Site icon வே. மதிமாறன்

நரேந்திர மோசடி

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த வன்முறையின் போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு பகுதியில் முன்னாள் எம்.பி. எஷன் ஜாப்ரி உள்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு பின்னால் இருந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடியுடன், நேற்று (28-3-2010) நடந்த பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், குஜராத் அய்கோர்ட் தலைமை நீதிபதி எம்.கே. முகோபாத்யா. (படம்: தினகரன்)

***

முன்னதாக (27-3-2010) சி.பி.ஐயின் முன்னாள் தலைவர் ராகவன் தலைமையிலான விசாரணைக்குழுவில் உள்ள மல்கோத்ரா என்பவர்தான் நரேந்திர மோடியை விசாரித்தார். விசாரணைக் குழுவின் தலைவர் ஆர்.கே. ராகவன், மோடியுடனான விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. அதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு, “விசாரணை குழுவின் தலைவர் நேரடியாக விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை” என்றும், “பகவத் கீதையில் சொல்லப்பட்டிருப்பதுபோல், கடமையை செய்கிறேன் பலனை எதிர்பார்க்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

‘கடமையையே செய்யலியே அவரு’ என்று உங்களுக்குத் தோணுதா? அதாங்க கடமை. அதுமட்டுமில்லிங்க அதுவேதான் தகுதி, திறமை.

***

இதுபோன்ற ஒரு ஜனநாயக நாடு உலகில் எங்காவது உண்டா?!

இதுதான் நமது பாரதத்தின் பெருமை! இந்துக்களின் சிறப்பு!

விசாரணைக் கமிஷனோட அறிக்கை எவ்வளவு தெளிவா, நேர்மையா வரப்போகுது என்பதற்கு இவையே சிறந்த அறிகுறிகள். வாழ்க ஜனநாயகம்.

பரந்த இந்த ஜனநாயகத்தன்மையக்கூட ஆட்டுக்கு காவல், ஓநாய்க்கு நண்பன்னு நக்கல் பண்ணுவானுங்க சில வெளங்காத பயலுக. அவனுங்க கெடக்குறானுங்க… எவனையாவது கொறை சொல்றதே அவனுங்களுக்கு வேல. வெட்டிப் பயலுக…

அய்யோ… கவனிக்காம விட்டுடேனே… அதாங்க தலைப்புல நரேந்திர மோடிக்கு இடையில ‘ச’ வந்திருச்சு….

Exit mobile version