பிடரி மயிர் பிடித்து உலுக்கிய தலைவன்
-கோவி.லெனின்
‘நக்கீரன்’ இதழின் தலைமைத் துணை ஆசிரியர் எழுத்தாளார், ஆவணப்பட இயக்குநர்.வரலாறு உண்மையானதாக இருந்தாலும் அதனை அறிமுகப்படுத்தும் விதத்திலும் அது பரப்புரை செய்யப்படும் விதத்திலும்தான் தாக்கத்தை உருவாக்கும். வரலாற்று நாயகர்களும் அப்படித்தான். இந்தியாவை காந்தி நாடு என உலகத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அதனால்தான் நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா என ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குரலாக ஒலிக்கும் உலகளாவிய தலைவர்கள், இந்தியா என்றதும் மகாத்மா காந்தி பற்றிய பெருமைகளை எடுத்துச் சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள்.
காந்தியும் காந்தியமும் சுதந்திர இந்தியாவை உருவாக்குவதில் வகித்த பங்கு முக்கியமானதெனினும், காந்தியைத் தாண்டிய தேவை இந்தியாவில் இருந்தது. இருக்கிறது. இந்த உண்மை வரலாற்றையும், அந்த வரலாற்றில் நிகழ்ந்த போராட்டங்களையும், அவற்றை நிகழ்த்திய தலைவர்களையும் எடுத்துச் சொல்வதே இங்கு ஒரு போராட்டமாக இருக்கிறது.
கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் சில தலைவர்களின் வரலாற்றை எடுத்துச் சொல்வது பாதுகாப்பானதாக இருக்கிறது. ஒரே கொள்கைப் பாதை என்ற போதும், சில தலைவர்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதே பாதுகாப்பாளதாக இருக்கிறது. இத்தகைய பாதுகாப்பைவிடவும் உண்மை வரலாற்றைச் சொல்ல வேண்டிய சமுதாயக் கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது.
இதனை இலக்காகக் கொண்ட செயல்பாடுகளில் ஒன்றுதான்,தோழர் வே.மதிமாறனின் ‘நான் யாருக்கும் அடிமையில்லை– எனக்கடிமை யாருமில்லை’ என்கிற நூல். அண்ணல் அம்பேத்கரை தலித் மக்களின் தலைவர் என்றளவில் மட்டுமே நிலைநிறுத்த முயற்சிக்கும் இந்துத்வா சக்திகளின் மனநிலையில் செயல்படும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் அம்பேத்கரை இந்தியச் சமுதாயத்தின் சமூக நீதிப் போராளியாக அறிமுகப்படுத்தும் நூலாக இது அமைந்துள்ளது.
தலித் அல்லாத மக்களுக்கு அம்பேத்கரை சரியான முறையில் அறிமுகப்படுத்தும் முயற்சியை சிரத்தையுடன் மேற்கொண்டிருக்கிறார் மதிமாறன். தேவையைப் பொறுத்தே வெளிப்பாடு அமைகிறது. வலைப்பதிவில் கட்டுரையாக வெளியிடப்பட்டு, தற்போது புத்தகமாகியிருக்கும் இதற்கானத் தேவை என்ன என்பதை நூலாசிரியரே தனது முன்னுரையில் விளக்கியிருக்கிறார்.
“திட்டமிட்டுதிரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லுர்ரியில் நடந்த சண்டையை, தொலைக்காட்சிகளில் பார்த்தேன். …. …. … ஒரு செய்தி உறுதியாகத் தெரிந்தது. அது டாக்டர் அம்பேத்கர் என்கிற பெயர் ஜாதி இந்துக்களுக்குஆத்திரமூட்டுகிற, எரிச்சலுர்ட்டுகிற பெயராக இருக்கிறது என்பதே! ஆதிக்க ஜாதிகளுக்கு எதிரான, ஜாதி வெறிக்கு எதிரான குறியீடாக அம்பேத்கர் பெயர் இருக்கிறது. டாக்டர் அம்பேத்கர் பெயரை-அவர் உருவத்தைப் பிற்படுத்தப்பட்டவர்களிடமும் உயர்ஜாதிக்காரர்களிடமும் கொண்டுபோய் சேர்ப்பது, ஜாதிக்கு எதிராகத் தீவிரமாக இயங்குவது போன்றதாகும் என்ற எண்ணத்தையும் இதுவே முற்போக்காளர்களின் முதன்மையான கடமை என்ற சிந்தனையையும் சட்டக் கல்லுர்ரி சண்டை எனக்குக் கற்றுத் தந்தது ” என்கிறார் . அந்த எண்ணத்தை அவர் எந்தளவு நிறைவேற்றியுள்ளார் என்பதை புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது புரிந்துகொள்ள முடிகிறது.
அம்பேத்கர், தலித் மக்களின் தலைவரில்லையா? அவர்களின் உரிமைக்காகப் போராடி ய தலைவர்தான். அவரை தலித் அல்லாத சமூகத்தினரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியதன் அவசியமென்ன? அண்ணல் அம்பேத்கர், சமூகரீதியாகப் பின்தங்கியிருக்கிற அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர். அதனால்தான் அவரை அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
“தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டிக்கும்போது, பிற்படுத்தப்பட்ட ஜாதியினைக் கண்டிக்கிற டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு முழுக்காரணம் என்று இந்து மதத்தையும் பார்ப்பனர்களையுமேதான் குற்றம் சுமத்துகிறார்” என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டு, அம்பேத்கரை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் மதிமாறன்.
சாதிப் படிநிலைகளின் அடிப்படையில், தலித் மக்களைவிட ஒரு படி உயர்ந்ததாகச் சொல்லப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர்தான், தலித் மக்களை நேரடியாகத் தாக்குபவர்களாகவும், அவர்கள் மீது வன்கொடுமை செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை திண்ணியம், உத்தபுரம் உள்ளிட்ட அண்மைக்கால சாட்சியங்கள்வரை காண முடிகிறது. இத்தகைய செயல்களுக்காக பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைக் கண்டிக்கிற அம்பேத்கர், இந்த சாதிப்படிநிலையின் மூலம் எது என்கிறபோது இந்து மதம் என்கிற பார்ப்பன மதம் என்பதையும் அது கற்பிக்கும் கடவுளர்கள், வேதங்கள், வருணாசிரமம் ஆகியவையுமே என்பதை சம்மட்டி கொண்டு அடித்து நொறுக்குகிறார்.
கோவி. லெனின்
குற்றப்பரம்பரையினர், இவர்களது எண்ணிக்கை சுமார் 2 கோடி சொச்சம். 2. ஆதிவாசிகள், இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 கோடி. 3. தீண்டப்படாதவர்கள், இவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி –என அன்றைய கணக்கை அம்பேத்கர் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிடும் தோழர் மதிமாறன், “தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேச வந்த டாக்டர் அம்பேத்கர் சமூகரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிற குற்றப்பரம்பரையினருக்காகவும் சேர்த்தேதான் குரல் கொடுக்கிறார். இந்த மனிதநேயரை எதிர்ப்பதற்குத்தானா இத்தனை ஆவேசம்?” என கேள்வி எழுப்புகிறார்.
இந்தியாவில் உருவாகிய சாதிப்படிநிலையின் ஆணிவேர் இந்துமதம் என்கிற பார்ப்பனியமே என்ற முடிவில் அம்பேத்கருக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்பதை அவருடைய எழுத்தும் பேச்சும் அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது. தங்கள் வாழ்க்கை எந்தப் படிக்கட்டு வழியாகவும் கீழே இறங்கிவிடக்கூடாது என்ற கவனத்துடன் பார்ப்பனியம் உருவாக்கிய சாதிகளால் உழைக்கும் சமுதாயத்தினர் பிளவுபடுத்தப்பட்டு, தனக்கு கீழ்ப்படிநிலையில் உள்ளதாகக் கருதப்படுவோர் மீது ஆதிக்கம் செலுத்துவது இன்றும் நீடிக்கிறது. இந்த ஆதிக்கமும் மோதல்களும் இல்லாத நிலை உருவாக வேண்டுமென்றால் இந்து மதத்தின் மீதும் அது வலியுறுத்தும் வர்ணாசிரமம் மீதும் சித்தாந்த ரீதியான தாக்குதலை தயவுதாட்சண்யமின்றித் தொடரவேண்டும்.இத்தகைய கொள்கைப் பார்வையில், அம்பேத்கரும் பெரியாரும் ஒரே கண்ணோட்டத்துடன் இருப்பதைக் காண முடிகிறது.
“கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். இராதாவோ ஏற்கனவே மணமானவள். கிருஷ்ணனோ முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் வாழ்க்கை நடத்துகிறான். ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷ்ணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நுர்ற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர்கள்”
“ராமன் அளவுக்கதிகமாகக் குடிக்கும் பழக்கத்தை க் கொண்டிருந்தான். அப்படிக் குடித்துவிட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான் என வால்மீகி குறிப்பிடுகிறார். அழகிகளின் மத்தியில் ராமன் குடித்துக் கூத்தாடி கலந்து மகிழ்ந்து இன்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் ராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர்-இவை பெரியார் எழுதியவையல்ல. அம்பேத்கர் எழுதியவை.
புராண புரட்டுகளையும், அதிலுள்ள ஆபாசங்களையும் பெரியாருக்கு சற்றும் குறைவில்லாத விதத்தில் கேள்வி எழுப்பிச் சாடுகிறார் அம்பேத்கர். அவரது கேள்விகள், இந்து மதத்தையும் சனாதனத்தையும் பிடரி மயிர் பிடித்து உலுக்குகிறது. இந்துக்கள் என்றாலும் நீங்கள் சூத்திரர்களே என்று ஒடுக்கிவைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் சுயமரியாதைக் குரலாக, இந்துத்வத் தத்துவங்களோடு நேருக்கு நேரான யுத்தத்தை நடத்தியிருக்கிறார் அம்பேத்கர்.
இந்தக் குரலுக்காக இந்து மதத்தைவிட்டு வெளியேறாமல் இருப்பதே தனக்கு சௌகர்யமாக இருக்கிறது என்றவர் பெரியார். இந்து மதத்தை விட்டு வெளியேறி பவுத்த மதத்தில் இணைந்தவர் அம்பேத்கர். பவுத்தத்தின் மறுபிறவிக் கொள்கை உள்பட அனைத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டார். தீண்டாமைக்கு எதிராக பவுத்தத்திற்கு மாறுவது என்பது அவரது நிலைப்பாடு. அதுகுறித்த பார்வையை அவர் வெளிப்படுத்தும்போது, “ரஷ்யர்கள் தங்களுடைய பொதுவுடைமை பற்றிப் பெருமைப்படுகிறார்கள். ஆனால் புத்தர், சர்வாதிகாரம் இல்லாமலேயே பிக்கு சங்கத்தில் பொதுவுடைமையை நிறுவினார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்” என்று எழுதியிருக்கிறார்.
இத்தகைய கருத்துகளால் அம்பேத்கரை பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரானவராக நிலை நிறுத்த முயற்சிக்கும் சில முற்போக்கு சிந்தனையாளர்களையும், அம்பேக்ரை இஸ்லாமியர்களுக்கு எதிரானவராகக் கட்டமைக்கப் முயற்சிப்போரையும் சாடும் நூலாசிரியர், இந்துத்வா மேலாண்மைக்கும் ஜாதி வெறி பிடித்த இந்துக்களுக்கும் எதிராகத்தான் அம்பேத்கரின் அத்தனை செயல்பாடுகளும் இருந்தன என்பதை ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார். இந்துத்வா மேலாண்மை என்பது பார்ப்பனியம் பெற்ற பிள்ளை என்றபோதும், அங்கே பார்ப்பன பெண்களுக்கான உரிமைகளும் மற்ற சமுதாயத்துப் பெண்களின் உரிமைகள் போலவே மறுக்கப்பட்டே வந்தன.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மாமேதை அண்ணல் அம்பேத்கர், அதில் பெண்களின் உரிமைகளுக்காக கொண்ட வந்த சட்டங்கள் அனைத்தும் முதலில் பயன் தந்தது பார்ப்பன சமுதாயத்துப் பெண்களுக்குத்தான் என்பது வரலாற்று உண்மை.
முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவதாக திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கும் ஒரு தார மணம், விவாகரத்து பெறுகின்ற உரிமை, கணவனை இழந்தவர்களோ மணவிலக்கு பெற்றவர்களோ மறுமணம் செய்துகொள்ளும் உரிமை, விவாகரத்து பெற்றவர்களுக்கான ஜீவனாம்சம், குடும்பச் சொத்தில் பெண்களுக்கான உரிமை என இந்தியப் பெண்களுக்காக அம்பேத்கர் உருவாக்கிய சட்டங்கள் பல உள்ளன. பெண்களை ஒடுக்குவதை
மனரீதியாகவும் மரபுவழியாகவும் இன்றும் கடைப்பிடிக்கும் இந்திய சமுதாயத்தில், 60 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டு வர அண்ணல் அம்பேத்கர் என்ன பாடு பட்டிருக்க வேண்டும் எனக் கேட்கும் மதிமாறன், அன்று அரசியல் சாசன உருவாக்கக் குழுவில் இடம்பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எல். அனந்தசயனம் அய்யங்கார் போன்ற பார்ப்பனர்களை எதிர்த்துதான் பார்ப்பன பெண்களுக்கும் நலன் பயக்கும் இந்தச் சட்டங்களை அம்பேத்கர் உருவாக்கினார் என்பதை அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.
அன்றைய அல்லாடிகளிலிருந்து இன்றைய ஜெயேந்திரர்கள் வரை பார்ப்பன சமுதாயத்து பெண்கள் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களுக்கு எதிராக கருத்தாலும் கரத்தாலும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை மதிமாறன் பதிவுசெய்வதோடு, பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் விரும்பி மாட்டிவைக்க வேண்டிய படம், அண்ணல் அம்பேத்கர் படமும் தந்தை பெரியார் படமும்தான். இவர்கள் இருவரால்தான் அவர்கள் இன்று சமூகத்தில் மரியாதையான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்கிறார். அவர்களது வீடுகள் இந்த இருவரின் படங்களை ஏற்றுக்கொள்கின்றனவோஇல்லையோ, இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களுக்கான சட்டங்களுக்கும் பாடுபட்டவர்கள் இந்த இருவரும்தான் என்பதை பார்ப்பன பெண்களின் மனசாட்சி ஏற்றுக்கொள்ளும்.
இந்தப் புத்தகத்தின் நோக்கமும் அதுதான். ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக பெண்களுக்காகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் போராடிய போராளியைப் புரிந்துகொள்ளுங்கள் தலித் அல்லாதவர்களே… என்பதுதான் மதிமாறனின் குரல்.
அண்ணல் அம்பேத்கரை ஜாதி ஆதிக்கத்திற்கு எதிரான சக்திகள் அனைத்தும் உயர்த்திப்பிடிக்கும்விதமாக அவரது உருவம் பொறித்த டி-சர்ட்டுகளை அணிய வேண்டும் என்ற திட்டமும் இந்தப் புத்தகத்தின் மூலம் முன்வைக்கப்படுகிறது. உருவங்கள் வாயிலாக ஒன்றை மனதில் நிறுத்துவது இந்திய மரபு மட்டுமன்று. உலகளாவியதாகவும் அது இருக்கிறது.
உருவ வழிபாட்டுக்கு எதிரான புத்தனுக்கு அதுதான் நேர்ந்தது. டி-சர்ட் திட்டம் திட்டம் முன்மொழியப்படுகிற அதே நேரத்தில், அம்பேத்கரை தலித் அல்லாதவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை முன்னெடுத்திருக்கும் இப்புத்தகத்தை ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடுவது இந்திய அளவில் உள்ள தலித் அல்லாதோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நன்றி ‘யுகமாயினி’ மாதஇதழ்
***
‘நான் யாருக்கும் அடிமையில்லை – எனக்கடிமை யாருமில்லை’
தொடர்புக்கு:
‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச: 9444 337384
பிடரி மயிர் பிடித்து உலுக்கிய தலைவனை ”நான் யாருக்கும் அடிமையில்லை; எனக்கு அடிமை யாரும் இல்லை” என்னும் புத்தகத்தினூடாக பார்த்தது நன்றாக இருந்தது.
இதன் முதல் பதிப்பு சில காலங்களிலேயே தீர்ந்து விட்டது. அண்ணலை பற்றிய செய்திகள் இப்போது சமூகத்திலும் சினிமா சுவரொட்டிகளிலும் இடம் பெற்றிருக்கிறது. பரவலாக அண்ணலை பற்றிய பேச்சுகள் பொதுவாக புழங்க ஆரம்பித்திருக்கின்றன. ஏதேச்சையாக ஒருவரின் வலைப்பூவின் கேள்வி பதில் பகுதியை படித்து கொண்டிருக்கும்போது, நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகம் என்று கேட்ட கேள்விக்கு ”நான் யாருக்கும் அடிமையில்லை; எனக்கு யாரும் அடிமையில்லை – மதிமாறன்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் தலித்தாக இருப்பார் என்று நீங்கள் யூகித்தால் உங்கள் யூகம் தவறானது.
இவ்வாறு அண்ணலை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள்(தலித் அல்லாதவர்கள்) அண்ணலின் தடித்த 37 தொகுதிகளை பார்த்தாலே முகம் சுருங்கும்; ஆச்சரியம் தோன்றும். அவர்களுக்கு எளிமையாக அண்ணலை பற்றிய மைய முன்னோட்டத்தை கொடுக்க கூடிய புத்தகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த புத்தகத்தை பலமுறை படித்தாலும் விடயத்தின் அம்சங்கள் சலிப்பு ஏற்படுத்தாமல் நம் அறிவை மேலும் மேலும் செழுமைபடுத்தும் என்பதை புத்தகத்தை 2 அல்லது 3 முறை படித்த தோழர்களுக்கு தெரியும்.
அண்ணல் பற்றிய தொடர் பதிப்புகளும் அதன் தொகுப்பான இந்த புத்தகமும் தான் அண்ணலை பற்றி படிக்கவேண்டும் என்னும் ஆர்வத்தையும், அவரின் 37 தொகுதிகளையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் பல தோழர்களுக்கு நான் பார்த்தே ஏற்படுத்தியிருந்தது. அதில் நானும் ஒருவன் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
உங்கள் அடுத்த புத்தகத்தை (அதை பற்றி சொல்லவேண்டாம் என்று அன்பு கட்டளை!) ஆவலாய் எதிர்நோக்குகிறேன்.
நல்ல அலசல். வாழ்த்துக்கள் திருகோவி. லெனின்.
பார்பனியத்தை, அதன் பினாமியான இந்து மதத்தை ஒழிக்க அண்ணலின் கருத்துக்கள் அவசியம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்,அதை பரப்ப வேண்டும் மக்களிடம்.பெரியார், அம்பேத்கேர் ஆகியோரை ஏசி கொண்டு சமுதாய சீர்திருத்தத்தை பேசுபவன் ஒன்று பார்ப்பானாக இருப்பான், அல்லது சாதி இந்து மத அபிமானியாக இருப்பான்.அதனை உடைத்தெறிந்து எல்லா மக்களிடமும் அண்ணலின் கருத்துக்களை சேர்க்க உங்கள் நூல் கண்டிப்பாக உதவும் வாழ்த்துக்கள் !
//இதோ அம்பேத்கரின் பதிவிலிருந்தே இதனைப் பார்ப்போம். “சூத்திரர்களைத் தவிர இதர மூன்று பிரிவினரை இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ளது. இத்தகைய இந்து மக்கள் இருந்து வருவது குறித்து எந்த அளவுக்கு அக்கறை காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு அக்கறை காட்டப்படவில்லை. மேலே குறிப்பிட்ட மூன்று சமூகப் பிரிவினர் வருமாறு:
குற்றப்பரம்பரையினர், இவர்களது எண்ணிக்கை சுமார் 2 கோடி சொச்சம். 2. ஆதிவாசிகள், இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 கோடி. 3. தீண்டப்படாதவர்கள், இவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி -என அன்றைய கணக்கை அம்பேத்கர் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிடும் தோழர் மதிமாறன், “தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேச வந்த டாக்டர் அம்பேத்கர் சமூகரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிற குற்றப்பரம்பரையினருக்காகவும் சேர்த்தேதான் குரல் கொடுக்கிறார். இந்த மனிதநேயரை எதிர்ப்பதற்குத்தானா இத்தனை ஆவேசம்?” என கேள்வி எழுப்புகிறார்//
இந்த கருத்தை பாமர (நமது) மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்..
வாழ்த்துகள் திருகோவி. லெனின்
இன்னும் பல படைப்புகள் (உண்மையான வரலாற்றை) படைக்க வாழ்த்துகள் மதிமாறன் அவர்களே..
தோழர்களே, திருச்சிக்காரன் என்கிற பெயரில் தன்னை பகுத்தறிவு வாதியாக அமைதி விரும்பியாக தன்னை காட்டி கொள்ளும் பார்பன இந்துமத வெறியரை தெரிது கொள்ள http://www.tamilhindu.com/2009/11/erosion-in-hindu-culture-and-familly-values/ இங்கு சென்று பாருங்கள். எவ்வளவு காழ்புணர்ச்சியை இவர் அங்கு கொட்டுகிறார். எல்லோரும் பகுத்தறிவுடன் கடவுளை ஆராய்ய கருத்து சுதந்திரம் வேண்டும் என்று கேட்கும் இந்த பெரியவா அங்கு கருத்து சுதந்திரத்தை பேசுவதில்லை, நாம் இந்து மதத்தை கேள்வி எழுப்பினால் எதிர் கருத்துக்களை கூறினால் அதை அனுமதிப்பதில்லை. அங்கு விஜய் டிவி யின் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆனதுக்கு (தாலி அணிவது தேவையா தேவை இல்லையா -நீயா நானா) , இந்த அம்பிகள் எல்லாம் lion dates இனிமே வாங்ககூடாது, lion dates கம்பெனிக்கு எதிர்ப்ப தெரிவிகுனுமாம்.. அது ஒரு சாதரண நிகழ்ச்சி அதையே இவனுங்களுக்கு பொருத்து கொள்ள முடியல .. இந்த blog முழுவதும் வேற்று மத விரோதம் தான். இந்து தீவிரவாதிகள் சங்க பரிவார் கும்பலை பாராட்டும் இவர்கள் தான் இந்தியாவில் தீவிரவாதத்தை பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள்…
http://www.tamilhindu.com — only for paarpana ambigal
ANBU NANBAREA, UNGAL KARUTHTHU SARITHAAN. AANAALUM, THIRUVALLUVAR PARAYAR VAGUPPAI SERNTHAVAR ENDRU SOLLAPADUKIRA NILAYIL, EAN THIRUVALLUVAR T SHIRT ANYAKOODAATHU ?.
SOUTH INDIANS , NORTH INDIAN THALAIVARGALAI EATRU KOLLKIROM. UTHAARANAM, MAYAVATHI YIN BSP -IKKU INGU KILAI ULLATHU. ATHEY SAMAYAM, SOUTH INDIAN THALAIVARGALAI NORTH INDIANS EATRU KOLVATHILLAI ENDRU KOORAPPADUKIRATHEY ? V.C -KKU NORTH INDIAVIL KILAI YAARUM THODANGA VILLAYEA ? ENAVEA, AMBEDKAAR T SHIRT ANIVATHAIVIDA, THIRUVALLUVAR T SHIRT ANIVATHEY NAMAKKU PORUTHTHAM ?
//RAMA RAJENDIRAN///
நீங்கள் எல்லாவற்றையும் அப்படித்தான் பார்ப்பீர்களா?
இல்லை அம்பெத்கரை பற்றி சொல்லுபோது மட்டும்தானா?
ரெட்டமலை சீனிவாசன், அயோத்தி தாசர் டி சட்டை அணியமாட்டிர்களா?
அவர்களின் டி சர்ட்டை நீங்கள் தயார் செய்துகொண்டு வரலாமே? அதை நீங்களும் அணிந்து மற்றவரையும் அணியச் சொல்லலாமே? உங்களின் தமிழ் உணர்வு எப்படி என்று பார்ப்போம்? அணிவிர்களா?
//Matt (08:51:03) :
தோழர்களே, திருச்சிக்காரன் என்கிற பெயரில் தன்னை பகுத்தறிவு வாதியாக அமைதி விரும்பியாக தன்னை காட்டி கொள்ளும் பார்பன இந்துமத வெறியரை தெரிது கொள்ள http://www.tamilhindu.com/2009/11/erosion-in-hindu-culture-and-familly-values/ இங்கு சென்று பாருங்கள். எவ்வளவு காழ்புணர்ச்சியை இவர் அங்கு கொட்டுகிறார். எல்லோரும் பகுத்தறிவுடன் கடவுளை ஆராய்ய கருத்து சுதந்திரம் வேண்டும் என்று கேட்கும் இந்த பெரியவா அங்கு கருத்து சுதந்திரத்தை பேசுவதில்லை//
படியுங்கள், படியுங்கள் நன்றாகப் படியுங்கள்.
படித்து விட்டு நாம் எழுதியதில் என்ன தவறு என்பதையும் எழுதுங்கள்.
அங்கே எழுதப் பட்ட கருத்துக்கள் இதே தளத்திலே 3 மாதங்களுக்கு முன்பு எழுதப் பட்ட கருத்துக்கள் தான்.
http://mathimaran.wordpress.com/2009/08/20/article-231/
நான் இங்கே எழுதிய பதிவுகளை தேடி, அவற்றையே நகல் எடுத்துதான் அங்கே பதிவு இட்டு உள்ளேன்.
அது என்னவோ நம்ம சகோதரர்கள் சிலருக்கு, அப்பாவி பெண்களை பலவந்தமாக தூக்கி செல்லும் கனவான்களை – அது பார்ப்பன இராவணனோ, அல்லது யூத மோசசோ – நாம கண்டித்தால் நம் மேல் ஏன் இவ்வளவு கோவம் வர வேண்டும்?
What I wrote there,
//இன அழிப்பு செய்து விட்டு, இளம் கன்னிப் பெண்களின் தந்தை , தாயார், அண்ணன் எல்லோரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு, இளமை கன்னிப் பெண்களை தங்கள் காம வெறிக்கு உபயோகப் படுத்திக் கொள்ள கூறியிருக்கிறார், மைனர் குஞ்சாக செயல் பட்ட மோசஸ் என்பவர்.
எண்ணாகமம் : அதிகாரம் 31.
செய்யுள்
17 .ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும் , புருஷ சம்யோகம் அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள்.
18 . ஸ்திரீகளில் புருஷ சம்யோகத்தை அறியாத எல்லாப் பெண் பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.
இப்படியாக “கில்லி” படத்தில் வரும் வில்லனே பரவாயில்லை, அவன் ஒரு பெண்ணைக் காதலித்து அவளைத் திருமணம் செய்ய அவளின் அண்ணன் காரங்களை கத்தியால் குத்திக் கொன்று விட்டு, அந்தப் பெண்ணிடம் “செல்லம், செல்லம்” என்று சொல்லியதே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு,
மும்பைக்கு அப்பாவிப் பெண்களைக் கடத்தும் கொடுமையாளனை விட இன்னும் அதிக அநியாயமாக, இனப் படுகொலை நிகழ்த்தி பெண்களைக் கடத்துபவராக
ஒரு முழு இனத்திலுள்ள ஆண்கள் அனைவரயும் கொன்று, கன்னியல்லாத பிற பெண்களை எல்லாம் கொன்று, கன்னிப் பெண்களை எல்லாம் ரவுண்ட் அப் செய்து கர்ப்பழித்து தங்கள் உடைமையாக வாழ் நாள் முழுவதும் கற்ப்பழிக்க வைத்துக் கொள்ளுங்கள், என்று யூதருக்கு கட்டளை போட்டவர் மைனர் குஞ்சு மோசஸ், அவருக்கு எல்லா நேரங்களிலும் உதவி செய்த யூதர்களின் நாட்டமை கர்த்தர் என்பதை, அந்த அப்பாவி அபலைப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை எண்ணி மிக்க வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
இதை நாம் சொல்லவில்லை. பைபிளில் சொல்லி இருக்கிறார்கள்.//
மோசஸ் செய்தது தவறில்லையாம். நான் அதை சொன்னது தவறாம்.
இதையும் படியுங்கள்.
http://www.tamilhindu.com/2009/08/subbu-column-28/
purushothaman
9 November 2009 at 9:00 am
இந்தக் கட்டுரையையும் இதற்கான மறுமொழிகளையும் படிக்கும்போது குழப்பமாக இருக்கிறது.விடுதலைக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை திருச்சிக்காரர் இங்கே அனுப்பிவிட்டாரா? முழுக்க முழுக்க பிராமண த்வேச்த்தை வைத்துக்கொண்டு ஹிந்து ஒற்றுமையை உண்டாக முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும். முதலில் பிராமணர்களையும் காஞ்சி மடத்தையும் தாக்கும்போது மற்றவர்கள் அதை ரசிக்கலாம். ஆனால் இப்படி ஒவ்வொரு மடமாக ஒழித்து விட்டால் இறுதியில் இந்து மதத்துக்கு என்று யாரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான் திருசிக்கரரின் திட்டம்.திகவின் திட்டம்.இந்த முயற்சிக்குத் தமிழ் ஹிந்து இடம் கொடுப்பது எதற்காக?
savithri
9 November 2009 at 3:43 pm
இந்தத் தளத்தில் இன்னொரு இடத்தில் விஜய் டிவி நடத்திய நிகட்சி பற்றி தமிழ்செல்வன் அருமையான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். வாசக அன்பர்களும் அதைப் படித்துவிட்டு புறக்கணிப்பு செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். இந்துக்களுக்கு எதிரான செயலுக்கு எதிர்ப்பு காட்டவேண்டியது அவசியம்தான்.அதை வரவேற்கிறேன்.
அதே நியாயப்படி காஞ்சி மடத்தைப் பற்றி இழிவான் முறையில் எழுதிவரும் திருச்சிக்காரன் என்ற மாமேதையையும் புறக்கணிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படிச் செய்யாவிட்டால் அது மாமியார் உடைத்த மண்குடம் என்று ஆகிவிடும்.
விஜய் டிவிக்கு ஒரு நியாயம் திருசிக்காரருக்கு ஒரு நியாயமா?
//Matt (08:51:03) :
தோழர்களே, திருச்சிக்காரன் என்கிற பெயரில் தன்னை பகுத்தறிவு வாதியாக அமைதி விரும்பியாக தன்னை காட்டி கொள்ளும் பார்பன இந்துமத வெறியரை தெரிது கொள்ள இங்கு சென்று பாருங்கள். எவ்வளவு காழ்புணர்ச்சியை இவர் அங்கு கொட்டுகிறார். எல்லோரும் பகுத்தறிவுடன் கடவுளை ஆராய்ய கருத்து சுதந்திரம் வேண்டும் என்று கேட்கும் இந்த பெரியவா அங்கு கருத்து சுதந்திரத்தை பேசுவதில்லை//
படியுங்கள், படியுங்கள் நன்றாகப் படியுங்கள்.
படித்து விட்டு நாம் எழுதியதில் என்ன தவறு என்பதையும் எழுதுங்கள்.
அங்கே எழுதப் பட்ட கருத்துக்கள் இதே தளத்திலே 3 மாதங்களுக்கு முன்பு எழுதப் பட்ட கருத்துக்கள் தான்.
நான் இங்கே எழுதிய பதிவுகளை தேடி, அவற்றையே நகல் எடுத்துதான் அங்கே பதிவு இட்டு உள்ளேன்.
அது என்னவோ நம்ம சகோதரர்கள் சிலருக்கு, அப்பாவி பெண்களை பலவந்தமாக தூக்கி செல்லும் கனவான்களை – அது பார்ப்பன இராவணனோ, அல்லது யூத மோசசோ – நாம கண்டித்தால் நம் மேல் ஏன் இவ்வளவு கோவம் வர வேண்டும்?
What I wrote there,
//இன அழிப்பு செய்து விட்டு, இளம் கன்னிப் பெண்களின் தந்தை , தாயார், அண்ணன் எல்லோரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு, இளமை கன்னிப் பெண்களை தங்கள் காம வெறிக்கு உபயோகப் படுத்திக் கொள்ள கூறியிருக்கிறார், மைனர் குஞ்சாக செயல் பட்ட மோசஸ் என்பவர்.
எண்ணாகமம் : அதிகாரம் 31.
செய்யுள்
17 .ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும் , புருஷ சம்யோகம் அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள்.
18 . ஸ்திரீகளில் புருஷ சம்யோகத்தை அறியாத எல்லாப் பெண் பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.
இப்படியாக “கில்லி” படத்தில் வரும் வில்லனே பரவாயில்லை, அவன் ஒரு பெண்ணைக் காதலித்து அவளைத் திருமணம் செய்ய அவளின் அண்ணன் காரங்களை கத்தியால் குத்திக் கொன்று விட்டு, அந்தப் பெண்ணிடம் “செல்லம், செல்லம்” என்று சொல்லியதே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு,
மும்பைக்கு அப்பாவிப் பெண்களைக் கடத்தும் கொடுமையாளனை விட இன்னும் அதிக அநியாயமாக, இனப் படுகொலை நிகழ்த்தி பெண்களைக் கடத்துபவராக
ஒரு முழு இனத்திலுள்ள ஆண்கள் அனைவரயும் கொன்று, கன்னியல்லாத பிற பெண்களை எல்லாம் கொன்று, கன்னிப் பெண்களை எல்லாம் ரவுண்ட் அப் செய்து கர்ப்பழித்து தங்கள் உடைமையாக வாழ் நாள் முழுவதும் கற்ப்பழிக்க வைத்துக் கொள்ளுங்கள், என்று யூதருக்கு கட்டளை போட்டவர் மைனர் குஞ்சு மோசஸ், அவருக்கு எல்லா நேரங்களிலும் உதவி செய்த யூதர்களின் நாட்டமை கர்த்தர் என்பதை, அந்த அப்பாவி அபலைப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை எண்ணி மிக்க வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
இதை நாம் சொல்லவில்லை. பைபிளில் சொல்லி இருக்கிறார்கள்.//
மோசஸ் செய்தது தவறில்லையாம். நான் அதை சொன்னது தவறாம்.
இதையும் படியுங்கள்.
http://www.tamilhindu.com/2009/09/secular-assault-on-the-sacred/
ganesh
5 October 2009 at 7:44 am
திருச்சிக்காரன் ஜெயேந்திரரையும் பிராமண சமூகத்தையும் தண்டிக்க வேண்டும் என்று திட்டமிட்டு எழுதுகிறார். தமிழ் ஹிந்துவின் நோக்கம் என்ன?
திருச்சிக்காரனின் சதிக்கு நீங்களும் உடந்தையா?
Thivannan
5 October 2009 at 1:55 pm
திருச்சிக்காரன் என்ற பெயரில் எழுதும் நபர் ஒரு க்ரிப்டோ கிறுத்துவர்.
இந்த முடிவுக்கு வர சில காரணங்கள்:
1. இவர் கருத்துக்கள் யாவுமே நுனிப்புல் மேய்பவை. மேலோட்டமாய் அறிந்தவை போல் தொனிப்பவையே அன்றி, இந்துதர்மத்தை ஒழுகி வாழ்பவர் பார்வையில் வருவதாயில்லை.
2. இவர் கருத்துக்கள் பெரும்பாலும் மூலக்கட்டுரையின் நோக்கத்தைத் திசை திருப்புமாறும், நீர்த்துப்போகும் வண்ணமும் அமைந்திருக்கின்றன. இது ஒரு டிபிகல் மிஷநரி முத்திரை.
3. இந்த கமெண்ட் பகுதியை ஆக்கிரமித்து நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்து பெட்டி தட்டுவதற்கு வேறு வேலை வெட்டி இல்லாமலோ அல்லது இப்படித் தட்டுவதற்குப் பணமோ வரவேண்டும். பின்னதை பலருக்கும் சர்ச் தருகிறது. இப்படிப் பலரை முழுநேரத் தொழிலாளியாகவே சர்ச் அமர்த்தியுள்ளது.
4. உடனுக்குடன் அபத்தமான ஆதாரமற்ற சுட்டிகளைத் தேடியிடுவது. இதுவும் ஒரு மிஷநரி முத்திரை.
“நான் கிறுத்துவன் அல்லன்; அப்படி ஏமாற்றியிருந்தால் ஏசுவின் பேரில், மீளாநரகம் போவேன் என்று சத்தியம் செய்கிறேன்.” – இப்படி ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை இவரை எழுதச் சொல்லிப் பார்க்கவும்.
M.Mannaaru
6 October 2009 at 3:42 pm
அலோ…ஜயராமன் ஸார்! இன்னா ஸார் நீ பேஜார் பண்ற? அந்த திர்ச்சி ஆளு கைல போய் சீரியஸா பேசினுகீற? இவ்லோ வர்ஸமா வலைல வெளாடினுகீறியே….இன்னுமா அந்த ஆள நீ புர்ஞ்சுகல?
அவுரு இந்து இல்ல ஸார். டுபாகூர் பார்டி. ஆனாக்கா கில்லாடி. வெவரமான ஆளு. ”ஏஸ்துவும் ரமனும் ஒரே மாதிரி ஸொல்லிகிராங்கோ….அல்லாஹ் உத்தமரு….நா ஏஸ்து, அல்லாஹ், ராமரு அல்லாத்தையும் கும்புடுவேன்….அப்பாலிகா ரம்ஜான், கிறுஸ்துமஸ் தீவாளி அல்லாத்தையும் கொண்டாடுவேன்..” அப்டின்னு ஸொம்மா இஸ்டமா வுட்டு ஆட்றாரு. இன்னா ஸோக்கா வூடு கட்றாரு பாத்தியா ஸார்?
அந்த உதாரையும் உடான்ஸையும் நம்பிகினு இங்க சில பார்டிங்க அவுர பாராட்டி வேற பேசுதுங்க… இன்னா ஸொல்றது?
அஸோக்கு, டேனி தங்கம் போதாதுன்னு இப்போ மலேஸியாவுலர்ந்து வேற ஒரு ஜானு…ஒரே கிறுஸ்து வாட அடிக்கிது, அஆங்!
தமில் இந்து போற போக்கு ஸரில்ல வாத்யாருங்களா. அவ்லோ தான் நா ஸொல்லமுடியும். அப்பாலிகா உங்க இஸ்டம்.
Mr. Matt
//எல்லோரும் பகுத்தறிவுடன் கடவுளை ஆராய்ய கருத்து சுதந்திரம் வேண்டும் என்று கேட்கும் இந்த பெரியவா அங்கு கருத்து சுதந்திரத்தை பேசுவதில்லை, நாம் இந்து மதத்தை கேள்வி எழுப்பினால் எதிர் கருத்துக்களை கூறினால் அதை அனுமதிப்பதில்லை. //
That is neither my blogspot, nor I have any connections with them.
They have edited/ deleted many of my comments also.
பகுத்தறிவுவாதி போல வேடமிடும் திருச்சிக்காரரின் முகமூடியைக் கிழித்துக் காட்டுகிறேன்.
http://www.tamilhindu.com/2009/10/lament-of-christ-a-hindu-view/
திருச்சிக் காரன்
4 November 2009 at 3:38 pm
Chillsam
30 October 2009 at 7:49 am
//காண்கிற சூரிய,சந்திர,நட்சத்திரக் கூட்டங்களையோ கடல் வாழ் ஜீவராசிகளையோ பறவைகளையோ மிருகங்களையோ ஆணையோ பெண்ணையோ அல்லது மற்ற எந்த சிருஷ்டியையோ நமஸ்கரிக்காமல் அவற்றைப் படைத்தவரை ஆராய்ச்சி செய்யும் சுதந்தரத்தை வழங்கியிருக்கிறது//
அது என்னய்யா – நாங்க எதையோ வணங்க்கிறோம்- இல்லை வணங்காம சும்மா ஒக்காந்து இருக்கோம்.
இந்த படைத்தவனுக்கு என்னா பிரச்சினை?
நாங்க போயி, “ஐயா, எங்களைப் படையுங்கள்” என்று கெஞசிணோமா? இல்லையே?
அப்புறம் என்னாத்துக்கு அதை வணங்கக் கூடாது , இதை வணங்கக் கூடாது என்று பெரிய நாட்டாண்மை கட்டளை எல்லாம்? முதல்ல இந்த படைத்தவன் எங்கே?
நீங்களோ, இல்லை இப்போது இந்த உலகத்தில் இருக்கும் வேறு யாரோ இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?
யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான் , உருவம் இல்லை நான் சாட்சி குடுக்கிறேன், என்று பீலா விட வேண்டியது.
அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது.
அதே வியாதி இசுலாமியருக்கும் ஆனால் அவர்கள் கை குலுக்கிய கடவுளின் பெயர் அரேபிய மொழியிலே இருக்கிறது. அந்தக் கடவுள் தான் ஒரே கடவுள் என்று எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.
இதிலே உண்மை என்னவென்றால், இரு தரப்பாரும் பார்க்கவில்லை.
யாரோ மூவாயிரம் வருடம் முன்பு கற்பலகையில் கட்டளை எழுதி வாங்கினார் என்று கதையை வைத்து, பார்க்காத கடவுளுக்கு, நான் சாட்சி குடுக்கிறேன் என்று அவ்வளவு அலப்பறை.
இசுலாமியர் சும்மா இருப்பார்களா? அவர்களும் பார்க்கமலே, சாட்சி – ஆனால் பாசை வேறு “” குபூல் ஹை”‘ என்று சாட்சி குடுப்பார்கள்.
சரி யார் கடவுள் உண்மையான கடவுள். ஒருவரும் ஒரு கடவுளையும் பார்க்கவில்லை.
சாராயக் கடையிலே மூக்கு முட்ட குடித்த இருவர் , தெருவிலே தள்ளாடி வரும் போது ஒருவர் அமாவாசை இரவிலே தெரு விளக்கைப் பார்த்து இது சந்திரன் என்று சொல்ல, இன்னொருவர் சூரியர் என்று சொல்வது போல,
நம்பிக்கை என்னும் போதையிலே விழுந்த இசுலாமியரும், கிருச்துவரும், யூதரும் தங்கள் கற்பனையில் உருவான கடவுள் தான் உண்மையான கடவுள் என்று நிரூபிக்க,
யார் கடவுள் வலிமையான கடவுள் என்று நாமே தீர்மானிப்போம் என்று “உருவு வாளை” எனக் காட்டு மிராண்டிக் காலத்திலிருந்தே போடப் பட்டுக் கொண்டு வந்த சண்டைகளை காலத்துக் கேற்ப நவீன ஆயுதங்களுடன் செய்கின்றனர்.
இந்த சண்டையிலே நாமும் கலந்து கொள்ள நமக்கு சுதந்திரம் உண்டு என்பதுதான் இங்கெ இவர்கள் நமக்கு சொல்வது.
திருச்சிக் காரன்
6 November 2009 at 6:19 pm
//The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //
இந்தக் கருத்து, மேலோட்டமாகப் பார்த்தால் இதில் என்ன தவறு என்பது போல தோன்றும். உண்மையில் இந்தக் கருத்தை உடைய பலரும் அமைதியான வாழ்க்கையை நடத்தக் கூடும். அவர்கள் வாழ்க்கை முழுவதும், அமைதியாகவே வாழ்ந்து முடிக்கக் கூடும்.
அனால் இந்தக் கருத்தை அவர்கள் பிறருக்கு அறிமுகப் படுத்தி விட்டுப் போகிறார்கள்.
நூறு வருடம் கழித்து இந்தக் கருத்தைப் படிக்கும் ஒருவர், அந்தக் கருத்தை ஆழமாக நம்பும் ஒருவர், பிற மதத்தவர் வணங்கும் தெய்வங்களை இகழ்சியிடன் நோக்க ஆரம்பிப்பார். அது வார்த்தையிலும் வெளி வரும். சகிப்புத் தன்மை இல்லாமல் போய் வெறுப்பு உணர்வு அதிகரிக்கும். அதனால் மோதல், சண்டைகள், இரத்த வெறி உருவாகும்.
இப்போதே பல சுவிசெகர்கள் தங்களுடைய கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள்கள் எல்லாம் போய் என்பதை தங்கள் பிரச்சாரத்தின் முதல் பகுதியாக முக்கிய பகுதியாக வைக்கின்றனர்.
//The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //
இந்தக் கருத்து ஒரு உறங்கும் எரிமலை ( Dormant Volcano )போன்றது. எப்போது நெருப்புக் குழம்பை கக்கும் என்று சொல்ல முடியாது. இந்தக் கருத்து பாம்பின் முட்டையை போனறது. வெளியே பார்த்தால் உள்ளே இருக்கும் விஷம் தெரியாது.
நான் இப்படி எழுதுவது சிலருக்கு மன வருத்தத்தை உண்டு பண்ணக் கூடும். ஆனால் மனிதத்தின் நலம் கருதி இந்த விளக்கத்தை அளிக்க வேண்டி உள்ளோம்.
//The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //
இந்தக் கருத்தை எந்த பிரிவினர் பின்பற்றினாலும் அது மனிதத்துக்கு கெடுதலே.
மனிதத்தின் புனிதம் கருதி நான் பரம சிவன், உமை, விநாயகர், இராமர், seethai, இலக்குவன், அனுமன், குகன், ஜடாயு….. உள்ளிட்ட இந்துக்கள் கடவுளாக கருதுபவர்களையும், அவர்களோடு சேர்த்து கிறிஸ்தவர்கள் கடவுளாக கருதும் இயேசு கிறிஸ்து, மேரி மாதா அகியவரியும் மனப் பூர்வமாக மரியாதை செய்ய தயார். அதைப் போல இசுலாமியரோடு தொழவும் , நோன்பு இருக்கவும் தயார்.
அதே நேரம் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் தர வேண்டும், இதைக் கூறுவது அடுத்தவரைப் புண்படுத்த அல்ல. உண்மையை அறியும் பாதையை அடைக்காதீர்கள் என்று சொல்ல.
//வரலாறு உண்மையானதாக இருந்தாலும் அதனை அறிமுகப்படுத்தும் விதத்திலும் அது பரப்புரை செய்யப்படும் விதத்திலும்தான் தாக்கத்தை உருவாக்கும்.//
இதுக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற புத்தகம் எழுதலாமே?
//புராண புரட்டுகளையும், அதிலுள்ள ஆபாசங்களையும் பெரியாருக்கு சற்றும் குறைவில்லாத விதத்தில் கேள்வி எழுப்பிச் சாடுகிறார் அம்பேத்கர். அவரது கேள்விகள், இந்து மதத்தையும் சனாதனத்தையும் பிடரி மயிர் பிடித்து உலுக்குகிறது.//
சரி. அப்படியானால் இதே முறையை பயன்படுத்தி ‘பெரியாரின் மறுபக்கம்’ மற்றும் ‘Worshiping False Gods’ எழுதியவர்களும் மட்டையடியைத் திருப்பிக் கொடுக்கிறார்களே?
கடைசியாக அம்பேத்கர் சொல்லும் தீர்வுகள் என்ன? மதம் மாறுவது…எந்த மதத்தில் பிரச்சினையில்லை?
//பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் விரும்பி மாட்டிவைக்க வேண்டிய படம், அண்ணல் அம்பேத்கர் படமும் தந்தை பெரியார் படமும்தான்//
ஓவர் மார்க்கெட்டிங்…புத்தகத்தின் நோக்கமும் இதுவே!
