)
பாராட்டுக்கள் !
என் (வலைப்) பக்கமும் கொஞ்சம் வந்து தான்
பாருங்களேன்.
http://www.gkpage.wordpress.com
tamizhanban னிடம் எச்சரிகையாக இருங்கள்.
//ராமதாசையோ பாமகாவையோ, முத்துராமலிங்கத்தையோ கண்டிக்கவில்லை பாருங்கள்///
இவர்களை ஆதரிக்கிற முற்போக்காளர்களை பற்றிதான் பதிலில் முக்கியமாக குறிப்பிட்டு இருக்கிறது. அவர்களைப் பற்றி
யாரும் கண்டிக்கவில்லை. குறிப்பிடவில்லை. அதை ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை.
பக்கத்து இலைக்கு பாயாசம் என்பதுபோல், தாழ்த்தப்பட்டவர்கள் மீது அன்புள்ளவர்போல் எழுதுகிற எழுதுகிற இந்த tamizhanban கள் போன்ற தந்திரமான சாதி அபிமானிகள் இருக்கும் வரை சாதியை சத்தியமாக ஒழிக்கவே முடியாது .
இவர் முத்துராமலிங்கத்தை ஆதரிக்கிற முற்போக்களார்களை பற்றி ஒரு வார்த்தைகூட கண்டிக்காமல் தொடர்ந்து முற்போக்காக எழுதுகிறார்.
tamizhanban அவர்களே, நீங்கள் மதிமாறனின் பழைய எழுத்துக்களை எல்லாம் கூட உதாரணம் காட்டி எழுதுகிறீகள். ஆனால் நீங்கள் இதற்கு முன் எந்த விவாத்திலேயோ, பின்னூட்டங்களோ போட்டதாக நினைவில்லை. ஆணால் இளையராஜவை பற்றி திட்டுவதற்கு இப்படி ஓடி வந்து எழுதுகிறீர்கள். உண்மையில் உங்கள் பெயர், tamizhanban? இல்லை ஆட்டோ சங்கரா?
இந்த ஆட்டோ சங்கர்தான் தொடர்ந்து மதிமாறனை தந்திரமாக கேவலமாக விமரிசித்து மதிமாறன் தளத்திலேயே எழுதி வருகிறார்….
ஆதிக்கஜாதிக்காரர்களை எல்லாம் விமர்சித்து வந்தபோது தேவர் சாதி, வன்னியர் சாதிக்காரர்களை எல்லாம் விமரிசித்து வந்தபோது அந்த சாதிவெறியர்களை நீங்கள் கண்டித்து இருக்கிறீர்களா?
வைகோ, சீமான் போன்றவர்கள் முத்துராமலிங்கத்தின் ஜெயந்தி விழாவிற்கு போய்விட்டு வந்ததை நீங்கள் கண்டித்து இருக்கீறீர்களா?
அதை நீங்கள் கண்டித்து இருந்தால் இளையராஜவை நீங்கள் கண்டித்து எழுதுவதில் நியாயம் இருக்கிறது.
இல்லை என்றால் உங்களுக்கு ஜெயந்திர சரஸ்வதியை திட்டுவதற்குகூட யோக்கியதை இல்லை.
நீங்கள் ஒரு ஆதிக்கஜாதியை சேர்ந்த ஒரு ஜாதிவெறியனாகத்தான் அடையாளப்படுத்தப்படுவீர்கள் tamizhanban என்கிற ஆட்டோ சங்கர் அவர்களே.
எந்த ஒரு படத்துக்கும் இசை அமைப்பதும், இசை அமைக்க மறுப்பதும் ஒரு இசையமைப்பாளரின் உரிமை.
எல்லொரும் கடவுளுக்கு தலை வணங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது எப்படிக் காட்டுமிராண்டிக் கொடும் செயலோ,
அதே போல பெரியாரிடம் ஒருவர் ஈடுபாடு காட்டவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக, ஒருவரை கட்டம் கட்டி தாக்குவதும் உள் நோக்கமுள்ள கொடும் செயலே.
tamizhanban, NithiChellam, M.ARUMUGAM, போன்றவர்கள் அடிப்படையில் தலித் விரோதிகளாக இருப்பார்கள், இவர்களுக்கு அம்பேத்கர் என்ற பெயரே கூட பிடிக்காது.
திருமாவளவன் பொன்ற தலித் தலைவர்கள் தவறுசெய்தால் அதை கண்டிப்பார்கள். ஆனால், ராமதாசோ, வைகோவோ, சீமாமானோ போன்றவர்கள் என்ன தவறு செய்தாலும் அதை கண்டுகொள்ளமாட்டார்கள்.
இதுதான் இந்த சாதிஅபிமான இந்தக்கோமாளிகளின் முற்போக்கு.
//ஒரு எளிய பக்தனுக்கு இருப்பதுபோல், முழுமையான அறியாமையால் ஆனது//
மதிமர்றன்,
ஆமாங்க,என்ன இருந்தாலும் இளையராஜாவுக்கு உங்களைப் போல அறிவோ, விஷ்ய ஞானமோ இருக்க முடியுமா என்ன.
எனினும் நீங்க சொல்வது போல் பகுத்தறிவு வாதிகளையும் பல வகைப் படுத்தலாம்.
1)தமிழர் மாமாவான பெரிய தாடிக்காரரோட பகுத்தறிவு,காழ்ப்புணர்சியில் பிறந்து,அயோக்யத்தனத்தை மணந்து,ரெள்டியிசத்தை புணர்ந்து,திராவிடத்தால் வரும் அரசியல் லாபத்தை உணர்ந்து,தமிழ் சமுதாயத்தை அழிக்க, சீராக வளர்க்கப்ப்ட்ட ஒன்றாகும்.
2)மதிமாறனோட பகுத்தறிவு அறியாமையில் பிறந்து,அகம்பாவத்தை புணர்ந்து,அசட்டுத்தனத்தை ஈன்று உருப்படாத பகுத்தறிவாகும்.
அடேங்கப்பா உடனே அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன்னு சொல்லும் நல்லவர்களே! பதில் சொல்லமுடியலைன்னா உடனே ஆதிக்க சாதிவெறியன்னு சொல்ல ஆரம்பிச்சுடும் பகுத்தறிவு பூசாரிகளே! நான் மதிமாறனின் பல தலைப்புகளில் எனது கருத்துக்களை முன்வைத்து இருக்கிறேன். அப்புறம் அவன் எதிர்த்தியா இவன எதிர்த்தியான்னு கேட்பதுக்கு முன்னால நான் எழுதிய சில உங்களுக்காக.
/////////////////////////////////////////////////////
http://tamizhanban.wordpress.com/2009/08/
///////////////////////////////////////////////////
பெரியாரின் நேரடிவாரிசுகள் என்று சொல்லிக்கொள்ளும் திராவிடகட்சிகள் தமிழகத்தின் கடந்த நாற்பதாண்டுகளில் ஆதிக்கசாதிகளை தடவிகொடுத்து அழகுபார்த்தது கொஞ்சமா என்ன?பெரியாரால் பெரிதும் நேசிக்கப்பட்ட காமராசர் இன்று சாதியதலைவராக்கப்பட்டு இருந்தாலும் உண்மையில் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரே!. முத்துராமலிங்கம் பலமுறை காமராசரை சாதியதாக்குதல் புரிந்து இருக்கிறார். காமராசர் எனது கண்களுக்கு சாதிய ஆடையாளமாக தெரியவில்லை.
அண்ணா ‘நல்லதம்பி’ என்றழைத்த கருணாநிதி சட்டசபையில் முத்துராமலிங்கம் கூறிய பிற்போக்குத்தனமான “மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம்! கங்கை சூதகமானால்?” என்ற அரைவேக்காட்டுகருத்தை மேற்கோளாக குறிப்பிட்டு இருக்கிறார். முத்துராமலிங்கத்தின் நுற்றாண்டுவிழா அதுதாங்க ‘குருபூஜைக்கு’ சிறப்பு விருந்தினராக சென்று வந்திருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் உசிலம்பட்டியில் சிறுத்தைகள் இந்த மண்ணில் நடமாடலாம் சிங்கங்கள் நடமாடக்கூடதா? என்றார் சிறுத்தை யார்? சிங்கம் யார்? என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். முத்துராமலிங்கத்தின் மரணத்தின் போது திமுக இரங்கல் வாசித்தா இல்லையா? முத்துராமலிங்கத்தின் குருபூஜைக்கு சென்றுவரும் கருணாநிதி இமானுவேல்சேகரன் குருபூஜைக்கு என்றாவது சென்றதுண்டா?
பெரியாருக்கு எதிராகவும், மிகத் தீவிரமாக இயங்கினார் முத்துராமலிங்கத் தேவர். பெரியாரை மிகக் கேவலமான வார்த்தைகளால் ஏசி இருக்கிறார் என்று தெரிந்தும், ஜாதி உணர்வைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்கும் அல்லாமல், அவர் மீது பாசமாக இருக்கும் ‘தேவர் பெரியாரிஸ்ட்’டின் ‘பார்ப்பனரல்லாத’ உணர்வு,
தமிழ்மண், தமிழனின் மண்’ என்று நீட்டி முழங்கிவிட்டு, தேவர் ஜெயந்தியின்போது , ‘போற்றிப் பாடடிப் பெண்ணே, தேவர் காலடி மண்ணே’ எனறு சுருதி கூட்டுகிற சில தமிழ்த்தேசியவாதிகள்
நீங்க செந்தமிழன் சீமானைத்தானே சொல்றீங்க.இன்னைக்கு குழந்தைகள் தினம்.அதனாலே குழந்தை சீமானை திட்டாதீங்க அழுதுடுவோம்..வலிக்குது
tamizhanban
//முத்துராமலிங்கத்தின் குருபூஜைக்கு சென்றுவரும் கருணாநிதி இமானுவேல்சேகரன் குருபூஜைக்கு என்றாவது சென்றதுண்டா?//
இதை எதற்கு உதாரணம் காட்டுகிறீர்கள்? கருணாநிதியை நீங்கள் விமரிசிக்கவில்லை என்று உங்களை எவன் கேட்டான்?
கருணாநிதியைப் பற்றி நீங்கள் சொல்லிதான் தெரியவேண்டும் என்பதில்லை. அது ஊர் அறிந்தது.
//ராமதாசோ, வைகோவோ, சீமாமானோ போன்றவர்கள் என்ன தவறு செய்தாலும் அதை கண்டுகொள்ளமாட்டார்கள்.
இதுதான் இந்த சாதிஅபிமான இந்தக்கோமாளிகளின் முற்போக்கு.//
என்று உங்களைப் போன்றவர்களை குற்றம் சாட்டினால் நீங்கள் கருணாநிதியை காரணம் காட்டுகிறீர்கள்.
முத்துராமலிங்கத்தின் குருபூஜைக்கு செல்லும் ஒருவர் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்வதோ, இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்லும் ஒருவர் முத்துராமலிங்கம் நினைவிடத்திற்கு செல்வது மோசடியானது. இமானுவேல் சேகரனை அமமானப்படுத்துவதற்கு சமம்.
முத்துராமலிங்க நினைவிடத்திற்கு சென்ற கருணாநிதி, இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்லக்கூடாது.
உங்களுடய இடுக்கையிந் நடுனிலைமயை மெச்சுகிறேன்.சாதி என்பது ஒடுக்கப்பட்ட மக்களைத்தவிர அனைவருக்குமே தேவையானதாகத்தான் உள்ளது.பார்பனர்களுக்கு அவர்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டவும் ,இதர சாதியினருக்கு அதே போல அல்லது அரசியல் காரண்களுக்காகவும் சாதி தேவை படுகிறது.சுதந்திரத்துக்கு 60 ஆண்டுகள் கழித்தும் இன்னும் சாதீய அடிபடையில் திருமணங்கள் வலுவாக முன்னைவிடவும் அதிகமாக தொடரப்படுவது கண்டால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.திரு .இமயம் அவர்களின் படைப்புகளை படித்தபோது இன்னும் துக்கமாகவே உணர்ந்த்தேன்..
ஸ்டாலினைக்குறித்த உங்கள் மதிப்பீடு சரியானது என்ரு நினைக்கிறிர்களா?
tamizhanban
தமிழன்பன் நீங்கள் முட்டாளா? இல்லை முட்டாள் போல் நடிக்கிறீர்களா?
முற்போக்காளர்களின் சாதி வெறி, அவர்களின் சாதிவெறியர்களுக்கான அவர்களின் ஆதரவு பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்டால், நீங்கள் கருணாநிதியை பற்றி பேசுகிறீர்கள். கருணநிதி முற்போக்காளரா?
பெயரிலியன் (02:01:58) : ///
Neenga yaaru nu enaku theriyum…
Nan yenge avargalai pathy vimarsanam panna la nu neenga nenaikurengaaaa…
naan yaaryaruum support pannala avar Music kku naan rasikan
ungal pol oru lossu irukkum varai nadu uruppudathu
பெயரிலியன் (02:01:58) : ///
Neenga yaar nu enaku theriyum
Naan yenge avargalai support panna pesi iruka nu neenga sola mudiyuma??
avargal methu enaku kadum vimarsanam iruku….
அடிப்படையில் தலித் விரோதிகளாக இருப்பார்கள், இவர்களுக்கு அம்பேத்கர் என்ற பெயரே கூட பிடிக்காது.///
neenga solum karuthu mikavum aacingam…..
hmmmm ipadi elm ungalukku pesa varuma???
ada ada romba nalla yeluthuringa sir neenga….
Enaku neenga onum sola vendiyathu ilai
naan epadi irukanum enaku theiryum
தமிழன்பன் நீங்கள் முட்டாளா? இல்லை முட்டாள் போல் நடிக்கிறீர்களா?
முற்போக்காளர்களின் சாதி வெறி, அவர்களின் சாதிவெறியர்களுக்கான அவர்களின் ஆதரவு பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்டால், நீங்கள் கருணாநிதியை பற்றி பேசுகிறீர்கள். கருணநிதி முற்போக்காளரா?
////////////////////////////
ஏம்பா ssk நீ லூசா இல்லை லூசு மாதிரி நடிக்கிறியா?
கருணாநிதி யாருன்னு நீயே சொல்லு!
பம்பாய் என்ற இந்துத்துவா படத்திற்கு இசுலாமியர் எஆர் ரகுமான் இசை அமைத்தால் ரகுமான் இந்துத்துவா கைக்கூலி இதே தேவர்மகன் விருமாண்டி சின்னகவுண்டர்னு இளையராசா இசை அமைத்தால் அவரு அப்பாவி தொண்டனா?
பெரியார் பத்திய படத்திற்கு இசை அமைக்க “கொள்கை” ரீதியாக மறுத்த அப்பாவி பக்தர் அல்லது அப்பாவி தொண்டர் தலித் விரோதபடங்களுக்கு மறுக்க வேண்டியதுதானே!
அப்பாவி தொண்டர் இளையராசா வாழ்க வாழ்க!
Nithi Chellam, tamizhanban இப்போதுகூட நீங்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானை திட்டுகிறீர்கள். முற்போக்காளர்களின் சாதி வெறியைப் பற்றியோ, சாதி வெறியர்களை ஆதரிக்கிற அவர்களின் செயலை பற்றியோ விமர்சிக்க மாட்டுகிறீர்கள். ஏன்?
இளையராஜவை பற்றி இவ்வளவு திட்டுகிற நீங்கள் சீமான், ராமதாஸ், வைகோ போன்றவர்களின் மோசடி குறித்து பேச மறுக்கிறீர்களே ஏன்,? முட்டாள் என்று சொன்னால் மட்டும் கோபம் வருகிறது. நிங்களெ சொல்லுங்கள் உங்களை என்ன வென்று சொல்வது?
தோழர் தமிழன்பன் அவர்களுக்கு,
உங்கள் பதில்களை படித்தேன். இளையராஜா கருப்பு பார்ப்பனரா? இல்லையா? இந்து மத ஆதரவாளரா இல்லையா? என்பதல்ல இப்பதிப்பின் நோக்கம். மதிமாறன் அவர்களும் எங்கேயும் இளையராஜா இந்து மத ஆதரவாளர் அல்ல என்று குறிப்பிடவில்லை. அதை மறுக்கவும்வில்லை.
நீங்கள் கூறுவது போல் இளையராஜா கருப்பு பார்ப்பனர் என்றே இருந்தாலும் கூட கருப்பு பார்ப்பனியத்தை விமர்சிக்கும் தகுதி வெள்ளை பார்ப்பனியத்துக்கும் முறுக்கு மீசை பார்ப்பனியத்துக்கும் இருக்கிறதா என்பது தான் என் கேள்வி. உங்களை சாதிய வட்டத்தில் அடைக்க விரும்பவில்லை. நீங்களும் அதை விரும்பமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். ஆனால் ஒரு நேர்மையான விமர்சனம் என்பது பாகுபாடின்றி செயலுக்கேற்ப விமர்சிப்பதே ஆகும்.
முற்போக்காளன் என்று தன்னை அடையாளப்படுத்தி முன் வாயால் முற்போக்கு பேசி பின் வாயால் சாதியில் உழல்பவர்கள் யாராக இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாக குடும்பத்தினாராக இருந்தாலும் கூட விமர்சிக்க வேண்டும்.
இது தான் ஜனநாயகத் தன்மை.
ஏற்கனவே ஒருவர் நீங்கள் முற்போக்காளர்களை விமர்சிப்பதில்லை என்று சொன்னதற்கு நீங்கள் கருணாநிதியை விமர்சித்து எழுதிய சுட்டியை அளித்தீர்கள். நல்லது. ஆனால் முற்போக்காளர்களை விமர்சித்தேன் என்று துரோகி கருணாநிதியின் மீதான விமர்சனத்தை காட்டியது உங்களுக்கே சரியென தோன்றுகிறதா? அல்லது கருணாநிதியை தான் நம் இளைஞர்கள் முற்போக்காளனாக இன்று ஏற்றுக்கொண்டுள்ளார்களா?
சமீபத்தில் சுப.வீயின் பிழைப்பு வாதம் பற்றிய உங்கள் பதிப்பை படித்திருக்கிறேன். அம்பேத்கர் சட்டக்கல்லூரி விவகாரத்தில் சு.ப வீயின் நிலைபாட்டை விமர்சித்து எழுதினீர்கள். இவையெல்லாம் தவறில்லை.
நேரடியாகவே கேட்கிறேன். சுப வீ துரோகி கருணாநிதி போன்றோர்களை நேர்மையாக விமர்சிக்கும் நீங்கள், ஆதிக்க சாதிவெறியன் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலையணிவித்த சீமானை பற்றி மட்டும் ஏன் விமர்சிக்க மறுக்கிறீர்கள்? சீமான் மட்டும் விமர்சங்களுக்கு அப்பாற்ப்படவரா என்ன? அல்லது உங்களுக்கு நெருங்கிய நபரா?
இளையராஜாவை கருப்பு பார்ப்பான், பழுப்பு பார்ப்பான் என்று என்ன வேண்டுமானாலும் விமர்சியுங்கள். ஆனால் அதற்கான தகுதி உங்கள் விமர்சன பார்வையில் நேர்மையிருந்தால் மட்டுமே இருக்கும்.
உங்கள் விமர்சன பார்வையில் நேர்மையிருக்கிறதா தோழர் தமிழன்பன்?
உங்கள் விமர்சன பார்வையில் நேர்மையிருந்தால் மட்டுமே உங்களை இளையராஜா பற்றி விமர்சிக்கும் தகுதியுடையவராகக் கருதுவேன்.
(இதுவே இப்பதிப்பின் சாரம் என்றும் கூறலாம்)
tamizhanban (07:18:26) :
////அடேங்கப்பா உடனே அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன்னு சொல்லும் நல்லவர்களே! பதில் சொல்லமுடியலைன்னா உடனே ஆதிக்க சாதிவெறியன்னு சொல்ல ஆரம்பிச்சுடும் பகுத்தறிவு பூசாரிகளே! நான் மதிமாறனின் பல தலைப்புகளில் எனது கருத்துக்களை முன்வைத்து இருக்கிறேன். அப்புறம் அவன் எதிர்த்தியா இவன எதிர்த்தியான்னு கேட்பதுக்கு முன்னால நான் எழுதிய சில உங்களுக்காக. ////
என்று ஒரு நடுநிலையானவர்போல் எழுதும் இந்த தமிழன்பனின் யோக்கியதை சீமானை பற்றி மகிழ்நன் எழுதிய கட்டுரைக்கு இவர் போட்ட பின்னூட்டத்தை பாருங்கள்.
//ரெம்ப நல்லா சொன்னீங்க மகிழ்நன்!
இதே பகுத்தறிவு ‘திருமா’ பத்தி விமர்சிக்கும் பொழுது பலபேருக்கு (நம்மளுக்கும்தான்) வருவதில்லையே ஏன்? மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயரை வையுங்கள் என்றும் பிறந்தநாளில் அரசு விடுமுறை விடுங்கள் என்றும் கோரிக்கை வைப்பது. சேதுராமனோடு சேர்ந்துகொண்டு தேவர் உருவப்படம் போதித்த நாணயம் வெளியிடுவது. அப்புறமா நான் அண்ணல் அம்பேத்காரின் வாரிசு பெரியாரின் வாரிசு என்று போஸ்டர் ஓட்டுவது. இதையெல்லாம் நாம கண்டுக்க கூடாது. அப்படி ஏதாவது எழுதினால் தலித் தலைவரை விமர்சிக்கலாமா அப்படின்னு கிளம்பிடுவாங்க.
தமிழன்பன்///
இதுதான் இந்த தலித் ஆதரவாளரின் நடுநிலைமை. இதுபோன்ற நடுநிலையாளர்களைத்தான் இந்த பதில் காறி உமிழ்கிறது. இப்படி இருப்பவரை ஆதிக்க சாதிவெறியன் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?
சீமான் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திவிழாவில் கலந்து கொண்டதை கண்டித்து எழுதினார் சீமானின் ரசிகரான மகிழ்நன் என்பவர். மகிழ்நன் எழுதிய கட்டுரையை கண்டித்து
நடுநிலையானவர்போல் எழுதும் இந்த தமிழன்பனின் யோக்கியதையான பின்னூட்டத்தை பாருங்கள்.
//ரெம்ப நல்லா சொன்னீங்க மகிழ்நன்!
இதே பகுத்தறிவு ‘திருமா’ பத்தி விமர்சிக்கும் பொழுது பலபேருக்கு (நம்மளுக்கும்தான்) வருவதில்லையே ஏன்? மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயரை வையுங்கள் என்றும் பிறந்தநாளில் அரசு விடுமுறை விடுங்கள் என்றும் கோரிக்கை வைப்பது. சேதுராமனோடு சேர்ந்துகொண்டு தேவர் உருவப்படம் போதித்த நாணயம் வெளியிடுவது. அப்புறமா நான் அண்ணல் அம்பேத்காரின் வாரிசு பெரியாரின் வாரிசு என்று போஸ்டர் ஓட்டுவது. இதையெல்லாம் நாம கண்டுக்க கூடாது. அப்படி ஏதாவது எழுதினால் தலித் தலைவரை விமர்சிக்கலாமா அப்படின்னு கிளம்பிடுவாங்க.
தமிழன்பன்///
சீமானை விமர்சித்து எழுதப்பட்ட அந்தக் கட்டுரையில் திருமாவளனை கண்டிக்கிறார். இதுதான் இந்த தலித் ஆதரவாளரின் நடுநிலைமை. இதுபோன்ற நடுநிலையாளர்களைத்தான் இந்த பதில் காறி உமிழ்கிறது. இப்படி இருப்பவரை ஆதிக்க சாதிவெறியன் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?
யாருங்க அது…
நான் சீமானின் ரசிகரா?
சீமானின் பேச்சு இளைஞர்களை கவர்ந்திழுக்கும்படியாக இருந்த காரணத்தால்….மக்கள் மத்தியில் நாங்கள் இருக்கும் களம், மும்பையை பொருத்து….பெரிய அளவில் இன்றைய தலைமுறைக்கு பெரியாரை, அம்பேத்கரையும் அறிமுகப்படுத்த வேண்டும்.என்ற நோக்கம் இருந்தது…….அதையே நடைமுறைப்படுத்த முயற்சி செய்தோம்…
சீமானின் ரசிகராக இருந்திருந்தால்…..
அந்த விமர்சன பதிவை நான் எழுதியிருக்கமாட்டேன்………
எமக்கு தேவையெல்லாம் சமூக மாற்றம், அதற்காக யாரிடமும் கெஞ்சவும் தயங்கமாட்டோம்………..தேவைப்பட்டால் மிஞ்சவும் தயங்கமாட்டோம்
தமிழன்பன்
///முற்போக்காளன் என்று தன்னை அடையாளப்படுத்தி முன் வாயால் முற்போக்கு பேசி பின் வாயால் சாதியில் உழல்பவர்கள் யாராக இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாக குடும்பத்தினாராக இருந்தாலும் கூட விமர்சிக்க வேண்டும்.
இது தான் ஜனநாயகத் தன்மை. ///
என்று வேந்தன் சொல்லி இருக்கிறார். தமிழன்பன் அப்படி தெரிந்தவர் என்பதற்காக விமர்சிக்க மறுப்பவர் இல்லை.
தமிழன்பனுக்கு மதிமாறைனை நன்றாக தெரியும். ஆர்குட்டில் அம்பேத்கருக்கு ஆதரவாக தொடர்ந்து எழுதி வருபவர்தான் தமிழன்பன். மதிமாறனும அவர் நண்பர்களும் கொண்டு வந்த அம்பேத்கர் டி சர்ட் குறித்து ஆதரவு தெரிவித்து எழுதியவர்தான் தமிழன்பன்.அப்படி இருந்தும் இளையராஜாவை ஆதரிக்கிறார், தமிழ்தேசியத்தை விமர்சிக்கிறார் என்பதற்காக மதிமாறனை கடுமையாக விமர்சித்திருக்கிறார் தமிழன்பன்.
அதுபோல் மகஇக போன்ற புரட்சிகர அமைப்புகைளைகூட ஈழப்பிரச்சினைக்காக ஒரு சார்பு எடுத்து மிக மோசமாக திட்டியிருக்கிறார்.
சீமானிடம் மட்டும் ஏன் பாசம் காட்டுகிறார் என்று தெரியவில்லை…..?
தோழர்கள் கவனத்திற்கு நான் ஒருபோதும் இளையராசாவை கருப்பு பார்பான் என்று சொல்லவில்லை. அப்படி நான் சொல்லி இருந்தால் நிருபிக்கவும்.
முத்துராமலிங்கத்துக்கு மாலை இட்டதற்காக கருணாநிதி திருமாவை விமர்சிக்கும் நான் சீமான் என்றால் மட்டும் ஆதரிக்கிறேன் என்று சொன்னேனா? சீமானின் இந்த செயல் கடுமையான விமர்சனத்திற்கு உரியது. நாம் தமிழர் இயக்கத்தை பெங்களூரில் துவக்கலாம் என்று நண்பர்கள் கேட்டபொழுது அரசியல் இயக்கமாக மாறி ஓட்டுபொறுக்கி அரசியலுக்கு நம்மை சீமான் தள்ளிவிடலாம் அதனால் அந்த இயக்கம் நமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
அம்பேத்கார் பின்னலாடை அணியும் நிகழ்வு குறித்து மதிமாறனோடு பேசி இருக்கிறேன். அவர் கேட்ட உதவிகளை எம்மால் செய்யமுடியாமல் போனது. அம்பேத்கார் பின்னலாடை அணியும் நிகழ்வு பெங்களூரில் நடத்த முயற்சிகளை மேற்கொண்டபொழுது பலநண்பர்கள் பின்வாங்கிவிட்டார்கள். “இப்பெல்லாம் யாருங்க சாதி பார்கிறா?” என்பது என்று ஒதுங்கி கொண்டார்கள். தலித் அமைப்புகள் இது குறித்து பேசியபொழுது பதிலே கூறவில்லை. “இதெல்லாம் பெங்களூரில் ஒத்துவராதுப்பா!” என்று ஒதுங்கி கொண்டார்கள். இங்கே மும்பையில் நடந்தது போலே களம் அமைக்க முடியவில்லை.மகிழ்னனுக்கு நினைவு இருக்கலாம் நான் அவரிடம் இதுகுறித்து எனது கருத்துக்களை கூறி இருக்கிறேன். மதிமாறன் அவர்களின் எழுத்துக்கள் மீது மதிப்பு உண்டு அவர் எழுத்துக்களில் மாற்றுகருத்து இருந்தால் நேரிடியாக எழுதி வருகிறேன்.
சிலர் வேண்டுமென்றே இங்கே சிண்டுமுடிய முயல்கிறார்கள். சீமானோ திருமாவோ சுபவீயோ யாராக இருந்தாலும் நேர்மையாக விமர்சிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
நன்றி
தமிழன்பன்
தோழர் தமிழன்பனுக்கு,
நன்றி!
சந்தர்ப்பவாத சு.ப வீ, துரோகி கருணாநிதி, திருமா போன்றோர்களை விமர்சித்து நீங்கள் எழுதி பதித்ததை போல், விரைவில் சீமானின் இந்த கோமாளித்தனத்தையும் விமர்சித்து எழுதி பதிப்பீர்கள் என்று உங்கள் நேர்மையான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.
தோழர் மதிமாறன் அவர்களுக்கு, வலைதளத்தில் மின்னஞ்சல் இடாமல் பதிக்கப்படும் மறுமொழிகள் அனுமதிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். சரிபார்க்கவும்.
நான் மின்னஞ்சலும் பெயரும் கொடுக்க மறந்துவிட்டு மறுமொழி சொடுக்கிய போது அது தானாகவே ‘பெயரிலி’ என்னும் பெயரில் மறுமொழி பதிக்கபட்டுவிட்டது. அவ்வாறு தான் மேலே உள்ள பதிப்பும் பெயரில்லாமல் ‘பெயரிலி’ என்னும் பெயரில் பதிக்கப்பட்டுள்ளது.
தோழர் தமிழன்பனுக்கு,
நன்றி!
சந்தர்ப்பவாத சு.ப வீ, துரோகி கருணாநிதி, திருமா போன்றோர்களை விமர்சித்து நீங்கள் எழுதி பதித்ததை போல், விரைவில் சீமானின் இந்த கோமாளித்தனத்தையும் விமர்சித்து எழுதி பதிப்பீர்கள் என்று உங்கள் நேர்மையான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.
தோழர் தமிழன்பன் இளையராஜவை ஆதரிக்கிற தோழர் மதிமாறனை கடுமையாக விமர்சிக்கிறீர்கள். தலித் வீரொதி முத்துராமலிங்கத்தை ஆதரிக்கிற சீமானை விமர்சிக்க் மறுக்கிறீர்கள்?
இது சரியா? உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்?
இளைய ராஜா அவர்கள் தன்னை பகுத்தறிவாளராக அடையாளம் காட்டிக் கொண்டது கிடையாது.
அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றே தோன்றுகிரது.
ஆனால் அவர் தன் கடவுள் நம்பிக்கையை அடுத்தவரிடம் திணித்தது இல்லை.
நான் வண்ங்கும் கடவுளை எல்லொரும் வணங்க வேண்டும் என்று பலவந்தப் படுத்தியாகத் தெரியவில்லை.
பிற மார்க்கத்தினர் தெய்வங்களாக வணங்கு பவரை அவர் இழிவு செய்யவோ, அவமானப் படுத்தவோ இல்லை.
அவர் அமைதியான ஆன்மீகத்திலே ஈடுபட்டவராகவே தெரிகிறார்.
அவரை குறை சொல்வது எந்த வகையிலே நியாயம்?
Periar is one of the frauds of Tamil Nadu. If Brahmins fooled the society for many decades, its the turn of Periarists to fraud the Society now. So lets lie down and enjoy!!!
இங்க வந்த பொறவுதான் யார்யார் என்ன ஜாதி,தமிழ்நாட்டுல எத்தன ஜாதி இருக்குன்னு தெரியுது. நல்லா ஜாதிய வளங்க பகுத்தறிவுவாதிகளே.
As a music proffessional ilayaraja should have composed for periyar’s film.but he has refused.it is absolutely wrong.for example:If i am working as a junior engineer in Electricity board i should provide service apart from religion,caste,theist and atheist.but ilayaraja mind is fully fulfilled with paarpanism.in my view in the issue of periyar film ” ilayaraja as a paapan community (karuppu paarpanar)and periyar as a depressed community(thaadi vecha aadhi dravidar).
இளையராஜா பிறந்தது தாழ்த்தப்பட்ட ஜாதியில், அவர் திறமை ஆயிரம் திரைபடங்களுக்கு மேல் இசை அமைத்தது, இது சாதாரண விஷயம் இல்லை, ஆனாலும் அவர் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து விட்டார், மணிரத்தினம்,கே.பாலசந்தர்,கமலஹாசன் போன்ற பார்பனிய மனிதர்களுக்கு ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவே இருந்து உள்ளார்,
periyar thangal perukku pinnal ulla jaadhi peyarai yedukka sonnar aanal rss,HINDU MUNNANI YEPPADI PERIYARAI E.VE RAMASAMY NAYAKKAR YENDRU SOLGIRAARGALO APPADI periyaristuGALAI JAADHI PER POTTU PINNI YEDUKKIRAAR.IDHARKKU PEYAR THAN SUYA JAADHI ABIMANAM.IDHU THAN INNUM PARPANIYATHAI NILAINAATTUGIRADHU.VAAZHGA THANGAL MATRUM ILAYARAJA AVARGALIN PAARPANA THONDU.AR RAHMANAI PARPANA SEVAGAN YENDRU VILASIVITTU ILAYARAJAVAI ARAIYAMAYIL IRUKKUM APPAZHUKATRA MANITHANAGA SITHARIIKUM UNGALUDAYA JAADHI ABIMANA SAPPA KATTU SUPER…