Site icon வே. மதிமாறன்

பாலியல் தொழிலா? விபச்சாரமா?

பாலியல் தொழிலாளி என்கிற வார்த்தைக்கு பதில் விபச்சாரம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்களே? பாலியல் தொழிலாளி என்பதுதானேசரி. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மரியாதையாக குறிப்பிடுகிற வார்த்தைஅதுதானே?

-மீனாட்சி

‘பாலியல் தொழிலாளி’ என்கிற வார்த்தை விபச்சாரத்தில் ஈடுபடுகிற பெண்களை மரியாதையாக குறிக்கிற வார்த்தை என்பதைவிடவும், அது ஆண்களின் பாலியல் வக்கிரங்களை நியாயப்படுத்துகிற வார்த்தையாகத்தான் இருக்கிறது.

விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரிப்பது, ஆண்களின் பாலியல் வக்கிரங்களுக்கான, பாலியல் சுரண்டல்களுக்கான அங்கீகாரமே.

விபச்சாரத்தின் மூலமாக கிடைக்கிற பாலியல் ‘இன்பமும்’, விபச்சாரத்தை ‘தொழிலாக’ நடத்துவதின் மூலமாக கிடைக்கிற பெரும் தரகு பணமும், கூட்டிக்கொடுப்பதின் மூலமான தன்னுடைய வேறு ‘தொழிலின்’ லாபமுமாக எல்லாவகையிலும் மிகப் பெரிய அளிவில் பணமாகவும், பொருளாகவும், பாலியல் வக்கிரங்களுக்கான வடிகால் மூலமும் லாபம் அடைகிறவர்கள் ஆண்களே.

பெண்களுக்கு விபச்சாரத்தின் மூலமாக கிடைப்பது உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் துன்பமே. ஆகவே, விபச்சாரத்தை நடத்துவதே ஆண்கள்தான் அல்லது ஆண்களுக்காகத்தான்.

விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரிப்பது, ஆண்களின் பொறுக்கித் தனத்தை அங்கீகரிப்பதாகும் என்பதால்தான் நான் ‘பாலியல் தொழில்’ என்பதற்கு பதில் ‘விபச்சாரம்’ என்று குறிப்பிட்டேன்.

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்
Exit mobile version