திருசிகாரரே, எங்களுக்கு எந்த மதத்தின் மீதும் பாசம் இல்லை ,நாங்கள் ஏதோ பெண்களை கடத்தும் கும்பலுக்கு வாதாடுவது போல சொல்கிறீர்களே… உங்கள் கிருஷ்ணன் கோபியருடன் ஆடிய களியாட்டத்தை பற்றியும், தன் மகளிடமே உறவு கொண்ட பிரமனை பற்றியும், மற்றவர்களின் ரிஷிகளின் மனைவிகளை கடத்துவதே தொழிலாக கொண்ட இந்திரனை பற்றியும் அவனை காக்கும் விஷ்ணுவை பற்றியும் பேசியது உண்டா..
வேதங்களில் மலிந்து கிடக்கும் மந்திரங்கள்
௧) “என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’
‘இந்திரன் தனது வச்சிராயு தத்தால் அவர்களால் சிரங்களைத் துண்டித்திடுக.’
‘எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல் வோம்’.
‘எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’
‘சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’
‘தனது மகனையும், சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக.’
‘அக்னியே! எங்களைத் துவேஷிப் பவனை உனது சுடரால் எரித்து விடு.’
‘இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள்.தோழனைப் புசியுங்கள்; உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’.
‘இந்திரா! சத்துரு சேனையை மயக்கம் செய். அதன் கண்களைப் பிடுங்கு.’
‘அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக.’
‘இந்திரா! இதோ பிழிந்த சோமன். மதத்துக்கு இதனைப் பருகு. விரிந்து விசாலமாயுள்ள உனது வயிற்றில் அச்சோமனைப் பொழிந்து கொள். எங்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் பசுக்களைப் பாழாக்கு.’
இதுதான் இந்துக்களின் ஆன்மிக வேதமா..?பேட்டை ரவுடியே பரவாயில்லை ..
இதனை பற்றிய உங்கள் கருது என்ன ..?
ஜெயலலிதா ஜெயெந்திரனை கைது செய்த போது ஜெயலலிதாவை எதிர்த்த பார்ப்பார்கள் தான் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்தார்கள்.அது போன்ற கோபம் தான் அவர்களுக்கு உங்கள் மீதும். கோபித்து கொள்ளாதீர்கள் உங்களவா மேலேயே…
திருச்சிக்காரன் எல்லாரையும் ஏமாற்ற முயற்சித்துக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்தது உண்மையாகிவிட்டது. பகுத்தறிவுவாதி, மதசார்பற்றவன், கடவுளின் இருப்பைபற்றி சந்தேகப்படுபவன், அப்படி இப்படி என்று பல வேடங்கள் போட்டுக்கொண்ட இவர் ஒரு ஏமாற்று பேர்வழி என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. இவரைப் போன்றவர்களை விட வெளிப்படையாக இந்துத்வாவாதிகளாக இருப்பவர்கள் எவ்வளவோ மேல்.
திருவாளர் ராபின் அவர்களே,
//எல்லாரையும் ஏமாற்ற முயற்சித்துக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்தது உண்மையாகிவிட்டது//
என்ன ஏமாற்றினேன்?
வெறுமனே “ஏமாற்றினேன்” என்று சொல்வதை விட,
என்ன ஏமாற்றினேன் என்பதையும் மேற்கோள் காட்டி விவரித்தால் அப்போதுதானே எல்லோருக்கும் தெரியும்?
//பகுத்தறிவுவாதி, மதசார்பற்றவன், கடவுளின் இருப்பைபற்றி சந்தேகப்படுபவன், அப்படி இப்படி என்று பல வேடங்கள் போட்டுக்கொண்ட இவர் ஒரு ஏமாற்று பேர்வழி என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது.////
எப்படி நிரூபணமானது ?
“இந்துக் கடவுள்கள் மட்டும் உண்மையான கடவுள்கள், முருகன் பழனி மலையிலே எனக்கு காட்சி கொடுத்தார்,
விநாயகர் என்னை வந்து அபிராமி தியேட்டர் வாசலில் சந்தித்தார்” என்று நான் சாட்சி குடுத்தேனா?
தமிழர்கள் முருகனை கடவுளாக வணங்குகிறார்கள், அதை இழிவு படுத்தி சமய நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டிய அளவுக்கு இந்த முருகனார் எந்த தவறும் செய்ததாக தெரியவில்லை. அதைத்தான் எழுதி உள்ளேன்.
//இவரைப் போன்றவர்களை விட வெளிப்படையாக இந்துத்வாவாதிகளாக இருப்பவர்கள் எவ்வளவோ மேல்//
சிலருக்கு இந்துத்துவாகாரர்களை மிகவும் பிடிக்கும்.
ஏனெனில் “ஒரே ஒரு கடவுள் தான் , அவர்தான் ஜீவனுள்ள கடவுள்” என்று நேரிலே பார்த்ததைப் போல, “பிற கடவுள்கள் எல்லாம் பொய் , பிற மதங்கள் பொய்யானவை” என்று வெறுப்பு உணர்ச்ச்யை தூண்டுவோருக்கு,
அவர்களைப் போலவே, “இந்துக் கடவுள்களை மட்டுமே வணங்க வேண்டும்” என்று கட்டளையிடுபவரை கொள்கை அடிப்படையில் ஒன்றாக உள்ளனர்.
நம்மை அவர்களுக்கு பிடிக்காது. ஏனெனில் நாம் மத நல்லிணக்கத்தை பிரச்சாரம் செய்கிறோம்
“மனிதத்தின் புனிதம் கருதி நான் பரம சிவன், உமை, விநாயகர், இராமர், seethai, இலக்குவன், அனுமன், குகன், ஜடாயு….. உள்ளிட்ட இந்துக்கள் கடவுளாக கருதுபவர்களையும், அவர்களோடு சேர்த்து கிறிஸ்தவர்கள் கடவுளாக கருதும் இயேசு கிறிஸ்து, மேரி மாதா அகியவரியும் மனப் பூர்வமாக மரியாதை செய்ய தயார். அதைப் போல இசுலாமியரோடு தொழவும் , நோன்பு இருக்கவும் தயார்” என்று பலமுறை எழுதி விட்டோம்.
வெறுப்பு கருத்துக்களுக்காக காணாத கடவுளுக்கு சாட்சி குடுக்கவும், தங்கள் கற்ப்பனையில்- மன்னிக்க வேறு ஒருவர் கற்ப்பனையில் – உருவான கடவுளுக்காக, உலகெங்கும் பலகோடி பேரின் உயிரைக் காவு கொடுத்த சித்தாந்தத்திலே மாட்டிக் கொண்டவர்களுக்கு நம்மைப் பிடிக்குமா?
இவர்களைத் திருப்திப் படுத்த கர்த்தர் – மோசஸ் கூட்டணி அமைத்து செய்த இனப் படுகொலைகளை கண்டு கொள்ளாமல் தடவிக் கொடுக்க முடியாது.
அதே நேரம் இயேசு கிறிஸ்துவின் நல்ல கருத்துக்களை பாராட்ட தவறவும் இல்லை. எனவே அந்த நல்ல கருத்துகளுக்காக அவரை மதிக்கிறோம், மரியாதை செய்கிறோம் என்றும் கூறி இருக்கிறோம்.
ஐயா matt அவர்களே,
இந்த இந்திரன், சந்திரன் இவர்கள் இருக்கிறார்களா?
அது மேலோகமா, பாதாள லோகமா எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
அப்படி பலரும் கூறும் இந்த இந்திரனும் சந்திரனும் அவர்கள கூறும் கதை உண்மையானால், பிறரின் மனைவியை கவர்ந்த அயோக்கியர்களாகவே இருக்கிறார்கள்.
அப்படி லோலாயி கேசாக திரிந்த இந்திரனையும் சந்திரனையும் நான் எதிர்க்கிறேன்.
இந்த விஷ்ணு என்று கூறப் படுபவர்- துளசி என்ற பெண்ணின் கணவன் ஒரு அசுரனாக பலருக்கும் தொல்லை குடுத்து வந்ததாகவும், பல பெண்களை கர்ப்பழித்ததாகவும் ஆனால் அவனின் மனைவி துளசி கர்ப்புக்கரசியாக இருந்ததால் அவனை கொல்ல முடியாத படிக்கு அவன் காக்கப் பட்டு வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
அந்த அரக்கன் போரிலே ஈடு பட்ட போது, இந்த விஷ்ணு அரக்கனை போல உருமாறி அந்த துளசியை கர்ப்பளித்தாக கூறப் படுகிறது.
இப்படி விஷ்ணு என்று ஒருவர் இருந்தால், அவர் இப்படி செய்து இருந்தால், அவரை இந்த காரணத்திற்காக கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.
அதே போல அரக்கர்களையும் சேர்த்து கொண்டு பாற்க் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்து கடைசியில் அரக்கர்களை ஏமாற்றி விட்டதாக கூறப் படுவது உண்மையானால் அதற்காகவும் அவரை கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.
போருக்கு போனவன் பூசனை போட்டுப் போனானா, அந்தத் தேவனுக்கு படையல் போட்டானா , இந்த தேவனை துணைக்கு அழைத்தானா என்பதை விட, அவன் நியாயமான காரணங்களுக்காக போருக்குப் போனானா, இல்லை ஆதிக்கம் செய்ய, கொள்ளை அடிக்க, பெண்களை தூக்க போருக்குப் போனானா என்பதே முக்கியம்.
நியாயத்தின் பக்கம் நான் நிற்கவே விரும்புவேன்.
ஜெயலிலதா ஒரு வூழால் பெருச்சாளி, அராஜகம் செய்ய அஞ்சாதவர், …. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ANBU NANBAREA, UNGAL KARUTHTHU SARITHAAN. AANAALUM, THIRUVALLUVAR PARAYAR VAGUPPAI SERNTHAVAR ENDRU SOLLAPADUKIRA NILAYIL, EAN THIRUVALLUVAR T SHIRT ANYAKOODAATHU ?.
SOUTH INDIANS , NORTH INDIAN THALAIVARGALAI EATRU KOLLKIROM. UTHAARANAM, MAYAVATHI YIN BSP -IKKU INGU KILAI ULLATHU. ATHEY SAMAYAM, SOUTH INDIAN THALAIVARGALAI NORTH INDIANS EATRU KOLVATHILLAI ENDRU KOORAPPADUKIRATHEY ? V.C -KKU NORTH INDIAVIL KILAI YAARUM THODANGA VILLAYEA ? ENAVEA, AMBEDKAAR T SHIRT ANIVATHAIVIDA, THIRUVALLUVAR T SHIRT ANIVATHEY NAMAKKU PORUTHTHAM ?//
ராஜேந்திரன் அவர்களே, உங்கள் பதில்கள் பல படித்துள்ளேன். உங்கள் மீது மரியாதை இருந்தது. ஆனால் மேலே உள்ள உங்கள் கருத்து எனக்கு ஆச்சரியத்தை வரவழைக்கிறது. இதை பதித்தது வழக்கறிஞர் ராஜேந்திரன் தானா இது என்கிற சந்தேகம் இருக்கிறது. இந்த ராஜேந்திரன் யார் என்பதை நீங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
இருப்பினும் எந்த ராஜேந்திரனாக இதை சொல்லியிருந்தாலும்
இந்த மாதிரி பேச்சுக்கள் எல்லாம் அண்ணல் படம் போட்ட ஆடை அணியும் போதுதான் வருமா உங்களுக்கு? சுற்றி சுற்றி நீங்கள் என்ன வருகிறீர்கள் என்றால் தமிழ் இனத்தில் தலைவர் இருக்கும் போது எதுக்கு இன்னொரு தலைவரை பத்தி பேசணும் எழுதணும் அவர் உருவம் பொறித்த ஆடையை அணியனும்னு இனவெறி பிடித்தது போல் உங்கள் கருத்தை சொல்கிறீர்கள்.
இதை சொல்வது எப்படி இருக்கிறது என்றால் கிறித்தவர்களிடம் போய் இயேசு தமிழ் தெய்வம் அல்ல. அதனால் அவரை வணக்காமல் தமிழ் கடவுள் முருகபெருமானை வணங்குங்க என்று ஒருவர் சொன்னால் அவர் எந்த அளவிற்கு முற்றி போய் உள்ளாரோ அந்த அளவுக்கு உள்ள பைத்தியகாரதனமான கருத்து இது.
இவ்வளவு தமிழ் வெறியுள்ள நீங்கள் உங்கள் கருத்தை தங்கிலீஷில் அடிப்பது வருத்தத்திக்குரியது. இருந்தாலும் உங்கள் நடைமுறை சிக்கல் புரிகிறது. தமிழ் வெறியுள்ள நீங்கள் கீழ்காணும் தளத்தின் மூலம் இனிமேலாவது தமிழில் பதிக்கலாம்.
http://www.google.com/transliterate/indic/TAMIL
Dear Mr. ஆட்டோ சங்கர்
ஆட்டோ சங்கர் (21:38:14) :
//கடைசியாக அம்பேத்கர் சொல்லும் தீர்வுகள் என்ன? மதம் மாறுவது…எந்த மதத்தில் பிரச்சினையில்லை? //
முதலில் அம்பேத்கர் செய்தது என்ன என்று பாருங்கள். இந்தியாவை உருவாக்கியதில் அம்பேத்கருக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் கடின உழைப்பாளி. சிறந்த மேதை. மெத்தப் படித்தவர்.
அவர் நிலையில் உங்களை வைத்து சிந்தியுங்கள். அப்போதுதான் உங்களுக்குப் புரியும். அம்பேத்கர் மதம் மாறினார் என்றால் அப்போது இந்து மதத்தில் சாதி க் கொடுமைகள் கடுமையாக இருந்தன. இப்போது சாதிக் கொடுமைகளை ஒழிக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? எல்லாப் பிரிவு மக்களையும் ஒன்றிணைக்க உழைக்கிறீர்களா? எல்லா மதத்தவரையும் ஒன்றினைக்க உழைக்கிறீர்களா?
—-
இந்துக்கள் , குறிப்பாக தமிழக பார்ப்பனர்கள் பெரியாரிடம் இருந்து கற்க வேண்டியது உள்ளது. அவர் திட்டினால் என்றால் ஏன் திட்டினார் என்று சிந்தியுங்கள்.
For any system to be stable feed back is required and that feed back should be negative feed back!
ஐயா matt அவர்களே,
//
ஜெயலலிதா ஜெயெந்திரனை கைது செய்த போது ஜெயலலிதாவை எதிர்த்த பார்ப்பார்கள் தான் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்தார்கள்.அது போன்ற கோபம் தான் அவர்களுக்கு உங்கள் மீதும். கோபித்து கொள்ளாதீர்கள் உங்களவா மேலேயே…//
எனக்கு யார் மீதும் கோவம் இல்லை, எல்லோரும் தான் என் மீது கோவிக்கிறார்கள்.
1) ஜெயேந்திரர் உள்ளிட்ட பில்லியன் பணக்கார சாமியார்களை எதிர்ப்பதால், இந்து மதத்தைப் பகுத்தறிவு பாதைக்கு மீண்டும் திருப்ப முயற்சி செய்வதாலும் என்னை பார்ப்பனர் உள்ளிட்ட எல்லா இந்துக்களும் என்னை எதிர்க்கிறார்கள்.
2) சாதிக் காழ்ப்புணர்ச்சிக்காக முஹமது பாருக் போன்ற சகோதர்கள் என்னை எதிர்க்கிறார்கள்
3) இந்திய நாட்டு மக்களையும், இந்தியாவையும் நேசிப்பதால் நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள்.
4) இயேசு கிறிஸ்துவை மரியாதை செய்வதாலும்,
எல்லா மதத்திலும் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவதாலும்,
பைபிளில் உள்ள காட்டு மிராண்டிக் கால கர்ப்பனைகளை அம்பலப் படுத்துவதாலும்,
எல்லா மதத்தினரின் கடவுள்களையும் மரியாதை செலுத்துவது மத நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும் என்று கூறுவதாலும்,
பைபிள் மார்க்கத்தை சேர்ந்த பல சகோதரர்கள் என் மீது கோவமாக உள்ளனர்.
5) //பஞ்சை பராரி விவசாயியிடம் இருக்கும் துண்டு துக்கடா நிலத்தையும்,பொது உடமை என்ற பெயரில் பிடுங்கிக் கொண்டு,
ஏழை விவசாயியின் குடும்பத்தை- அராசங்கம் என்ற பெயரில் நடத்தும் அராஜகத்துக்கு- கொத்தடிமை ஆக்கும் முறையை,
வாழ்த்தவில்லை , வைகிறேன்!//
என்று எழுதுவதால் பொதுவுடமை மார்க்கத்தை சேர்ந்த பல சகோதரர்கள் என் மீது கோவமாக உள்ளனர்.
7)மானமிகு தளபதியார் குலத்தொழில் அடிப்படையில், இராச மகன் இராசா என்பது போல வர்ணாசிரம முறையிலே வாரிசுக்குப் பட்டம் கட்ட முயல்வதாக பத்திர்க்கைகள் எழுதுகின்றன என்று எழுதியதால் கழக மார்க்கத்தை சேர்ந்த கண்மணிகள் என்மேல் கோவமாக உள்ளனர்!
நான் வெறுப்புக் கருத்துக்களை விடுத்து அன்புக் கருத்துக்களுக்கு ஆதரவாக எழுதுவதால் எனக்கு இவ்வளவு எதிர்ப்பு.
//அம்பேத்கர், தலித் மக்களின் தலைவரில்லையா? அவர்களின் உரிமைக்காகப் போராடிய தலைவர்தான். அவரை தலித் அல்லாத சமூகத்தினரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியதன் அவசியமென்ன? அண்ணல் அம்பேத்கர், சமூகரீதியாகப் பின்தங்கியிருக்கிற அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர். அதனால்தான் அவரை அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
“தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டிக்கும்போது, பிற்படுத்தப்பட்ட ஜாதியினைக் கண்டிக்கிற டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு முழுக்காரணம் என்று இந்து மதத்தையும் பார்ப்பனர்களையுமேதான் குற்றம் சுமத்துகிறார்” என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டு, அம்பேத்கரை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் மதிமாறன்.//
எப்படி எல்லாம் தங்களின் சாதிக் காழ்ப்புணர்ச்சியைக் காட்ட, அம்பேத்கரை உபயோகப் படுத்த முடியும் என்று பார்க்கிறார்கள். அம்பேத்கரை சாதி சங்க தலைவர் போல சித்தரிக்கிறார்கள்.
அம்பேத்கர் இந்தியாவிலே தாழ்த்தப் பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு போராடிய வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே நேரம் அவர் இந்தியாவின் எல்லா மக்களுக்குமான நன்மைக்காக பணி ஆற்றி இருக்கிறார்.
இன்றைய இந்தியாவை உருவாக்கியதில் அம்பேத்கருக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
இங்கே அம்பேத்கருக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்கிற ஆவலை விட அவரை வைத்து நமது சாதிக் காழ்ப்புணர்ச்சி விசத்தைக் கொட்ட வேண்டும் என்கிற ஆவலே அதிகம் இருக்கிறது.
நம்முடைய சகோதரர் வே. மதிமாறன் எப்படிப்பட்ட சிந்தனைகளை வைத்து இருக்கிறாரோ, அதே சிந்தனைகளைத் தான் அம்பேத்கரும் வைத்து இருந்தார் என்பது போல காட்ட முயல்வது ஒரு பக்கம் வருத்தத்தை அளிக்கும் அதே நேரத்திலே, சிரிப்பையும் உருவாக்குகிறது.
இதே ரேஞ்சிலே போனால் அம்பேத்கர் அவர்கள் பேசும்போது அருகிலே தரையிலே கொஞ்சம் நூல் இருப்பது போல ஒரு படத்தை வரைந்து, அம்பேத்கர் பார்ப்பனர்களின் பூணூலை அறுத்தவர் என்று எழுதினாலும் ஆச்சரியமில்லை.
ஒரு மிகப் பெரிய தலைவர், நல்ல மேதை, மக்களின் நன்மைக்காக சுய நலம் இன்றி உழைத்தவர், நேர்மையானவர் அப்படிப்பட்ட தலைவரை தம்முடைய சாதிக் காழ்ப்புணர்ச்சியைக் காட்ட வடிகாலாக உபயோகிப்பது சரியா என்று சகோதரர் வே. மதிமாறன் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒடுக்கப் பட்ட இன மக்களுக்காக வேறுபாடு கருதாது இறுதிநாள் வரய் உழய்த்த அந்த மாமனிதர்களான அண்ணலின் மீதும், அய்யாவின் மீதும் சாதி என்கின்ற சாக்கடயய் தெளித்து, அந்த நாற்றத்தய் வய்த்தே அவர்களய் பிரிக்கவும் ஆகக் கூடிய அத்தனய் முயற்சியய் முழுவீச்சில் செய்யும்.. பார்ப்பனர்களல்ல, நம்மவர்களே.. நம்மய் பிரிக்கும் சூட்சியில் வாங்கிய காசுக்கும், கிழம்பி வந்த சங்கர மடத்துக்கும் உண்மய்யானவர்களாக இருந்து அண்ணலின், அய்யாவின் முயற்சி களனய்த்தய்யும் செல்லாக் காசாக்க பார்ப்பனர்களய் விட அதி தீவிரமாக முழுநேரமும் உழய்க்கிறார்கள். இரவிக்குமார் போன்ற மக்கள் விரோதிகள் ஒன்றய் மட்டும் நினய்வில் நிறுத்திக் கொள்ளட்டும், அய்யாவும், அண்ணலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள், அதில் ஒருவரய் பிரித்தால்கூட செல்லாக் காசாவது நாணய்யம் அல்ல, நம் இன உழய்க்கும் மக்களே..
திருச்சி அவர்களே – குழப்பக்காரரிடம் வாதிடத் திராணியில்லை. உங்களுக்கு விஷயம் புரிய சில நாட்களாகும் பின்பு தேவைப்பட்டால் பேசுவோம்.
பாரதி எப்படி பார்ப்பனர்களுக்குக்கும் பார்ப்பனர் அல்லாதோருக்கும் பாலமாக அமைவதில் வயிறு எரியும் இதே ‘பகுத்தறிவாதிகள்’ , அதே குற்றத்தை அம்பேத்கர் மூலம் நிறைவேற்றுகின்றனர். (பெரியார் மட்டும் போணி ஆகாது என உணர்ந்துள்ளனர்).
//ராமன் அளவுக்கதிகமாகக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்துவிட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான் என வால்மீகி குறிப்பிடுகிறார். அழகிகளின் மத்தியில் ராமன் குடித்துக் கூத்தாடி கலந்து மகிழ்ந்து இன்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் ராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர்//
இராமன் அப்படி குடிப்பவனாகவும்,
பல மங்கைகளுடன் சேர்ந்து,
“அன்பே ஹா, ஹா,
என் அன்பே ஹா ஹா ஹா
என் அன்பே வா, என் அன்பே நீ வா, வா வா வா”
என்று ஆடும் விந்தையான வேந்தனாக உத்தம் புத்திரன் படத்திலே வருவது போல இருந்திருந்தால்,
எப்படி ஒரே நாளில் எல்லா சுகங்களையும் உதறித் தள்ளி விட்டு, மிக மிகக் கடினமான காட்டு வாழ்க்கைக்கு தயார் என்று கேட்டவுடன் சம்மதிக்கும் மனநிலை இருந்திருக்க முடியும்?
அரச பதவி இல்லை என்று கூறிவிட்டார்கள்.
சரி அரசனாக இல்லாவிட்டலும் ஒரு ராஜ குமாரன் என்ற அந்தஸ்திலாவது ஒரு அரண்மனை ராஜ போகம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருந்திருக்க விரும்பியிருப்பன் அல்லவா?
அரண்மனையும் இல்லை,
சாதா பங்களாவும் இல்லை,
நகரின் ஒரு சாதாரண வீட்டிலும் வசிக்க கூடாது,
நாட்டின் மூலையிலே ஏதோ ஒரு கிராமத்திலே ஒரு குடிசையிலே கூட வசிக்க அனுமதி இல்லை,
காட்டிலே தான் வசிக்க வேண்டும்,
அப்படிக் காட்டில் வசிக்கும் போது நாட்டு மக்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது!
ஒருவன் இத்தனை நாள் வரை,
விதம் விதமான உயர் ரக
புளூ லேபில்,
ஜானி வாக்கர்,
போன்ற விஸ்கி பிராந்திகளை ஐந்தாறு பெக்குகள் உள்ளே போட்டு விட்டு, குஜால் வேலைகளில் ஈடுபட்டு வந்தவனாக இருந்திருந்தால்,
அவனுக்கு எப்படி அதை திடீரென்று நிறுத்த முடியும்?
தொடர்ந்து குடித்து வருபவர்கள் குடியை விட முடியாமல் சிகிச்சை எல்லாம் தரப் படுகிறதே.
இராமன் சீதையுடன் சேர்ந்து ஆடியிருந்தால் அதில் தவறு சொல்ல முடியாது. அவன் தன மனைவியை காதலிக்கும் கணவனாக இருந்திருக்கிறான்.
கணவன் மனைவி இருவருக்கும் ஆடத் தெரிந்தால் அவர்கள் சேர்ந்து ஆடுவதில் என்ன தவறு?
இங்கே எழுதுபவர்கள் யாரும் மனைவியைக் காதலிப்பது இல்லையா? ஏதோ என்று கடமைக்காவா எல்லோரும் வாழ்கிறோம்?
செய்யுள்களை பல வகையில் அர்த்தம் செய்ய இயலும். தியாகராசர் அவர் எழுதிய கவிதையிலே, அவர் பூசனை செய்யும் போது
“மது சர்க்கரை யானு பாலு மரியாரை இஞ்சி”
என்று எழுதி இருக்கிறார்.
இங்கே மது என்று குறிப்பிடப் படுவது தேன் ஆகும்.
தேன் , சர்க்கரை , பால் இவற்றை வைத்து வழி படுவதாக தியாகராசர் கவிதை எழுதி உள்ளார்.
சமஸ்கிருதத்தில் மது என்பது தேனையே குறிக்கும்.
தேன் உடலுக்கு மிகவும் நல்லது.
உடல் பருமனைக் குறைக்கும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
உடல் உறுப்புகளை சீராக வைக்க தேன் உதவும்.
————–
நான் இராமயணத்தை உளவியல் ரீதியில் இங்கே ஆராய்ச்சி செய்து இருக்கிறேன்.
இதை எழுதியதற்காக, நான் இராமன் தான் முழு முதல் கடவுள் என்று கூறி விட்டதாகவும், என் பகுத்தறிவு முக மூடி கிழிக்கப் பட்டு விட்டதாகவும், என் மதச் சார்பின்மை வேடம் களைந்து விட்டதாகவும் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் எழுதலாம். ஆனால் உண்மை என்ன?
இராமன் கடவுளா என்று எனக்கு தெரியாது!
கடவுளை – அப்படி ஒருவர் இருந்தால்- அவரை நான் நேரில் சந்திக்க நேர்ந்தால் நான் அவரிடம் “இராமனாக வந்தது நீங்களா , இயேசுவாக வந்தது நீங்களா” என்று கேட்டு, அவர் ஆமாம் என்று சொன்னால்,
அப்புறம் வந்து உங்கள் முன்னால் சாட்சி குடுப்பேன்.
உங்களில் வேறு தயாராவது கடவுளைப் பார்க்க நேரிட்டாலும் நீங்கள் இது போன்ற பல் கேள்விகளைக் கேட்டு எல்லோருக்கும் விளக்கம் அளிக்கலாம்.
நான் இராமயணத்தை உளவியல் ரீதியில் இங்கே ஆராய்ச்சி செய்து இருக்கிறேன்.
Dear Mr.ஆட்டோ சங்கர்
//ஆட்டோ சங்கர் (15:12:27) :
திருச்சி அவர்களே – குழப்பக்காரரிடம் வாதிடத் திராணியில்லை. உங்களுக்கு விஷயம் புரிய சில நாட்களாகும் பின்பு தேவைப்பட்டால் பேசுவோம்.
பாரதி எப்படி பார்ப்பனர்களுக்குக்கும் பார்ப்பனர் அல்லாதோருக்கும் பாலமாக அமைவதில் வயிறு எரியும் இதே ‘பகுத்தறிவாதிகள்’ , அதே குற்றத்தை அம்பேத்கர் மூலம் நிறைவேற்றுகின்றனர். (பெரியார் மட்டும் போணி ஆகாது என உணர்ந்துள்ளனர்).//
I cant understand what you mean to say exactly.
But belive me, you can learn from Periyaar. Periyars criticism can be used to rectify the hindu religion. Periyars criticism in many cases is simalar to that what Vivekaananda dis, but in a rough language, and his practices were rude.
But still his criticism is very useful.
————
According to me Dr. Ambethkar and Periyaar are distinctly different , only meet at certain points.
அம்பேத்கர் இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கும் அறிமுகம் ஆனவர்.
இந்தியாவில் உள்ள எல்லா தலித் இன மக்களும் தங்களின் மெசையாவாக கருதுவது அம்பேத்கரை தான். பெரியார் தமிழ் நாட்டில் மட்டும் தான்.
தமிழ் நாட்டை தாண்டி பெரியாரை யாருக்கும் பெரிய அளவில் தெரியாது.
இப்ப “பெரியார் – அம்பேத்கர் combination””
இல்லாவிட்டால் உழைக்கும் மக்கள் செல்லாக் காசா விடுவார்கள் என்று சொன்னால்,
ஆந்திரா, கர்நாடகா, உ.பி. இங்கெல்லாம் , இந்தியாவெங்கும்
தலித் இன மக்களோ , பிற்படுத்தப் பட்ட இன மக்களோ முன்னேறியது எப்படி?
ஓவர் பில்டப் ஏன்? ?
ஐயா நமக்கு வட மொழியில் புலமை கிடையாது.
அதனால் நமக்கு தெரிந்த நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு //ராமன் அளவுக்கதிகமாகக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான்// என்று கூறப்படுவது பற்றி விசாரித்தேன்.
அவர் என்ன இப்படி கேட்கறேல், என்றார்! எழுதியிருக்கா, அதான் கேட்கிறேன் என்றேன்.
அவர் வட மொழியில் மது என்றால் தேன் என்று தெரிவித்தார்.
மது மக்ஷிகா என்றால் தேனீ என்றும் தெரிவித்தார்.
//அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்//
ஆந்திராவிலே , கர்நாடகாவிலே , மத்தியப் பிரதேசத்திலே பிணம் எரித்தவர் மகன் அதிகாரி ஆகவில்லையா?
அவையெல்லாமும் பெரியாரினால் தானா?
அங்கே பெரியார் இல்லையே?
இந்திய நாட்டிலே நசுக்கப்பட்ட ஒதுக்கப் பட்ட மக்கள் முன்னேற திட்டங்கள் தீட்டப் பட்டு , இந்தியா முழுவதிலும் படிப் படியாக செயல் திட்டங்கள் அமுல் செய்யப் பட்டன.
இந்த திட்டங்களை அப்படியே பெரியார் பேருக்கு பட்டா போட்டு, அதை தங்களின் பெயருக்கு பட்டாவாக மாற்றி “நமக்கு நாமே கோடீஸ்வரன்” திட்டமாக்கி விட்டார்கள்.
வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் தானே பெரியாரின் கொள்கை?
திராவிடர் கழகம் ஆரம்பித்தது முதல் இன்று வரை ஒரு தலித் கூட கழகத்தின் தலைவராகவில்லையே?
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை தன்னுடைய வகுப்பு வாரி பிரதிநித்துவக் கொள்கையின் படி, தலித் இனத்தை சேர்ந்த ஒருவரைடம் சில வருடங்களாவது, சில மாதங்களாவது, சில வாரங்களாவது, ஒரு நாளாவது ஒப்படைத்தாரா?
அப்படி ஒப்படைத்திருந்தால் அதை முன் உதாரணமாக்கி முதல்வர் பொறுப்புக்கும் தலித் இனத்தை சேர்ந்த ஒருவரை சில காலமாவது அமர்த்த வேண்டிய தார்மீக பொறுப்பு, அவர் வழி வந்த திராவிட தலைவர்களுக்கும் இருக்கும் அல்லவா?
பார்ப்பனர்கள் 20 % உள்ள உத்தர பிரதேசத்திலே, அவர்களின் ஆதரவோடே தலித் இனத்தை சேர்ந்தவர் முதல்வர் ஆகி விட்டார்!
கேராளாவைச் சேர்ந்த தாழ்த்தப் பட்ட பிரிவை சேர்ந்தவர் நாட்டின் தலைமை நீதிபதி ஆகி விட்டார்.
பகுத்தறிவுப் பகலவன் சுடர் விட்டு பிரகாசித்த தமிழ் நாட்டிலே நிலைமை என்ன?
தலித் இன மக்களுக்கு , தலித் மக்களின் நன்மைக்காக நேர்மையாக , சுயநலமின்றி பாடுபடும் தலித் தலைமை தமிழ் நாட்டில் உள்ளதா?
வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் தானே பெரியாரின் கொள்கை?
இதைக் கேட்டால் என்ன தவறு? தெய்வக் குத்தமா? பகுத்தறிவுக் குத்தமா?
அப்ப கொள்கை எல்லாம் பிறருக்கு அறிவுரை கூற மட்டும் தானா?
கொள்கையை நாமே பின்பற்ற வேண்டியது அவசியம் இல்லையா?
60 வருடத்துக்கு மேலான கழக வரலாற்றில் தாழ்த்தப்பட்டவர்கள் அதை தாங்கிப் பிடிக்கவில்லையா?அவர்களுக்கு வகுப்பு வாரி பிரதி நிதித்துவம் தரப் பட்டதா?
தாழ்த்தப்பட்டவர்களை தலமைப் பொறுப்புக்கு கொண்டு வர நேரம், காலம், நாள், நட்ச்சத்திரம் பார்க்க வேண்டுமா?
பெரியார் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்து, அந்த பார்ப்பன எதிர்ப்பு தேரின் அழுத்தத்திலே,
அறிந்தோ அறியாமலோ தலித் இனத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் முன்னுக்கு வர முடியாமல் அமுக்கப் பட்டு விட்டனர் என்கிற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளாமல், ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் சிந்த்தித்தால் உங்களுக்கப் புரியும்.
பந்தி பரிமாறுபவன் ஒருவன், பாயசம் சாப்பிடுபவன் ஒருவன் என்ற நிலைதானே?
“இந்திய விடுதலை என்பது தலித்துகளுக்கு எஜமான மாற்றமேயன்றி வேறென்ன” என்று அம்பேத்கர் கூறியதாகப் படித்திருக்கிறோம்.
“என்னைத் தொடாதே , என்னைத் தொட்டால் தீட்டு” என்ற அநியாயமான இழிவை செய்த பார்ப்பனர்களின் கையிலே இருந்து அதிகாரத்தை மாற்றித்,
தலையை வெட்டித் தெருவில் உருட்டும் கொடுமையை, வாயிலே பீ திணிக்கும் கொடுமையை செய்பவர்களின் கையிலே அதிகாரம் மாறும் நிலைமையைக் கொண்டு வந்துதானே பகுத்தறிவுப் பகலவனால் உண்டான விளைவு?
இன்றைக்கு தமிழ் நாட்டிலே நசுக்கப் பட்ட மக்களில் சிந்திக்கக் கூடியவர்கள் செய்யக் கூடியது என்ன? பிலாகுகளை (blogs) அமைப்பது, பத்திரிக்கைகளை உருவாக்குவது, அதிலே எழுதுவது, தன்னுடைய சிந்தனைக்கு அங்கீகாரம் கிடத்ததாகத் திருப்தி அடைவது- இதுதானே? கோட்டையிலே கோலோச்ச முடியுமா/ கோட்டையின் அதிகாரக் கதவுகளின் அருகேயாவது செல்ல முடியுமா?
சாதிகளுக்கு இடையில் பிரிவினையை உருவாக்கி குளிர் காய்வது எனக்கு ஒருக்காலும் ஒப்பில்லை. ஆனால் உண்மைகளை பல கோணத்தில் இருந்தும் எடுத்து வைக்கிறோம். உண்மையை யாராலும் மறைக்க முடியாது.
என் வழி இணைப்பதுதான் பிரிப்பது இல்லை என்று தெளிவாகக் கூறியிருக்கிறேன்.
நசுக்கப் பட்ட, பிற்படுத்தப் பட்ட, முற்படுத்தப் பட்ட என்ற எல்லா பிரிவு மக்களும், ஒன்றாக , கனவானாக, நாகரிக மனிதராக, அன்பின் அடிப்படையில் நல்லெண்ணத்தில், எல்லாப் “பட்ட”ங்களும் நீங்கி ஒரே பொதுப் பிரிவில் இணைய வேண்டும் என்பதுதான் என் கருத்து. (இதை சொல்வதினால் இட ஒதுக்கீடு நீக்கப் பட வேண்டும் என்ற கருத்துக்காக அல்ல. இட ஒதுக்கீடு தேவைப் படும் வரைக்கும், அவசியம் உள்ள வரைக்கும், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அமுல் படுத்தப் படலாம்.
நான் பொதுவாக இணைவது என்பது மன இணைப்பை, சமூக இணைப்பைக் கூறினேன்.)
எனவே சாதிகளுக்கு இடையில் பிரிவினையை உருவாக்கி குளிர் காய்வது எனக்கு ஒருக்காலும் ஒப்பில்லை. ஆனால் உண்மைகளை பல கோணத்தில் இருந்தும் எடுத்து வைக்கிறோம். உண்மையை யாராலும் மறைக்க முடியாது.
திரு பகுத்தறிவாளர்களே,ஜாதி வெறியை ஒழிப்போம்!!!ஜாதி வெறியை ஒழிப்போம் !!!ன்னு சொல்லிக்கிட்டேவும் நீங்கல்லாம் பார்பன ஜாதி மேல இவ்வளவு வெறியா இருக்கீங்களே,அது என் சார்?
//திட்டமிட்டுதிரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லுர்ரியில் நடந்த சண்டையை, தொலைக்காட்சிகளில் பார்த்தேன். …. …. … ஒரு செய்தி உறுதியாகத் தெரிந்தது. அது டாக்டர் அம்பேத்கர் என்கிற பெயர் ஜாதி இந்துக்களுக்குஆத்திரமூட்டுகிற, எரிச்சலுர்ட்டுகிற பெயராக இருக்கிறது என்பதே! ஆதிக்க ஜாதிகளுக்கு எதிரான, ஜாதி வெறிக்கு எதிரான குறியீடாக அம்பேத்கர் பெயர் இருக்கிறது. டாக்டர் அம்பேத்கர் பெயரை-அவர் உருவத்தைப் பிற்படுத்தப்பட்டவர்களிடமும் உயர்ஜாதிக்காரர்களிடமும் கொண்டுபோய் சேர்ப்பது, ஜாதிக்கு எதிராகத் தீவிரமாக இயங்குவது போன்றதாகும் என்ற எண்ணத்தையும் இதுவே முற்போக்காளர்களின் முதன்மையான கடமை என்ற சிந்தனையையும் சட்டக் கல்லுர்ரி சண்டை எனக்குக் கற்றுத் தந்தது ” என்கிறார் . அந்த எண்ணத்தை அவர் எந்தளவு நிறைவேற்றியுள்ளார் என்பதை புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது புரிந்துகொள்ள முடிகிறது.//
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர்.
அப்படிப்பட்ட அறிங்கர் அம்பேத்கர், இன்றைக்கு தமிழ் நாட்டில் சாதி வெறியர்கள் கையில் சிக்கிய பதுமை ஆகி விட்டார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர்.
ஆனால் அவர் பெயரை ஒரு சில மாணவர்கள் இருட்டடிப்பு செய்து விட்டனர். அதற்குக் காரணம் சாதிக் காழ்ப்புணர்ச்சி என்பது சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அதை எதிர் கொள்ள வேண்டிய முறை என்ன?
வேண்டுமென்றே அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்ததை சுட்டி காட்டி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லவா?
ஆனால் அவர்கள் நடந்து கொண்ட விதம் அவர்கள் சட்டம் படிக்கும் மாணவர்கள் போலவா இருந்தது?
இது அம்பேத்கர் வழியா? இதை அம்பேத்கார் ரசித்திருப்பாரா?
நெடுங்காலமாக நசுக்கப் பட்ட மக்கள் முன்னுக்கு வரவது அவசியம், வரவேற்கிறோம்.
ஆனால் நசுக்கப் பட்டவர் முன்னேற்றம் என்பது, அவர்களை இன்னொரு அரிவாள் தூக்கும் சாதியாக, பிறர் வாயில் பீ திணிக்கும் சாதியாக மாற்றுவதா?
அல்லது
அம்பேத்கரைப் போல கண்ணியமும் , நேர்மையும், திறமையும் அதே நேரம் அஞ்சாமையும் உடைய கனவானாக மாற்றுவதா?
நிதானத்தைக் கைவிட்டு, வன்முறையைக் கையில் எடுத்த மாணவர்களின் எதிர்காலம் என்ன?
சாதி ஒழிப்பு என்ற போர்வையில் சாதி வெறியை தூண்டி, வெறுப்புக் கருத்துக்களை வளர்த்து கற்கால நிலைக்கு கொண்டு செல்கிறார்கள்.
அதுதான் இப்படிப் பாப்பாப் பட்டியிலும் , கீரிப் பட்டியிலும், சட்டக் கல்லூரியிலும்,திண்ணியத்திலும் வெடிக்கிறது.
வேண்டுமென்றே அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்ததே ஒரு வன் கொடுமை குற்றமாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லவா?
அவர்களுக்கு உண்மையான பகுத்தறிவு அளிக்கப் பட்டிருந்தால் அவர்கள் அதைத்தானே செய்திருப்பார்கள். ஆனால் பகுத்தறிவு என்ற பெயரில் அவர்களுக்கு வழங்கப் பட்டது கற்கால கலாச்சாரம்.
அந்த மாணவர்களின் எதிர்காலம் என்ன?
அதை ஜாக் பாட் மூலதனமாக வைத்து தங்களின் சாதிக் காழ்ப்புணர்ச்சி வியாபாரத்தை பிரச்சாரத்தை தொடர்ந்து செய்ய எரி பொருளாக வைத்துக் கொள்கின்றனர்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒரு அமெச்சூர் மெகா சீரியல் எடுக்க ஒத்திகை பார்த்தது போலவும், அதை எல்லோரும் சீரியஸ் மேட்டர் போல சித்தரித்து விட்டது போலவும், ஒன்னும் பெரிய தப்பில்லைங்க என்கிற பாணியில எழுதுவது சமூகத்துக்கு நல்லது இல்லை.
குளிர் சாதன அறையிலே உட்கார்ந்து எழுதுவது, அப்பாவியின் மாணவனின் உள்ளத்திலே வெறுப்பு எண்ணங்களை கொப்புளிக்கச் செய்து, அவன் வன் முறையைக் கையில் எடுத்து தன் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்கிறான்.
மது என்றால் தேன் என்றும் அதைத்தான் ராமனும் குடித்தான் என்று சோ முதலான பார்ப்பார்கள் சப்பைக்கட்டு காட்டுவது புதிதல்ல. ஒருவன் தேன் குடிப்பதை யாரும் பெரியதாக பேசமாட்டார்கள். திருசிகாரருக்கு தேன் குடிக்கிற பழக்கம் உண்டு என்று யாரும் சொல்லமாட்டார்கள். பார்ப்பனிய இந்து மதத்தின் வேதங்களில் எவளவு சாக்காடை ஓடுகிறது, இந்து மதத்தை பார்பானை தவிர எவரும் தெரிந்து கொண்டு பின்பற்றுவதில்லை. பார்ப்பான் தான் மட்டும் நல்லா வாழனும் பார்பானை எதிர்பவநெல்லாம் கொல்லப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் உளரியதுதான் இந்த வேத குப்பைகள். மேலும் அண்ணலின் நூல்களில் இருந்து பாப்போம்…
”
பிராமணன் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தியது தங்களுக்கு மேல் அந்தசுத்தைப் பெற்றிருந்த புத்தபிட்சுக்களிடமிருந்த உயர் ஸ்தானத்தைப்பறிக்கவே. இழந்த இடத்தைப்பிடிக்க பிராமணர் மாமிசம் உண்பதை விடுவதோடு, மரக்கறி உண்பவர்களாகவும் மாறினார்கள். ஆனால் அவர்களுடைய மனுசட்டம் மாட்டிறைச்சி உண்பதை தடுக்கவில்லை. ஆதாரநூல்: தீண்டப்படாதவர்- டாக்டர் அம்பேத்கர் .பக்கம் 128
அக்னிக்காக குதிரைகள், காளைகள். எருதுகள், மலட்டுப்பசுக்கள், செம்மறியாடுகள் பலியிடப்பட்டன என்று ரிக்வேதம் கூறுகிறது (எக்சு 91.14)
ரிக்வேதத்தின்படி பசுக்கள் வாளாலும் கோடரியாலும் கொல்லப்பட்டன.(72.6)
ஆதார நூல்: தீண்டப்படாதவர்-டாக்டர் அம்பேத்கர். பக்கம் 94
விஷ்ணுவிற்கு குள்ளமான எருதும், வளமான கொம்புள்ள காளையை விரித்ராவை அழித்த இந்திரனுக்கும், கறுப்பு பசுவை புஷனுக்கும், செம்பசுவை ருத்ரனுக்கும் பலியிடவேண்டும். (தைத்திரிய பிராமணா)
ஆதார நூல்: தீண்டப்படாதவர்- டாக்டர் அம்பேத்கர் .பக்கம் 95 ”
இதை கூட, வேதத்தில் கருப்பு பசுன்னு சொன்னது கத்திரிகாயை, செம்பசுனு சொன்னது பீட்ரூட் வடமொழியில் இப்படிதான் அர்த்தம் என்று சொன்னாலும் சொல்வார்கள் பார்ப்பார்கள்…
தொடரும்….
matt அவர்களே,
//ஒருவன் தேன் குடிப்பதை யாரும் பெரியதாக பேசமாட்டார்கள். திருசிகாரருக்கு தேன் குடிக்கிற பழக்கம் உண்டு என்று யாரும் சொல்லமாட்டார்கள்//
“தேனும் பாலும் ஆறா ஓடுமப்பா”
என்று புலவர்கள் எழுதியதை நாம் நினைவில் கொள்ள வெண்டும்.
அந்த அளவுக்கு தேன் ஒரு முக்கிய உணவாக இருந்தது என்பதை நாம் இதன் மூலம் நாம் அறியலாம்.
தேன் அதிக அளவில் உண்ணப் படுவது நாடும், சமுதாயமும் வளமான நிலையிலே உள்ளதைக் காட்டும்.
பஞ்சாமிரதத்தில் தேன் ஒரு முக்கிய பகுதியாகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் தேன் வைத்து படைக்கப் படுகிரது,
நான் அடிக்கடி தேன் அருந்தும் பழக்கம் உள்ளவன் தான் (அதாவது தரமான தேன் வாங்கும் அளவுக்கு கையிலே காசு உள்ள போது). இது என்னுடன் பழகும் நண்பர்களுக்கும் தெரியும். நான் தேன் அருந்துவதோடு, தேனை உபயொகப் படுத்தி புரூட் சாலட் செய்து அதையும் உணவாக உபயோகப் படுத்துபவன்.
என் வீட்டுக்கு விருந்துக்கு வரும் நண்பர்கள்,அந்த புரூட் சாலட் எங்கே என்று கேட்டு சாப்பிட்டு விட்டு செல்வார்கள். ஐஸ் கிரீமில் செய்த பூரூட் சாலட்கள் சிறுவர்களுக்கு குளிர்ச்சி நோயை உருவாக்கக் கூடும்.
matt அவர்களை எப்போதாவது சந்திக்க நேர்ந்தால், நான் அவருக்கு தேனை அடிப்படையாக வைத்து உருவக்கப் பட்ட செய்து தருவேன் என உறுதி அளிக்கிறேன்.
முன்பெல்லாம் தமிழ் நாட்டின் கிராமப் பகுதிகளில் கம்பங் கூழும், சோள சோறும் முக்கிய உண்வாக இருந்தது. நான் சமீபத்தில் நண்பனுடன் அவனது கிராமத்துக்கு சென்ற போது கம்பு மாவு குடுங்க அம்மா என்றேன், இப்ப அதெல்லாம் செய்யரதில்ல ராசா என்றார் சிரித்துக் கொண்டெ. ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாழ்க!
பண்டைய உணவு முறைகள் இப்போது பழக்கத்தில் இல்லை என்பதால் அவை உண்ணப் படவில்லை என முடிவு கட்டப் படலாமா?
தேனும் , தினை மாவும் பண்டைய தமிழரின் முக்கிய உணவு, குறிப்பாக குறிஞ்சி பகுதியில் என்பதை matt மறந்திருக்க வாய்ப்பு இல்லை!
வேதங்களிலே இரண்டு முக்கியமான பிரிவுகள் இருப்பதாக விவேகனந்தர் கூறியுள்ளார்.
ஒன்று ஞான காண்டம் என்று சொல்லப் படும் அறிவுப் பகுதி, மற்றொன்று கர்ம காண்டம் என சொல்லப் படும் வேள்வி சடங்கு பகுதி.
இந்த வேள்விகள் மக்கள் கூட்டமாக வசிக்கும் சமூகப் பகுதிகளில், குறிப்பாக நகரப் பகுதிகளில் நடை பெற்றன.
அறிவுப் பகுதியான, “உடல் இறந்த பின் உயிர் தொடர்ந்து வாழ்கிறதா? அப்படி வாழ்ந்தால் உயிர் எங்கு செல்கிறது? என்ன ஆகிறது?” என்பது பற்றியான பகுத்தறிவு ஆராய்ச்சி, காடுகளிலே ஆரண்யத்திலே நடை பெற்று வந்தது. ரிஷிகள் அல்லது முனிவர்கள் அந்த ஆராய்ச்சியை செய்து வந்தனர்.
வேள்வி சடங்கை ஏறகட்டும் வேலையை புத்தர் ஆரம்பித்தாலும், ஆதி சங்கரர் அதை முழு அளவில் செய்து வேள்விகளை தூக்கி பரணிலே போட்டார் .
ஆனால் பின்னாளில் அவர் ஆரம்பித்த மடங்களின் தலைமைப் பீடத்திலே இருப்பவர்கள் மறுபடியும் சடங்காச்சாரங்களுக்கு ஆதரவு குடுத்து வந்தனர்.
விவேகாந்தர் வந்து மீண்டும் இந்து மதத்தை பகுத்தறிவு பாதையில் திருப்பினார். சடங்காச்சாரங்கள் முழுமயாக ஒழிந்து போகட்டும் என்றே விவேகானந்தர் கூறினார்.
இவ்வாறாக காடுகளிலே நடை பெற்று வந்த பகுத்தறிவு ஆராய்ச்சிகளை, ஆதி சங்கரரும், விவேகானந்தரும் மக்கள் கூட்டமாக வசிக்கும் சமூகப் பகுதிக்கு மீட்டு எடுத்து வந்தனர்.
இதிலே நான் ஞான காண்டம் என்று சொல்லப் படும் அறிவுப் பகுதியிலே சிறிதளவு அறிந்திருக்கிறேன்.
வேள்வி சடங்குகளைப் பற்றி நமக்கு அதிக விவரம் இல்லை.
நம்முடைய தோழர் matt வேள்வி சடங்குகள் பற்றி பல விவரங்களைத் தருகிறார். நன்றி!
இப்படியாக இந்து மதத்தின் இரண்டு பிரிவுகளான ஞான காண்டம், கர்ம காண்டத்திலே
திரு matt அவர்கள் கர்ம காண்ட பகுதியைப் பற்றியும், நான் ஞான காண்டம் பகுதியைப் பற்றியும் விளக்கம் அளிப்பதால்,
நாங்கள் இருவரும் டபிள் பேரல் கன் போல செயல் படுகிறோம் என்று யாரவது கருதினால்,
அதற்க்கு நாம் பொறுப்பல்ல.
Matt (03:06:00) :
//பார்ப்பான் தான் மட்டும் நல்லா வாழனும் பார்பானை எதிர்பவநெல்லாம் கொல்லப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் உளரியதுதான் இந்த வேத குப்பைகள். //
//பார்ப்பான் தான் மட்டும் நல்லா வாழனும்//
யாகங்களின் எஜமானாக இருப்பவன் யாரோ அவனுக்குத் தான் யாகத்தின் பலன் போய் சேரும் என்பதாகவே சொல்லப் பட்டு இருப்பதாக நினைவு.
அரசனுக்காக பார்ப்பன் யாகங்களை நடத்திக் குடுப்பது தான் பார்ப்பனின் பணி. அப்படி இந்த யாகங்களினால் ஏதாவது பலன் இருக்குமானால் அது எஜமானராக யார் கருதப் படுகிறாரோ அவருக்கு தான் போய் சேரும்.
அதாவது ஒரு பார்ப்பன புரோகிதர் ஒருவரின் வீட்டிற்கு சென்று நவக் கிரஹ ஹோமம் நடத்தி வைத்தால் -அப்படி அந்த கிரங்கள் மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று நம்பப் படுவது உண்மையானால்-
அந்த கிரகங்கள் அந்த குடும்பத்திற்கு தான் நல்லது செய்கிறதே தவிர, ஹோமத்தை நடத்தி வைத்து மந்திரங்களை ஓதிய பார்ப்பானுக்கு அந்த வேள்வியின் பயனிலே எந்தப் பங்கும் கிடையாது.
வேள்வி சடங்குகள் பற்றிய பொருளில் பண்டிதரான மகா கனம் பொருந்திய Matt அவர்கள், இந்த விசயத்திலே தவறாக எழுதி கோட்டை விட்டது எப்படி?
..//வேள்வி சடங்குகள் பற்றிய பொருளில் பண்டிதரான மகா கனம் பொருந்திய Matt அவர்கள்…..//
பார்பனர்களிடம் உள்ள மற்றவர்களிடம் இல்லாத ஒரு குணம் இதுதான். சரியான மறுகருத்தை வைக்காமல் மற்றவர்களை மட்டம் தட்டி தன் கருத்தை சரியென வாதிடுவது…
அப்போ பார்பன இந்து மதத்த பற்றி பேசுனும்னா பண்டிதனாக இருக்கணுமா ..? இதைத்தான் “வேதம் நீ ஒதுறதா நீ என்ன பெரிய பண்டிதனா அறிவாளியா ஊத்துங்கடா ஈயத்த காய்ச்சி காதுல…” என்று மனு சொன்னான்.
“” “என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’,‘இந்திரன் தனது வச்சிராயு தத்தால் அவர்களால் சிரங்களைத் துண்டித்திடுக.’,‘எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல் வோம்’.,‘எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’,‘சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’,‘தனது மகனையும், சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக.’,‘அக்னியே! எங்களைத் துவேஷிப் பவனை உனது சுடரால் எரித்து விடு.’,‘இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள்.தோழனைப் புசியுங்கள்; உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’.,‘இந்திரா! சத்துரு சேனையை மயக்கம் செய். அதன் கண்களைப் பிடுங்கு.’,‘அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக.’,”” இதெல்லாம் பார்ப்பார்கள் மற்றவர் நலனுக்காக அரசர்களுக்காக இயற்றியதாம் ..!?
அரசனிடம்தான் அதிகாரம் இருக்கிறது ,அவன் இதெல்லாம் நம்பவில்லை என்றால் பார்பான் எப்படி ஊர ஏமாத்துறது..அவன துணைக்கு வைத்து கொண்டால் தானே தன் பிழைப்பு ஓடும் உழைக்காமல்…
//யாகங்களின் எஜமானாக இருப்பவன் யாரோ அவனுக்குத் தான் யாகத்தின் பலன் போய் சேரும் என்பதாகவே சொல்லப் பட்டு இருப்பதாக நினைவு. //
வேதங்கள எழுதுன பார்பான் இதையும் சொல்லிவச்சாதான் அரசன் அதை செய்வான்,பாப்பானுக்கு கூலி கிடைக்கும்…மிச்ச மீதி மாமிசம் கிடைக்கும்…
//அந்த கிரகங்கள் அந்த குடும்பத்திற்கு தான் நல்லது செய்கிறதே தவிர, ஹோமத்தை நடத்தி வைத்து மந்திரங்களை ஓதிய பார்ப்பானுக்கு அந்த வேள்வியின் பயனிலே எந்தப் பங்கும் கிடையாது.//
இந்த ஹோமத்தால் அந்த குடும்பத்திற்கு ஆதாயமா நடத்தி வச்ச பாப்பானுக்கு ஆதாயமா..?ஒரு தேங்கா மூடிய கூட விட மாட்டானுங்க ….
Matt அவர்களே,
//இந்த ஹோமத்தால் அந்த குடும்பத்திற்கு ஆதாயமா நடத்தி வச்ச பாப்பானுக்கு ஆதாயமா..?ஒரு தேங்கா மூடிய கூட விட மாட்டானுங்க ….//
நவக் கிரகங்களை நிர்வகிக்க தேவர்கள் இருப்பதாகவும், கிரகங்களின் ஈர்ப்பு சக்தி போல அந்த தேவர்களின் சக்தி தங்கள் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்ப்படுத்துவதாகவும் இந்து மதத்தவர் நம்புகின்றனர்.
எனவே தான்
பெரிய தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பணக்காரர்கள், தங்கள் சொத்துக்களை காத்துக் கொள்ள அவ்வப் போது அரசியல் தலைவர்களையும், இதர தலைவர்களையும் சந்தித்து சலாம் போட்டு, அன்பளிப்பு கொடுத்து விட்டு வருவது போல,
இப்படி சடங்குகளை செய்து கிரகங்களை திருப்தி படுத்துகின்றனர்.
அரசியல் தலைகளை நேரிலே பார்க்க முடியும், எந்த கிரகத்துக்கான தேவனையும் யாரும் இது வரை நேரில் பார்த்தது இல்லை.
அது வெறும் நம்பிக்கைதான். அதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது.
ஆனால் சில சமயம் சில சோதிடர்கள் சொல்வது பலிப்பதால் பகுத்தறிவை கடாசி விட்டு, நமக்கு வேண்டியது காசு பணம், அதற்க்கு ஒரு பூசனையைப் போட்டுப் பார்த்தல் என்ன என்று நினைக்கின்றனர்.
சிலருக்கு அது பலிக்கிறது. அதனால் அவர்கள் தொடர்ந்து பூசனை போடுகிறார்கள். இதில் புரோகிதரை ஏமாற்றுவதாக சொல்ல முடியாது. இவர்கள் கூப்பிடுவதால் தான் அவர் செல்கிறார்.
அந்த புரோகிதர் பஸ்ஸோ, ஆட்டவோ, அல்லது சொந்த வாகனத்திலோ தன் வீட்டில் இருந்து அவ்வளவு தூரம் செல்கிறார்.
பிறகு 2 முதல் நான்கு மணி நேரம் புகைக்கு நடுவிலே செலவழிக்கிறார். இவ்வளவையும் செய்து ஓசிக்கு ஓதி விட்டு போவார் என்று எதிர் பார்க்க முடியுமா?
இப்போது பகுத்தறிவு திருமணம் செய்து வைப்பவர்கள் கூட அவர்கள் அரசியல் அந்தஸ்த்துக்கு ஏற்ப குறைந்த பட்சம் ஒரு லட்சம் முதல் 10 லட்சம், 20 லட்சம்… என்று வாங்குவதாகக் கேள்வி.
நம்முடைய பகுத்தறிவு பகலவன் பெரியாரிடம் ஒருவர் சீர்திருத்த திருமணம் நடத்தி வைக்க வரச் சொல்லிக் கேட்டாராம்.
பெரியார் தனது டயரியை எடுத்து அந்த நாளைக் குறித்து எழுதி வைத்துக் கொண்டாராம்.
அப்போது வந்தவர் பணத்தை எடுத்து பெரியாரிடம் கொடுத்தாராம்.
பணத்தை வாங்கிக் கொண்ட பெரியார், இன்னொரு டயரியை எடுத்து , திருமண தேதி மாதம் இவற்றை நோட் செய்து வைத்துக் கொண்டாராம்.
அப்போது வந்தவர், ஐயா, முதலில் ஒரு டயரியில் எழுதினீர்களே அது என்ன, என்று கேட்டாரம்.
முதலில் குறிப்பு எழுதிய டயரி சும்மா, வந்தவர்களிடம் முடியாது என்று சொல்லி அவர்களை நோக அடிக்காமல் இருக்க,
இரண்டாவதாக குறிப்பு எழுதப் பட்ட டயரியில் (அதாவது பணம் குடுத்தவர்கள்) உள்ளவர் நிகழ்ச்சிக்கு மட்டுமெ செல்வேன் என்றாராம்.
எனவே பார்ப்பான் தேங்கா மூடிய கூட விடாமல் எடுத்துச் செல்வது எல்லாம், நம்முடைய பகுத்தறிவாளர் பகுத்தறிவு புரொகிதத்தீர்க்கு வாங்கும் பணத்திற்க்கு உறை பொடக் காணுமா?
என்னைப் பொருத்தவரையிலே நான் சித்தார்த்தரைப் போல துன்பத்திலிருந்து ஒட்டு மொத்த விடுதலை அடைவதற்க்கான வழிகளைப் பற்றி சிந்திப்பவன்.
ஆனால் சித்தார்த்தரைப் போல விடுதலை வேட்கையோ, வைராக்கியமோ, மன வ்லிமையோ இல்லதவன்.
ஆனால் என்னுடைய குறிக்கோள் சித்தார்த்தரின் குறிக்கோள் தான் என்பதை அறுதியிட்டு சொல்ல முடியும்.
//பார்பனர்களிடம் உள்ள மற்றவர்களிடம் இல்லாத ஒரு குணம் இதுதான். சரியான மறுகருத்தை வைக்காமல் மற்றவர்களை மட்டம் தட்டி தன் கருத்தை சரியென வாதிடுவது…
அப்போ பார்பன இந்து மதத்த பற்றி பேசுனும்னா பண்டிதனாக இருக்கணுமா ..?//
உண்மையிலே எனக்கு தெரியாத சில விடயங்களை கூறி இருக்கிறீர்கள். எனக்கு கர்ம காண்டத்திலே உண்மையிலேயே பயிற்ச்சி இல்லை. எனவே உங்களிடம் இருந்து தெரிந்து கொள்வதில் தவறு இல்லை.
பல பார்ப்பனர்களை விட நீங்கள் அதிக மந்திரங்களின் பொருளை புரிந்து கொண்டவராக இருக்கிறீர்கள்.
பெரும்பாலான பார்ப்பனருக்கு ஒரு மந்திரத்தின் அர்த்தமும் தெரியாது.
பண்டிதர் என்பது குலப் பெயர் அல்ல. கற்று அறிந்தவனே பண்டிதன் எனப் படுவான்.
ஐயா matt அவர்களே,
//எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல் வோம்’//
இதில் பெரிய தவறு இல்லை. ஒருவரின் கால்நடைகளை, ஆடு மாடுகளை, இன்னொருவன் கவர நினைத்தால், பதிலுக்கு அவனை துன்புறுத்த நினைக்கிறான்!
————
//‘இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள்.தோழனைப் புசியுங்கள்; உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’//
ஒருவன் தவறு செய்யாமல் இருக்கும் போது மற்றவன் அவனை இம்சை செய்தால், அவன் பொறுக்க மாட்டாமல் திட்டுவது, வைவது ஒரு எதிர் வினையே1
————
//“” “என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’,‘இந்திரன் தனது வச்சிராயு தத்தால் அவர்களால் சிரங்களைத் துண்டித்திடுக.’,‘எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’,‘சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’,‘தனது மகனையும், சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக.’,‘அக்னியே! எங்களைத் துவேஷிப் பவனை உனது சுடரால் எரித்து விடு.’,‘இந்திரா! சத்துரு சேனையை மயக்கம் செய். அதன் கண்களைப் பிடுங்கு.’,‘அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக.’,””//
இந்த வெறுப்புக் கருத்துக்களை கண்டிக்கிறோம்.
அதே நேரம் இந்த வன்முறை கொடூர கருத்துக்கள் மனிதனால் வேண்டப் பட்டவையாக உள்ளன என்று சுட்டிக் காட்டுகிறோம்.
இந்தக் கருத்துக்கள் மனிதனால் சொல்லப்பட்டவை -இறைவனால் சொல்லப் பட்டதாக கூறப் பட்டுள்ளதா? அப்படி இறைவன் கூறியதாக எழுதி இருந்தால் காட்டுங்கள் – அந்த இறைவனை எதிர்ப்போம்.
கடவுளே மனிதனிடம் வந்து, நீ பிற இனங்களை எல்லாம் இறக்கம் காட்டாமல் அழித்துப் போடு என்று, கடவுள் மனிதனைத் தூண்டி, திட்டம் போட்டுக் கொடுத்து, இன அழிப்பு செய்ததாக இந்து மத நூல்களில் எங்காவது இருக்கிறதா?
இருந்தால் கூறுங்கள், அதை முற்றாக கண்டித்து எதிர்ப்போம்.
இருந்தால் கூறுங்கள், அதை முற்றாக கண்டித்து எதிர்ப்போம்.
இந்த கேள்வி விவேகாந்தரால் சிகாகோவில் விடுக்கப் பட்டது. இதற்க்கு எப்போது வேண்டுமானாலும் பதில் கூறலாம். இன அழிப்பு , இனப் படுகொலைக் கருத்துக்களை புனிதம் என்ற பெயரிலே மக்களிடம் புகுத்தி உலகை சுடுகாடு ஆக்க அனுமதிக்க முடியாது.
இந்து மதத்தில் உள்ள
//அத்வேஷ்டா (வெறுப்பில்லாதவனாய் ),
சர்வ பூதானாம் மைத்ரா (எல்லா உயிர்களிடமும் சிநேகத்துடன்),
கருணா ஏவ ச (கருணையே உள்ளவனாய்)
நிர்மமோ , நிரஹந்காரா……//
போன்ற கருத்துக்களை வரவேற்கிறோம்.
அதே போல இயேசு கிறிஸ்து கூறிய,
“கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்” என்று உரைக்கப் பட்டதைக் கேல்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிரேன், தீமையோடு எதிர்த்து நிற்க்க வேண்டாம், ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு’// வரவேற்கிறோம். இயேசு கிறிஸ்துக்கு நன்றி.
But we oppose and condemn the Genocide planned and executed by the
” LORD”, through Moses, jehova…etc
மோசசிடம் “கர்த்தர்” கூறியது:
“எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”
யோசுவாவிடம் “கர்த்தர்” கூறியது:
யோசுவா, அதிகாரம் 6,
2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்!
21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.
24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//
கர்த்தரின் “ஆசீர்வாதம்” இன்னும் பல உள்ளது.
இஸ்ரேலியருக்காகபல பிற இனங்களை முழுவதியும் அழித்துப் போடு, இரக்கம் காட்டாதே என்று கர்த்தர் கூறியிருப்பது தெளிவாக இருக்கிறது.
I oppose any book/ contents of book inciting HATREDNESS, Genocide, Killing of Civilainas, Abducting of Girs…. etc.
If the same is written in Hindu books, I oppose the same very much!
Fair enough?
பண்டிதன் என்றால் என்னவென்று தெரியாமல் இல்லை .. உங்கள் வார்த்தையை நீங்களே திரும்ப படித்து கொள்ளவும் மனசாட்சி படி.. வேதங்கள் மனிதர்கள் எழுதியது என்று தான் தெரியுமே… கடவுளின் பெயரால் பார்ப்பார்கள் எழுதியது. இந்து மதத்தின் வேதங்கள் மட்டுமல்ல கிருத்துவம், இஸ்லாம் முதலிய அனைத்து மதங்களின் வேதங்களும் மனிதர்களால் எழுதப்பட்டது என்பதை நிரூபிக்க முடியும். பிறகு ஏன் மற்ற மதங்களை கேள்வி எழுப்புவதில்லை என்று நீங்கள் கேட்கலாம். இந்து மதம் இந்த நாட்டின் அடையாளமாக காட்டபடுகிறது , அந்த மதத்தின் அடிப்படை இன்னும் கோடிக்கணக்கான மக்களை வாழவிடாமல் அடிமை தனத்தில் திணிக்கிறது. அதனால் இந்து பார்ப்பனிய மதமே முதலில் எதிர்க்க பட வேண்டியது.அழிக்க பட வேண்டியது.. இதை நாம் பேசினால் சுலபமாக வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கி கொண்டு இந்து மதத்தை அழிக்க..தேச துரோகிகள்.. என்று பார்ப்பார்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள்…பார்பனர்கள் அன்று போட்ட ஆட்டத்தை இன்று போட முடியாமல் போனதற்கு தந்தை பெரியாரின் நம்முடைய தொடர் பிரசாரமே …
ஐயா Matt அவர்களே,
//இந்து மதத்தின் வேதங்கள் மட்டுமல்ல கிருத்துவம், இஸ்லாம் முதலிய அனைத்து மதங்களின் வேதங்களும் மனிதர்களால் எழுதப்பட்டது என்பதை நிரூபிக்க முடியும்//
மனிதன் எழுதினாலும்,
“கடவுள் சொன்னார், அதனால் நீ இனப் படுகொலை செய்யலாம்” என்று கூறுவது, மிகவும் ஆபத்தானது.
கடவுள் என்று சொல்லப் படுபவரே “ஒரு உயிரையும் விடாமல், குழந்தைகள், பெண்கள், கிழவர்கள் உட்பட எல்லோரையும் படுகொலை செய்” என்று இனப் படுகொலைக்கு ஆண்டவனின் அப்ரூவலை முத்திரையாகக் குத்தி எழுதுவது, மிக மிக ஆபத்தானது.
மனிதன் “என் பசுவை இம்சை செய்த இன்னொரு மனிதனை கொலை செய்யப் போகிறேன், கடவுளே எனக்கு உதவி செய்” என்று கேட்பது அசிங்கமான சுயநலம் என்றால்,
கடவுளே மனிதனை இனப் படுகொலை, இன அழிப்பு செய்யத் தூண்டியதாக, உதவி செய்ததாக, கடவுளே முன்னின்று இன அழிப்பை நடத்தியதாக கூறுவது, உலகத்திலே இனங்களுக்கு இடையேயான சகிப்புத் தன்மை, நல்லுறவை அழித்து, இரத்த ஆறை ஓட வைக்கும் ஆபத்துள்ளது.
நீ பலரை கொன்று விட்டு வா, வானத்திலே உனக்கு பெரிய கண்களை உடைய யாரும் தொடாத பெண்களை அளிப்பார் என்பதும்,
போரிலே எதிராளியைக் கொன்று விட்டால் இறந்தவன் மனைவி உட்பட அவன் வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் உனக்கு அடிமைகள், அடிமைகளை எப்ப்டி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் என்பதும்,
கொலை வெறியையும் காம வெறியையும் மிக்ஸ் பண்ணி கலக்கல் வெறியாக உள்ளது.
“கடவுளே சொல்லி விட்டார்,
நாம் செய்வது தப்பே இல்லைடா,
ஆளைப் போட்டுத் தாக்குடா,
பொண்ணைத் தூக்குடா”
என்று மனசாட்ச்யின் ஒப்புதலோடு, கற்ப்பழிப்பு, இன அழிப்பு செய்யப் படுவதர்க்கான கருத்துக்களில் உள்ள ஆபத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே கடவுளோ சொன்னதாக கூறி பரப்பப் பட்ட காட்டு மிராண்டித் தனத்தை கண்டிப்பது மனிதத்தைக் காக்க மிக அவசியம்
//இந்து மதத்தின் வேதங்கள் மட்டுமல்ல கிருத்துவம், இஸ்லாம் முதலிய அனைத்து மதங்களின் வேதங்களும் மனிதர்களால் எழுதப்பட்டது என்பதை நிரூபிக்க முடியும்//
நிரூபியுங்கள் , வரவேற்கிறேன். நான் கடவுள் என்று யாரையும் இது வரை பார்த்தது இல்லை. பார்க்காத கடவுளுக்கு நான் எதற்கு வக்காலத்து வாங்க வேண்டும்- நான் அவருக்கு ஏஜென்ட் இல்லையே!
இந்து மதத்தின் வேதங்கள் மட்டுமல்ல கிருத்துவம், இஸ்லாம் முதலிய அனைத்து மதங்களின் வேதங்களும் – அது மனிதன் எழுதினானோ, காட்டு மிராண்டி காலத்திலோ இருந்த போது கூறி வைத்ததோ,
ஆனால் கடவுளின் பெயரால் எழுதப்பட்ட , பரப்பப் பட்ட, நம்பப் பட்ட எல்லா காட்டுமிராண்டி கருத்துக்களையும் , வெறுப்பு கருத்துக்களையும், இனவெறிக் கருத்துக்களையும், காம கொடூர , காமத் தரகு கருத்துக்களையும், மனித குலத்தை அழிக்கும் நச்சுக் கருத்துக்களையும் அம்பலப் படுத்துவோம்- அது எந்த மார்க்ககத்தின் பேரில் கூறப் பட்டு இருந்தாலும்!
அதே நேரம் நல்ல கருத்துக்களைப் பாராட்டுவோம், உபயோகப் படுத்துவோம் – அது எந்த மார்க்ககத்தின் பேரில் கூறப் பட்டு இருந்தாலும்!
//பிறகு ஏன் மற்ற மதங்களை கேள்வி எழுப்புவதில்லை என்று நீங்கள் கேட்கலாம்//
அது உங்கள் விருப்பம். நீங்கள் ஏன் பிற மதங்களை விமர்சிக்கவில்லை என்று நான் உங்களை கேட்கவில்லை. இதற்க்கு முன்பும் கேட்டதில்லை.
நான் எல்லா மதங்களில் உள்ள விசக் கருத்துக்களையும் வெளிச்சம் போட்டு காட்டுவேன். நல்ல கருத்துக்களை ஆதரிப்பேன்.
ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக பெண்களுக்காகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் போராடிய போராளியைப் புரிந்துகொள்ளுங்கள் தலித் அல்லாதவர்களே… ///
aam Nam intha varikalukku oondru paduvom…
Saathi olika Mathimaran avargal muyarchil nam pangu peruvom
நண்பர் ஒருவர் அனுப்பிய கட்டுரை…
சிதம்பர ரகசியம் இப்பொழுது வெளி உலகத்திற்குத் தெரிந்து விட்டது.அதுதான் சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதப் பார்ப்பனர்கள் அடித்து வந்த கொள்ளை எப்படிப்பட்டது என்பது.கோயில் வருமானம் போதுமானதல்ல; உண்டியல் வசூல் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை என்றெல்லாம் அவர்கள் புலம்பினார்களே நினைவிருக்கிறதா?நீதிமன்றத்திலேயே என்ன கூறினார்கள்? கோயில் ஆண்டு வருமானமே ரூ.37,199 மட்டுமே என்றனர் (‘பாட்டா’ செருப்பு விலை போல இருக்கிறதல்லவா!)மலை விழுங்கி மகாதேவன்களாயிற்றே! பொய் பேசுவதுபற்றிக் கொஞ்சம்கூட வெட்கப்படாதவர்கள் ஆயிற்றே!அக்கோயில் இந்து அறநிலையத் துறையின் நேரடிப் பார்வையின் கீழ் வந்ததற்குப் பிறகு அறநிலையத் துறையின் சார்பில் முதன் முதலாக இவ்வாண்டு பிப்ரவரி 5ஆம் தேதி உண்டியல் வைக்கப்பட்டது.
இதுவரை நான்கு முறை உண்டில் பணம் எண்ணப்பட்டது. எண்ணியவர்கள் இந்தியன்
ஓவர் சீஸ் வங்கி ஊழியர்கள். இந்த ஒன்பது மாதங்களில் மட்டும் உண்டியல் வருமானம் என்ன தெரியுமா? ரூ.8,51,996 ஆகும்.ஆனால் தீட்சதர்கள் ஆண்டு ஒன்றுக்கு வருமானம் என்று சொன்ன தொகை எவ்வளவு?வெறும் ரூ.37,199. தீட்சதர்களின் நாணயமற்ற தன்மைக்கும், பித்தலாட்டத்திற்கும் வேறு என்ன எடுத்துக்காட்டு தேவை?
எத்தனை நூறு ஆண்டு காலமாக இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது? அதற்கெல்லாம்
யார் பொறுப்பு? இதன்மீது, தீட்சதப் பார்ப்பனர்கள்மீது கிரிமினல்
நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டாமா?இவ்வளவுக்கும் இவர்கள் யாராம்? கைலாயத்திலிருந்து சாட்சாத் நடராஜ பெருமானே இவர்களை சிதம்பரத்திற்கு அழைத்து வந்தாராம்!
திரு MATT அவர்களே,
//வேதங்கள் மனிதர்கள் எழுதியது என்று தான் தெரியுமே… கடவுளின் பெயரால் பார்ப்பார்கள் எழுதியது.///
வேதங்களில் உள்ள ஞான காண்டங்கள் அதாவது உபநிசத்கள் பல சத்ரிய அரசர் களால் இயற்றப்பட்டது என்பதை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.
வேதங்களும் உபநிடதங்களும் இரண்டும் ஒன்றா..? உபநிடதங்கள் வேதங்களில் உள்ளதா..? தெளிவு படுத்துவீர்களா..?
திரு MATT அவர்களே
///வேதங்களும் உபநிடதங்களும் இரண்டும் ஒன்றா..? உபநிடதங்கள் வேதங்களில் உள்ளதா..? தெளிவு படுத்துவீர்களா..?///
வேதங்களில் கர்ம காண்டம்,ஞான காண்டம் என்ற இரு பகுதிகள் உள்ளன.இந்த ஞான காண்டம் தான் உபநிடதங்கள் என்று அழைக்கப்படுகிறது.உபநிடதங்கள் வேதத்தின் ஒரு பகுதியே.
திரு MATT அவர்களே
///வேதங்களும் உபநிடதங்களும் இரண்டும் ஒன்றா..? உபநிடதங்கள் வேதங்களில் உள்ளதா..? தெளிவு படுத்துவீர்களா..?///
வேதமும் உபநிடமும் ஒன்றே.உபநிடதங்கள் வேதத்தில் உள்ளதே. இந்த உபநிடதமே வேதத்தின்,இந்துமதத்தின் முக்கிய பகுதியாகும்.
தனபால் கூறுவது சரியே.
வேதத்தின் மிக முக்கிய பகுதி, மிகவும் உபயோகமான பகுதி உப நிடதங்கள் தான்.
உபநிடதங்கள் பல இப்போது இணையத்தின் மூலமாக டவுன் லோடு செய்து கொள்ள முடியும்.
கட உபநிடதம்,
முண்டக உப நிடதம்,
எல்லாமே இணையத்தில் உள்ளன.
எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள இராம கிருட்டின மட புக் ஸ்டாலில் பல உப நிடதங்கள் கிடைக்கின்றன.