
சிறை முன்பு அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது.
அண்ணன் ராமகிருட்ணணை 8-7-2009 அன்று கோவை சிறைக்கு சென்று பார்க்கபோனபோது, அவரை பல்லடம் நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். பிறகு கோவையிலிருந்து நணபர் சாஜீத், பாலா, கார்த்தி, கண்ணன் உடன் பல்லடம் சென்று அண்ணன் ராமகிருட்டிணனையும், தோழர்களையும் சந்தித்தேன். தோழர் லட்சுமணனை வழக்கு விசாரணைக்காக சென்னை கொண்டு சென்றிந்தார்கள். அவரை சந்திக்க முடியவில்லை. (இந்து மக்கள் கட்சியினர் பெரியார் சிலை இடித்தபோது, ஸ்ரீரங்கத்தில் பல பூணூல்களையும், குடுமிகளையும் அறுத்தவர் லட்சுமணன்.)
லட்சுமணன்
அண்ணணும் மற்றத் தோழர்களும் சிறையில் இருப்பதைபோல் இல்லாமல் ஏதோ கோர்ட்டுக்கு சுற்றுலா வந்திருக்கிற மனநிலையில்தான் இருந்தார்கள்.
‘தொடாமல் பேச வேண்டும்’ என்ற காவல் துறை அனுமதியிடன் நீதிமன்ற வளாகத்தில் பேசினோம். “எவ்வளவு சிரமப்பட்டு சென்னையிலிருந்து வந்துருக்கிங்க” அந்த நேரத்திலும் நமது நலத்தை விசாதித்தார் அண்ணன்.
வழக்குரைஞர்கள் சாஜித், பாலாவிடம், “பிணை கிடைக்க வாய்ப்பிருக்கிற மற்றத் தோழர்களை உடனே எடுங்க, ஏன் தாமதிக்கிறீங்க என்று தொடர்நது அவர்களுக்கு ஆலோசனை சொல்லிகொண்டிருந்தார். வெளியில் இருக்கிற மற்றத் தோழர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்று அன்போடு விசாரித்தார். செலவுக்கு பணம் வேணுண்ணா அக்காகிட்ட வாக்கிங்க….” என்ற ஒரு வார்த்தையைத் தவிர தன் குடும்பம் பற்றி விசாரிக்கவில்லை.
தோழர்கள் மீதான அண்ணனின் இந்த அன்பும், அக்கறையுமே கோவை பெரியார் திக தோழர்களை – மத்தியஅரசு அலுவலகங்களுக்கு பூட்டு, பாஸ்போர்ட் அலுவகம் மீதான தாக்குதல், ராணுவ லாறி மறியல் என்று பல புரட்சிகரப் போராட்டங்களை நடத்த உந்து சக்கதியாக இருந்தது. இருக்கிறது.
எந்தப் பிரச்சினையிலும் அதை கேள்விபட்ட ஒரு மணிநேரத்திற்குள் 150 தோழர்களுக்கு மேலும் திரட்டி ஒரு மிகப் பெரிய போரட்டத்தை அவரால் நடத்தமுடிகிறது என்றால், அதன் மந்திரம் இதுதான்.
“தீடிர் என்று அரை மணிநேரத்திற்குள் முடிவு செய்து, நீங்கள் நடத்திய ராணுவத் தளவாட மறியல், இந்திய அளவில் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம். இதற்கு முன் மணிப்பூரில் ராணுவத்தினரின் பாலியல் கொலைகளை கண்டித்து, பெண்கள் நிர்வாணமாக நடத்தியபோராட்டம் குறிப்பிடத்தக்கது. அதுபோன்று சாமான்ய மக்களையும் திரட்டி நடத்திய இந்தப் போராட்டம் வராலாற்று சிறப்பு மிக்கது” என்றேன்.
”எனன பிரயோஜனம், இவ்வளவு கஷ்டப்பட்டு நடத்தியும் ஈழத்தில் எல்லாரையும் கொன்னுட்டானே…’ என்ற வருத்தம்தான் இருந்தது அணணன் குரலில், பெருமை இல்லை.
மாலை 4 மணிக்கு மேல் சிறைக்கு சென்று மற்றத் தோழர்களையும் சந்தித்தோம். அன்றுதான் தோழர் வீரமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. அதே வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவரின் தந்தை திரு. பன்னீர் செல்வம் அவர்களையும் சந்தித்தேன் அவருக்கு மகன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது குறித்து, கவலையில்லாமல் பேசினார். வீரமணியின் முகத்திலும் அந்த கவலைகள் இல்லை.
சிறையில் இருக்கும் வீரமணி, தமிழ்விழி, ஜோஸ்வாவும் விரைவில் விடுதலை ஆவார்கள்.
அண்ணன் ராமகிருட்டிணன் சிறையில் இருந்து விடுதலையாகிவிட்டார், இனி கோவையில் பெரியார் தொண்டர்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் துவங்கிவிடும்.
ஆம், மீண்டும் சிறைக்கு போகத் தயாராகிவிட்டார்கள் தோழர்கள்.
