பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியார் படத்துக்கு இளையராஜா இசைக்க மறுத்தாராமே?

க.டென்னீஷ், பெரியபாளையம்.

“நான் மறுக்கவில்லை” என்று இளையராஜா மறுத்திருக்கிறார்.

அது இருக்கட்டும் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை ஆதரிப்பவராக, பார்ப்பன எதிர்ப்பாளராக இளையராஜா இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.

இளையராஜா ஒரு கலைஞர். மக்களுக்கும் அவருக்குமான தொடர்பு அவருடைய வார்த்தைகளின் மூலமாக இல்லை. அவரின் இசையின் மூலமாகத்தான். இளையராஜாவின் இசையை கொண்டாடுகிற மக்கள், அவருடைய ஆன்மீக வார்த்தைகளை சட்டை செய்வதில்லை. அவர் இசையை கொண்டாடாத அல்லது பொருட்படுத்தாத அறிஞர்கள் தான் அவர் வார்த்தைகளை பிடித்து தொங்குகிறார்கள்.

அடுத்தவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்வதை விட, இவர்களுக்கு என்ன தெரியுமோ அதன் மூலமாகவே அடுத்தவர்களை பார்ப்பது, என்கிற பழக்கமே இளையராஜா பற்றியான எதிர்பார்ப்பான மதிப்பீடுகளுக்குக் காரணம்.

99 சதவீதம் அவர் நம்மோடு இசை மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு சதவீதமே அவரின் வார்த்தைகள் நம்மை சேர்ந்திருக்கும். 99 சதவீதத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காதவர்கள், ஒரு சதவீதத்தை வைத்துக் கொண்டு அதையே 100 சதவீதம் விமர்சிக்கிறார்கள். “இதுதாண்டா சாக்கு’ன்னு அவரின் பிரமிக்க வைக்கிற இசை அறிவையும் சேர்த்து இளையராஜாவை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.

தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி திரைப்படத்தில் அவர் செய்த கலகம் எத்தனைப் பேருக்கு தெரியும்?

சாருமதி ராகம் நாட்டுபுறப் பாடலில் இருந்து களவாடியது என்பதை “பாடறியேன்… படிப்பறியேன்…’ என்ற பாடலில் சுரங்களோடு பாடி நிரூபித்ததை எத்தனை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்தப் பாடலை “மரி மரி நின்னே..’ என்று சாருமதி ராகத்தில் அமைந்த ஒரு கீர்த்தனையோடு முடித்திருப்பார் ராஜா.

சாருமதி நாட்டுப்புறப் பாடலில் இருந்து திருடியதுதான் என்பதை சாட்சியோடு உறுதியாக நிரூப்பித்திருப்பார். அந்தப் பாடலின் இன்னொரு அதிரடி சிறப்பு என்ன தெரியுமா? அந்த சாருமதி ராகம் இளையராஜா உருவாக்கியது. “மரி மரி நின்னே’ என்கிற வரி காம்போதி ராகத்தில் தியாகய்யர் எழுதியது. அதை இளையராஜா தனது அபாரமான பிரமிக்க, வைக்கிற இசை ஆற்றலால் தான் உருவாக்கிய சாருமதி ராகத்தில் இட்டு நிரப்பினார். தியாகய்யரையே மெட்டுக்கு பாட்டெழுத வைத்தார். உண்மையில் தியாகய்யர் சமாதி அடைந்தது அன்று தான்.

கர்நாடக சங்கீதத்தின் புனிதத்திற்கு இளையராஜா அடித்த சாவுமணி அது. இளையராஜாவின் இந்தச் செயல், தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு வார்த்தைகளை விடவும் படு பயங்கரமானது.

அந்தப் பாடலுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஒரு மதிப்பும், திரை இசை மீது ஒரு மரியாதையையும், கர்நாடக இசை குறித்த ஒரு கலக்கமும் உருவானது அவாளுக்கு. “அதெப்படி பார்ப்பன உணர்வுள்ள பாலசந்தர் படத்தில் இதை செய்ய இளையராஜாவால் முடிந்தது?’ பார்ப்பன எதிர்ப்பாளர் என்கிற உணர்வோ அப்படி ஒரு நிலையிலோ இருந்து அதை செய்யவில்லை இளையராஜா. “இசை ரீதியாக இது சரியாகத்தானே இருக்கிறது தப்பென்றால் நிரூபி’ என்கிற தனது ஈடு இணையற்ற இசையறிவு தந்த செருக்கால் அதை செய்து முடித்தார் இசைஞானி.

இளையராஜா உருவாக்கிய ஒரு மெட்டை மாற்றுகிற தைரியம் இதுவரை எந்த இயக்குனருக்கும் வந்ததில்லை. தமிழர்களின் இனிமை அவர்.

செப்டம்பர் 2007 – சமூக விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதியது.

‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

தொடர்புடைய பதிவுகள்:

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

7 thoughts on “பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

  1. //இளையராஜா ஒரு கலைஞர். மக்களுக்கும் அவருக்குமான தொடர்பு அவருடைய வார்த்தைகளின் மூலமாக இல்லை. அவரின் இசையின் மூலமாகத்தான். இளையராஜாவின் இசையை கொண்டாடுகிற மக்கள், அவருடைய ஆன்மீக வார்த்தைகளை சட்டை செய்வதில்லை. அவர் இசையை கொண்டாடாத அல்லது பொருட்படுத்தாத அறிஞர்கள் தான் அவர் வார்த்தைகளை பிடித்து தொங்குகிறார்கள்.//

    இதுதாங்க விசயம்

    இளையராசா நம் மண்ணின் இசை, நம்மளோட அடையாளங்களில் ஒன்று .. நம்ம ஊரைவிட்டு அந்நிய மண்ணிற்கு பொழைக்கப்போற நம்ம மக்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆறுதல் அவரின் இசை, இது அனுபவத்தில் நான் கண்ட உண்மை..

    ஆனா என்ன பண்ண நம்ம ஊரிலதான் அறிவுஜீவிகள், ஞானிகள் மற்றும் “மோரு”கள் அதிகம் ஆச்சே.. அவங்களோட அரிப்பை தீர்த்துக்கொள்ள இளையராசாவின் மீது அவதூறை மட்டும் வீசுவார்கள்.. அவரின் இசை குறித்து பேச வக்கற்ற கூட்டம் ..

  2. இசைத்துறையில் இளையராசாவின் பங்களிப்பை யாராளும் மதிப்பிடமுடியாது. அவரை விமர்சனம் செய்யும் உரிமை அவரைவிட சிறந்த இசை மேதையாகவும் குறைந்த பட்சம் இசை பற்றிய அறிவு உடையவர்களுக்கே உண்டு.

  3. இளையராஜாவோட இசையில சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா?
    Pallavi:

    M: Sorgame endralum adhu nammora pola varuma
    Ennadu endralum adhu nam nattukku eedaguma
    desam muzhudum pesum mozhigal tamizh pol inithiduma

    in English:

    Will heaven equal to our place?
    Will any country equal to our country?
    Does any spoken indian language comes out as sweet as tamil in our country?

    Charanam 1

    F: yerikarai kaathum yelelelo pattum inge edhum ketkavillaye
    M: paadum kuyil satham aadum mayil nitham pakka oru solaillaye
    F: vethalaya madichi maaman adha kadichi thuppa oru vazhi-illeye
    M: odi vandhu gudichu mungi mungi kulichu aada oru odayillaye
    F: ivvoru enna ooru nammoru romba melu
    M: ada odum pala kaaru veen adambaram paaru
    F: oru dhaagam theera yeedu moru

    In English:
    I couldnt feel the lake side breeze or yelelo song over here
    I couldnt listen to bird singing or see peacock dance over the parks here
    There is no place to taste or split the beetlenut for my husband here
    There is no canal to run, jump and play
    My place is far better than this place
    So many cars to flaunt
    but there is no butter milk to get rid of thirst

    Sorgame endralum….

    Charanam 2

    M: maadu kannu meikka meyaradha paarka mandhaveli ingu illiye
    F: aadu puli aattam pottu vilayada arasa maram medailliye
    M: kaala reundu pooti katta vandi ooti gaanam pada vazhi-illiye
    F: thozhigalai azhachi solli solli rasichu aatam poda mudiyaliye
    M: oru yandhiratha pola ada inge ulla vaazhkai
    F: idhe enge poyi solla manam ishta pada villa
    M: nammoora pola oorum illa

    In English:
    There are no farms to see the cows roam around
    There are no “banyan tree” to play games underneath
    There is no way to make a bullock cart ride and sing along with that
    There is no way to call my friends and play around here
    Life is so mechanical over here
    Where to go and tell this as my mind does not jel / get mingled with this life
    There is no place like our place

    Sorgame endralum…

    http://www.youtube.com/watch?v=HhNJ8rqzayw

    இந்த பாட்ட கேட்டு பாருங்க வெளின் நாட்டுல இருக்கிற ஒவ்வொருத்தர் மனசுல (சொல்ல வார்த்தையில்லை)

  4. வாழ்க இளையராஜா, வளர்க அவர் இசைபயணம்.
    -சதிஸ்-சுவீஸ்

  5. மதிப்பிற்குரிய இசய்ஞானி அவர்களய் விமர்சிக்கும் கூட்டத்தின் பின்புலம் எது என்று பார்த்தாலே, அவர்களின் விமர்சனம் எந்த அளவு கோலில் இருக்கும் என்பதய் ஓரளவுக்கு ஊகித்துக் கொள்ள முடியும். இந்த. தமிழனய் காட்டிக்கொடுக்கும் கருணாகும்பல், தங்கள் தகுதியய் உயர்த்திக் கொள்ள பயன்படும் ஒரு படிக்கட்டாகவே இசய்ஞானி அவர்களய் பயன்படுத்துகிறார்கள். இசய்மேதய் இசய்ஞானியய் விமர்சிப்பது என்பது எளிய ஒருவனுக்கு இலகுவான ஒன்றல்ல. அப்படிப்பட்ட இசய்மேதயயே விமர்சிப்பதால் இவர்கள் இசய் என்ற மலயய்க் கரய்த்துக் குழாய்வய்த்தே உள்ளுக்குள் தள்ளிய மலய்முழுங்கி ம்காதேவன்கள் என்று வெகுமக்கள் இவர்களய் அங்கீகரித்து விட்டார்கள், என்ற ஒரு நப்பாசய்தான் வேறென்ன.. அந்த நப்பாசய் வெறும் தப்பாசய் என்பது இவர்களுக்கு விழங்கினாலும். அதய் வெளியே காட்டிக்கொள்ளாம்ல், இசய்ஞானியயே விமர்சித்ததால் கிடய்த்தது உயர்தரபோதய், அந்த போதயய் உதறித் தள்ள மனமா வரும் இவர்களுக்கு ? அப்படி ஒரு நிலய் வருவதாயிருந்தால், கடவுள்நம்பிக்கய் என்ற மடத்தனத்திலிருந்து ( போதய்யிலிருந்து ) தமிழர்கள் வெளியே வந்து. காட்டுமிராண்டி நிலய்யிலிருந்து பகுத்தறிவுள்ள மனிதன் என்ற நிலய்க்கு மாறியிருப்பார்களே.. தமிழன், கோடிமுனய்.

Leave a Reply

%d bloggers like this: