இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?


சென்ற இதழில் இளையராஜாவை பற்றிய கேள்விக்கு பதில் ஒத்துக் கொள்வதுபோல் இருந்தாலும், இளையராஜாவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக காட்டும் தொனி தென்பட்டதே?

க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில்.

தமிழ்நாடு கடவுளையே கடுமையாக விமர்சித்த பூமி. அப்படியிருக்கையில் இளையராஜா மட்டும் விமர்சனங்களுக்கு விலக்கானவர் இல்லை. இளையராஜாவை பற்றியான விமர்சனங்களில் அவரை ஒரு கலைஞராக மதிப்பிடாத தன்மை இருப்பதையே சுட்டிக் காட்டினேன்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற திரை இசை அமைப்பாளர்களை பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவோ, அல்லது பார்ப்பனியத்தை ஆதரிக்காதவர்களாகவோ இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களை சிறந்த திரை இசை அமைப்பாளர்களாக மட்டும் பார்க்க தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இளையராஜாவை மட்டும் அப்படி பார்ப்பதில்லை.

திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக எதிர்த்து ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுதிய பெண் பித்தனும், முழுநேர குடிகாரனும், பார்ப்பன மோகியுமான கண்ணதாசனை அதையெல்லாம் தாண்டி, ‘அவர் ஒரு குழந்தை மாதிரி’ என்றும், இசை அமைப்பாளர்களின் திறமையால் (மெட்டுகளால்) உயிர் பெற்று இருக்கும் அவருடைய அர்த்தமற்ற திரைப்பாடல்களுக்காக, ‘கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்’னு கொண்டாடுகிற முற்போக்காளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். (மெட்டுகளை உருவிவிட்டு, கண்ணதாசன் பாடல்களை படித்துப் பாருங்கள், அது அவர் கவிதைகளை விடவும் கேவலமாக இருக்கும்) அவர்களும் இளையராஜாவின் பார்ப்பன ஆதரவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பார்ப்பன ஆதரவாளரும், சுயஜாதி அபிமானமும் கொண்ட, ‘நான் தேவன்டா’ என்று வசனம் பேசியவரும், தனது கடைசி காலங்களில் ஜாதி சங்க மாநாடுகளில் கலந்து கொண்ட சிவாஜி கணேசனை அதையெல்லாம் தவிர்த்து, ‘மிகச் சிறந்த கலைஞர்’ என்று அவர் திறமையைத் தனித்துப் பார்க்க தெரிந்திருக்கிறவர்கள்தான், சுயஜாதி அபிப்பிராயம் சுத்தமாக இல்லாத இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

கமல்ஹாசன் போன்ற கழிசடைகளின் தீவிர ரசிகனாக இருக்கிற ஞாநி போன்றவர்கள் கூட உலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் ஒப்பற்ற ஒரே கலைஞர் இளையராஜாவைத்தான் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த மோசடிப் போக்கைத்தான் விமர்சித்தேன்.

ஜுன் 2007 சமூக விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதியது.

‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

தொடர்புடைய பதிவுகள்:

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

29 thoughts on “இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

  1. இந்திய ஜாதி சமூகத்தில் ஒரு உயர்ந்த ஜாதிக்காரர் எதையாவது சாதித்து விட்டால் அவர்களை மனிதருள் மாணிக்கமாக உயர்த்துவார்கள் அதையே தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவர் என்றால் இதை ஒரு தாழ்த்தப்பட்டவர் செய்தார் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைப்பார்கள் . அண்ணல் அம்பேத்கரின் இந்த கருத்து எவ்வளவு உண்மை பாருங்கள் .
    இளைராஜாவை கடுமையாக விமர்சிகின்ர இவர்கள் எ ஆர் ரகுமான் என்னும் பார்பானின் பார்பன பாசம் பற்றி விமர்சிக்க தயங்குவது ஏன் என்றும் புரியவில்லை .

  2. மிகச் சிறந்த கலைஞர்’ என்று அவர் திறமையைத் தனித்துப் பார்க்க தெரிந்திருக்கிறவர்கள்தான், சுயஜாதி அபிப்பிராயம் சுத்தமாக இல்லாத இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

  3. மெட்டுகளை உருவிவிட்டு, கண்ணதாசன் பாடல்களை படித்துப் பாருங்கள், அது அவர் கவிதைகளை விடவும் கேவலமாக இருக்கும்” என்பது நாணயமான விமரிசனம் அல்ல. அவரது கவிதைகள் அர்த்தமுள்ளவை. இனியமையானவை. அவரது கவித்துவத்தை விசுவநாதன், இராமமூர்த்தி போன்ற இசையமைப்பாளர்களே வியந்து மெச்சியிருக்கிறார்கள்.

    இளையராசா ஒரு தலித் எனவே அவர் எது செய்தாலும் – முழு மூடபக்திக்காரன் என்று தெரிந்தாலும் அவரை ஆதரித்து எழுதவேண்டும் பேசவேண்டும் என்பது பகுத்தறிவு அல்ல. பெரியாரின் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க மறுத்திருந்தால் சும்மாவா இருந்திருப்பீர்கள்? இளையராசாவுக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்? இதே போல்தான் நீதிபதி தினகரன் ஒரு தலித் என்பதால் அவரது ஊழலை மூடி மறைக்க முயல்வதும். ஊழல் யார் செய்தாலும் ஊழல்தான்.

  4. நக்கீரன், உங்கள் பார்வையில் அப்படி தெரிகிறது.. அது என்ன “முழு மூட பைத்தியகாரன் என்று தெரிந்தாலும்” , ஏன் இவளோ வெறுப்பு….

  5. இளையராஜா ஒரு இசை ஞானி என்பதில் சந்தேகமில்லை. அவர் இயற்றிய மெட்டுக்கள் காலத்தால் அழியாதவை. அவருடைய தனிப்பட்ட மதநம்பிக்கைக்காக அவரை இகழ்வது தவறு.

  6. //கமல்ஹாசன் போன்ற கழிசடைகளின் தீவிர ரசிகனாக இருக்கிற ஞாநி போன்றவர்கள் கூட உலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் ஒப்பற்ற ஒரே கலைஞர் இளையராஜாவைத்தான் கடுமையாக விமர்சிக்கிறார்கள்//
    உன்னைப் போல் ஒருவனை விமர்சித்து ஞாநி ஏதோ வார இதழில் எழுதி இருந்தார்.

  7. அய்யா நக்கீரரே உங்களைப்போல உள்ளவர்களுக்குத்தான் இந்த தொடர் பதிவே.

    கண்ணதாசன் அவர்களை பொறுத்தவரை தனிமனித ஒழுக்கத்திலும் சரி பொது வாழ்விலும் சரி ஒரு கீழ்த்தரமான மனிதர் இது எல்லாருக்குமே தெரிந்ததுதான்.. ஆனால் அவரை எந்த முற்போக்கு, பிற்போக்குவாதிகள் விமர்சிப்பதில்லை காரணம் என்ன?..

    இளையராசா அவர்கள் நம் மண்ணின் இசை , அவருடைய இசையறிவை பற்றி விமர்சிக்க முடியாமல் ஏதாவது காரணம் கண்டுபுடிச்சி அவரை தகாத முறையில் விமர்சிப்பது ஏன் என்பதே கேள்வி.. ஒன்று மட்டும் தெரிந்துக்கொள்ளுங்கள் நம்மோட (திராவிடர்களின்) பெருமைகளின் ஒன்றுதான் இளையராசா..

    அவரை போற்றுவதில் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் தூற்றுவது எதற்காக????.. யாரை திருப்திப்படுத்த???. இல்லை அவர்மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியா???.. விளக்கம் தருவீங்களா???

  8. அய்யா நக்கீரனாரே!
    கண்ணதாசன்போன்ற கழிசழிசடைகளை ஆதரிக்கிறவர்கள்கூட இளையராஜாவை விமர்சிக்கிறார்கள் என்று மதிமாறன் குறிப்பிட்டு இருக்கிறார்.
    அதற்கு எடுத்துக்காட்டாக உங்கள் பின்னூட்டம் இருக்கு.

  9. தமிழ்நாடு கடவுளையே விமர்சித்த பூமி என்பதெல்லாம் ‘சொர்க்கமே என்றாலும்’ என்ற பாடலுக்கு நிகராக அர்த்தமற்று நிற்கிறது.

    இசைக்கு அப்பாற்பட்டு ‘ரகுமானை பார்ப்பன கைக்கூலி’ என எழுத கட்டுரையாளருக்கு எவ்வளவு தகுதியுண்டோ அதே தகுதி இளையராஜாவை விமர்சிக்கும் அனைவருக்கும் உண்டு.

    இப்படி அர்த்தமற்ற கேள்வி-பதில்களை வெளியிட்ட ‘சமூக விழிப்புணர்வு’ எனும் பத்திரிக்கை ம.க.இ.க சார்புடைய அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    குறிப்பு – இரணியன் (எ) ஏகலைவன் (எ) சுந்தரம் (எ) கி.சுந்தரம் (எ) வேந்தன் – தமிழ் கடவுள்களை விட அதிகமாக அவதாரமெடுக்கும் மனம் பிறழ்ந்தவரே – தமிழன்பன் என்பவர்க்கும் எனக்கும் தொடர்பில்லை

  10. ஆட்டோ சங்கர்

    ////குறிப்பு – இரணியன் (எ) ஏகலைவன் (எ) சுந்தரம் (எ) கி.சுந்தரம் (எ) வேந்தன் – தமிழ் கடவுள்களை விட அதிகமாக அவதாரமெடுக்கும் மனம் பிறழ்ந்தவரே – தமிழன்பன் என்பவர்க்கும் எனக்கும் தொடர்பில்லை.///

    கிரிமனல், ரவுடி, சாதிவெறியன், சமுக விரோதி, தலித் வீரோதி ஆட்டோ சங்கரே, எதற்கு சம்பந்தமில்லாத உளறல்?
    நீ தமழின்பன் இல்லை என்பதை தமிழன்பனே உணர்த்திவிட்டார்.
    திருச்சிக்காரரிடம் இருக்கும் நேர்மைகூட உன்னிடம் கிடையாது. நீ ஒரு மனநோயாளி.

  11. திருச்சிக்காரையும் இவ்வாறு பொய்முகம் மற்றும் அதியமானுடன் என்பவர்களுடன் ஒப்பிட்ட பண்பான , சாதுவான , ரவுடித்தனமில்லாத , சாதிவெறியில்லாத , தலித்நேசனான இரணியன் (எ) ஏகலைவன் (எ) சுந்தரம் (எ) கி.சுந்தரம் (எ) வேந்தன் என்ன நேர்மையான மனம் பிறழ்ந்த விடை சொல்லப் போகிறார் ?

  12. //திருச்சிக்காரையும் இவ்வாறு பொய்முகம் மற்றும் அதியமானுடன் என்பவர்களுடன் ஒப்பிட்ட பண்பான , சாதுவான , ரவுடித்தனமில்லாத , சாதிவெறியில்லாத , தலித்நேசனான இரணியன் (எ) ஏகலைவன் (எ) சுந்தரம் (எ) கி.சுந்தரம் (எ) வேந்தன் என்ன நேர்மையான மனம் பிறழ்ந்த விடை சொல்லப் போகிறார் ?//

    இரணியன் (எ) ஏகலைவன் (எ) சுந்தரம் (எ) கி.சுந்தரம் (எ) வேந்தன். இதெல்லாம் யாரு ஒரே ஆளா இல்ல வேற வேற ஆளான்னு ஓர்க்குட் இணையதளம் பக்கம் வந்தவர்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன். ஏனெனில் என்னால் அதை விட வேறுவழியில் எம்மால் நிரூபிக்க முடியாது.

    சரி. யார் விடை சொல்ராங்கன்னு இருக்கட்டும்..

    திருச்சிகாரனை சுந்தரம் எப்பவோ, பொய் முகம், அதியமான் போன்றவர்களுடன் ஒப்பிட்டத்தை இன்னமும் ஞாபகம் வைத்திருக்கும் அளவிற்கு அதென்ன வரலாற்று சம்பவமா?

    யாரும் மறந்த இந்த விஷயம் சொல்வதற்கு உங்கள் ஞாபகத்திறன் அபாரமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறதே.

    இந்த விஷயம் எத்தனைபேருக்கு ஞாபகம் இருக்குன்னு மற்றவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

    ஏனெனில் திருச்சிகாரன் பற்றி சுந்தரம் சொன்ன விஷயத்தை (அதான், யாரும் வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவமான இச்சம்பவத்தை????) ஒன்று திருச்சிகாரர் தான் ஞாபம் வைத்திருக்க வேண்டும் இல்லையேல் அதை சொன்ன சுந்தரம் தான் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.

    நீங்கள் எப்படி?????? இதைபற்றி ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்????????

    ஆட்டோ சங்கர் பெயரில் வரும் திருச்சிகாரரே வெளுத்ததையா உம் சாயம்..

    கன்றாவியா பேசுவதற்கு ஆட்டோ சங்கர் பெயர், பதூசா பேசுவதற்கு திருச்சிகாரன் பெயரா??????

    டபுல் ஆக்‌ஷன் மட்டும் தானா?? இல்ல ட்ரிபில் ஆக்‌ஷன் பல ஆக்‌ஷனு வரீங்களா??

    ஆட்டோ சங்கர் எனும் திருச்சி, ஹ்ம்ம்ம்….. ரொம்ப நாளா சூப்பரா மெயிண்டெயின் பண்ணியிருந்திருக்கீங்க. சூப்பரப்ப்ப்ப்ப்பு..

  13. தமிழ்நாடு கடவுளய்யே விமர்சித்த பூமி என்பதில் பிழயுண்டு,.. திருத்திச்சொல்லுங்கள்…, கடவுளய்யே செருப்பாலடித்ததுதான் தமிழ் நிலம் என்று, மேலும் சொர்க்கமே என்றாலும்.., என்ற இசய்மேதய் இசய்ஞானி அவர்களின் பாடலய்ப் போல அர்த்தமற்றதும்…என்பதும் தவறு ஆட்டோ சங்கர் என்கின்ற திருவரங்கத்துக் ( திருச்சிக் ) காரரே.. ஆழ ஊடுருவித் தாக்கும் படய் அணியய்ப் போல நம் தமிழ் மக்களுக்குள் ஊடுருவியிருக்கும் வந்தேறி பார்ப்பனர்கள் தம்மய்த் தமிழர்கள் என்றே வெளியே அளய்த்துக் கொள்ளும் இவர்கள், முழு நேரத்தொழிலாக செய்வது தமிழர்களய், நம் தமிழ்மொழியய்க் கேவலப்படுத்த இட்டுக்கட்டும் பொய்க்கதய்களய் பரப்புவதும், நமக்கு தமிழன் என்ற உணர்வு வரவிடாமல் தடுப்பது… இதுபோன்றவ்ய்யேயாகும்.. தமிழன் என்ற உணர்வின் மய்யப்புள்ளி நம் இசய்ஞானி அவர்கள்., அந்த மய்யப் புள்ளியய் அளிக்கும் அரியபணியய்த் தான் இவர்கள் தொய்வின்றி செய்கிறார்கள்..
    தமிழன், கோடிமுனய்.

  14. ச‌கோத‌ர‌ர் வேந்த‌ன் அவ‌ர்க‌ளே,

    கண்ணைக் க‌ட்டுத‌ய்யா, க‌ண்ணக் க‌ட்டுது.

    நான் ஆட்டோ ச‌ங்க‌ர் என்ற‌ பெய‌ரில் எழுத‌வில்லை அய்யா.

    ஆட்டோ ச‌ங்க‌ர் என்ற‌ பெய‌ரில் எழுதுவ‌து யாரோ என‌க்குத் தெரியாது.

    ஆனால் நான் (திருச்சிக் கார‌ன்) அந்த‌ ஆட்டோ ச‌ங்க‌ர் என்ற‌ பெய‌ரில் எழுத‌வில்லை அய்யா.

    அண்ணா ஆட்டோ ச‌ங்க‌ர் அண்ணா, என்னை இப்ப‌டி பாலோ ப‌ண்ணி, என்னை யாரு எப்ப‌டி திட்டுனாங்க‌னு க‌ரெக்டா நோட் ப‌ண்ணி வைக்க‌ வேண்டிய‌ அளவுக்கு நான் பெரிய ஆளா?

    என் ம‌ண்டையை உருள‌ வைக்கிறீங்க‌ளே, குத்துங்க‌, குத்துங்க‌ காசா, ப‌ண‌மா?

    ஆட்டோ ச‌ங்க‌ர் அண்ணா, ஒரு வேளை அந்த‌ பொய் முக‌ம் நீங்க‌தானா?

  15. ஐயா, ஆட்டோ ச‌ங்க‌ர், யாரய்யா நீர்?

    என்னைக் கோத்து விட்டு சென்று விட்டீர்கள்.

    வருகிறவர் போகிறவர் எல்லோரும் என்னை வழி மொழியும்படி செய்து விட்டார் வேந்தனார்.

    நாகாக்காமல் உண்மை எது என்று தெரியாமல் என்னை வசை பாடுகிறார்கள்.

    பள்ளியில் படிக்கும் போது யாராவது மறைவாக தலையில குட்டி விட்டால்,
    ” டேய், யாரு குட்டினதுனு சொல்லுங்க, இல்லாங்காட்டி கொட்டுனவனை வன்டையா திட்டுவேன் ” என்று சொல்வார்கள் அல்லவா.

    ஆட்டோ சங்கருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

    அதை அறியாமல் உளரும் உத்தமர்களே, என்னுடைய பள்ளிப் பருவத்தை நினைவு படுத்தாதீர்கள்.

  16. வேந்தன் – முடியல…

    திருச்சி மன்னிசக்கனும். என்னால உங்களுக்குத் தொல்லை.

    நான் எங்கு ஆபாசமா பின்னூட்டம் போட்டேன்? கட்டுரையாளரை விட ஆபாசமா எழுத முடியாதுங்க!

    ஏதோ வரலாற்று பிழை என்கிறார் வேந்தன் (காமெடியாமாம்). முதல்ல முத்திரை பின்பு அவதூறு அதன் பின் அவன என்ன சொன்ன இவன என்ன சொன்ன அவன திட்டு இவன திட்டு அப்புறமா எங்கள திட்டு என்பதை ஒரு விவாத முறையாக வைத்திருப்பதால் சுந்தரம் , வேந்தன் இருவரும் வேறாக இருந்தாலும் அவர்கள் செய்வது ஒன்று தானே!

  17. தமிழன் –

    நீங்கள் சொல்லும் வந்தேறி யார் ? விளக்கவும். இனப்பற்று உண்டையா இனவெறி கிடையாது.

    இந்நியா , தமிழ்நாடு சொர்க்க பூமியா ? கட்டுரையாளர் எழுதிய பதிவுகளைப் படிப்பவர் தானே நிங்கள் ? அவர் பதிவுகளில் துன்பமும் , அதிகார ஒடுக்கு முறையும் தானே தெரிகிறது. எப்படி சொர்க்க பூமியாகும் ?

  18. உண்மையை அறியாம‌ல் , உண்மையை தெரிந்து கொள்ள‌ முய‌ற்சி செய்யாம‌ல், காழ்ப்புண‌ர்ச்சி அடிப்ப‌டையில் தாக்குத‌ல் ந‌ட‌த்தும் இந்த‌ “Thamizhan” என்ப‌வ‌ர், நான் (திருச்சிக் காரன்) ஆட்டோ ச‌ங்க‌ர் என்ற‌ பெய‌ரில் எழுதுவ‌தாக‌ பொய்யுரை கூறுவ‌தை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறேன்.

    //Thamizhan (13:55:40) :

    தமிழ்நாடு கடவுளய்யே விமர்சித்த பூமி என்பதில் பிழயுண்டு,.. திருத்திச்சொல்லுங்கள்…, கடவுளய்யே செருப்பாலடித்ததுதான் தமிழ் நிலம் என்று, மேலும் சொர்க்கமே என்றாலும்.., என்ற இசய்மேதய் இசய்ஞானி அவர்களின் பாடலய்ப் போல அர்த்தமற்றதும்…என்பதும் தவறு ஆட்டோ சங்கர் என்கின்ற திருவரங்கத்துக் ( திருச்சிக் ) காரரே.. ஆழ ஊடுருவித் தாக்கும் படய் அணியய்ப் போல நம் தமிழ் மக்களுக்குள் ஊடுருவியிருக்கும் வந்தேறி பார்ப்பனர்கள் தம்மய்த் தமிழர்கள் என்றே வெளியே அளய்த்துக் கொள்ளும் இவர்கள், முழு நேரத்தொழிலாக செய்வது தமிழர்களய், நம் தமிழ்மொழியய்க் கேவலப்படுத்த இட்டுக்கட்டும் பொய்க்கதய்களய் பரப்புவதும், நமக்கு தமிழன் என்ற உணர்வு வரவிடாமல் தடுப்பது… இதுபோன்றவ்ய்யேயாகும்.. தமிழன் என்ற உணர்வின் மய்யப்புள்ளி நம் இசய்ஞானி அவர்கள்., அந்த மய்யப் புள்ளியய் அளிக்கும் அரியபணியய்த் தான் இவர்கள் தொய்வின்றி செய்கிறார்கள்..
    தமிழன், கோடிமுனய்.//

    அதோடு இவ‌ர் த‌மிழை எழுதியிருக்கும் முறை – அரை குறையாக‌ த‌மிழை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து போல‌ உள்ளது. ஒரு த‌மிழ‌ன் என்ற‌ முறையிலே இவ‌ர் த‌மிழை இப்ப‌டி சிதைப்ப‌து என‌க்கு வ‌ருத்த‌த்தை அளிக்கிற‌து. எந்த‌ வூரிலே த‌மிழை இப்படி எழுத‌ ப‌யிற்சி த‌ருகிறார்க‌ள்?

  19. அய்யா ஆட்டோ சங்கர் அவர்களே.. தமிழ் நிலத்தில், வந்தேறி யார் என்பதய் விளக்கவும்…? ஏன் இப்படி ஒரு கேள்வி? இப்படியான ஒரு கேள்விக்கு உள்நோக்கம் எதாவது உண்டா அய்யா ? அதெப்படி ஒரு வாக்கியத்தில் பாதியய் மட்டும் கருத்தில் கொண்டீர்கள்? கேள்விக்குரிய சொல்லுக்கு அடுத்தசொல் உங்களால் படிக்கவே கூடாதசொல்லா? அந்தசொல் உங்களய் அவ்வளவு சிரமப்படுத்துகிறதா? உண்மய்யில் நீங்கள் யார்? நீங்கள் திருவரங்கத்துக் (திருச்சிக்)
    காரர் என்பதில் எங்களுக்கு இனியும் அய்யம் ஏற்படுமா? அடுத்து, சொர்க்கமே என்றாலும்…
    என்றபாடலில், வெளிநாட்டில் வாழும் தமிழர் ஒருவர் தன்னுடய்ய தாய்மண்ணய், தமிழ்மண்ணய் உயர்த்திப், போற்றிப் பேசுவது இயல்பான ஒன்று மட்டுமல்ல, அப்போற்றுதல் அவருக்கு ஆறுதலய்யும், மகிழ்ச்சியயும் தரும் ஒன்றாகும், இது என்னுடய்ய அனுபவத்திலும், கேட்டு அறிந்த ஒன்றுமாகும், அதற்கு அடுத்த நிலய்க்கு ஏன் சிந்திக்கவில்லய் என்பதய் அந்த பாடலாசிரியர் அவர்களய்த்தான் கேட்கவேண்டும், அடுத்ததாக, திருவரங்கத்தார் கேட்ட, என்னருமய்த் என்தமிழ் மொழியின் (என்னுடய்ய) எழுத்துநடய் பற்றி : தற்போது நடய் முறய்யிலிருக்கும் பெரியார் சீர்திருத்த எழுத்துக்களய் தந்தய்பெரியாரின் போர்வாளாக இருந்த பேரறிஞர் குத்தூசி குருசாமி அவர்களால் வழங்கப்பட்டு அய்யா தந்தய் பெரியார் அவர்களால் குடியரசு இதழில் அறிமுகம் செய்யப்பட்டபோது தமிழறிஞர்கள் என்ற பெயரில் இருந்தசிலர், இப்படித்தான் தமிழய்க் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில், பெரியார் தமிழய் சிதய்க்கிறார், இதய் அனுமதிக்கமாட்டோம், ஏற்கவும் மாட்டோ தமிழய்க் காப்பாற்றியே தீருவோமென்று அய்யாவய் கடுமய்யான சொற்களால் ஏசினார்கள்….கடய்சியில் என்ன ஆனார்கள்? அவர்களின் எதிர்ப்பு என்னவானது? இந்த மேற்கோளய் சொல்வதனால் அய்யாவின் நிலய்யில் என்னய் வய்த்துப் பேசவில்லய், அதற்குரிய தகுதியும் எனக்கில்லய், அந்ததவறய் ஒருபோதும் என்னால் செய்யவும் முடியாது,
    என்னுடய்ய எழுத்து நடய்யானது தமிழறிஞர் திரு சாலய் இளந்திரய்யனார் அவர்களால் ஏறக்குறய்ய பதினய்ந்து ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப் படுத்தப் பட்டு, அந்த காலகட்டத்திலேயே எங்களய்ப் போன்ற பலர் ஏற்றுக்கொண்டு செயலில் கொண்டுவந்த சீர்திருத்தமாகும் (இதய் நமது கட்டுரய்யாளரும் அறிவார்). பெரியார் எழுத்துக்கள் ஆரம்பகட்டத்தில் என்ன நிலய்யில் இருந்ததுவோ அந்த நிலய்தான் தமிழறிஞர் சாலய்யார் அறிமுகப்படுத்திய சீர்திருத்த எழுத்துக்கழுக்கும் நேர்கிறது… மீண்டும் நேர்கொள்வோம்.. தமிழன், கோடிமுனய்.

  20. //பிழயுண்டு,.. //

    அதாவ‌து உயிர் எழுத்திலே ஐ என்ப‌து இனிக் கிடையாதா?

    க‌ற்க‌ க‌ச‌ட‌ர‌ க‌ற்ப‌வ‌ என‌ ப‌டிக்க‌ வேண்டுமா?

    அசை சீர் த‌ளை அடி பிரிக்கும் போது ச‌ரியாக‌ வ‌ருமா?

    //வெளியே அளய்த்துக் கொள்ளும் //”அழைக்கும்” என்ப‌து மாற்ற‌ப் ப‌ட்டு விட்ட்தா?

    Thamizhan (12:50:55) : ஆங்கில‌த்திலே தான் பேரை எழுத‌ வேண்டும் என்ப‌தும் புதிய‌ சீர்திருத்த‌மா?

  21. ஆட்டோ ச‌ங்க‌ர், நீங்க‌ள் தேவை இல்லாம‌ல் என் பெய‌ரை இழுத்து, இப்போது என‌க்கு எத்த‌னை பிர‌ச்சினை பாருங்க‌ள்? இப்படி ஒரு ந‌ப‌ரிட‌ம் என்னை சிக்க‌ வைத்து விட்டு சென்று விட்டீர்க‌ள்.

    நான் நேர‌ம் , கால‌ம், நாள் , ந‌ட்ச‌த்திர‌ம் இதில் எல்லாம் ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌ன். என் த‌மிழின‌த் த‌லைவ‌ன் சொல்வ‌து போல‌, என்ன‌ செய்வ‌து, என் ஜாத‌க‌ம் அப்ப‌டி எனப் பெருமூச்சு விடுவ‌த‌ன்றி வேறு என்ன‌ செய்ய‌ முடியும்?

  22. //அண்ணா ஆட்டோ சங்கர் அண்ணா, என்னை இப்படி பாலோ பண்ணி, என்னை யாரு எப்படி திட்டுனாங்கனு கரெக்டா நோட் பண்ணி வைக்க வேண்டிய அளவுக்கு நான் பெரிய ஆளா?//

    இதை தான் நானும் கேட்கிறேன்.

    வேறு யாருக்கு உங்களை பற்றி சொன்னது நினைவிருக்கும்?
    சாக்‌ஷாத் உங்களுக்கு தான்.

    //பள்ளியில் படிக்கும் போது யாராவது மறைவாக தலையில குட்டி விட்டால்,
    ” டேய், யாரு குட்டினதுனு சொல்லுங்க, இல்லாங்காட்டி கொட்டுனவனை வன்டையா திட்டுவேன் ” என்று சொல்வார்கள் அல்லவா.
    ஆட்டோ சங்கருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
    அதை அறியாமல் உளரும் உத்தமர்களே, என்னுடைய பள்ளிப் பருவத்தை நினைவு படுத்தாதீர்கள்.//

    பள்ளியில் படிக்கும் போது யாராவது ஒரு பையன் சத்தமே வராம பொசுக்குன்னு ஒரு பாம் போட்டுட்டான்னா நாத்தம் தாங்க முடியாம ஒருத்தர் மேல ஒருத்தர் பழி போடுவார்கள். அப்ப எவனாவது ”டேய் பாம் போட்டவன் தலை சூடா இருக்கும்” என்று சொல்லும் போது பாம் போட்டவன் தன் தலை சூடாக இருக்கிறதா என்று தலையில் கைவைத்து அப்பாவித்தனமாய் தன்னையே தான் அறியாமல் காட்டி கொடுத்து விடுவான்.

    தலையில கைவைச்சு தன்னையே அறியாம காட்டிட்ட அந்த பையன பார்த்து மத்த பசங்கெல்லாம் கேளி பண்ணும் போது பாவம் அந்த முகம்… ச்ச்ச்ச்..

    ஆட்டோ சங்கர் (அ) திருச்சிகாரன் தயவு செஞ்சு பள்ளி பருவங்களை ஞாபகப்படுத்தாதீர்கள்.

  23. //வேந்தன் – முடியல…
    திருச்சி மன்னிசக்கனும். என்னால உங்களுக்குத் தொல்லை.
    நான் எங்கு ஆபாசமா பின்னூட்டம் போட்டேன்? கட்டுரையாளரை விட ஆபாசமா எழுத முடியாதுங்க!//

    அதென்ன ஸ்டைலா திருச்சி மன்னிக்கனும்னு, ‘அம்பி மன்னிச்சுக்கனும்’ அப்படின்னு கண்ணாடி பார்த்து பேசுர மாதிரியே பேசலாமே.

    எம்.ஜி.ஆர் டபுல் ஆக்‌ஷன் பாத்திருக்கேன். சிவாஜி டபுல் ஆக்‌ஷன் பாத்திருக்கேன். ரஜினி டபுல் ஆக்‌ஷன் பாத்திருக்கேன். கமல் டபுல் ஆக்‌ஷன் பாத்திருக்கேன். அஜித் டபுல் ஆக்‌ஷன் பாத்திருக்கேன். விஜய் டபுல் ஆக்‌ஷன் பாத்திருக்கேன். ஏன் சொம்பு சிம்புவின் டபுல் ஆக்‌ஷன் கூட பாத்திருக்கேன். ஆனா இந்த மாதிரி ஒரு டபுல் பெர்சனாலிட்டி டபுல் ஆக்‌ஷன இப்ப தான்யா பாக்குறேன்.
    எம்ம்ம்ம்ம்ம்ம்மா… தாங்க முடியலடா சாமி..

    //ஏதோ வரலாற்று பிழை என்கிறார் வேந்தன் (காமெடியாமாம்)//

    நான் எப்பய்யா வரலாற்று பிழைன்னு சொன்னேன். ஓ வரலாற்று சம்பவம் எனும் வார்த்தையை நீங்க இன்னும் கிரேடு கூட்டி அதை ’வரலாற்று பிழை’ ’சரித்திரத்தில் ஒரு கரும் புள்ளி’ இப்படியெல்லாம் சொல்லிகனும்னு உங்களுக்கு ஆசை அப்படித்தானே?

    //முதல்ல முத்திரை பின்பு அவதூறு அதன் பின் அவன என்ன சொன்ன இவன என்ன சொன்ன அவன திட்டு இவன திட்டு அப்புறமா எங்கள திட்டு என்பதை ஒரு விவாத முறையாக வைத்திருப்பதால் சுந்தரம் , வேந்தன் இருவரும் வேறாக இருந்தாலும் அவர்கள் செய்வது ஒன்று தானே//

    சரி. அதெப்படி இப்படியெல்லாம் பேசுரீங்க? திருச்சிகாரன் எனும் ஐடியலிருந்து வந்தா சத்யம் தியேட்டர் கக்கூசு மாதிரி பாலிஷா பேசுரது. ஆட்டோ சங்கர் ஐடியிலிருந்து வந்தா கார்பரேஷன் கக்கூஸ் மாதிரி கலீஜா பேசுரது..
    ஆனா பேசுற ஸ்டைலு வேற வேறன்னாலும் சொல்ற மாட்டெர் ஒன்னுதானே!

  24. ஐயா வேந்தன்,

    நான் இதுவரை யாரையும் நீங்கள் அந்தப் பெயரில் எழுதுகிறீர்கள், இந்தப் பெயரில் எழுதுகிறீர்கள் என சொன்னது இல்லை.

    ஏனெனில் என்னால் உறுதியிட்டு சொல்ல இயலாத ஒன்றை நான் வலியிருத்திக் கூற இயலாது.

    ஆனால் நீங்கள் மீண்டும் , மீண்டும் திருச்சிக் காரன் என்ற பெயரில் எழுத்து பவர் ஆட்டோ சங்கர் தான் என்று , உண்மைக்கு மாறான ஒன்றை வலியிருத்திக் கூறி வருகிறீர்கள்.

    எனவே இதிலிருந்து நீங்கள் ஒரு தகவல் உண்மையா என்று தெரியாமலே அதை உண்மைதான் என்று வலியிருத்திக் கூறுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    என்னுடைய கருத்தை மேற்கோள் காட்டி, அது எந்த வகையிலே தவறானது என்று கூறினால் தெரிந்து கொள்ளலாம்.

    நான் அவ்வப் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சகோதரர் மதிமாறனின் தளத்திற்கு வருவேன், என்னுடைய பின்னூட்டங்களை இடுவேன்.

    நீங்கள் என்னை சத்யம் தியேட்டர் கக்கூசு மாதிரி பாலிஷா பேசுரது என்று கூறினாலோ, இன்னும் இழிவு படுத்தினாலோ, என் கருத்தை கூறுவதை நிறுத்த போவதில்லை.

  25. அய்யா திருவரங்கத்தார் அவர்களே..
    உயிர் எழுத்துக்களிலுள்ள‘‘ஐ’’ என்ற வடிவத்தய் பெரும்பாலானவர்கள் இப்போது பயன் படுத்துவதில்லய், திராவிடர் கழகத்தினர், பெரியார்த் தொண்டர்கள்.. யாரும் அதய்ப் பயன்படுத்துவதில்லய், ஏன் எளிமய்யான ஒரு விளக்கம், அய்யப்பன் தாங்கல் பேருந்துகளில் கூட ‘‘ஐ’’ யய் பயன்படுத்துவதில்லய், ‘‘ஐ’’யய் ஏறக்குறய்ய ஏறக்கட்டியாச்சய்யா, தமிழ் மக்களிடமிருந்து… மேலும் உயிர் எழுத்துக்களய், பன்னிரண்டிலிருந்து ஆறாக குறய்த்து, ஆ ,ஈ, ஊ ஏ ஓ என்ற நெடில் எழுத்துக்களுக்கு பதிலாக ‘‘அ’’ வுக்கு பக்கத்தில் கால் எனப்படும் துணய் எழுத்தய் இடும்போது ‘‘ஆ’’ வுக்குரிய ஒலி உச்சரிப்பு கிடய்த்துவிடும். எங்களய்ப் போன்றோர் இந்த சீர்திருத்தத்தய்த் தான் கடய்பிடிக்கிறோம், கணினியில் அந்த வசதி கிடயாதென்பதால் முழுமய்யாக அப்படி எழுத இயலவில்லய்,
    அடுத்து, கற்க கசடற கற்பவய் கற்றபின்… என்று படிப்பதில் என்ன சங்கடம் வந்துவிடும் தமிழர்களுக்கு? ‘‘நை’’ ‘‘னை’’, இதனுடய்ய ஒலியில் என்ன வேறுபாடு கண்டதனால் ‘‘ன’’வுக்கு மேல் கொம்பு ஒன்று நட்டு வய்த்தார்கள்? இப்போது அந்த கொம்பய் யார் தூக்கிட்டு போனது? எங்கள் பண்பாடோ அல்லது எங்கள் தமிழ் மொழியோ.. அதில் தவறுகளய்க் களய்வதும், கூடுதல் சிறப்பு சேர்ப்பதும், எழிமய்ப்படுத்துவதும், பெரியார்த் தொண்டர்களின் பணி என்றே ஆகிப்போனது..
    தமிழன், கோடிமுனய்

  26. //பிழயுண்டு,.. //

    //அதாவ‌து உயிர் எழுத்திலே ஐ என்ப‌து இனிக் கிடையாதா? //

    1) எங்கள் மொழியை மாற்றும் போது எழுத்துக்களை மாற்றலாம்.

    ஆனால் உச்சரிப்பு கெடும் வகையிலே, பிழய்யாக மாற்றம் செய்யாதீர்கள். “பிழை உண்டு” என்பதை “பிழய் உண்டு” என எழுதலாம்.

    மொழியின் ஒலி வடிவம் மாறும் வகையிலே “பிழயுண்டு” என்று எழுதினால் அது பிழய். அல்லது தனி மொழியாகி விடும்.

    நீங்கள் தமிழ் ஆசிரியர்களை அணுகி கேளுங்கள்

    2) அழைக்கும் என்பதை அழய்க்கும் என்று எழுதினால் ஒலி மாறாது. அளய்க்கும் என்று எழுதினால் அது சரியான பொருள் தராது.

    3) Thamizhan (12:50:55) : ஆங்கில‌த்திலே தான் பேரை எழுத‌ வேண்டும் என்ப‌தும் புதிய‌ சீர்திருத்த‌மா?

    நான் திருவரங்கம் பகுதியை சேர்ந்தவன் இல்லை. காழ்ப்புணர்ச்சி யில் காட்டும் வேகத்தை உண்மையை தெரிந்து கொள்வதில் காட்டுங்கள்.

    எங்கள் மொழியின் ஒளியை உச்சரிப்பை மாற்றாத வரையிலே பெரிதாக ஆட்சேபிக்க மாட்டோம்.

    உச்சரிப்பை மாற்றி புதிய மொழியை உருவாக்குவதானால் அது உங்களுக்கு புதிய மொழியாக வைத்துக் கொள்ளலாம்.

    எனக்கு தாய் மொழி தமிழ் மொழி, நான் அதன் ஒலியை உச்சரிப்பை மாற்றப் போவது இல்லை.

Leave a Reply

%d bloggers like this: