Site icon வே. மதிமாறன்

பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’

ந்த படத்துல வர்றா மாதிரியான போலிஸ் ஸ்டேசன்… அடடாடா.. என்ன ஒரு அன்பான, அழகான காவல்துறை?

உண்மையிலேயே போலிஸ்காரங்க நல்லவங்க மட்டுமில்ல, அப்பாவிங்க கூடதான். தேவையில்லாம நம்ம ஜனங்கதான் அவுங்கள பாத்து பீதி அடையது. இத்தனைக்கும் ‘அதிகமான கிரிமினல்கள் உள்ள போலிஸ் ஸ்டேசன்’ என்று அந்தப் படத்தல வரும் நீதிபதியே சொல்ற ஊர்லேயே இவ்வளவு அன்பான போலிஸ்!

சேது, பிதாமகன், நான் கடவுள், அவன்-இவன் வரைக்கும், எல்லா கதாபாத்திரங்களும் ஒரே தொணியிலதான் வசனம் பேசுது. வசனத்துலேயும் பாலாவோட பங்களிப்புத்தான் அதிகமாக தெரியுது.

அவருக்கு கோர்வையா எழுத வராது போல, தான் சொல்றத பக்கத்துல இருந்து எழுதி, அதை காப்பி எடுத்து கொடுக்கிறதுக்கு ஒரு ஆளு வேணும்போல…

இந்த படத்துலேயும் வசனம் ராதாகிருஷ்ணனோ, ராமகிருஷ்ணனோ ஒருத்தரோட பேரு வருது..

ஜமீன் கிட்ட ரெண்டு திருட்டுபசங்க… வாடா… போடா…ன்னு கூப்பிடற அளவுக்கு நெருக்கமா இருக்கிறாங்க… அவுங்களுக்குள்ளே எப்படி அந்த உறவு ஏற்பட்டது?

அதிக அழுத்தம் கொடுத்து காண்பிக்கப்பட்ட இரும்பு பெட்டி திறக்கிற காட்சி, திரைக்கதையில் ஒரு லீடா இல்லாம, துண்டா வெளிய போயிடுச்சு,

ஜமீனா வர ஜி.எம். குமாரு ஏன் நடுத்தர வர்க்கத்து சென்னைத் தமிழ் பேசுராரு?

இந்த காட்சியல… அது இல்ல, அந்த கட்சியிலே இது இல்ல என்பது போன்ற கேள்வி எல்லாம் நான் கேட்க போறதில்ல…

மற்றவர்கள் கேட்க முடியாத அல்லது கேட்க விரும்பாத ஒரு விசயத்தைப் பற்றிதான் இந்த விமர்சனம்.

***

அடுத்தவன் வீட்டுக்குள்ள குதிச்சு திருடறது, கழுத்தறுத்து களவாடறது, பொம்பள தாலி அறுக்கிறது, கள்ளச் சாவி போட்டு பொட்டி தொறக்கிறது… இதுபோன்ற செயல்கள் செய்கிற திருட்டு பசங்களோடு நெருக்கமா, அன்பா இருக்கிற அய்நஸ் என்று அழைக்கப்படுகிற ஜமீனுக்கு,

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வது மாபெரும் சமூக குற்றமாக தெரிவது ஏன்?

‘மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்து தவறு என்று காட்டவில்லை, அதை முறைப்படி லைசன்ஸ் வாங்கி செய்யவேண்டும். இப்படி திருட்டுத்தனமாக செய்யக்கூடாது என்பதுதான் காட்சியாக்கப்பட்டிருக்கிறது’ என்று பதில் வரலாம்.

கழுத்தறுத்து களவாடறது, பொம்பள தாலி அறுக்கிறது, அடுத்தவன் வீட்ல குதிச்சு  திருடறது, கள்ளச் சாவி போட்டு பொட்டி தொறக்கிறது இதெல்லாம் முறைப்படி லைசன்ஸ் வாங்கித்தான் நடக்குது என்று நம்புகிற அப்பாவியா அய்நஸ்.

ஆட்டுக்கறி விற்பவர்களில் எத்தனைப் பேர் லைசன்ஸ் வாங்கி விற்பனை செய்கிறார்கள். இன்னும் நெருக்கிச் சொன்னால், ஆடுகளை வெட்டி தோலை உறித்து கறியாக பிரிப்பது வரை எல்லாம் சாலைகளிலேயே நடக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழைமைகளில் வழியேற திறந்தவெளியில் புது புது ஆட்டுக்கறி கடைகளை காணலாம்.

ஆனால், இதுபோல் பகிரங்கமாக, பார்ப்பவர்கள் அருவருப்பு அடைவதுபோல் மாட்டுகளை பொது இடங்களில் வெட்டி பிரித்து இறைச்சியாக விற்பதில்லை.

அப்படியிருக்க, பாலாவின் ஜமீன் அய்நசுக்கு, மாடுகள் மேல் ஏற்பட்ட இரக்கம், ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..’ என்ற வள்ளலார் பாணியிலான உயிர்கள் மீது கொண்ட அன்பினால் அல்ல,

ஒரு ஜாதி இந்துவுக்கு இருக்கிற மாடுகளின் மீதான புனித உணர்வும், மாடுகளை உண்கிற தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான்.

சைவம் சாப்பிடுகிறவர், அசைவ உணவை சாப்பிடுவதை எப்படி அருவருப்பாக பார்க்கிறாரோ, அதுபோலவே, ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிற ஜாதி இந்து மாட்டுக்கறி சாப்பிடுவதை அருவருப்பாக பார்க்கிறார்.

சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் மாமிச உணவு மீதான அவர்களின் அருவருப்பை புரிந்து கொள்ள முடிகிறது. ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவர்கள் மாட்டுக்கறியை அருவருப்பாக பார்க்கிற மோசடியை என்னவென்று சொல்வது?

ஆடு, கோழிகளை பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கிற உணவு பொருளாகவும், மாடுகளை புனிதமாகவும் பார்க்கிற ஜாதி இந்து மனோபாவத்தை, உலகின் எந்த நாட்டு மக்களிடத்திலும் பார்க்க முடியாது

இந்த மோசடிக்குள்தான் மறைந்திருக்கிறது தீண்டாமைக்கான மூலக்கூறு.

இதுபோன்ற ஜாதி இந்து உணர்வுதான் ஜமீன் உணர்வாகவும் வடிந்திருக்கிறது இந்த படத்தில்.

அநேகமாக எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஜாதிய அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. விசால், ஆர்யா கதாபாத்திரங்களின் தந்தை, ‘நம்பள மாதிரி களவானி குடும்பத்துல சம்பந்தம் வைச்சாலும் வைப்பேன்..’ என்று வருகிற வசனமும்,

படம் பார்க்கிறவர்கள், ஜமீன் அய்நஸை பாளையக்கார எட்டயபுர ஜமீனாக (தெலுஙகு நாயக்கர்) நினைத்துக் கொள்ள போகிறார்கள், என்பதினால், ‘மனுநீதி சோழன், எங்க முப்பாட்டன் கானாடுகாத்தான் சேதுபதியோட சொந்த மச்சினன்’ என்ற வசனம் ஜாதி பெருமையோடு நெருக்கமாக முக்குலத்தோர் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.

இப்படி நேரடியாக ஜாதி அடையாளம் காட்டப்படாமல், குறிப்பால் ஜாதி அடையாளத்தை உணர்த்தப்பட்ட ஒரே கதாப்பாத்திரம் மாடுகள் விற்பவர்.

‘மாடுகள் இறைச்சிக்காக விற்பனை, ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் மாட்டுக்கொட்டகையிலேயே வீடு’ இந்தக் குறியீடுகள் அவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் அந்த கதாபாத்திரத்திற்கு பெயர்கூட வைக்கவில்லை.

பெயர் சொன்னால் ஒரு வேளை நேரடியாக ஜாதி அடையாளம் தெரிந்துவிடும் என்ற காரணமும் இருக்கலாம்.

ஜமீன் அய்நஸ், முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்த ஒரு ஜாதி இந்து என்பதால், கள்ளர் சமுதாயத்தை நெருக்கமாகவும், மாடுகளை புனிதமாகவும், மாட்டுக்கறி விற்பனையை சமூக விரோதமாக பார்க்கிறார்.

ஆனால், இயக்குநர் பாலா அவரும்  ஏன் அவ்வண்ணமே பார்க்கிறார்? அய்நசுக்கும் பாலாவிற்கும் என்ன தொடர்பு?

தொடர்புடையவை:

மிருகாபிமானம்

எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?

‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்?

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

இயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு
Exit mobile version