இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

cartoonரேந்திர மோடி இஸ்லாமிய எதிர்ப்பாளர், தீவிர இந்துக் கண்ணோட்டம் கொண்டவர், குஜராத்தில் இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர், ‘இஸ்லாமியர் எதிர்ப்பு’ அமெரிக்காகாரனே கட்டம் கட்டும் அளவிற்கு அவருடைய இஸ்லாமியர் எதிர்ப்பு உலகப் புகழ் பெற்றது.

ஆனால், ‘அவருதான் அடுத்த பிரதமர்’ என்று இந்தியாவையே குஜராத்தாக மாற்ற முயற்சிக்கிறார்கள் பார்ப்பன, பார்ப்பன மனோபாவம் கொண்ட ஊடகங்கள்.

நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து பி.ஜே.பி. வெற்றி பெற்று விட்டதைப் போல, ‘பிரதமராக அத்வானியா – மோடியா?’ என்பதாக அரசியல் நடத்துகிறது பி.ஜே.பி. அதற்கு தோதாக இந்த ஊடகங்களும் ஊதுகின்றன.

‘தமிழ்நாட்டில் மோடி போட்டியிடுவார்’ என்று தங்கள் விருப்பங்களை செய்திகளாக வெளியிடுகின்ற பத்திரிகைகள். அதற்கும் வாய்ப்பிருக்கு. ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் அவர் ‘குஜராத் – தமிழ்நாடு’ இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். அதன் மூலமாக தமிழகத்தில் பி.ஜே.பி.க்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்தலாம் என்பது அவர்கள் திட்டமாககூட இருக்கலாம்.

எது எப்படியோ?

மோடி இனி புதியதாக எந்த மோசமானதையும் செய்யப் போவதில்லை. குஜராத்தில் செய்தவைகளை விரிவுபடுத்தும் வேலையைதான் செய்வார். அதனால் தன் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக எந்த பொய்யும் சொல்லுவார். சொல்வார்கள்.

அதில் ஒரு திட்டமாக, இலங்கைத் தமிழர்கள் துயரம் பற்றியும், அதையும் தாண்டி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவர் புகழுரைக்காமல் இருந்தால் அதுவே அவர் தமிழர்களுக்கு செய்யும் பெரிய உதவி.

அப்படி பேசி விட்டால், அவர் தமிழனக் காவலராக அவதாரம் எடுப்பதை, யாராலும் தடுக்க முடியாது. பிறகு அவரை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல; ஒத்துக் கொள்ளாதவர்களை கூட தமிழன விரோதிகளாக, துரோகிகளாக சித்தரித்து விடுவார்கள்.

ராஜபக்சே ஆதரவிற்காக ‘தி இந்து’ நாளிதழை கடுமையாக விமர்சிக்கிற தமிழ்த் தேசிய கண்ணோட்டம் கொண்டவர்கள். ‘இந்து’வின் மோடி ஆதரவை கண்டிப்பதில்லை. இந்த ‘அறிகுறி’ இவர்களும் ‘தி இந்து’வைப் போலவே ‘மோடியை ஆதரிப்பார்கள்’ என்கிற அடையாத்தையே காட்டுகிது.

ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கும் ‘நல்லவராய்’ ஒரே சமயத்தில் மோடியால் எப்படி இருக்க முடியும்? இரண்டில் ஒன்று பொய்யாகத்தான் இருக்கும். அந்தப் பொய் ஈழ ஆதரவுதான்.

மோடி பிரதமராக அறிவிக்கப்பட்டதை ‘ஒரு பார்ப்பனரல்லாதவருக்கு ஆதரவு’ என்கிற முறையில் அவரை எப்படி ஒரு பெரியார் – அம்பேத்கர் தொண்டர்கள் ஆதரிக்க முடியாதோ,
அதுபோலவே தான் ‘காங்கிரஸ் எதிர்ப்பு துருப்புச் சீட்டாக’ தமிழர்களிடம் செல்வாக்கு பெறுவதற்கு அவர் ஈழத் தமிழர்களின் பிரச்சினையை ஓட்டுக்காக பயன்படுத்தினால் ஆதரிக்க முடியாது. கூடாது.

நரேந்திரமோடி ஒரு இந்திய ராஜபக்சே!

எதன் பேரினாலும் நரேந்திர மோடியை ஆதரிப்பது தமிழன விரோத ராஜபக்சேவை ஆதரிப்பது போன்றதே.

**

14-9-2013 அன்று எழுதியது. வேறு கட்டுரைகள் பிரசுரிக்க வேண்டியிருந்ததால் தாமதமாக..

தொடர்புடையவை:

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

48 thoughts on “இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

  1. ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு ஏற்ற நல்ல அடிமை பிரதமராகவே மோடி திகழ்வார். இந்த கருத்தை ஒட்டிய எண்ண ஓட்டத்தின் அடிப்படையில்தான் மேற்கூறிய நாடுகளும் மர்மமான முறையில் காய்களை நகர்த்தி வருகின்றன. அமெரிக்காவிற்கு பிடிக்கத சீன அதிகாரம் ஆசியாவில் பலமாக ஆவதை இடைஞ்சல் செய்யும் நோக்குடன் வெள்ளைக்கார நாடுகளுக்கு கூஜா தூக்குவதற்கும், விலக்கு பிடிப்பதற்கும் ஏற்ற மாமாதான் மோடி. தனது இரத்தத்தில் ஊறிப் போன இந்து மத வெறியான சிறுபான்மை முஸ்லீம் மக்களை கொலை செய்ய துணிந்த அராஜகத்தனம் மேற்குலக மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு ஏற்ற மாமாவாக மோடி விளங்கப் போவதற்கு மேலும் ஒரு கூடுதல் தரம்.

  2. குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டிய நபருக்கு பிரதமர் பதவி. நல்ல தண்டனை. பார்பன ஊடகங்களின் திறமை தான் இது.

  3. ராசபக்சே – மோடிய போல முஸ்லிம்களை கொல்லல.அந்த வேலைய பிரபாகரன் செய்தாரு. அதனால் இந்திய பிரபாகரன் மோடின்னு சொல்லலாம்.

  4. “ராசபக்சே – மோடிய போல முஸ்லிம்களை கொல்லல.அந்த வேலைய பிரபாகரன் செய்தாரு. அதனால் இந்திய பிரபாகரன் மோடின்னு சொல்லலாம்.”

    ஆனால் சிலோன் முஸ்லிம்கள் சிங்கள ஆட்சியாளர்களுடன் சேர்ந்து தமிழர்களை கொன்றார்கள். (ஆதாரம் தர முடியும் )
    அப்போ சிலோன் முஸ்லிம்களை இலங்கை காவிப்படை அல்லது மோடி படை என்று சொல்லலாமா ????

    KUMUDINI.J1982@GMAIL.COM

  5. மதிமாறன் முஸ்லீம் மக்களை கொலை செய்த கொடியவன் ஒருவரை குறிப்பிடுவதானால் இதர மக்களை கொலை செய்திருந்தாலும் பிரபாகரனே இதற்கும் பொருத்தமானவர்.

  6. kumuthini, அடுத்தவனை வெறுப்பேத்த எழுதுறவரு மதிமாறன். நீஙக சொல்ற உண்மைய பார்க்க அவரு நீதி மாறனா,

  7. முஸ்லீம்களை கொன்று குவித்தவர் என்று நரேந்திர மோடியை குற்றம் சாட்டும் மதி அவர்களே ! இது சுத்த பொய். உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் எந்த பொய் வேண்டும் ஆனாலும் சொல்லி கொள்ளளலாம். இதே பொய்யை சோனியா காந்தி “மவுத் கா சௌதாகர்” என்று 2002-இல் சோனியா காந்தி குஜராத்தில் சென்று உளறி கொட்டினார். இதற்கு பதிலடியாக 11 ஆண்டுகள் ஆகியும், குஜராத் மாநிலத்தவர் இன்றளவும் காங்கிரசை ஏற்க தயாராக இல்லை. உங்களுக்கும் தமிழ் மக்கள் அதே தண்டனை தான் தரப்போகிறார்கள். தொடர் வண்டி நிலையத்திலே தேநீர் கடை வைத்து பிழைப்பு நடத்தியவரின் மகன், இந்த அளவு நாட்டின் பிரதமர் ஆகும் வரையில் உழைத்து முன்னுக்கு வந்து இருக்கிறார். ஜாதியிலும் கீழ் மட்டத்து ஜாதி தான் (நாங்கள் அதை பார்ப்பது இல்லை, உங்களுக்கு அது ஒன்று தான் பிழைப்பு, அதை இழுக்க வில்லை என்றால், இந்த துண்டை கூட பதிவு செய்ய மாட்டீர்கள் என்ற காரணத்தினால் எழுத வேண்டி உள்ளது. ) அது பொருக்க வில்லை.
    காங்கிரஸ் கடந்த பத்து வருடங்களாக ஆட்சி செய்து வருகிறது. சிபிஐ, நீதிமன்றம், ஊடகங்கள் எல்லாம் அதன் கையில் அடக்கம். எத்தனை எத்தனை பொய் பிரச்சாரங்கள் செய்தனர். உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு படை அமைத்து அதனை குற்ற சாட்டுகளையும் ஆராய்ந்து, மோடி அப்பழுக்கற்றவர் என்று தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் உங்களை போன்றோர் பொய் சொல்வதை ஒரு தவறு என்று கொள்வது இல்லை. சாமியே இல்லை என்ற பின்பு உங்களை தண்டிக்கதான் யார் உண்டு. அதனால் உங்கள் விரும்பிகள் அனைவருக்கும், இன்னும் நிறைய பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுங்கள். அவர்களும் மகிழ்ச்சி கொள்ளட்டும்.
    இன்று குஜராத் முஸ்லீம்களே மோடிக்கு ஆதரவாக தான் உள்ளனர்.

  8. கிறிஸ்தவ மதமாற்ற சூதாடிகளை குஜராத்தில் தோல்வி அடைய செய்த காரணத்தினால் அமெரிக்க அரசாங்கம் மோடி அவர்கள் மீது காழ்ப்பு உணர்ச்சி காட்டுகிறது. உண்மையான காரணம் இதுவாக இருக்கிற போது உங்கள் மனதில் தோன்றிய காரணத்தை உங்கள் வாசகர்கள் மீது திணித்து உள்ளீர்கள்.

  9. கோத்ரா தொடர் வண்டி பெட்டி எரிந்து 59 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில், காங்கிரஸ்காரர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று உள்ளார்கள். ஹிந்து-முஸ்லீம் மக்களிடையே சண்டை மூட்டி விட்டே ஆட்சி கட்டிலில் சுகம் காண்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த இரு சாராரும் சண்டை பூசல் இல்லாமல் இருந்தால் காங்கிரசுக்கு அங்கு வேலை இல்லை. கடந்த 11 ஆண்டுகளாக குஜராத்தில் மோடி அரசாங்கத்தில் ஹிந்து-முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கலவரம் இல்லாமல் இருக்கின்றனர். காங்கிரசும் தேர்தலுக்கு தேர்தல் தோல்வியே தழுவி வருகிறது. காங்கிரசின் இந்த சூது நடவடிக்கைகளை முஸ்லீம்கள் புரிந்து கொண்டால், நாடு உயர்ந்து உலக அளவில் உச்சத்துக்கு செல்லும்.

  10. போகிற போக்கில் ஒரு பெரும் பொய்யை கூசாமல் எழுதி உள்ளீர்கள். தி ஹிந்து நாளிதழ் மோடிக்கு ஆதரவானதா ! இது கனவிலும் நடக்காத ஒன்று. கடந்த 12 ஆண்டுகளாக மோடி எதிர்ப்பை கொண்டே பத்திரிக்கை நடத்தி வரும், சோனியாவின் கால் செருப்பு “ராம்” அவர்களும், அதன் பின்னர் வந்த “சித்தார்த்” அவர்களும், என்றாவது மோடிக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அதை ஆதாரத்தோடு சுட்டி காட்டவும்.

  11. வார்த்தைக்கு வார்த்தை பொய் ! கூசாமல், ஆராயாமல் அடித்து விடுவது ! பாவம் ! உங்களை படித்து அறிவு துறப்பவர்கள் நிலைமை ! நீங்கள் தான் உங்கள் வாசகர்களுக்கு அறிவின் ஊற்று ! படிக்கும் தம்பி மார்களே ! மதி அண்ணன் சொல்வதை, ஒவ்வொன்றையும் ஆராய்ந்து நீங்கள் ஏற்று கொள்வதோ, விடுவதா என்று தீர்மானித்து கொள்ளுங்கள். அண்ணன் மனசுக்கு தோன்றுவதை எழுதுகிறார் ! உண்மை, பொய்யை பற்றி கவலை படுவதில்லை.

  12. ndtv , timesnow , cnn -ibn , india today , அது மட்டுமல்லாமல் அணைத்து ஊடகங்களையும், நம்ப ஊர் சன் டிவி முதற்கொண்டு அணைத்து ஊடகங்களும், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சோனியாவின் அடிமைகளாகவே செயல் பட்டு வருகின்றன. மோடியை பற்றி பொய் கட்டுரைகளை கொட்டி வருகின்றன. நிலைமை இப்படி இருக்கையில், ஊடகங்கள் மோடி ஆதரவாக செயல் படுகின்றன என்று சொல்வது இன்னும் ஒரு மாபெரும் பொய். சமூக வலைதளங்களில், பொது மக்கள் இந்த சதியை தான் முறியடித்து உள்ளன.

  13. மதி அண்ணா ! சுட சுட செய்தி வேண்டுமா ! கென்யா தலைநகர் நைரோபியில் ஒரு 39 பேர், பாகிஸ்தான் பெஷாவரில் சர்ச் வாசலில் ஒரு 25 பேர் மட்டும் தான் கொல்ல பட்டனர் என்று செய்திகள் வருகின்றன ! இதுவும் மோடியின் வேலை தான் என்று இன்னும் ஒரு பதிவை போட்டு அசத்துங்கள் பார்ப்போம்

  14. இராக் நாட்டில் ஒரு 75 பேர் தான் கொல்ல பட்டனர் ! மோடியின் ஆட்கள் எல்லா மூலை முடிக்கிலும் கொன்று வருகிறார்கள் என்று ஒரு பதிவு போடுங்கள்.

  15. சரி ! இங்கதான் இந்த பார்ப்பனீயம், ஜாதி போன்ற கன்றாவிகள் எல்லாம் இருக்குதேன்னு, இது எதுவுமே இல்லாத சுத்த அரிவாள், சுத்தியல் நட்சத்திரம் தழைக்கும் ஒரு ஊருக்கு போனேன் ! அங்க பார்ப்பனீய வாசனையே இல்லை ! ஜாதிகளே இல்லை ! சூப்பர் என்று நினைத்தேன் ! அப்புறம் பார்த்தால் ஊழல் ரொம்ப மலிவாக இருக்கு ! எல்லாமே ஊழல்தான் !! ஊழலை தவிர வேறு எதுவும் இல்லை ! எது இன்பம் என்று இங்கு இருப்பவர்களுக்கு புரிய வில்லை ! தெரிய வில்லை ! அதனால் குடி, பெண்கள், இவை தான் இங்கே பிரதானம் ! தெருவுக்கு தெருவில், முனையில் ஆட்கள் நின்று கொண்டு உனக்கு இந்த ஊர் பொண்ணு வேண்டுமான்னு கேக்குறான் ! அட ! ஆம்பளை தான் அப்படீன்னு பார்த்தால் பொம்பளை வந்து புள்ளை பெதுக்கலாமான்னு கேக்குறா ! கற்புன்னா என்னன்னே தெரியலை ! உடை எல்லாம் போட்டிருக்கங்களான்னு தேட வேண்டியதா இருக்கு ! ஆனால் சுத்தமான கடவுள் இல்லைன்னு சொல்ற ஊரு

  16. 80% ஹிந்துக்கள் இருக்கிற நாட்டை ரோமாபுரியும், சவுதி அரேபியாவும் திட்டம் போட்டு ஆட்சி நடத்துகின்றன ! ஹிந்துகளை எதிர்த்து எல்லா ஊடகங்களும், உங்களை போன்றோரும் எழுதியும் பேசியும் வருகின்றன ! 80% முஸ்லீம்கள் உள்ள எந்த நாட்டிலாவது இதை போன்று எதிர்த்து எழுத முடியுமா ! பேச முடியுமா ! ஏன் ! உங்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் இருக்கிற ஊர்லயாவது சொந்தமா பேசுவதற்கு, எழுதுவதற்கு உரிமை இருக்கிறதா !

  17. அய்யா ராம்… இந்த தளத்திற்கு எல்லோரும் முட்டாள்கள் தான் வருவார்கள் என்று நினைத்துவிட்டீரோ. உன்னோட பூணூல் வேலையை இங்கே காட்டுறே… போயி ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் போயி இப்படி பேசினால் கை தட்டுவார்கள். அறுக்காதே….

  18. “””””” 80% ஹிந்துக்கள் இருக்கிற நாட்டை ரோமாபுரியும், சவுதி அரேபியாவும் திட்டம் போட்டு ஆட்சி நடத்துகின்றன ! ஹிந்துகளை எதிர்த்து எல்லா ஊடகங்களும், உங்களை போன்றோரும் எழுதியும் பேசியும் வருகின்றன””””

    அஹா இந்துக்களின் மீது எவ்வளவு அக்கறை இந்த ராம் அய்யருக்கு.. 80% இந்துக்கள் இந்துக்கள் னு கூப்பாடு போடுகிறீர்களே இந்த இந்துக்களில் பெரும்பான்மையாக இருக்கும் காலம் காலமாக நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட தலித்துக்களுக்காக நீங்களோ உங்க பி ஜே பி கட்சியோ ஏதாவது பாடுப்பட்டிருக்கா ? அவர்களை கோயில் உல் அனுமதிக்க முன் வருமா உன் கூட்டம் ? மாற்று மதக்காரன் முஸ்லீம் எங்களை தொட்டால் தீட்டு கழிப்பதில்லை. நீ அப்படி இருப்பியா ? அவர்களின் முன்னேற்றத்துக்காக மண்டல்கமிஷன் பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயா நீயும் உன் பி ஜே பி யும் ? காஞ்சி பீடாதிபதி பதவிக்கு பார்பனல்லாத ஒரு இந்துவை அமர்த்த குரல் கொடுப்பாயா ? இப்படி நான் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். நீ அதற்கெல்லாம் குரல் கொடுத்துவிட்டு பிறகு நீ இந்துக்களுக்காக குரல் கொடுக்கலாம். எவ்வளவு நாள்கள் தான் இப்படி ஏமாற்றிக்கொண்டே இருப்பீர்கள்.

  19. முதன் முதலாக ஒரு தேசிய கட்சியில், SC இனத்தவரான திரு. பங்காரு அவர்கள் ப.ஜ.க-வின் தலைவராக இருந்து உள்ளார். தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளில், இது வரை SC , ST இனத்தவர் இது வரை தலைமை பதவியில் அமர்த்த பட்டுள்ளனரா ! பழங்குடி வகுப்பை சேர்ந்த அர்ஜுன் முண்டா அவர்கள் ஜ்ஹார்கண்ட் மாநில முதல்வராக இருந்து வந்துள்ளார். சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகி விட்டது . தமிழகத்தில் எந்த திராவிட கட்சியாவது ஒரு பழங்குடியினத்தவரை முதல்வராகவோ, தலைவராகவோ தேர்ந்து எடுத்து உள்ளனவா ! இந்த கேள்விகளுக்கு உங்களிடம் பதில் கிடையாது. அதனால் பா. ஜ. க விற்கு உண்டான தகுதி மற்ற கட்சிகளுக்கு கிடையவே கிடையாது. உங்களுக்கு எல்லாம் வெள்ளைக்காரி ஆட்சி தான் வேண்டும். வெள்ளைக்காரன் ராகுல் காந்தி ஆட்சி வேண்டும். டீ கடையில் வேலை செய்து வந்த ஒருவர் நாட்டின் பிரதமாராக உங்களால் ஏற்று கொள்ள முடியாது. உண்மை இதுதான் !

  20. ஏன் அப்பாஸ் நக்வியை விட்டுவிட்டீர்கள் ? பார்பன காலை கழுவுற தலித்தாகாக இருந்ததால் தான் இந்த அனுமதி. ஏதாவது ஒரு குறியீடை காட்ட வேண்டியது… பாருங்கள் நாங்கள் சலுகை செயதுவிட்டோம்னு ஏமாற்ற வேண்டியது. உங்களவா ஆட்சி அதிகாரங்களில் மொத்த தலித்துக்கள் இருக்கும் விகிதத்திலா இருக்கிறார்கள் ? 1% கூட கிடையாது என்பது தான் நிதர்சனம். அதுவும் அவர்கள் பார்பன அடிமையாக இருக்க வேண்டும். 3% இருக்கும் பார்பனர்கள் 90% அதிகாரத்தில் இருப்பார்கள். இந்துக்களின் மீது உண்மையிலேயே உங்களவா கூட்டத்திற்கு பற்றிருந்தால் 5 லட்சம் இந்துக்களை கருவறுத்தானே சிங்களன் .. அப்பொழுது ஒரு ம….ரையாவது அவர்களுக்கு எதிராக புடுங்கி இருக்குமா இந்த கூட்டம் ? ஏன் அவர்கள் இந்துக்கள் கிடையாதா ? அந்த கொடூரன் ராஜபக்சேவுடன் கொஞ்சி குலாவும் உங்களவாக்களை கண்டிக்க உனக்கு துப்பிருக்கா ? ஒரு பார்பான் கோட்சே இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு மகாத்மா காந்தியை கொன்றதில் ஆரம்பித்து நாடு முழுவதும் குண்டுகளை வைத்து தன இந்து சகோதரர்களையே கொன்று குவித்தது , பாகிஸ்தான் கொடியை ஏற்றியது, ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் தனக்கு தானே குண்டுவைத்தது, கோவிலில் மாட்டு கறியை வீசுவது என்று…. இன்று திண்டுக்கல்லில் நடந்த தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டை வீசிக்கொண்டதுவரை எவ்வளவு சூழ்சிகள் செய்து இஸ்லாமியர்கள் மீது பலி போடுவதற்காகவே அலையும் இந்த கூட்டத்தை நீங்களும் உங்களவா பி ஜே பி கட்சியும் கண்டித்தது உண்டா? சாயம் எப்பவோ வெளுத்து போய் விட்டது. நீர் பழைய பல்லவியே பாடிக்கிட்டு இருக்கிறீர்கள். மனசாட்சி இருந்தால் சிந்திக்கவும் உங்கள் இனவெறியை ஒதிக்கி வைத்துவிட்டு. நன்றி.

  21. ஜோதி அவர்களே, ! திராவிட ஆட்சியாளர்கள் கடந்த 50 ஆண்டு காலமாக ஆட்சி நடத்தி வருகிறார்கள். கடந்த 10 வருடங்களாக, சுதந்திரம் பெற்ற 65 ஆண்டுகளில், 50-க்கும் மேலாக நடுவண் அரசு நடத்தும் காங்கிரசை பொய் கேளுங்கள். கருணாநிதி அவர்களை போய் கேளுங்கள். இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் கொன்று குவிக்க பட்ட பொது பா ஜ. க நடுவண் அரசிலும் இல்லை, மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. அதெல்லாம் சரி தான். திரு. பிரபாகரன் ஏன் நோர்வே நாட்டையும், U.K நாட்டையும் தான் நம்பி போர் செய்து வந்தார். அவரும் கிறிஸ்தவர் ஆன பின்புதான் நிறைய படை பலம் பெற்றார். குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அவர் ஒரு கன்வெர்ட் என்ற காரணத்தினாலேயே அவருக்கு எல்லா சகாயமும் செய்து வந்தது. திரு. பிரபா செய்த படுகொலைகள், குண்டு வெடிப்புகள், இவற்றில் மரணம் அடைந்த உயிர்களுக்கு யார் பதில் சொல்வது. தன் ஒரு உயிரை காப்பாற்றி கொள்ள அணைத்து தமிழ் மக்களையும் கேடயமாக பயன் படுத்தியது யார். பிரபாகரன் எந்த பா.ஜ.க வினரிடம் உதவி கேட்டார். தமிழ் ஹிந்துக்களை துச்சம் என நினைத்தவர் அவர். போதும் உங்கள் பொய்கள்.
    தன்னுடைய சாதகதுக்காக, கணக்கற்ற பொய்களை அடுக்கி கொண்டே போகலாம் என்று உங்கள் மதம் சொல்லி கொடுத்ததா. அல்லா நிச்சயம் நியாயத்துக்கான கடவுளாக, சிறந்த நீதிமானாகதான் இருப்பார். பொய் சொல்கிறவர்களை மன்னிக்க மாட்டார்.
    அறம் ஒன்றே தலையாயது ! அறத்தை காப்போம் !

  22. அமிர்தலிங்கம் போன்ற சிறந்த தமிழின தலைவர்களை கொன்றது யார். இந்திய அமைதி படையினருக்கு எதிராக இலங்கை ரானுவதினரோடு சேர்ந்து போரிட்டது யார்.

  23. உங்கள் மேலயும் ஒரு தப்பும் கிடையாது ! இதெல்லாம் காங்கிரஸ்காரன் தன்னுடைய ஊடகங்கள் வாயிலாக இட்டு கட்டிய கதைகள். யாரவது ஒருத்தரை வில்லனாக ஆக்காமல், அவர்களால் இந்திய முஸ்லீம்களை ஏமாற்ற முடியாது. இன்று அவர்கள் வில்லனாக சித்தரிப்பது மோடியை.
    நம்ப ஊர் முஸ்லீம் சகோதரர்களும் யார் எது சொன்னாலும் நம்பும் அப்பாவிகளாக இருக்கிறார்கள். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இன்பமாக வாழ்ந்து விட்டால் காங்கிரஸ் கட்சி கடையை மூட வேண்டியதுதான். சமுதாயத்தை எப்படியாவது சதி செய்து பிரித்து ஆள்வதே அவர்கள் தந்திரம். முஸ்லீம்களும், அதற்கு ஒத்து போகிறார்கள்.

  24. “ஒரு பார்பான் கோட்சே இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு மகாத்மா காந்தியை கொன்றதில் ஆரம்பித்து நாடு முழுவதும் குண்டுகளை வைத்து தன இந்து சகோதரர்களையே கொன்று குவித்தது , பாகிஸ்தான் கொடியை ஏற்றியது, ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் தனக்கு தானே குண்டுவைத்தது, கோவிலில் மாட்டு கறியை வீசுவது என்று…. இன்று திண்டுக்கல்லில் நடந்த தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டை வீசிக்கொண்டதுவரை எவ்வளவு சூழ்சிகள் செய்து இஸ்லாமியர்கள் மீது பலி போடுவதற்காகவே அலையும் இந்த கூட்டத்தை ”

    இவற்றோடு ஏன் நிறுத்தினீர்கள். இன்னும் நிறைய கற்று கொடுத்திருப்பார்களே ! 26/11 மும்பை கொலைகளை செய்தது RSS தான். ஆடிடர் ரமேஷ் அவராகவே அவரை வெட்டி கொண்டார். திக்விஜய் சிங்க் போன்றவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு கொண்டு, உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள்.
    திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர். அவர் பைபிளை கொண்டு தான் திருக்குறள் எழுதினார். இதெல்லாம் உங்களுக்கு சொல்லி தர வில்லையா

  25. ஏதாவது ஒரு குறியீடை காட்ட வேண்டியது… பாருங்கள் நாங்கள் சலுகை செயதுவிட்டோம்னு ஏமாற்ற வேண்டியது.

    நீங்கள் இதை எல்லாம் ஒரு குறியீடாக நினைக்கிறீர்கள் ! அந்த குறியீடு கூட எந்த திராவிட கட்சியும் இன்னும் காட்ட வில்லை !

  26. அணைத்து உயிர்களுக்குள்ளும், ஏன் உயிரற்ற பொருளையும் நீக்கமற நிரந்து நிற்பவர் அல்லாஹ் ! அதனால் யார் மீது எந்த வெறியும் எனக்கு இல்லை ! அறம் ஒன்றுதான் உலகத்தை உய்விப்பது ! கடவுளை நம்புங்கள், நம்பாமல் இருங்கள் ! ஒரு தவறும் இல்லை. ஆனால் அறத்தினின்று பிறழ்வது மட்டுமே தவறு ! தன்னலம் மீறி, அடுத்தவர்களுக்கு கெடுதல் விளைவிப்பது தான் தவறு.

  27. எந்த விசயத்திலும் அறிவில்லை உங்களுக்கு. மேற்படி விவாதத்தை படித்தவர்கள் அதை நன்றாக உணர்ந்திருப்பார்கள். போதும். நிறுத்திக்குவோம். முடியலை….

  28. ’’உலகம் சமநிலை பெற வேண்டும்”
    //”கடவுள் செய்த பாவம்;இங்கு காணும் துன்பம் யாவும்;
    என்ன மனமோ என்ன குணமோ – இந்த; மனிதன் கொண்ட கோலம்;மனிதன் கொண்ட கோலம்” – நாடற்ற தமிழன்.//
    //”கொடுத்ததெல்லாம் கொடுத்தான்;அவன் யாருக்காகக் கொடுத்தான்;ஒருத்தருக்கா கொடுத்தான்; இல்லை ஊருக்காகக் கொடுத்தான்” – ஈழத் தமிழன்.//

    //சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’; – வாடிய பயிரை கண்ட போதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் தமிழன்.//
    //’’உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும். இமயமும் குமரியும் இணைந்திடவே எங்கும் இன்பம் விளைந்திடவே
    சமயம் யாவும் தழைத்திடவே”- இந்தியத் தமிழன்.//
    //”நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்; நல்லவர் கெட்டவர் யாரென்றும்; பழகும் போதும் தெரிவதில்லை;பாழாய்ப் போன இந்த பூமியிலே.” – பாமரத் தமிழன்.//
    //ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்; சாராய கங்கை காயாதடா…. சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா; சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா ” – டாஸ்மாக் தமிழன்//

  29. “திரு. பிரபாகரன் ஏன் நோர்வே நாட்டையும், U.K நாட்டையும் தான் நம்பி போர் செய்து வந்தார். அவரும் கிறிஸ்தவர் ஆன பின்புதான் நிறைய படை பலம் பெற்றார். குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அவர் ஒரு கன்வெர்ட் என்ற காரணத்தினாலேயே அவருக்கு எல்லா சகாயமும் செய்து வந்தது. ”

    பிரபாகரன் கிறிஸ்தவ மதத்துக்கு மதம் மாறி இருந்தாரா ???? இந்த விடயம் பிரபாகரனுக்கு தெரிந்து இருக்குமா ??

  30. ராம் என்பவரின் பின்னூட்டங்களை படிக்கும் போது விழுந்து விழுந்தி சிரிப்பதை தவிர்க்க முடியவில்லை.
    மோடி ஒரு முட்டாளிடம் பணம் கொடுத்து பிரச்சாரம் செய்ய சொல்லியிருக்கின்றார

  31. ’’உலகம் சமநிலை பெற வேண்டும்”
    //” “கடவுள் ஏன் கல்லானான் – மனம் கல்லாய் போன மனிதர்களாலே” நாடற்ற தமிழன்.//
    //”கொடுத்ததெல்லாம் கொடுத்தான்;அவன் யாருக்காகக் கொடுத்தான்;ஒருத்தருக்கா கொடுத்தான்; இல்லை ஊருக்காகக் கொடுத்தான்” – ஈழத் தமிழன்.//
    //’’உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும். இமயமும் குமரியும் இணைந்திடவே எங்கும் இன்பம் விளைந்திடவே சமயம் யாவும் தழைத்திடவே”- இந்தியத் தமிழன்.//
    //ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்; சாராய கங்கை காயாதடா…. சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா; சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா ” – டாஸ்மாக் தமிழன்//
    /”எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” – – வாடிய பயிரை கண்ட போதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் தமிழன்.

  32. நல்ல கட்டுரை. ஆம்.. மோடி இந்தியாவின் ராஜபக்க்ஷே தான். சந்தகமே இல்லை. பிஜேபியின் சுவாமி நேரடியாக ராஜபக்க்ஷேவை ஆதரக்கிறார். ஆதலால் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் பிஜேபியையோ மோடியையோ ஆதரிப்பது என்பது மிகவும் விந்தை.

    “த ஹிந்து” பத்திரிகை மோடி ஆதரவு பத்திர்க்கை இல்லை. மோடியை எதிர்த்தே வருகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் நடுநிலையாக எழுதி வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக தினமும் அவர்கள் செய்தியை படித்து வருகிறேன்.

  33. “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்”
    திரு மோடி அவர்களின் கழிவறை குறித்த கருத்து- நாட்டின் / மக்களின் மிகவும் அத்தியாவசியத் தேவை பற்றியது தானே??? இதில் நல்லவர்கள் யாரும் குற்றம் காண மாட்டார்கள்.
    http://dinamani.com/latest_news/2013/10/03/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-

  34. ” கச்சத் தீவை அளித்து , அண்டை நாட்டுடன் அறம் பேணிக்கும் நாம்; மக்களின் பயனுக்காக கழிவறை பெரும் நிலையில் வந்துள்ளது குறித்து சிறுமை கொள்ளலாமா?”

    //இந்தியாவில் கழிவறைகள் கட்ட பில்கேட்ஸ் நிதியுதவி//

    ” கச்சத் தீவை அளித்து , அண்டை நாட்டுடன் அறம் பேணிக்கும் நாம்” – நாட்டுக்காக மைக்ரோசாப்ட் மூலமாக உயர் கணினி தொழில்நுட்பம் பெறுவதுடன்; மக்களின் பயனுக்காக கழிவறை பெரும் நிலையில் வந்துள்ளது குறித்து சிறுமை கொள்ளலாமா?

    http://dinamani.com/latest_news/2013/10/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-

  35. Ram; ivanuga ippadi than boss, modiya peiyunu solluvangam soniyava kadavulunu solluvanuga, ivangula thiruthave mudiyathu. kaludhaikaluku thriuma karpoorathoda vasanai

Leave a Reply

%d bloggers like this: