`பெரியார் திக பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் விடுதலை‘- மீண்டும் போராட தயாராகிறது கோவை

3ழத்தமிழர்களுக்கு எதிராக  இந்திய ராணுவம், இலங்கைக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ராணுவ லாறிகளை வழி மறித்து மறியல் செய்ததற்காக, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலார் ராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் கழக பெரம்பளுர் மாவட்டத் பொறுப்பாளர் தோழர் லட்சுமணனும் இன்று விடுதலை ஆனார்கள்.

சிறை முன்பு அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது.

அண்ணன் ராமகிருட்ணணை 8-7-2009 அன்று கோவை சிறைக்கு சென்று பார்க்கபோனபோது, அவரை பல்லடம் நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். பிறகு கோவையிலிருந்து நணபர் சாஜீத், பாலா, கார்த்தி, கண்ணன் உடன் பல்லடம் சென்று அண்ணன் ராமகிருட்டிணனையும், தோழர்களையும் சந்தித்தேன். தோழர் லட்சுமணனை வழக்கு விசாரணைக்காக சென்னை கொண்டு சென்றிந்தார்கள். அவரை சந்திக்க முடியவில்லை. (இந்து மக்கள் கட்சியினர் பெரியார் சிலை இடித்தபோது, ஸ்ரீரங்கத்தில் பல பூணூல்களையும், குடுமிகளையும் அறுத்தவர் லட்சுமணன்.)

4

லட்சுமணன்

அண்ணணும் மற்றத் தோழர்களும் சிறையில் இருப்பதைபோல் இல்லாமல் ஏதோ கோர்ட்டுக்கு சுற்றுலா வந்திருக்கிற மனநிலையில்தான் இருந்தார்கள்.

‘தொடாமல் பேச வேண்டும்’ என்ற காவல் துறை அனுமதியிடன் நீதிமன்ற வளாகத்தில் பேசினோம். “எவ்வளவு சிரமப்பட்டு சென்னையிலிருந்து வந்துருக்கிங்க அந்த நேரத்திலும் நமது நலத்தை விசாதித்தார் அண்ணன்.

வழக்குரைஞர்கள் சாஜித், பாலாவிடம், பிணை கிடைக்க வாய்ப்பிருக்கிற மற்றத் தோழர்களை உடனே எடுங்க, ஏன் தாமதிக்கிறீங்க என்று தொடர்நது அவர்களுக்கு ஆலோசனை சொல்லிகொண்டிருந்தார். வெளியில் இருக்கிற மற்றத் தோழர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்று அன்போடு விசாரித்தார்.  செலவுக்கு பணம் வேணுண்ணா அக்காகிட்ட வாக்கிங்க…. என்ற ஒரு வார்த்தையைத் தவிர தன் குடும்பம் பற்றி விசாரிக்கவில்லை.

தோழர்கள் மீதான அண்ணனின் இந்த அன்பும், அக்கறையுமே கோவை பெரியார் திக தோழர்களை – மத்தியஅரசு அலுவலகங்களுக்கு பூட்டு, பாஸ்போர்ட் அலுவகம் மீதான தாக்குதல், ராணுவ லாறி மறியல் என்று  பல புரட்சிகரப் போராட்டங்களை நடத்த உந்து சக்கதியாக இருந்தது. இருக்கிறது.

எந்தப் பிரச்சினையிலும் அதை கேள்விபட்ட ஒரு மணிநேரத்திற்குள் 150 தோழர்களுக்கு மேலும் திரட்டி ஒரு மிகப் பெரிய போரட்டத்தை அவரால் நடத்தமுடிகிறது என்றால், அதன் மந்திரம் இதுதான்.

தீடிர் என்று அரை மணிநேரத்திற்குள் முடிவு செய்து, நீங்கள் நடத்திய ராணுவத் தளவாட மறியல், இந்திய அளவில் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம். இதற்கு முன்  மணிப்பூரில் ராணுவத்தினரின் பாலியல் கொலைகளை கண்டித்து, பெண்கள் நிர்வாணமாக நடத்தியபோராட்டம் குறிப்பிடத்தக்கது. அதுபோன்று சாமான்ய மக்களையும் திரட்டி நடத்திய இந்தப் போராட்டம் வராலாற்று சிறப்பு மிக்கது என்றேன்.

எனன பிரயோஜனம், இவ்வளவு கஷ்டப்பட்டு நடத்தியும் ஈழத்தில் எல்லாரையும் கொன்னுட்டானே… என்ற வருத்தம்தான் இருந்தது அணணன் குரலில், பெருமை இல்லை.

மாலை 4 மணிக்கு மேல் சிறைக்கு சென்று மற்றத் தோழர்களையும் சந்தித்தோம். அன்றுதான் தோழர் வீரமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. அதே வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவரின் தந்தை  திரு. பன்னீர் செல்வம் அவர்களையும்  சந்தித்தேன் அவருக்கு மகன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது குறித்து, கவலையில்லாமல் பேசினார். வீரமணியின் முகத்திலும் அந்த கவலைகள் இல்லை.

சிறையில் இருக்கும் வீரமணி, தமிழ்விழி, ஜோஸ்வாவும் விரைவில்  விடுதலை ஆவார்கள்.

அண்ணன் ராமகிருட்டிணன் சிறையில் இருந்து விடுதலையாகிவிட்டார், இனி கோவையில் பெரியார் தொண்டர்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் துவங்கிவிடும்.

ஆம், மீண்டும் சிறைக்கு போகத் தயாராகிவிட்டார்கள் தோழர்கள்.

11 thoughts on “`பெரியார் திக பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் விடுதலை‘- மீண்டும் போராட தயாராகிறது கோவை

 1. அண்ணன் ராமகிருட்டிணன் சிறையில் இருந்து விடுதலையாகிவிட்டார், இனி கோவையில் பெரியார் தொண்டர்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் துவங்கிவிடும்.//

  அண்ணன் ராமகிருட்டிணன் விடுதலை ஆன செய்தி மிக்க மகிழ்சியை தருகிறது.தொடரட்டும் அண்ணனின் போராட்டங்கள், அவருக்கு உருதுனையாக நாம் எப்போதும் இருப்போம்..

 2. மண்ணிற்காக (மனிதநேயதிர்க்காக) தன்னை முழுவதும் அர்ப்பணித்த பெரியார் திராவிட கழக தோழர்களுக்கு வாழ்த்துகள்..

  இந்திய ஈன ராணுவத்தை வெறும் கைகளால் வென்ற தோழர்களுக்கு இந்திய மேலாதிக்கம் கொடுத்த இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தை வென்று (சட்டப்படியே) தமிழ் தேசியத்திற்கு மேலும் வலு ஊட்டியவர்கள் இந்த மாமனிதர்கள்..

  அவர்களின் பணி மேலும் தொடர வாழ்த்துகள்..

  தோழமையுடன்

  முகமது பாருக்

 3. அண்ணன் ராமகிருஷ்ணனும் தோழர்களும்
  விடுதலை அடைந்ததில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

 4. தோழர்கள்
  விடுதலை அடைந்ததில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்

 5. வாழ்த்துக்கள். பெரியார் திராவிடர் கழக தோழர்களுக்கும். பொதுச் செயலாளர் தோழர் ராமகிருட்டிணனுக்கும் வாழ்த்துக்கள்.

 6. அண்ணண் ராமகிருட்டிணனின் தியாகம் போற்றுதலுக்குரியது. வாழ்க அண்ணன். வாழ்க தோழர் லட்சுமணன்
  வாழ்க பெரியார் திராவிடர் கழகத்தினர்.

 7. வாழ்த்துக்கள் தோழர்களுக்கு.
  நடிகர்களையும் சினிமாகாரர்களையும் மட்டும் தேடி பழகும் முற்போக்காளர்கள், சினிமாகாரர்களுக்கு பாராட்டும் விழா நடத்தும் முற்போக்காளர்கள், பெதிக தோழர்கள் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணனுக்கும், மற்றவர்களுக்கும் பாராட்டுவிழா நடத்த வேண்டும்.

 8. அண்ணன் ராமகிருட்டிணன் விடுதலை அடைந்த செய்தி மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
  கண்டிப்பாக அவருடைய போராட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்திய இராணுவ வகானமே என்றாலும், அது தன் இனத்தை அழிக்க செல்கிறது என்று தெரிந்ததும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போராடிய அவரின் நெஞ்சுரம் போற்றுதலுக்குரியது.
  தமிழினம் மற்றும் சமூக நீதி காக்க அண்ணார் அவர்களின் போராட்டம் தொடரட்டும்.
  வாழ்த்துக்கள்.

 9. “பிணை கிடைக்க வாய்ப்பிருக்கிற மற்றத் தோழர்களை உடனே எடுங்க, ஏன் தாமதிக்கிறீங்க என்று தொடர்நது அவர்களுக்கு ஆலோசனை சொல்லிகொண்டிருந்தார். வெளியில் இருக்கிற மற்றத் தோழர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்று அன்போடு விசாரித்தார். செலவுக்கு பணம் வேணுண்ணா அக்காகிட்ட வாக்கிங்க….” என்ற ஒரு வார்த்தையைத் தவிர தன் குடும்பம் பற்றி விசாரிக்கவில்லை.///

  மகிழ்ச்சி மகிழ்ச்சி…
  இவர் தான் பெரியார் உண்மை வாரிசு
  இங்கு{ சென்னை } இருக்கு கி. வீரமணி அல்ல

 10. TAMILAR VEERAM PRABAKARANAL ELANGAILUM, RAMAKRISTNANAL TAMILNATILUM VELIPPPATTULLATHU…

 11. தோழர் ராமகிருஷ்ணன் அவர்கள் விடுதலை அடைந்ததற்கும் ”தி.க & கோ” விடமிருந்து பெரியாரை விடுதலை செய்ததற்க்கும், அவருக்கும் பெரியார் திராவிட கழகத்திற்கும் புரட்சிகர வாழ்த்துகள்.

  மேலும், ஒரு தலைமுறைக்கு பெரியார் பற்றிய கருத்துக்களை சரியான வேகத்தில் இட்டு செல்லாத வீரமணியின் மந்தத்தை ஈடு செய்யும் வகையில் பெரியார் திராவிடகழகம் பெரியாருக்கே உரித்தான முனைப்போடு பணியாற்ற வாழ்த்துகள்.

Leave a Reply

%d bloggers like this: