அசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது

Wrap

கருப்பு ராஜாவால்
நன்மை பெற்ற கருப்பர்கள்
வெள்ளை ராஜாவுக்கு
விசுவாசமாகி
முதுகில் கத்தி வைக்கிறார்கள்.

விரோதிகளும் துரோகிகளும்
ஓரே அணியில்..
ஆனாலும் வீழ்த்த முடியாத வீரம்.

அவன் உயிர்..
அவன் பெயரிலோ
புகழிலோ இல்லை
எதிரிகளை அச்சம் கொள்ள வைத்த
அவனின் உண்மையிலிருக்கிறது.

எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும்
இந்த அசுரனின் தாடி மயிரைக்கூட
அசைக்க முடியாது.

ஏன்னெறால்
இவன்
எதிரிகளிடமே மண்டியிட்டு
தவம் செய்து
வரம் கேட்ட
மூட அசுரனல்ல.

எதிரிகளை துவம்சம் செய்து
துரோகிகளுக்கும்
அருளிய
கோபம் நிறைந்த
அன்பான அசுரன்.

-வே. மதிமாறன்.

விரைவில்…
*

அட்டை வடிவமைப்பு: தோழர் மணிவர்மா

பெரியார் படம் உதவி: பிரின்ஸ் என்னாரஸ் பெரியார்

வெளியீடு :
அபசகுனம் வெளியீட்டகம்
7- பிரியா காம்பளக்ஸ், கோபாலபுரம் 2 ஆவது வீதி, கோவை-641018 / 0422-2236300.

சென்னை – 9092390017 / கோவை – 9750871000

தொடர்புடையது

எனது புத்தகங்கள்

18 thoughts on “அசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது

 1. தமிழன் பகுத்தறிவோடு சிரித்து வாழவேண்டும் என்ற் எண்ணத்துடன் இந்தப்பதிவு எழுதப்படுகிறது. எல்லாரும எல்லாமும் பெறவேண்டும். ஆனாலும் அறிவு பகுத்தறிவார்களுக்குமட்டும் சொந்தமில்லை.

  கடவுள் நம்பிக்கையை என் போன்றோர் தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்து அதிகம் பெறுகிரார்கள். மிகச்சுலபமான வேலை கேள்விகேட்பதுதான். பெரியார் அதைத்தான் செய்தார். ஒருவர் உயர்வதற்குத் தேவை அறிவும் உழைப்பும்தான். நீங்கள் என்னையே கெட்ட வார்த்தையை சொல்லி திட்டினாலும் உங்களைத்தான் தாழ்த்திக்கொள்வீர்கள்

  கோபாலன்

 2. யாரு மயிரையும் யாராலும் புடுங்க முடியாது. இதுல பெருமை பேச ஒண்ணும் இல்ல.

 3. 76 வயதில் சுயமரியாதைத் திருமணம் செய்யாமல் பதிவுத்திருமணம் செய்தபோது சீடர்களே அதைச்செய்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

 4. தமிழ்நாட்டுக்கு பெரியாரின் உபயம்: ஜாதிவெறி…ஒரு ஜாதியை குறை சொல்ல ஆரம்பித்ததின் பின்னணியில் மற்ற ஜாதிகளுக்குள் வெறியைத் தூண்டிவிட்டிருக்கிறார். அதற்கு இந்தப் புத்தக வாசகம் ஒரு சான்று ‍ “….பொறுக்கி தின்ன..”.

 5. கேள்வி கேட்பது மிக சுலபமான வேலையா? விடை சொல்லத் தெரியாதவர்களின் கூற்று….. 🙂

 6. இது ஓரு சாதி வெறி உடன் தெொடங்கி உள்ளார் இது மறைமுகமாக சாதி பற்றி எழூதி உள்ளது

 7. periyar requested british people not to leave the country. if british people sstill ruling the country, we would have improved much. periyar’s forethinking is simply superb.

 8. எதிர்பார்க்கிறோம்;
  வரவேற்கிறோம்;
  பாராட்டுகிறோம்;
  பரப்பிடமுனைவோம்.
  வாழ்த்துகள்.

  புத்தரைப் போல பெரியார் சுய மறுப்பாளர்.
  அவர் பாராட்டையும்,வாழ்த்தையும்,நன்றியையும் எதிர்பார்த்தவரல்ல.
  காலம் முழுதும் வசவுகளையே வாழ்த்தொலியாய்ப் பெற்றவர்.
  அவரது எதிரிகள் துரோகிகள் என்ன சொல்லப்போகிறார்கள்
  என்பதை அவரே சொன்னார்.
  தன்னை ரிஷியாகவோ,முனியாகவோ,
  தேவதூதனாகவோ முன்னிறுத்தாமல்
  மனிதனாகவே முன்னிறுத்தினார்.
  அவரது கொள்கை பலம் எத்தகையது என்பதை
  அவரது மறைவுக்கு 40 ஆண்டுகள் கழித்தும்
  அவர் விமர்சிக்கப்படுபவராக இருப்பதில் இருந்தே தெரிகிறது.
  பெரியார் தொண்டர்களின் அளப்பரிய களப்பணியாளர் வரலாற்றில்
  நண்பர் மதிமாறனுக்கு ஓர் இடம் நிச்சயம் உண்டு.

 9. பெரியார் நல்லவர்தான்
  அவர் பெயரைதான் தவறாக பயன் படுத்துகின்றனர்
  அவர் கேட்ட திரவிடம் ஏன்னாட்சி
  திரவிடம் கேட்டால் காலமூம் ஜேயில் என்று பயப்பிடுகிறிற்களோ
  கேட்டுதான் பாருங்களே

 10. பெரியார் நல்லவர்தான்
  அவர் பெயரைதான் தவறாக பயன் படுத்துகின்றனர்
  அவர் கேட்ட திரவிடம் ஏன்னாட்சி
  திரவிடம் கேட்டால் காலமூம் ஜேயில் என்று பயப்பிடுகிறிற்களோ
  கேட்டுதான் பாருங்களே

Leave a Reply

%d bloggers like this: